Showing posts with label சிறப்பு உணவு. Show all posts
Showing posts with label சிறப்பு உணவு. Show all posts

Friday, February 7, 2014

கார்ன் பீஸ் மணி பேக் - Corn Peas Money Bag



 என் சிறப்பு விருந்தினர் பதிவாக தோழி ஆசியா வின் சமைத்து அசத்தலாமில்  => இங்கு சென்று படிக்கவும்.



கார்ன் பீஸ் மணி பேக்
Corn Peas Money Bag/Wontons/Potli


வித்தியாசமான அருமையான ஸ்டாடர் உணவு, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் ஏன் நாமும் தான். இது ஒரு இத்தாலி உணவு வகை.

இதை நம் சுவைக்கு ஏற்ப வித விதமான பில்லிங் வைத்து தயாரிக்கலாம்.

பள்ளிக்கு செல்லும் குழந்தகள் கொண்டு போகும் மதிய உணவு அப்படியே திரும்பி கொண்டு வருவது கண்டு கவலை படும் பெற்றோர்கள் இது போல் ஒரு அழகிய மூட்டை போல் செய்து அவர்கள் விருப்பப்படி , சிக்கன் மட்டன், முட்டை , காய் கறி வகைகளை வைத்து செய்து கொடுத்தால் சத்தமில்லாமல் காலி ஆகும் உங்கள் பிள்ளைகளின் டிபன் பாக்ஸ்.



தேவையானவை

மாவு குழைக்க

மைதா மாவு  -ஒரு டம்ளர் (200கிராம்)
உப்பு - கால் தேக்கரண்டி 
சர்க்கரை - அரை தேக்கரண்டி
வெது வெதுப்பான வெண்ணீர் -கால் டம்ளர்
என்ணை - ஒரு தேக்கரண்டி


செய்முறை வெண்ணீரில் உப்பு சர்க்கரை எண்ணை சேர்த்து மாவில் ஊற்றி நன்கு குழைக்கவும். குழைத்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.



பில்லிங் ரெடி செய்ய

ப்ரோஸன் ,ஸ்வீட் கார்ன்  (சோளம்)  - அரை கப்
ப்ரோஸன் பட்டாணி -  கால் கப்
முட்டை கோஸ் - துருவியது கால் கப்
கேரட் - பொடியாக அரிந்தது - ஒரு தேக்கரண்டி
கேப்சிகம் - பொடியாய அரிந்தது  - இரண்டு மேசை கரண்டி
பச்சமிளகாய் - பொடியாக அரிந்தது - ஒன்று
சர்க்கரை - 2 சிட்டிக்கை
வெங்காயம் - பொடியாக அரிந்தது - ஒரு மேசை கரண்டி
உப்பு - தேவைக்கு
ஒன்றும் பாதியுமாக தட்டிய - கருப்பு மிளகு தூள் - அரை தேக்கரண்டி
லெமன் சாறு  - அரை தேக்கரண்டி
பொடியாக அரிந்த பூண்டு - இரண்டு பல் 
எண்ணை - இரண்டு தேக்கரண்டி




செய்முறை

ஒரு வாயகன்ற நான்ஸ்டிக் பேனில் எண்ணை ஊற்றி காயவைத்து வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
அடுத்து பட்டாணி மற்றும் கார்ன் சேர்த்து வதக்கி 1நிமிடம் வேக விடவும்.
பிறகு முட்டை கோஸ், கேரட், கேப்ஸிகம் சேர்த்து வதக்கி  உப்பு சேர்த்து இரண்டு ஸ்பூன் தண்ணீர் தெளித்து 2 நிமிடம் வேகவிடவும்.

கடைசியாக மிளகு தூள், சர்க்கரை, லெமன் சாறு சேர்த்து பிரட்டி அடுப்பில் இருந்து இரக்கி ஆறவிடவும்.

குழைத்த மாவை சிறிய பூரி அளவு உருண்டைகளாக்கி ஓவ்வொரு உருண்டையையும் வட்ட வடிவமாக பூரிக்கு திரட்டுவது போல் திரட்டி நடுவில் ஒரு ஸ்பூன் அளவு வைத்து எல்லாபக்கமும் ஒன்று சேர்த்துமூட்டை போல் பிடித்து அழுத்தி விட்டு மேலே சிறிது பூ போல பிரித்து விடவும்.


அதே போல் எல்லா உருண்டைகளையும் செய்து முடிக்கவும்.

இரும்பு வானலியில் எண்ணையை காயவைத்து எல்லா மணி பேக் களையும் கருகாமல் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.



How to make Money bag/Won tons/Potli - Step by Step












இது பார்க்க பாட்டிகள் அந்த காலத்தில் பயன் படுத்து சுருக்கு பை போல் இருக்கும்.

சுருக்கு பை கயிறு தயாரிப்பதாக இருந்தால் ஸ்பிர்ங் ஆனியனின் நீட்டான பச்சை நிற இலையை பொடியாக நூல் போல அரிந்து பில்லிங் வைத்து முடித்து மூட்டை போல் கட்டி முடிச்சி போட்டு வைக்கலாம்.
இது பார்க்க வித்தியாசமான ஷேப்பில் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதே போல் உள்ளே வைக்கும் பில்லிங் சிக்கன் , மட்டன் , மற்றும் உங்கள் விருப்பம் போல் என்ன வைத்து கொள்ளலாம்.

Chinese Cabbage Money Bag/Wontons/Potli  @ Cook book Jaleela

*********************
இன்று எங்கள் திருமண நாள் , எங்களுக்கும் எங்கள்குடும்பத்தினர்களுக்கும் துஆ செய்யுங்கள்.







Chennai plaza <= Honey Comb Burka/Abaya

Chennai Plaza => Wholesale & Retail 
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, November 14, 2010

ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் - உப்பு கன்டம் கறி (குர்பாணி கறி) - uppu kandam

















எல்லோருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

இன்றி்ரவு அரஃபா நோன்பு வைக்க தவற வேண்டாம்.

இதன் விளக்கத்தை


சகோதரி அஸ்மா பதிவு போட்டு இருக்கிறார்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


இந்த வருடம் ஹஜ் சென்றுள்ள சகோதர சகோதரிகளுக்கு சிரமம் இல்லாமல் கடமையை நிறைவேற்ற ஆண்டவன் கிருபை புரியட்டும்.

இனி நமக்கும் அல்லா சீக்கிரம் ஹஜ் பாக்கியம் கிடைத்திட கிருபை புரிவானக.

குர்பாணி கறி சொந்தங்கள் வீடுகளில் இருந்து வந்து குமியும் , நாமும் சொந்தங்களுக்கு கொடுப்போம்.
அதை எப்படி பதப்படுத்தி வைப்பது உப்புகன்டமாக்கி வைக்கலாம்

இன்னும் ஒன்று வருடா வருடம் ஹஜ் பெருநாள் வரும் போது எல்லா வீடுகளிலும் ஆடு குர்பாணி கொடுப்பார்கள், அப்போது எல்லா வீட்டிலிருந்தும் கறி வந்து குமியும் அந்த காலத்தில் பிரிட்ஜ் கிடையாது நிறைய பேர் வீட்டில், ஆகையால் கூடுமான வரை கொடுப்பவர்களுக்கு எல்லாம் கொடுத்துவிட்டு, மீதியை சமைத்து விட்டு, கொஞ்சம் கறியை உப்பு, மஞ்ச பொடி போட்டு சுருட்டி வைப்பார்கள். அது மறு நாள் சமைக்க பயன்படுத்தி விட்டு மீதியுள்ள கறியை காயப்போட்டு பதப்படுத்தி வைப்பார்கள்.



உப்பு கன்டம் கறி (குர்பாணி கறி)

இதை தட்டி சுடுவதால் தட்டு கறி என்றும், காய போட்டு சுடுவதால் காய போட்ட கறி என்றும் சொல்வார்கள்

இது பெயர் தட்டு கறி, உப்பு கன்டம்,காய போட்ட கறி எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். முன்பு காலங்களில் ரங்கூன், பர்மா, மலேஷியா நாடுகலுக்கு பொருள் ஈட்ட செல்லும் போது அங்கு ஹலால் உணவு கிடைக்குமோ இலையோ ஆகையால். நம் நாட்டவர் கறி, இறால், பீஃப் போன்ற வற்றை பதப்படுத்து அல்லது காய வைத்து கொண்டு செல்வார்கள் இது எத்தனை நாள் ஆனாலும் கெடாது.



தேவையான பொருட்கள்

துண்டு கறி - ஒரு கிலோ
உப்பு - இரண்டு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - முன்று மேசை கரண்டி
மிளகாய் தூள் - நாலு மேசை கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

செய்முறை

கறி துண்டாக தடிமானாக போடாமல் சிறிது சப்பையாக போடனும் போட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்து அதில் உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வெறவி பத்து நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

பிற்கு சுத்தமான சணல் கயிறை கழுவி,சுத்தமான பெரிய கோணி ஊசியில் ஒவ்வொரு கறியா கோர்த்து ஒரு இன்ச் இடைவெளி விட்டு துணி காய போடும் கொடியில் மாலை போல் தொங்க விட்டு வைக்கவேண்டும்.

இந்த கறியை காய போடும் போது அதை காக்கா தூக்கி கொண்டு போகாமல் இருக்க கூட வே ஒரு கருப்பு துணியையும் வைப்பார்கள்.நல்ல காய்ந்ததும் எடுத்து பயன் படுத்தலாம். முக்கியமாக இதை வெளியூருக்கு எடுத்து வரலாம்.


குறிப்பு:
காய்ந்த கறியை பொரிக்கும் போது  ஒரு பேப்பரில் வைத்து நன்கு தட்ட வேண்டும், பிறகு கொஞ்சமாக‌ எண்னை ஊற்றி பொரித்து எடுக்கவேண்டும்.

தொட்டுக்க ஒன்றும் இல்லாத போது, திடீர் சமையலுக்கு இது மிகவும் கை கொடுக்கும்.வெரும் ரசம் சாத்த்துடன் சாப்பிட நல்ல இருக்கும்.
அதை தட்டி பொரிப்பதால் தட்டி பொரித்த கறி என்று பெயர்.

இதை மற்றொரு முறையில் காஞ்சமிளகாய் பயன் படுத்தியும் செய்வார்கள் அதை பிறகு போடுகிறேன்

தட்டு கறி , உப்புகன்டம் கறி,uppu kandam kari ,sukkaa kari ஹஜ் பெருநாள்