Saturday, November 20, 2010

சுறா மீன் கட்லெட்


தே்ையானவை

சுறா மீன் - கால் கிலோ ( வெந்தது)
சீரக தூள் - இரண்டு தேக்கரண்டி
உருளை கிழங்கு - 100 கிராம்
கேரட் - 50 கிரம்
வெங்காயம் - இரன்டு (பொடியாக அரிந்தது)
பச்ச மிளகாய் - இரண்டு (பொடியாக அரிந்தது)
கொத்து மல்லி கீரை - ஒரு கை ப்டி அளவு (பொடியாக அரிந்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் (அ) மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு



கட்லெட் தோய்க்க

கார்ன் பிளேக்ஸ் - ஒரு கால் கப்
ஓட்ஸ் - கால் கப்
முட்டை - ஒன்று + அரை


செய்முறை


1. உருளை , கேரட்டை வேக வைத்து ஆறியதும் தண்ணிரை வடித்து மசித்து கொள்ளவும்.

2. வெந்த மீனில் இஞ்சி பூண்டு பேஸ்ட்,சீரக தூள், உப்பு தூள், மிளகுதூள், கரம் மசாலா துள் சேர்த்து நன்கு பிசையவும்.

3.அடுத்து பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்ச மிளகாய், கொத்து மல்லி தழை சேர்த்து நன்கு பிசையவும்.

4.கடைசியாக மசித்து வைத்துள்ள உருளை, கேரடை சேர்த்து கெட்டியாக பிசைந்து சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

5. முட்டையை நன்கு அடித்து வைக்கவும், கார்ன் பிளேக்ஸை கையால் நள்ள நொருக்கி அத்துடன் ஓட்ஸை கலந்து வைக்கவும்.

6.இப்போது உருட்டி வைத்துள்ள உருண்டைகளை முட்டையில் இருபுறமும் முக்கி ஓட்ஸ், கார்ன் பிளேக்ஸ் கலவையில் பிறட்டி ஒரு தட்டில் அடுக்கி பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.

7. பிறகு எடுத்து பொரித்து சாப்பிடவும்.

8.சுவையான சுறா மீன் கட்லெட் ரெடி.

குறிப்பு



சுறாமீன் சால்னா (குழம்பு) தயரிக்கும் போது அரை கிலோவாக எடுத்து அதில் உப்பு, சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட்,சீரக தூள் சேத்து வேக வைத்து அதிலிருந்து முள்ளில்லாமல் கால் கிலோவை எடுத்து வைத்து கொள்ளவேன்டும் (இதை கட்லெட் (அ) புட்டு (அ) வடை செய்து கொள்ளலாம்.

கிரெம்ஸ் பொடிக்கு பதில் இப்படி ஓட்ஸ், கார்ன் பிளேக்ஸ் சேர்ப்பதால் நல்ல இன்னும் கிரிஸ்பியாக வரும்.

என் கு்றிப்ப காப்பி அடிக்காதீங்க.

19 கருத்துகள்:

Soumya said...

sura meen cutlet looks delicious and tempting...

எல் கே said...

உள்ளேன்

ஸாதிகா said...

கட்லட் பார்க்க நன்றாக உள்ளது.ஆனால் சுறாமீன் வாசனைக்கே காததூரம் ஓடிவிடுவேன்.

Akila said...

wow very innovative and impressing recipe dear.... book marked....

Asiya Omar said...

சூப்பர்.எனக்கு மிகவும் பிடித்தது.

Thenammai Lakshmanan said...

ரொம்ப சூப்பரா இருக்கு ஜலீலா..:))

சசிகுமார் said...

என்ன எங்க பார்த்தாலும் ஒரே சுறா மீனாவே இருக்கு. ஒரு மாசம் கழித்து போடுங்க இப்ப என்னால ஒன்னும் செய்ய முடியாது.
சாமியே சரணம் ஐயப்பா

ஜெய்லானி said...

சுறா மீன் வீட்டில் செய்வதில்லை , இங்கு வந்துதான் பழக்கம் ..!! :-)

ஜெய்லானி said...

ஆனா யாராவது செஞ்சி குடுத்தா எதையும் விடுறதா இல்லை :-))

ஆமினா said...

கிட்டதட்ட ஆசியாவும் நீங்களும் ஒரே நேரத்துல சுறா மீன் ரெசிபி கொடுத்துருக்கீங்கன்னு நெனைக்கிறேன். காலைல பாக்கும் போது நேரம் சேமா இருந்தது!

இந்த முறை வித்தியாசமா இருக்கு ஜலீலாக்கா! செய்துட்டு சொல்றேன்

Jaleela Kamal said...

நன்றீ எல்.கே
வருகைக்கு மிக்க நன்றி சவுமியா

நன்றி ஸாதிகா அக்கா நாங்க எப்பாவாவது சுறாமின் மிளகு சால்னா, புட்டு,, கட்லட் செய்து சாப்பிடுவது.
நன்றி

நன்றி அகிலா தொடர் வருகைக்கு மிக்க நன்றி

நன்றி ஆசியா



தேனக்கா வாங்க , வருகைக்கு மிகக் நன்றி

சசி வாங்க அபப் ஒரு மாதம் சென்று செய்து சாப்ப்பிடுங்கள்

ஆமாம் ஆமினா ,சமையல் குறிப்புகளை சமீப காலமா போடுவட்தில் ஒரு வேலை நான் நினைத்ததை தான் அவர்களும் நினைத்து வைத்திருக்கிறார்களஓ என்னவோ/

ஜெய்லானி அட்ரஸ் கொடுங்க பார்சல் அனுபிடுகிறேன்

Priya Srinivasan - I Camp in My Kitchen said...

hi jaleela,
i m a vegetarian, so i cannot comment on this post!!! but loved reading ur other posts!!! Bloggers meet, Life in Dubai!!! Wonderful!!!
Tamizh-la padikka innum romba nalla iruku!!!!!
nan sharjah-le iruken, Megamall kitte!!!

Jaleela Kamal said...

வாங்க பிரியா வாசு வருகைக்கு மிக்க நன்றி.

ரொம்ப சந்தோஷம்

apsara-illam said...

சலாம் அக்கா....
சுறாமீன் கட்லட் பார்க்கும் போதே சூப்பரா இருக்கு அக்கா.
நானும் இதுவரை சுறா மீன் ட்ரை பண்ணதே இல்லை.
உங்க குறிப்பை பார்த்ததும்,ஒரு நாளாவது வாங்கி இந்த குறிப்பை செய்து பார்த்துடனும்.
முடிவே பண்ணிட்டேன்.

Shama Nagarajan said...

yummy akka...i can scroll this blog

balkkisrani said...

இதை சீலா மீனில் செய்யலாமா ஜலிலாக்கா. நாங்கள் சுரா சாப்புடுரது இல்லை

balkkisrani said...

சலாம் சீலா மினில் செய்யலாமா ஜலிலாக்கா நாங்கள் சுரா சாப்பிட மாட்டோம்

balkkisrani said...

சலாம் ஜலிலாக்கா சீலா மீன்னில் செய்யலாமா நாங்கள் சுரா சாப்பிட மாட்டோம்

Jaleela Kamal said...

பல்கீஸ் எல்லா வகையான மீனிலும் இது போல செய்யலாம்.

வருகைக்கு மிக்க நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா