Tweet | ||||||
Sunday, February 3, 2013
அவல் இட்லி - Poha Idly
அவல் இட்லி
தேவையாவை
இட்லி அரிசி – 2
டம்ளர்
அவல் – 1
டம்ளர்
உளுந்து - ¾ டம்ளர்
வெந்தயம் – 1
தேக்க்ரண்டி
சாதம் – ஒரு
கை பிடி
உப்பு – தேவைக்கு
இட்லி சோடா – ¼ தேக்க்ரண்டி
செய்முறை
உளுந்தையும் வெந்தயத்தையும்
ஒன்றாக ஊறவைக்கவும். அரிசி, அவல், சாதம் முன்றையும் ஒன்றாக ஊறவைக்கவும். 4
லிருந்து 5 மணி நேரம் போதுமானது, இல்லை இரவு ஊறவைத்து காலையும் அரைக்கலாம்.
முதலில் உளுந்தையும்
வெந்த்யத்தையும் மையாக அரைக்கவும்.
அடுத்து அரிசி, அவல், சாதம்
சேர்த்து முக்கால் பத்த்துக்கு கர கரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவை 8 மணி
நேரத்துக்கு புளிக்க விடவும்.
மாவு புளித்த்தும் அதில்
உப்பு + இட்லி சோடா சேர்த்து கலக்கவும்.
இட்லி தட்டில் நெய் அல்லது
எண்ணை தடவி இட்லி மவை ஊற்றி 10 நிமிடம் அவித்து எடுக்கவும்.
சுவையான சூப்பரான ஷாப்ட்
இட்லி அவல் இட்லி ரெடி.
சாம்பார், சட்னி, சால்னா, சர்க்கரை, தேன்
போன்ற எல்லா அயிட்டங்க்ளும் பொருந்தும்.
Subscribe to:
Post Comments (Atom)
14 கருத்துகள்:
அவல் சேர்த்தா, இட்லி மல்லிப்பூவைவிட ஸாஃப்டா பஞ்சு போல இருக்குமே!!
// இட்லி சோடா//
இது என்ன சோடா? பைகார்பனேட் ஆஃப் சோடாவா? அல்லது பேகிங் சோடாவா?
இந்த இட்லி மாவில், அவல், சாதம், வெந்தயம், உளுந்து எல்லாமே மாவை நல்லா பொங்க வைக்குமே, கூடவே சோடா உப்பும் வேணுமாக்கா?
wow idly luks so soft and yum...
ஹுஸைனம்மா அவர்களின் சந்தேகம் தான்...
+ சோடா உப்பு...?
//பைகார்பனேட் ஆஃப் சோடாவா//
இதை தான் சில ஆப்ப சோடா என்பார்கள்
சிலர் இட்லி சோடா என்பார்கள்
எல்லாம் சேர்ந்தால் இட்லி சோடா தேவையில்லை தான்
சிலருக்கு அரைக்கும் பதம் சரியாக வராது. அதற்கு இட்லி சோடா கலக்கி கொள்ளலாம்
இன்னுமே இந்த இட்லி விஷியத்தில் கத்து குட்டி தான்
அரைக்கும் விதம்+ மாவு கலக்கும் விதம் வைத்து தான் இட்லி நல்ல வருவது.
ஹுஸைனம்மா பிரேமா
மிக்க நன்றி
திண்டுக்கல் தனபால்கன் சார் வெகு நாட்கள் கழித்து மீண்டும் வந்தது குறித்து மிகவும் சந்தோஷம்
அவலில் இட்லியா?வித்தியாசமான முயற்சிதான்
சோடா உப்பு சேர்த்தால் சேர்க்கப்பட்ட உணவில் உள்ள சத்துக்கள் அழிக்கப்படும் என்பது உண்மையாக்கா? இதை எங்கு படித்தேன் எனத் தெரியவில்லை... அதனால் சோடா உப்பு சேர்ப்பதற்கே பயமாக உள்ளது. விபரம் தெரிய வந்தால் சொல்லுங்க ப்ளீஸ்.
பானு ஆப்ப சோடா நான் அவ்வளவாக பயன் படுத்த மாட்டேன்
/சோடா உப்பு சேர்த்தால் சேர்க்கப்பட்ட உணவில் உள்ள சத்துக்கள் அழிக்கப்படும் என்பது உண்மையாக்கா/ இதை படுத்தி தெரிய வில்லை, ஆனால் கடைகளில் எல்லாத்துக்குமே ஆப்ப சோடா தானெ ச்சேர்க்கீறர்கள்
மைக்ரோ வேவ் கேக்குக்கும், இட்லிக்கும் பயன் படுத்துவேன்,

///சோடா உப்பு சேர்த்தால் சேர்க்கப்பட்ட உணவில் உள்ள சத்துக்கள் அழிக்கப்படும் என்பது உண்மையாக்கா/ இதை பத்தி தெரிய வில்லை, //
ஆமாம் அக்கா, பானு சொல்வது சரியே. சோடா உப்பு அமிலத்தன்மை கொண்டது. அடிக்கடி சாப்பிடுவது நல்லதல்ல. மேலும், உணவில் உள்ள விட்டமின் பி - யை அழித்துவிடுமாம். அதனால் தவிர்ப்பது நல்லது.
மைதாவில் சத்து எதுவும் கிடையாது. அதனால், அதில் கேக் பொன்றவை செய்யும்போது தேவைக்குப் பயனப்டுத்தலாம்.
நான் சோடாமாவு அவ்வளவாக பயன் படுத்துவதில்லை. எப்பவாவது தான் பயன் படுத்துவது, ஆனால் பஜ்ஜிக்கு சேர்ப்பேன்.
விளக்கத்துக்கு நன்றி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா