மட்டன் - 1 கிலோஅரிசி - 1 கிலோ
எண்ணை - 100 கிராம்டால்டா - 150 கிராம்
பட்டை - இரண்டு அங்குல துண்டு இரண்டு
கிராம்பு - ஐந்து
ஏலக்காய் - முன்று
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/2 கிலோ
இஞ்சி - 3 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 150 கிராம்
பூண்டு - 2 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 100 கிராம்
கொ. மல்லி - ஒரு கட்டு
புதினா - 1/2 கட்டுப. மிள்காய் - 8
தயிர் - 225 கிராம்
சிகப்பு மிளகாய் தூள் - 3 1/2 டீஸ்பூன்
மஞ்சள் போடி - 1 பின்ச்
ரெட்கலர் பொடி - 1 பின்ச்
எலுமிச்சை பழம் - 1நெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை
முதலில் சட்டி காய்ந்ததும்எண்ணையும் டால்டாவையும் ஊற்றி நல்ல கய்ந்ததும்ஒரு விரல் அளவு பட்டை , கிராம்பு , எலக்காய் போடவும்.
அது வெடித்ததும் நீளமாக வெட்டி வைத்துள்ள வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி போடவும்.
நல்ல பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும்.
ஓவ்வொரு தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியே தான் வைக்க வேன்டும்.அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும். பிறகு கொ . மல்லி புதினா வை போட்டு கிளறவும்
அதன் பின் தக்காளி ப.மிளகாய் போடவும்.இரன்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்ஜள் தூள், உப்பு தேவையான் அளவு போட்டு வேகவிடவும்.நல்ல எண்ணையில் எல்லா பொருட்களும் வதங்கியவுடன் மட்டனை போடவும்.
போட்டு தீயை அதிகபடுத்தி நன்றாக முன்று நிமிடம் கிளறவும்.பிறகு தயிரை நல்ல ஸ்பூனால் அடித்து ஊற்றவும்.அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும்.வெந்ததற்கு அடையாளம் எண்ணை மேலே மிதக்கும்.தீயின் அளவை குறைத்து வைத்து செய்வதால் அடி பிடிக்காது.
அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விடவும் ஊறவைத்த அரிசியை வடிக்கவும் .உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும், எலுமிச்சை பழமும் பிழியவும்.
வெந்ததும்நல்ல பதமாக பார்த்து ஓவ்வொன்றாக முக்கால் பதத்தில் வடித்தல் போதும். உடனே சிம்மில் வெந்து கொண்டிருக்கும் கிரேவியில் கொட்டவும்
கொட்டி சமப்படுத்தி சட்டிக்கு கிழே தம் போடும் கண் தட்டு (அல்லது) டின் மூடி வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு மேலே வடித்த கஞ்சி சட்டியை வைத்து தம்மில் விடவும்
ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி விட்டு ரெட்கலர் பொடியை அந்த சுடு கஞ்சி இரன்டு டேபுள் ஸ்பூனில் கரைத்து துவிவிடவும்.
அதன் பின் இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விடவும்.பிறகு பத்து நிமிடம் புழுங்க விட்டு மேலிருந்து கீழாக நல்ல உடையாமல் பதமாக கிளறி சூடாக பறிமாறவும.
வீட்டில் சாதாரணமாக செய்யும் போது டால்டாவின் அளவை குறைத்து கொண்டு எண்ணையை செர்த்து கொள்ளலாம். கறியின் அளவும் குறைத்துக் கொள்ளலாம். விரிவாக எழுதி உள்ளேன் மெதுவாக படித்து புரிந்து கொண்டு செய்து பார்க்கவும். நம்மால் முடிந்தால் தக்காளி ஹல்வா, கேரட் ஹல்வா, பீட்ரூட் ஹல்வா செய்து கொள்ளலாம். இந்த ஈதுபெரு நாளுக்கு டிரை பண்ணி பாருங்கள்.தொட்டுக்கொள்ள எண்ணக் கத்திரிக்காய், தயிர் சட்னி, கேசரி, மிட்டாகான முதலியவை.மிட்டாகானா
Tweet | ||||||
33 கருத்துகள்:
உங்களுக்கும் என் பெரு நாள் வாழ்த்துக்கள்
wow... mouthwatering recipe.... simply love it....
யப்பா..எத்தனை வகை பிரியாணி...!
தியாக திருநாள் வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்
super biryani, akka.
தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
பக்ரீத் திருநாள் வாழ்த்துகள் சகோ!
ஜலீலா அக்கா!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவருக்கும் என் இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்
அனைத்து தோழமைக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
சகோதரி அவர்களுக்கு
தியாக திருநாள் வாழ்த்துக்கள்
எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
அக்கா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Hi jaleela Ka
Even this Receipe Also copied ditto in the Tamil samayal Blog.
http://tamizhchef.blogspot.com/
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள் ஜலீலா!
இனிய ஈத் பெருநாள் வாழ்த்துக்கள் ஜலீலா.
பிரியாணியைப் பார்த்ததுமே சாப்பிட்ட ஃபீலிங் :)
ஈத் முபாரக் ஜலீலா..
இதயம் கனிந்த பெருநாள் நல்வாழ்த்துக்கள் ஜலீலா.
ஜலீலாக்கா, தங்களுக்கும் ஹகீம், ஹனீஃப் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் அன்பான பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஹஜ்ப்பெருநாள் வாழ்த்துக்கள் :-)
தியாகத்திருநாள் வாழ்த்துக்கள் ஜலீலாக்கா!
ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்
ஜலீ உங்களுகும் உங்க குடும்பத்தாருக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.
பெருநாள் வாழ்த்துக்கள் சமையல் அருமை
தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்..
http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_19.html
இதுக்கு பதில் நான் மலைக்குப் போய் விட்டு எழுதுகின்றேன். இப்ப சாமி சரணம்.
உங்கள் தொடர்வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி எல்.கே.
நன்றி அகீலா
ஸாதிகா அக்கா இன்னும் நிறைய வகை இருக்கு. நேரம் இல்லாத்தால் போட முடியல
ஹைஷ் வாங்க ரொம்ப நாள் கழித்து பெருநாள் வாழ்த்துக்கு வந்து இருக்கீங்க. நன்றி
நன்றி @ வானதி
நன்றி @ புவனேஷ்வரி
வருகைக்கு மிக்க நன்றி வசந்த்
நன்றி @ ஆமினா
நன்றி @ இலா
வாங்க ஹதர் அலி வருகைக்கு மிக்க நன்றி
நன்றீ பாத்திமா
நன்றீ மலிக்கா
அனானி ஆமாம் இது நான் ஏற்கனவே போன வருடம் இங்கு போட்ட ரெசிபி.
அங்கு தமிழ் செஃப் காப்பி அடிச்சாச்சு, அதான் எடுத்து பெயர் எல்லாம் சரியாக போட்டு ரீ போஸ்ட் போட்டுள்ளேன்.
என்ன செய்ய சில திருந்தாத ஜென்மங்களை திருத்த முடியலையே?
ராமலக்ஷ்மி வருக்க்கும் வாழ்த்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
சுந்தரா பிரியாணியை பார்த்த்தும் சாப்பிட்ட பீலிங்கா உடனே செய்து சாப்பிட்டு சொல்லுங்கபா
நன்றி அமைதி சாரால்
நன்றி மாதேவி
அஸ்மா என் பையன்கள் பெயரையும் சரியாக ஞாபகம் வைத்து வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
நன்றி சுனிதா
நன்றி ஜெய்லானி
நன்றீ மகி
நன்றி கீதா 6
நன்றி தோழி விஜி
நன்றி சகோ. அய்யுப்
நன்றி காஞ்சனா.
மிக்க நன்றி அகமது இர்ஷாத் என்னை வலைசரத்தில் அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி
வாங்க சுதாகர் சார், மலைக்கு போய் மெதுவா வாங்க்.
super
mouth watering, wish I was your neighbour, thanks for sending it to my event
அன்பு சகோதரி, உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பக்ரீத் வாழ்த்துக்கள். உங்களின் பதிவுகள் அருமை்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா