Thursday, January 17, 2013

பேச்சுலர் சமையல் போட்டி வெற்றியாளர்கள்




அருமை பதிவுலக தோழ தோழியர்களே

ஒரு வழியாக பேச்சுலர் ஈவண்ட் சமையல் போட்டி முடிவாகிவிட்டது.
பேச்சுலர் சமையல் போட்டி நவம்பர் 20 முதல்  டிசம்பர் 20 நடந்ததில் மொத்தம் 26 பேர் கலந்து கொண்டதில் தேர்வாகியவர்கள் விபரமும், பரிசு விபரமும் கிழே கொடுத்துள்ளேன்.
உங்கள் பிஸியான பல வேலைகளுக்கிடையில் என் அழைப்புக்கு இணங்கி கலந்து கொண்ட அனைத்து தோழிகளுக்கும், தோழர்களுக்கும் மிக்க நன்றி.தேர்வாகத குறிப்புகள் எல்லாமும் மிக்க அருமை சின்ன சின்ன பாயிண்ட் தான் குறைவு மற்றபடி எல்லோருடைய குறிப்புகளுமே மிக மிக அருமை. ஹெல்தியான ரெசிபி ரொம்ப கடினமாக இருந்தது தேர்வு செய்வது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தாச்சு. 
போட்டி முடிவு அறிப்பு கொஞ்சம் லேட் ஆகிவிட்டது பொறுமையாக  காத்திருந்த அனைவருக்கும் மிக்க நன்றி.

1.Faiza

என் இனிய இல்லம்

தோழி பாயிஜா கொடுத்துள்ள குறிப்புகள் அனைத்துமே ஒன்றுக்கு ஒன்று அசத்தலாக இருந்தது. இந்த கோல்டன் பிரான்ஸ் எல்லாருக்கும் பிடித்து இருந்தது. மற்றும் இட்லி , நூடுல்ஸ் ரைஸ் வகைகளும் அருமை.
Golden Prawns , Tandoori lolipop, Palak Rice, Egg Paneer Noodles












Exclusive Party Hand Purse

Golden Prawns ,இந்த குறிப்பு முதலாவதாக தேர்வாகி உள்ளது.முதல் பரிசாக பாயிஜாவுக்கு மேலே Exclusive Party Hand Purse பார்டி ஹாண்ட் பர்ஸை பரிசாக வழங்குகிறேன். 

*******************************************************

2. Vai.Gopu -Healthy Adai

வை கோபு சாரின் அடை குறிப்பு விரிவான விளக்கம், பேச்சுலர்களுக்கு டிப்ஸ் , பேச்சுலர்களுக்கு ஒரு தந்தையை போல் அறிவுரையுடன் அக்கறையாக போட்டுள்ளார். இந்த குறிப்பை அனைவரும் ரசித்து ருசித்து பாராட்டி உள்ளனர்.












Emergency Rechargeable  Light 33 Led PF 733

அடை குறிப்பு இரண்டாவதாக தேர்வாகி உள்ளது.
 வை .கோபு சாருக்கு  படத்தில் உள்ள Emergency Rechargeable  Light 33 Led PF 733 பரிசாக வழங்குகிறேன்.

*******************************************************************

3.மகி அருன்  மகிஸ் அருன்ஸ் கிச்சன்


.இந்த குறிப்பு முன்றாவாக தேர்வாகி உள்ளது.










மகிக்கு படத்தில் உள்ள Stone Hand Bag ஹாண்ட்பேக் பரிசாக வழங்குகிறேன்.


ியின் கிப்பில் புமையாகொட்டுகை சம்ற்றும் ஸ்ைசி எக் பிர,குமோச ும் அரும.

**************************************************************












அதிரா குறிப்பில் இது சாசேஜ் பேன் கேக் நான்காவதாக  செலக்ட் ஆகியது. 

அதிரா அனுப்பிய அநேக குறிப்புகளில் (broccoli Spinach curry,salman curry, sausage sandwich,cauliflower curry) உப்பின் அளவும், கிராம் அளவும் குறிப்பிட்டு இருக்கிறாங்க. அவங்க குறிப்பில் பெரும்பாலும் தக்காளி இல்லாத சமையல்.சில பேச்சுலர்களுக்கு கண்டிப்பாக உதவும்.

அதிராவுக்கு படத்தில் போட்டுள்ள Flower Type Hand Bag பரிசாக வழங்குகிறேன்.


**************************************************





முள்ளங்கி கீரை , மரவள்ளி கிழங்கு கேக்
Healthy Recipe + Neat Presentation










அஸ்மா குறிப்பில் உணவின் படம் அழகாகவும், குறிப்பும் தெளிவாகவும், கீரையின் பயன்களை பற்றியும் மிக அருமையாக எழுது இருக்காங்க.ஆகையால்  5வதாக தேர்வாகி உள்ளது.

அஸ்மாவுக்கு படத்தில் இருக்கும்  Hand Bag ஹாண்ட் பேக் பரிசாக வழங்குகிறேன்.

***********************************************

கிழே அமைதிசாரல், ஆமினா ரொம்ப அழகான பிரஷண்ட் பண்ணி இருக்காங்க இருவருக்கும் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.



Chuura (சூரா)




***************************************************************

சமையல் எக்ஸ்ப்ரஸ் - தேங்காய் சாதம்.







ஆமினா வுக்கு படத்தில் உள்ள வால் கிலாக் பரிசாக வழங்குகிறேன்.

*********************************************************************


ஆசியா அதிக குறிப்புகள் அனுப்பி இருக்கிறார்கள்.


ஈசி சிக்கன் கறி, பிரிஞ்சால் பொட்டேடோ சால்னா, ஈசி சாம்பார், சிக்கன் சுக்கா, வெஜ் நூடுல்ஸ் பிரியாணி , முட்டை சால்னா, புரோக்கோலி எக் ப்ரை
ஆங்கிலதளத்திலும் குறிப்பு கொடுத்துள்ளமையால் அங்கு ஆசியாவுக்கு பரிசு வழங்கலாம் என்று இங்கு *Star of The Kitchen* அவார்டை வழங்குகிறேன்

***************************************************************

போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் மிக அருமையான ரெசிபிகளை அனுப்பி இருந்தார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கீழே உள்ள சான்றிதழை பெற்றுகொள்ளவும்.



பரிசு பெற்றவர்கள் அனைவரும் கீழே  சென்னையில் உள்ள எங்க சென்னை ப்ளாசா கடையில் பரிசுகளை பெற்று கொள்ளவும்.

பரிசுகளை கடைக்கு இப்ப தான் இங்கிருந்து (துபாய்) அனுப்பி உள்ளேன். அங்கு சென்னை கடைக்கு போய் சேர்ந்ததும் எப்போது வந்து பெற்றுகொள்ளனும்  என்பதை மெயில் தெரிவிக்கிறேன். அவார்டுகளும் காப்பி செய்ய முடியவில்லை என்றால் அனைவருக்கும்  மெயிலில்  இன்னும் இரண்டு நாட்களுக்குள் அனுப்பி விடுகிறேன்.


 

No, 277/30 Pycrofts Road,1st Floor,
(opp:shoba cut piece)
(Near Marina Beach/Near Rathna cafe/EA)
Triplicane , Chennai 600 005
Tel: 91 44 4556 6787
Mr.Mohideen Mob: 91 78 45367954
Mr.Ibrahim Mob: 91 98 43709497



டிஸ்கி: இந்த ஈவண்ட் நடத்த அனுமதி கொடுத்து இதற்கான ஆலோசனை கொடுத்த என் கணவருக்கு தான் நான்  முதலில் நன்றியை தெரிவிக்கனும்.












71 கருத்துகள்:

Angel said...

போட்டியை அழகாய் நடத்திய ஜலீலாவுக்கு முதல் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் :)

Angel said...

Faiza ...சமையல் ராணி பட்டம் வென்றதற்கு வாழ்த்துக்கள்

Angel said...

கோபு அண்ணா நளபாகத்தில் அசத்தி சமையல் மகாராஜ் பட்டம் வென்றதற்கு வாழ்த்துகள் :)

Angel said...

மூன்றாம் பரிசு பெற்ற மகிம்மாவுக்கு வாழ்த்துகள்

Angel said...

பூசாருக்கு வாழ்த்துகள்
கர்ர்ர் அந்த ஆரஞ்சு நிற பேக் மேல் எனக்கு ஒரு கண் :))

Angel said...

மேலும் பரிசு பெற்ற அஸ்மா ,ஆமினா ,ஆசியா ,சாந்திஅமைதிசாரல் அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள் .

'பரிவை' சே.குமார் said...

பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் அக்கா...

சர்டிபிகேட் மற்றும் பரிசுகளையும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியா போட்டு அழகான பகிர்வாக ஆக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்....

pudugaithendral said...

வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். நம்ம நட்புக்கள் சிலரும் ஜெயிச்சிருக்காங்க. சந்தோஷமா இருக்கு.

உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...


"பேச்சுலர் சமையல் போட்டி வெற்றியாளர்கள்"அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்...

Jaleela Kamal said...

ரொம்ப உழைச்சாச்சு எல்லாருக்கும் அழக்கான அவார்டு கொடுக்கனும் என்று தயாரித்தேன்,

இனி நான் பிரித்தானியாவுக்கு கொஞ்ச நாள் போய் ரெஸ்ட் எடுக்க போகிறேன்

Angel said...

வாங்க ஜலீலா :)) ஆனா ஒரு கண்டிஷன் வரும்போது உங்க ஊர் வெயிலை மட்டும் கூடவே எங்களுக்கு எடுத்து வரணும் ...இங்கே இப்போ -5

Asiya Omar said...

போட்டி முடிவுகள் அறிவிப்பு மிக அசத்தல்.பரிசுகளும் மிக அருமை. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.பேச்சுலர் இவெண்ட் என்பதால் ஆர்வமாக கலந்து கொண்டு என்னால் முடிந்தளவு குறிப்புக்களை இணைத்தேன்.

எனக்கு ஸ்டார் ஆஃப் தி கிச்சன் அவார்டு வழங்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி ஜலீலா.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஆவ்வ்வ்வ் வந்திட்டுதோ வந்திட்டுதோ? போட்டி முடிவுகள் வந்திட்டுதோ... ஹையோ கடவுளே எனக்கு கையும் ஓடல்ல காலும் ஆடல்ல...

தேவன் மாயம் said...

மிக அருமை!!! வாழ்த்துகள்!

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

என்னாது ? ஜல் அக்கா எனக்கும் பரிசு கிடைச்சிருக்கோ? ஹையோ புல்லரிசிட்டேன்ன்ன் அதிலும் நான் விரும்பும் ஒரேஞ் காண்ட் பாக்க்க்... ஆவ்வ்வ்வ் இது கனவோ நனவோ....

ஜல் அக்கா உங்களுக்கு ஒன்று தெரியுமோ எனக்கு கான் பாக்குகள் வாங்கிச் சேர்ப்பது ஒரு பைத்தியம்:)

மியாவும் மியாவும் நன்றி....

ஆமினா said...

இஸ்லாமியப் பெண்மணில கலந்துக்கிட்டு பரிசு வாங்க முடியலையேன்னு ரூம் போட்டு அழுதுட்டிருந்தேன் ஹி..ஹி..ஹி... நல்லவேள மானம் கப்பல் ஏறாம கடிகாரம் கொடுத்து காப்பாத்திட்டீக...

பரிசு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

Jaleela Kamal said...

ஏஞ்சலின் இங்கும் குளிர் ஆரம்பித்து விட்டது வெயிலோடு வரனும் என்றால் ஜூலை ஆகஸ்ட் தான் வரனும்

Jaleela Kamal said...

பூஸாரே பார்த்து பக்கத்துல கடல் இருக்கு பார்த்து குதிங்கள்

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

வெற்றி பெற்ற பாயிஜா, கோபு அண்ணன்(கொஞ்சம் இருங்க ரெண்டுதரம் செக் பண்றேன் பெயரை:) ஆவ்வ் அது கோபு அண்ணந்தான்ன்ன்ன்:))),மகி, அஸ்மா,அமைதிச்சாரல், சமையல் எக்ஸ்பிரஸ், மற்றும் ஸ்டார் ஒஃப் த கிச்சின் ஆசியா அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

அனைவரின் பரிசுகளும் சூப்பர் அண்ட் பிரயோசனமாவை... கலக்கிட்டீங்க ஜல் அக்கா.... வாழ்த்துக்கள்... எப்பூடி உங்களால வேர்க் பண்ணிக்கொண்டு இப்படியும் நடத்த முடியுதோ?...

இளமதி said...

அருமையாக போட்டியை நடத்தி அழகாக பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து அசத்திவிட்டீர்கள் ஜலீலாக்கா...
முதலில் உங்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்!

மற்றும் இங்கு பரிசினை வென்ற அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிக அதிகமான குறிப்புகள் கொடுத்ததில் முதலிடம் பெற்றவரும்,

இங்கு இன்று *STAR OF THE KITCHEN* AWARD பெற்றுள்ளவரும்,

அங்கு அங்கிலப்பதிவினில் நாளை பரிசு பெறப்போகிறவரும், ஆன

அன்புச்சகோதரி திருமதி, ASIYA OMAR அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் கூறிக்கொள்கிறேன்.

>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

தேன் போன்ற சுவையான ’தேங்காய் சாதம்’ தயாரிப்பது பற்றி குறிப்புக்கொடுத்து அசத்தியுள்ள ”சமையல் எக்ஸ்பிரஸ்” Ms. AMINA அவர்களுக்கும்,

தன் சூரத்தனத்தை மிகவும் அமைதியாக தன் “சூரா” மூலம் காட்டி அசத்தியுள்ள் நம் அன்புக்குரிய “அமைதிச்சாரல்” திருமதி. சாந்தி அவர்களுக்கும்

என் மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

சுத்தம் சோறு போடும் என்பதுபோல ’முள்ளங்கி கீரை + மரவள்ளிக்கிழங்கு கேக்’ முதலியனவற்றை

”பார்த்தாலே பசிதீரும்” விதமாக மிகவும் "NEAT ஆக PRESENTATION" கொடுத்துள்ள இவர்களின் அழகான “பயணிக்கும் பாதை” பாராட்டுக்குரியதே.

My Heartiest Congratulations to Ms. ASMA Madam.

>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

இங்கு காட்டியுள்ள பரிசுகளிலேயே மிக மிக மிக மிக மிக மிக மிக அழகாகக் காட்சிதரும் பரிசினை ஒருவர் தட்டிச்செல்கிறார்.

மஹாராணியாரின் குடும்பத்தைச் சார்ந்த இவர் அழுது அடம் பிடிக்காமலும்,

தீக்குளிப்பேன், தேம்ஸ் நதியில் குதிப்பேன், முருங்கை மரத்தில் ஏறுவேன் என்றெல்லாம் ஆர்பாட்டம் ஏதும் செய்யாமலும்,

தேர்வுக்குழுவுக்கு மிரட்டல் ஏதும் கொடுக்காமலும்,

தன் அரசியல் ராஜங்க செல்வாக்கினை ஏதும் துஷ்பிரயோகம் செய்யாமலும்,

சமத்துக்குட்டியாக, கட்டிச் சமத்தாக அழகான பரிசினை இங்கு தட்டிச்செல்கிறார்.

எல்லோரும் ஜோராகக் கைத்தட்டுங்கோ .... ப்ளீஸ்.

கோகிஷா [கோபாலகிருஷ்ணா அல்ல] என்ற வலைத்தளத்தினில்

“என் பக்கம்” என எழுதும் என் அன்புக்குரிய தங்கை

அதிரடி,
அலம்பல்,
அட்டகாச
அதிரா

[ஸ்வீட் சிக்ஸ்டீனுக்கு] என் அன்பான வாழ்த்துகள் + பாராட்டுக்கள்.

>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகச்சிறப்பான சமையல் குறிப்புகள் கொடுத்து பரிசுக்கு தேர்வாகியுள்ள ”மஹீஸ் கிட்சன்” Ms. MAHI ARUN Madam அவர்களுக்கு என் அன்பான இனிய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

பார்க்கவே பரவஸமூட்டிடும் *GOLDEN PRAWNS* என்ற பதார்த்தத்திற்கு அழகிய செய்முறை கொடுத்து முதல் பரிசுக்குத் தேர்வாகியுள்ள ”என் இனிய இல்லம்” பதிவர் Ms. FAIZA அவர்களுக்கு என் அன்பான இனிய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

My Heartiest Congratulations to you, Madam. Best Wishes too.

>>>>>>>

Mahi said...

காலையில் எழுந்ததும் ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கு ஜலீலாக்கா! நன்றி, நன்றி!

பரிசு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள். பொறுமையாக பொறுப்பாக போட்டியை நடத்தி, வகை பிரித்து, எல்லாக் குறிப்புகளையும் பரிசீலித்து, எல்லாருக்கும் அழகழகான பரிசுகள் தந்த ஜலீலாக்காவுக்குப் பாராட்டுக்கள்!

சமையல் குறிப்புகளை ருசித்து, தேர்ந்தெடுத்த பேச்சுலர்களுக்கு நன்றிகள்! உங்களுக்கு என் குறிப்பு பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி!

பி.கு.
1.அதிராவ், எனக்கும் ஒரேஞ்ச் கலர் ஹேன்ட் பேக் மேல ஒரு கண்ண்ண்ண்ண்ண்ண்ணா இருக்கு! ;))))
2.அதிவேகமா எனக்கு தகவல் சொன்ன ஏஞ்சல் அக்காவுக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அடியேனுக்கும் ஓர் பரிசளித்து, பெருமை படுத்தி, மகிழ்வித்துள்ள தேர்வுக்குழுவினருக்கும்,

என் அன்புச் சகோதரி Ms. JALEELA KAMAL அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுவரை சமையல் குறிப்புகள் பற்றி என் வலைத்தளத்தில் ஏதும் எழுதாத எனக்கு இதுவே முதல் அனுபவம்.

இந்த என் முதல் முயற்சிக்கே வெற்றி கிடைத்துள்ளதில், பரிசும் கிடைத்துள்ளதில், "KITCHEN KING" என்ற சான்றிதழும் கிடைத்துள்ளதில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே.

தாங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளது போல, இந்த என் முதல் சமையல் குறிப்புக்கு நூற்றுக்கணக்கானோர் வருகை தந்து பின்னூட்டங்கள் கொடுத்து பாராட்டியுள்ளனர்.

அவர்களுக்கான என் பதில்களையும் சேர்த்து பின்னூட்ட எண்ணிக்கை. இன்று 230ஐ யும் தாண்டியுள்ளது.

அதுவே எனக்குக்கிடைத்த மாபெரும் வெற்றியாக நான் நினைக்கும்போது, இந்தப்பரிசும் வந்துள்ளது மேலும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ள்து.

நன்றியோ நன்றிகள்.

>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

நான் பரிசுக்குத் தேர்வான விஷயத்தினை எனக்கு முதல் தகவலாக மெயில் மூலம் அளித்த என் அன்புத்தங்கை நிர்மலா [ANGELIN] அவர்களுக்கு என் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு வருகை தந்து வாழ்த்தியுள்ள மற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.

இந்தப்போட்டியினை வெகு அழகாகத் திட்டமிட்டு நடத்தி, பங்கு கொண்ட அனைவருக்குமே பாராட்டு பத்திரங்களையும் அளித்து, ஒருசிலருக்கு பரிசுகளையும் அள்ளித்தந்துள்ள அன்புத்தங்கை ”சமையல் அட்டகாசங்கள்”
Ms. JALEELA KAMAL அவர்களுக்கு மீண்டும் என் அன்பு கலந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன் தங்கள்

பிரியமுள்ள
கோபு

gopu1949.blogspot.in

ooooooooOoooooooo.

Menaga Sathia said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

Jaleela Kamal said...

கோபு சார் நான் எல்லாருக்கும் உடனே ம்,மெயில் செய்து இருக்கனும்,
இந்த பதிவு போட்டு முடிக்கவே நேரம் சரியாபோச்சு , அதற்குள் வேறு வேலை வந்து விட்டது.
நாளை தான் மெயில் செய்ய இருந்தேன்
நாளை மீதி பேருக்கும் உங்கள் எல்லாருக்கும் மெயில் போடுகிறேன்

Mahi said...

வை.கோபாலகிருஷ்ணன் சார், உங்க பாராட்டுக்களுக்கு நன்றி!

அடை ரெசிப்பி கொடுத்து அசத்தி பரிசு வென்றதற்கு என் பாராட்டுக்கள்! :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

Jaleela Kamal said...

கோபு சார் நான் எல்லாருக்கும் உடனே, மெயில் செய்து இருக்கனும்,

இந்த பதிவு போட்டு முடிக்கவே நேரம் சரியாபோச்சு; அதற்குள் வேறு வேலை வந்து விட்டது.

நாளை தான் மெயில் செய்ய இருந்தேன். நாளை மீதி பேருக்கும் உங்கள் எல்லாருக்கும் மெயில் போடுகிறேன்.//

அதனால் என்ன? பரவாயில்லை, மேடம்.

எப்படியோ எனக்கு ஏஞ்சலின் மூலம் உடனடியாகத் தகவல் வந்து விட்டதால், நானும் இங்கு வந்து என் கருத்துக்களை எழுதி விட்டேன்.

அன்புடன்
கோபு

இமா க்றிஸ் said...

அழகாக போட்டியை நடத்தி முடித்த ஜலீலாவுக்கு என் பாராட்டுக்கள்.

பரிசு பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

viji said...

Congragulations to all winners. The prizes are very cute and nice.
viji

Kanchana Radhakrishnan said...

பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

நான் எழுதிய முதல் கவிதை

“இளநீர்” .

கோகுலம் பத்திரிகையில் பிரசுரம் ஆகி பரிசு கிடைத்தது.

அந்த கவிதை + அதைப்பற்றிய பரிசு விபரங்கள் சமீபத்தில் வலைச்சரப் பின்னூட்டத்தில் நான் எழுதியுள்ளேன்.

இணைப்பு:

http://blogintamil.blogspot.in/2012/12/6.html

>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

நான் எழுதிய முதல் கட்டுரை
============================

தலைப்பு:

“திருமணம் ஆகி 25 ஆண்டுகள் முடிந்த எங்கள் இல்வாழ்க்கையில் நாங்கள் சந்தித்த சுகங்களும் சோகங்களும்”

அகில இந்திய அளவில் நடந்த கட்டுரைப்போட்டியொன்றில் முதல் பரிசு “தங்க நெக்லஸ்” வென்றது.
.
இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2011/07/3.html

>>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

நான் எழுதிய முதல் நாடகம்:
============================

தலைப்பு:

“ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்”

அகில இந்திய அளவில் நடைபெற்ற போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது.

படங்கள் இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2012/04/18.html

>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

நான் எழுதிய முதல் சிறுகதை
=============================

தலைப்பு:

“தாயுமானவள்”

தினமலர் நிறுவனர் அமரர் டி.வி.ஆர். நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது

இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2011/12/3-of-3.html

>>>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

சர்வதேச அளவில் நடைபெற்ற தமிழ்ச்சிறுகதை போட்டிக்காகவே நான் எழுதிய முதல் சிறுகதை
============================

தலைப்பு:

“அஞ்சலை”

லண்டனிலிருந்து வெளிவரும் “புதினம்” இதழில் பிரசுரம் ஆகி
பரிசு பெற்றது.

இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2011/04/6-6-of-6.html

>>>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

நான் எழுதிய முதல் சிறுகதைத்தொகுப்பு நூல்:
========================

தலைப்பு:

“தாயுமானவள்”

[வானதி பிரசுரத்தால் வெளியிடப்பட்டது]

விழுப்புரம் மாவட்டம் “தியாகதுருகம் தமிழ்ச்சங்கத்தால்” முதல் பரிசு பெற்றது.

படங்கள் இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2011/07/4.html [படங்கள் மட்டுமே]

>>>>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

அதுபோலவே இந்த என் முதல் சமையல் குறிப்பும் இன்று பரிசுக்குத்தேர்வாகியுள்ளது.

“அடடா என்ன அழகு!
அடையைத் தின்னு பழகு!!”

இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html

>>>>>>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்த என் மேற்படி பதிவுக்கு முதல் வருகை தந்து பின்னூட்டம் கொடுத்தவர் என் அன்புத்தங்கை நிர்மலா [ANGELIN] அவர்கள் தான்.

இதோ அவரின் அழகிய பின்னூட்டம்:

oooooooooo

angelin
December 14, 2012 at 12:23 PM

அண்ணா :))) நீங்க சகல கலா வல்லவர்தான்.

அடை மொறு மொறுன்னு ..
பசியைக் கிள்ளுது ..

எங்கம்மா இப்படித்தான் செய்வாங்க..

தேங்காய் சிறு பல்லுகளாக வெட்டிப் போட்டு ..

நல்லெண்ணெய் ஊற்றி .....

நீங்க ஜலீலா அவர்களின் இவேண்டில் கலந்துக்க போறீங்களா?

அப்பா நான் விலகி கொள்கிறேன்..

உங்களுக்கு தான் கண்டிப்பா பரிசு!

இவ்ளோ அழகா ஸ்டெப் பை ஸ்டெப், குறிப்பு எல்லாமே சூப்பர் .:

oooooooooo

அதன் பிறகு நூற்றுக்கணக்கானவர்கள் வருகை புரிந்து பின்னூட்டம் கொடுத்துள்ளனர்.

இந்தப்பதிவுக்கு மட்டும் இதுவரை வந்துள்ள பின்னூட்டங்களின் எண்ணிக்கை [என் பதில்களையும் சேர்த்து] இன்று 239 என்று காட்டுகிறது.

என் இந்தப்பதிவுக்கு முதல் பின்னூட்டமிட்ட என் அன்புத்தங்கை நிர்மலாவே [ஏஞ்சலின்] எனக்கு பரிசு கிடைத்துள்ள விஷயத்தையும் இன்று முதல் தகவலாக அளித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆரம்பம் முதல் இன்று வரை மிகவும் வாஞ்சையுடனும், தனிப்பிரியத்துடனும் என்னுடன் பழகி வரும் என் அன்புத்தங்கை நிர்மலாவுக்கு மீண்டும் என் மனமார்ந்த ந்ன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.

வாழ்க! வாழ்க!! என
வாழ்த்தி மகிழ்கிறேன்.

பிரியமுள்ள
கோபு

-=-=-=-=-=-=-=-
.

Mira said...

Congratulations winners

congrats Jaleela

Mira’s Talent Gallery

சாந்தி மாரியப்பன் said...

பரிசு கொடுத்தமைக்கு நன்னி ஜலீலாக்கா.

உடனே தகவல் சொன்ன தென்றலுக்கும் நன்றி :-)

Jaleela Kamal said...

வெற்றி பெற்றவர்களுக்கு அவார்டு வாங்கியவர்கள் அனைவருக்கும் மெயில் செய்து விட்டேன்.
யார் பெயராவது விடு பட்டு போயிருந்தால் தெரிய படுத்ததும்.

ADHI VENKAT said...

பரிசு பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். போட்டியை நடத்திய ஜலீலாக்காவுக்கும் வாழ்த்துகள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பரிசு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்

Unknown said...

அக்கா அசத்தலாக போட்டி நடத்தி அதில் உங்களின் பல வேலைகளுக்கு இடையில் இப்படி அழகாக சிறப்பாக தேர்வு செய்து அவர்களுக்கு பரிசுகளும் அவார்டும் கொடுத்து அசத்திருக்கிங்க.. அதுக்கு உங்களுக்கு தனிபட்ட முறையில் வாழ்த்துக்கள்..

Unknown said...

பேச்சுலர் இவெண்டுக்கு என்னால் முடிந்த குறிப்புகளை கொடுத்தேன்.. அதில் எனக்கு மிகவும் பிடித்த குறிப்புகள் இரண்டுமே தேர்வானது மிகுந்த மகிழ்ச்சி எனக்கு.. நேற்று எனது போனில் லிங்க் ஓப்பன் ஆகல.. அப்பறம் எஜ்ஜலின் மெயில் பண்ணியிருந்தாங்க.. அப்பறம் தான் தெரிந்தது.. கிச்சன் குயின் அவர்டு கிடைத்திருக்கிறது என்று பிறகு இங்கு வந்த பின்பு தான் தெரிந்தது முதல் பரிசு என்று.. மிகுந்த சந்தோஷம்.. போட்டியில் வற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்..

அண்ணன் திரு.வை.கோபாலகிருஷ்ணன் , மகி, அதிரா,அஸ்மாஅக்கா ,ஆமினா ,ஆசியா அக்கா ,சாந்திஅமைதிசாரல் அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் .

Vijiskitchencreations said...

வெற்றி பெற்ற எல்லோருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். நானும் கல்ந்துகிட்டேன் ஆனால் பரிசு கிடைக்கல்லை, நான் நார்மலா சமையல் போட்டிகளில் கலந்துகொள்ளா மாட்டேன். ஏன் என்று கேட்பிங்க. பெரிய சமையல் கில்லாடிகள் நட்புவட்டம் இருக்கும் நாம கற்று குட்டி. ஏதோ நம்ம ஜலீ எனக்கு ரொம்ப பிடித்த நல்ல தோழி என்று தான் எனக்கு தெரிந்த குறிப்புகள் அனுப்பினேன். ஆனால் நான் என்ன ரூல்ஸ்+ எவ்வளவு குறிப்புகள் அனு்ப்பனும் என்று ஏதும் நானும் சரியாக பார்க்கவில்லை,+தாமதாமாகிட்டது.
எனக்கும் பெரிய மனது செய்து பங்கேற்றதற்க்கு அவார்டு குடுத்திருக்காங்க. பெரிய பெரிய நன்றி ஜலீ.

ராமலக்ஷ்மி said...

வெற்றி பெற்ற அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்! போட்டியைச் சிறப்பாக நடத்திய உங்களுக்குப் பாராட்டுகள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இந்த ஈவண்ட் நடத்த அனுமதி கொடுத்து இதற்கான ஆலோசனை கொடுத்த என் கணவருக்கு தான் நான் முதலில் நன்றியை தெரிவிக்கனும்.//

கலந்துகொண்ட அனைவர் சார்பாகவும் நான் என் நன்றியினை தங்கள் கணவருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரியமுள்ள
கோபு

தி.தமிழ் இளங்கோ said...

”சமையல் அட்டகாசங்கள் ஜலீலாகமால்” அவர்களின் KITCHEN’S QUEEN – விருதினைப் பெறும் பேச்சுலர் சமையல் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தினைப் பெற்றவர் எங்கள் ஊர்க்காரர் (திருச்சி) திரு VGK (VAI GOPU) (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்! போட்டியை நடத்தி பரிசுகள் வழங்கிய ஜலீலாகமால் அவர்களுக்கு நன்றி!

Jaleela Kamal said...

விஜி நீங்களே வெஜ் ராணி , உங்களுக்கு நேரம் இல்லை ,
இல்லை என்றால் கலக்கலாக பங்கு பெற்று இருப்பீங்க.

cheena (சீனா) said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

congrats all winners

R.Gopi said...

ஒரு அருமையான போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்தமைக்கு முதற்கண் என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ஜலீலா

சாரி.... நான் இங்கே சமைத்து உண்ணவில்லை.... அதனால் உங்கள் போட்டியில் பங்கேற்கவில்லை. போட்டியில் கலந்து கொண்டு, அசத்தலான மெனுக்களை அள்ளி வழங்கி வெற்றி பெற்ற அனைவர்க்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.....

R.Gopi said...

ஸ்டார் ஆஃப் தி கிச்சன் அவார்டு பெற்ற அருமைத் தோழி ஆசியா ஓமர் அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்....

தொடர்ந்து கலக்குங்க....

ஸாதிகா said...

போட்டி அறிவித்து விட்டு உங்களின் உழைப்பையும் திகைப்பையும் நான் அறிவேன்.ஒரு வழியாக பரிசும் அறிவித்து விட்டீர்கள் ஜலி.நல்ல விதமாக போட்டி அறிவித்து வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டீர்கள்.உங்களுக்கும் உங்கள் உழைப்புக்கும் வாழ்த்துக்கள்.பரிசு பெற்ற,அவார்ட் பெற்ற மற்ற நட்புக்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

அஸ்மா said...

சலாம் ஜலீக்கா!

நான் நினைத்துக்கூட பார்க்கல, உங்க கையால் பரிசு கிடைக்கும்னு :) அல்ஹம்துலில்லாஹ்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு. 5 வது பரிசாக இருந்தாலும் ரொம்ப‌ சூப்பரா இருக்கு ஜலீலாக்கா! மாஷா அல்லாஹ்.. நன்கு ஐடியா பண்னி நடத்தியிருக்கீங்க. இதற்கு அனுமதியும், ஆலோசனையும் கொடுத்து உங்களுக்கு உறுதுணையாக இருந்த அண்ணனுக்கும் (உங்க ஹஸ்:)), உங்களுக்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா. அவார்டுகளும் அம்சமா டிசைன் பண்ணி பரிசுகளும் அமர்க்களமா... உண்மையிலேயே ரொம்ப மெனக்கெட்டிருக்கீங்க, பாராட்டுக்கள்!

அந்த பேக் உள்ளே 'ஜலீலா அக்கா'ன்னு எழுதி வச்சுக்கணும், உங்க ஞாபகமா :) இன்ஷா அல்லாஹ் ப‌திவா போட முயற்சிக்கிறேன்.

அஸ்மா said...

ஜலீலாக்கா பிஸியா இருப்பதால், என‌க்கும் இதுபற்றி முதலில் எந்த தகவலும் கிடைக்கல. ஆனால் எப்போதும் தெரியாத ரீடிங் லிஸ்ட் இன்றைக்கு தெரிஞ்சதுனால பூஸார் (அதிரா)வின் பதிவைப் பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டேன். அதனால் தனியா வந்து தகவல் சொல்லாவிட்டாலும் பூஸுக்கு என் நன்றிகள் :)

முத‌ல் பரிசு வென்று கிச்சன் குயினாக தேர்வாகி இருக்கும் தங்கை ஃபாயிஜா, மற்ற‌ இல்லத்தரசிகளை மிஞ்சி இரண்டாவது இடம் பிடித்து KITCHEN KING விருது வாங்கிய‌ வை.கோபாலகிருஷ்ணன் சார், 3 வது இடத்தில் இருந்தாலும் 'சமையல் ராணி'யாக நிற்கும் :) தோழி மஹி, முட்டி மோதி எனக்கு முந்தி வந்த அதிரா ;), சூப்பர் வாள் க்ளாக் பெற்ற தங்கை ஆமினா & அமைதிச் சாரல் அனவருக்கும் வாழ்த்துக்கள்! :) "ஸ்டார் ஆஃப் தி கிச்சன்" கிடைத்த ஆசியா அக்காவுக்கு ஸ்பெஷல் வாழ்த்து ;)

அஸ்மா said...

@ சகோ வை.கோபாலகிருஷ்ணன்

//சுத்தம் சோறு போடும் என்பதுபோல ’முள்ளங்கி கீரை + மரவள்ளிக்கிழங்கு கேக்’ முதலியனவற்றை

”பார்த்தாலே பசிதீரும்” விதமாக மிகவும் "NEAT ஆக PRESENTATION" கொடுத்துள்ள இவர்களின் அழகான “பயணிக்கும் பாதை” பாராட்டுக்குரியதே.

My Heartiest Congratulations to Ms. ASMA Madam.//

கோபு ஸார்..! 'சுத்தம் சோறு போடும்', 'பார்த்தாலே பசிதீரும்' போன்ற வார்த்தைகளால் வர்ணித்து வாழ்த்திய உங்களின் பின்னூட்டம் ரொம்ப மகிச்சியாக இருந்தது. மிக்க நன்றி ஸார் :)

வாழ்த்திய மற்ற சகோஸ்-க்கும் மற்றும் வாழ்த்தப் போகும் :) அனைவருக்கும், குறிப்புகளைத் தேர்ந்தெடுத்த பேச்சுலர்களுக்கும் என் நன்றிகள்!

@ அதிரா

//ஹையோ கடவுளே எனக்கு கையும் ஓடல்ல காலும் ஆடல்ல...//

அதுக்குதான் பரிசு கிடைத்துக்காக‌ ஸ்நோவில் கிடந்து புரளக் கூடாதுன்னு சொல்றது.. :)))

வை.கோபாலகிருஷ்ணன் said...

அஸ்மா said...
@ சகோ வை.கோபாலகிருஷ்ணன்

**சுத்தம் சோறு போடும் என்பதுபோல ’முள்ளங்கி கீரை + மரவள்ளிக்கிழங்கு கேக்’ முதலியனவற்றை

”பார்த்தாலே பசிதீரும்” விதமாக மிகவும் "NEAT ஆக PRESENTATION" கொடுத்துள்ள இவர்களின் அழகான “பயணிக்கும் பாதை” பாராட்டுக்குரியதே.

My Heartiest Congratulations to Ms. ASMA Madam.**

கோபு ஸார்..! 'சுத்தம் சோறு போடும்', 'பார்த்தாலே பசிதீரும்' போன்ற வார்த்தைகளால் வர்ணித்து வாழ்த்திய உங்களின் பின்னூட்டம் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. மிக்க நன்றி ஸார் :)//

சந்தோஷம். எனக்கும் மகிழ்ச்சி.
நன்றிக்கு நன்றிகள்.

அன்புடன்
கோபு

ஹுஸைனம்மா said...

எப்பா, பரிசுகள் கண்ணைப் பறிக்குது!! :-)) எல்லாருக்கும் வாழ்த்துகள். என்னையும் ஒரு சமையல் பதிவு போட வச்சு, எனக்கும் சமைக்கத் தெரியும்னு ஊர் உலகத்துக்கு நிரூபிக்க ஒரு வாய்ப்புக் கொடுத்ததுக்காக ஜலீலாக்காவுக்கு நன்றி!! :-)))

ஆமா, அக்கா! ஃபாயிஸாவுக்கானப் பரிசை நீங்க லண்டனுக்குப் போய்க் கொடுக்கப்போறீங்களா அல்லது அவங்க வந்து வாங்கிப்பாங்களா? நீங்க போனீங்கன்னா, ஃபாயிஸாகிட்ட என் மகனுக்கொரு பரிசு இருக்கு, வாங்கிட்டு வந்துடுங்க சரியா!! அவங்க வருவாங்கன்னா, கொண்டு வரச்சொல்லுங்க!!

அதே மாதிரி, ஆமினாகிட்டயும் எனக்கொரு (ஆறுதல்) பரிசு இருக்கு, அதையும்.. ப்ளீஸ்!! :-))))

enrenrum16 said...

Hearty Congratulations to all the winners :)

நீங்கள் நடத்திய முதல் ஈவன்ட் மிக்க வெற்றிகரமாக அமைந்ததில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் jaleela akka.

enrenrum16 said...

உங்கள் ஈவன்ட் பற்றி என் ப்ளாகில்

http://enrenrum16.blogspot.com/2013/01/blog-post_15.html

மாதேவி said...

போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

Jaleela Kamal said...

வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,

இங்கு கருத்து தெரிவித்தவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா