Sunday, January 27, 2013

புல்ஸ் ஐ ஆப்பம் - Bull's eye Appam


-- புல்ஸ் ஐ ஆப்பம்

டயட் செய்பவர்களுக்கு அல்லது எண்ணை அதிகமாக இல்லாத உணவு என்றால் கொழுக்கட்டை, இட்லி , புட்டு, ஆப்பம் இது போன்ற டிபன் வகைகளை செய்து  சாப்பிடலாம்.

எண்ணையில்லமல் முட்டையுடன் சத்தான டிபன்,
 குழந்தைகளுக்கு காரமில்லாமல் சாப்பிட நல்லதொரு டிபன் அயிட்டம்.டயட் செய்பவர்களுக்கும் ஏற்ற டிபன். 


தேவையானவை
ஆப்பத்துக்கு
பச்சரிசி அரிசி  – அரை டம்ளர்
புழுங்கல் அரிசி – அரை டம்ளர்
அவல் – ஒரு மேசை கரண்டி
ஜவ்வரிசி – ஒரு தேக்கரண்டி
உளுந்து – ஒரு மேசைகரண்டி
உப்பு – முக்கால் தேக்கரண்டி
ஆப்ப சோடா – கால் தேக்கரண்டி
தேங்காய் – நான்கு பத்தை துருவியது
வெந்தயம் – ஒரு அரை தேக்கரண்டி

புல்ஸ் ஐக்கு 
முட்டை – 3
மிளகு தூள்  - தேவைக்கு
உப்பு தூள் தேவைக்கு


 செய்முறை 
முதலில் இருவகை அரிசி  அவல் ,உளுந்து,ஜவ்வரிசிவெந்தயத்தை முன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
தேங்காய் அனைத்தையும் சேர்த்து அரைத்து உப்பு சோடாமாவு போட்டு 8 மணி நேரம் புளிக்க விடவும்.
 ஆப்ப ச்சட்டியை காயவைத்து வெங்காயத்தை பாதியாக அரிந்து ஃபோர்க்கில் குத்தி எண்ணை சிறிது விட்டு சுற்றிலும் தேய்க்கவும். அப்பதான் ஒட்டாமல் பிஞ்சி போகாமல் வரும்.
ஒரு குழிகரண்டி ஆப்பமாவை உற்றி சுழற்றி விடவும்.

ஒரு முட்டையை கலக்காமல் அப்படியே ஊற்றி மேலும் சிறியதாக சுழற்றிவிட்டால் வெள்ளை கருமட்டும் எல்லா மாவிலும் படும். பிறகு முடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்
நல்ல முக்கால் பாகம் வெந்து வரும் போது மிளகு உப்பு தூவி  இரக்கவும்.




தேவைக்கு  இது போல் செய்து 3 செய்து  கொண்டு மீதி உள்ள மாவில் பிளெயின் ஆப்பம் ஊற்றி கொண்டு அதற்கு பக்க உணவாக தேங்காய் பால் , சப்ஜி,  சால்னா ,சட்னியுடன் ஏதாவது ஒன்று செய்து கொள்ளலாம்.

முழு பாசி பயிறு தால் தர்கா, பஞ்சி ஆப்பம், ஏலக்காய் தேங்காய் பால் சுட்டியை செடுகி பார்க்கவும்.

எண்ணையில்லதா முட்டையுடன் சத்தான டிபன்குழந்தைகளுக்கு காரமில்லாமல் சாப்பிட நல்லதொரு டிபன் அயிட்டம்.



இப்ப இங்கு துபாயில் மாவு கூட அரைக்க தேவையில்லை , எல்லா சூப்பர் மார்கெட்டுகளிலும் ரெடி மேட் மாவு கிடைக்கிறது. இன்னும் வேலையும் மிச்சம் மாவு வாங்கி வந்தால் 10 நிமிடத்தில் புல்ஸ் ஐ ஆப்பர் ரெடி.

சமைக்கும் நேரம் : 30 நிமிடம் 
பரிமாறும் அளவு : 3 நபர்களுக்கு
ஆயத்த நேரம் : (ஊறவைக்கும் நேரம் + அரைக்கும் நேரம் + புளிக்க வைக்க)


Bull's Eye 


linking to saras 30 minutes dish rice recipe

18 கருத்துகள்:

Angel said...

ஜலீலா ஆப்பம் மிக அருமையாக வந்திருக்கு ..
நான் nonstick ஆப்ப சட்டி வைத்திருக்கேன் அதில் அவ்வளவு நல்லா வர மாட்டேங்குது
இங்கே வேறு ஒன்று வாங்கி இதே முறையில் செய்கிறேன் .ரெசிப்பிக்கு மிக்க நன்றி

Mahi said...

Perfect aapam jaleela Akka!

Neenga ready made maavula seytheengalaa enna? Illai thaane? ;)

Jaleela Kamal said...

மகி இதில் உள்ள ஆப்பம் எல்லாம் மேலே உள்ள அளவில் அரைத்து செய்தது.

Jaleela Kamal said...

தாய் ஸ்டிக்கி ரைஸ் சேர்த்தால் செம்ம சூப்பராக வரும்,

Jaleela Kamal said...

அடுத்து தேங்காய அதில் சேர்த்து அரைக்காமல்.
சுடும்போது ரொம்ப பட்டாக அரைக்காமல், அப்படியே தண்ணீர் சேர்த்து அரைத்து மாவில் கலந்து சுட்டாலும் நல்ல பஞ்சி போல் வரும்

Jaleela Kamal said...

ஏஞ்சலின் செய்து பாருங்கள்.

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
உங்கள் பதிவில் உள சிலவற்றை நம் வீட்டிலும் செய்தோம், நன்றாக இருந்தது நன்றிகள்.நீண்ட நாளாக ஒரு கேள்வி!!

நமக்கு எதிலும் வருவது சந்தேகமும் கேள்வி மட்டுமே.

இப்படி புதிது புதிதாக‌ உணவு வகை ,செய்முறை சொல்ரீங்களே, ஏதேனும் புத்தகத்தில் இருந்து சொல்வதா, இல்லை நீங்களா கெமிஸ்ட்ரி லேப் மாதிரி சும்மா வினை(?) பொருள்களை கொஞ்சம் மாத்தி போட்டு பாக்கலாமே என செய்து பார்த்து ,வீட்டில் உள்ளவர்களை வைத்து பரிசோதித்து(?) சொல்ரீங்களா!!

அப்படி நீங்களாக கண்டு பிடித்தவை என்றால ஹை லைட் பண்ணுங்க எல்லாரும் பாராட்டுவார்!!

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்

வாழ்க வளமுடன்

Jaleela Kamal said...

சகோ. சார்வாகன்

முதலில் இங்குவந்து கருத்து தெரிவித்தமைக்க்கு மிக்க நன்றி

உங்கள் வீட்டில் சமைத்து பார்த்து நலல் வந்தது குறித்தும் மிக்க மகிழ்சி.

இதில் பதியும் பரம்பரை சமையலைதவிர


மற்ற சமையல் குறிப்புகள் எலலாம் 85 % என் சொந்த (கெமிஸ்ட்ரி தான்) முயற்சி தான், சமைக்கும் போது தினம் செய்வதை விட ஒரு நாளைக்கு ஒரு விதமாக மாற்றி அமைத்து செய்து பார்ப்பது என் வழக்கம்.

இது வரை புத்தகம் வைத்து பார்த்து சமைத்தததில்லை.

அப்படியே பார்த்து ஒன்றிரண்டு சமைத்தாலும் எனக்கு பிடிச்ச என் மசாலாக்கள் தான் போடுவேன்.

எனக்கு என் சமையல் குறிப்புகளே இன்னும் நிறைய இங்கு பதிய முடியாமல் இருக்கு,


சில குறிப்புகளை யாருடையதாவது சமைத்து இங்கு பதிந்து இருந்தால் கண்டிப்பாக அவர்கள் பெயருடன் போட்டு இருப்பேன்,

லேபிளிலும் தோழிகளின் சமையல் என்று போட்டுள்ளேன்.

இப்போதைக்கு இங்கு வருகையாளர்களே குறைவு, இதில் பாராட்டெல்லாம் நான் எதிர் பார்க்கவிலலை


இதில் கள்ள பசங்க காப்பி அடிச்சு அவர்கள் குறிப்பாக போடமா இருந்தால் அதே போதும்.


வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் மிக்க நன்றி.

Unknown said...

ஆப்பம் மிக அருமையாக வந்திருக்கு

Menaga Sathia said...

ஆப்பம் நல்லா பஞ்சு போல மென்மையா இருக்கு..

'பரிவை' சே.குமார் said...

நீங்க ரசிச்சுப் போடுறீங்க...
நாங்களும் ருசிச்சுப் படிக்கிறோம்...
செய்து பார்த்து சாப்பிட இங்க முடியலையே... ஊருக்குப் போனால் செய்து சாப்பிடலாம்.

Unknown said...

Appam kooda thenga pal and onion chatni nalla irukkum endru ninekkiren. Jyothi.

Asiya Omar said...

புல்ஸ் ஐ ஆப்பம் அருமை.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஆஹா சூப்பர்.. நான் அப்பத்துக்கென்றே நொன் ஸ்ரிக் சட்டி வாங்கி புறிம்பாக வைத்திருக்கிறேன்ன் சூப்பராக வரும், செய்கிறேன்.

மாதேவி said...

அப்பம் நன்றாக இருக்கின்றது ஜலீலா.

நம்ம நாட்டினரும் அப்பம் விரும்பி உண்பார்கள்.

Jaleela Kamal said...

பாயிஜா
மேனகா
சேகுமார்

Jaleela Kamal said...

வாங்க ஜ்யோதிபாய். ஆமாம் ஓவ்வொரு முறை ஓவ்வொரு மாதிர் செய்வது

ஆப்பம் மிளகு கோழி

ஆப்பம் தேஙகாய் பால்
ஆப்பம் சட்னி
ஆப்பம் மீன் சால்னா
ஆப்பம் வெஜ் குருமா
முட்டை ஆப்பம்
புல்ஸ் ஐ ஆப்பம்

இதுபோல்
உங்கள் வருகைக்குமிக்க நன்றி

Jaleela Kamal said...

ஆசியா
அதிரா
மாதேவி அனைவருக்கும் மிக்க நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா