இன்றி்ரவு அரஃபா நோன்பு வைக்க தவற வேண்டாம்.
இந்த வருடம் ஹஜ் சென்றுள்ள சகோதர சகோதரிகளுக்கு சிரமம் இல்லாமல் கடமையை நிறைவேற்ற ஆண்டவன் கிருபை புரியட்டும்.
இனி நமக்கும் அல்லா சீக்கிரம் ஹஜ் பாக்கியம் கிடைத்திட கிருபை புரிவானக.
குர்பாணி கறி சொந்தங்கள் வீடுகளில் இருந்து வந்து குமியும் , நாமும் சொந்தங்களுக்கு கொடுப்போம்.
அதை எப்படி பதப்படுத்தி வைப்பது உப்புகன்டமாக்கி வைக்கலாம்
இன்னும் ஒன்று வருடா வருடம் ஹஜ் பெருநாள் வரும் போது எல்லா வீடுகளிலும் ஆடு குர்பாணி கொடுப்பார்கள், அப்போது எல்லா வீட்டிலிருந்தும் கறி வந்து குமியும் அந்த காலத்தில் பிரிட்ஜ் கிடையாது நிறைய பேர் வீட்டில், ஆகையால் கூடுமான வரை கொடுப்பவர்களுக்கு எல்லாம் கொடுத்துவிட்டு, மீதியை சமைத்து விட்டு, கொஞ்சம் கறியை உப்பு, மஞ்ச பொடி போட்டு சுருட்டி வைப்பார்கள். அது மறு நாள் சமைக்க பயன்படுத்தி விட்டு மீதியுள்ள கறியை காயப்போட்டு பதப்படுத்தி வைப்பார்கள்.
உப்பு கன்டம் கறி (குர்பாணி கறி)
இதை தட்டி சுடுவதால் தட்டு கறி என்றும், காய போட்டு சுடுவதால் காய போட்ட கறி என்றும் சொல்வார்கள்
இது பெயர் தட்டு கறி, உப்பு கன்டம்,காய போட்ட கறி எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். முன்பு காலங்களில் ரங்கூன், பர்மா, மலேஷியா நாடுகலுக்கு பொருள் ஈட்ட செல்லும் போது அங்கு ஹலால் உணவு கிடைக்குமோ இலையோ ஆகையால். நம் நாட்டவர் கறி, இறால், பீஃப் போன்ற வற்றை பதப்படுத்து அல்லது காய வைத்து கொண்டு செல்வார்கள் இது எத்தனை நாள் ஆனாலும் கெடாது.
தேவையான பொருட்கள்
துண்டு கறி - ஒரு கிலோ
உப்பு - இரண்டு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - முன்று மேசை கரண்டி
மிளகாய் தூள் - நாலு மேசை கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
செய்முறை
கறி துண்டாக தடிமானாக போடாமல் சிறிது சப்பையாக போடனும் போட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்து அதில் உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வெறவி பத்து நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
பிற்கு சுத்தமான சணல் கயிறை கழுவி,சுத்தமான பெரிய கோணி ஊசியில் ஒவ்வொரு கறியா கோர்த்து ஒரு இன்ச் இடைவெளி விட்டு துணி காய போடும் கொடியில் மாலை போல் தொங்க விட்டு வைக்கவேண்டும்.
இந்த கறியை காய போடும் போது அதை காக்கா தூக்கி கொண்டு போகாமல் இருக்க கூட வே ஒரு கருப்பு துணியையும் வைப்பார்கள்.நல்ல காய்ந்ததும் எடுத்து பயன் படுத்தலாம். முக்கியமாக இதை வெளியூருக்கு எடுத்து வரலாம்.
குறிப்பு:
காய்ந்த கறியை பொரிக்கும் போது ஒரு பேப்பரில் வைத்து நன்கு தட்ட வேண்டும், பிறகு கொஞ்சமாக எண்னை ஊற்றி பொரித்து எடுக்கவேண்டும்.
அதை தட்டி பொரிப்பதால் தட்டி பொரித்த கறி என்று பெயர்.
இதை மற்றொரு முறையில் காஞ்சமிளகாய் பயன் படுத்தியும் செய்வார்கள் அதை பிறகு போடுகிறேன்
தட்டு கறி , உப்புகன்டம் கறி,uppu kandam kari ,sukkaa kari ஹஜ் பெருநாள்
Tweet | ||||||
20 கருத்துகள்:
பெருநாள் வாழ்த்துக்கள் சகோதரி
ஜலீலாக்கா
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாற்க்கும் மனமார்ந்த ஹச்சு பெருநாள் நல்வாழ்த்துக்கள்.....
நல்ல தகவல்.
பெருநாள் வாழ்த்துக்கள்.அரபா நோன்பு சிறக்க வாழ்த்துக்கள்.
ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா... எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த கறி
உங்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள் ஜலி.சீக்கிரம் பலவித உப்புகண்ட இரைச்சி ரெசிப்பிகள் போடுங்கள்.
பெருநாள் வாழ்த்துக்கள் சகோதரி
உங்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
இனிய ஹஜ்பெருநாள் வாழ்த்துக்கள்!!
குர்பானி இறைச்சியை பதப்படுத்தி (இருப்பு வைத்து) உபயோகிக்கலாமா?
இனிய ஹஜ்பெருநாள் வாழ்த்துக்கள்.அருமையான பகிர்வு.
அக்கா ஹஜ் பெருநாள் வந்த எனக்கு உடனே நினைவில் வருவது உப்பு கண்டம்....அத மறக்காம போட்டதுக்கு நன்றிக்கா...
[ma]wish a happy Eid ul- Adha to u & ur family members[/ma]
அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா! சரியான நேரத்தில் இந்த உப்புக் கண்டம் பற்றி போட்டுள்ளீர்கள். செய்முறை தெரியாதவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். காகத்தை விரட்ட கறுப்பு துணி ஐடியா நாங்களும் செய்வோம் :)
அத்துடன் அரஃபா நோன்பின் விளக்கங்களுக்கு என் ப்ளாக் லிங்க் கொடுத்ததற்காக உங்களுக்கும் அந்த நன்மையில் குறையாமல் இறைவன் கொடுப்பானாக, இன்ஷா அல்லாஹ்! நன்றி ஜலீலாக்கா.
ஆஹா...சூப்பராக் இருக்கு...
ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் ஜலீலாக்கா!
ஜலீலா, உங்கள் குடும்பத்தார் மற்றும் வலையுலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளின் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்,
குர்பானி இறைச்சியை பதப்படுத்தி (இருப்பு வைத்து) உபயோகிக்கலாமா?
6 maatham varai payan paduththalaam
ஜலீலா அக்கா தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்
The place i live we hardly get sun light (in winter season), Is there any alternate way to do uppu kandam like using Oven?
அன்பு சகோதரி
உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் என் கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள். பிரியாணி செய்முறை மிகவும் அருமை.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா