Showing posts with label நவதாணியம். Show all posts
Showing posts with label நவதாணியம். Show all posts

Sunday, July 9, 2017

தினை & குதிரைவாலி பூண்டு வல்லாரைகஞ்சி- Foxtail Millet & Barnyard Millet soup

.

தினை குதிரைவாலி பூண்டு வல்லாரைகஞ்சி
Foxtail Millet & Barnyard Millet ,Garlic Centella asiatica soup




தினை குதிரைவாலி பூண்டு வல்லாரைகஞ்சி
Foxtail Millet & Barnyard Millet ,Garlic Centella asiatica soup


தினைஅரைகப்
அரிசி – கால்கப்
குதிரைவாலிஅரைகப்
பூண்டுஒருபெரியபூண்டுமுழுவதும்
சீரகம் – ஒருதேக்கரண்டி
மிளகு – 3
தனியாதூள் – ¼ தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ஒருசிட்டிக்கை
சின்னவெங்காயம் – 6
தேங்காய் பால் – ஓரு டம்ளர்
தாளிக்க
எண்ணை + நெய் – 2 தேக்கரண்டி
சின்னவெங்காயம் – 3 பொடியாகஅரிந்த்து
கருவேப்பிலை – 4 இதழ்
வல்லாரைகீரை – 10 இதழ்

செய்முறை

தினை , குதிரை வாலி மற்றும் அரிசியை மிக்சியில் கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.
குக்கரில் அரிசிவகைகளை களைந்து சேர்க்கவும். அதில் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் சின்ன வெங்காயம், பூண்டையும் பொடியாக அரிந்து சேர்த்து, தனியாத்தூள், மிளகு, சீரகம் , மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து முடிபோட்டு வேகவிட்டு 3 , 4 விசில் விட்டு இரக்கவும்.
ஆவி அடங்கியதும் நன்கு மசிக்கவும், தேங்காய் பால் சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
கடைசியாக எண்ணை + நெய் ஊற்றி சூடானதும் அதில் சின்ன வெங்காயம், கருவேப்பிலை, வல்லாரை கீரை சேர்த்து தாளித்து கஞ்சியில் சேர்க்கவும்.
சுவையான தினை குதிரை வாலி பூண்டு வல்லாரை கஞ்சி ரெடி.
பொட்டுகடலை துவையலுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

Foxtail Millet & Barnyard Millet ,Garlic Centella asiatica soup


வல்லாரை english name Centella asiatica
தினை english name Foxtail Millet

குதிரை வாலி English Name Barnyard Millet
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, March 15, 2017

கம்பு பாலக் கீரை பத்திரி/தட்டு ரொட்டி - Bajra Palak Roti


கம்பு பாலக் கீரை பத்திரி/தட்டு ரொட்டி
Bajra palak leaves roti ( paththiri)
kambu roti

நோன்பு காலங்களில் டயபட்டீஸ் உள்ளவர்கள் அதிக காலை நோன்பு வைக்க அல்லது இரவு டிபனுக்கு இதை செய்து சாப்பிடலாம்.


தேவையான பொருட்கள்



கம்பு மாவு ‍ - 200 கிராம்
உப்பு ‍ - தேவைக்கு
கரகரப்பாக திரித்த மிளகு தூள் ‍ - அரை தேக்கரண்டி
பாலக் கீரை (பசலை கீரை) - பொடியாக அரிந்தது ‍அரை கப்
நெய் ‍ ஒரு தேக்கரண்டி
தண்ணீர் ‍ ‍ - கால் கப் + தேவைக்கு
தேங்காய் துருவல் - ‍ முன்று மேசைகரண்டி
பச்ச மிளகாய் ‍ ‍ - ஒன்று பொடியாக அரிந்தது
வெங்காயம் - ஒன்று பொடியாக அரிந்தது









செய்முறை


1.      கம்பு மாவை லேசாக வறுத்து கொள்ளவும்.
2.      கம்பு மாவுடன் மேற்கண்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். 



3.      பிசைந்த மாவை சம  உருண்டைகளாக பிரிக்கவும்.  
4.      ஒரு தட்டில் சதுர வடிவ ஈரதுணியைவிரித்து அதில் ஒரு
 உருண்டையை வைத்து உள்ளங்கை அளவிற்கு உள்ள ரொட்டியாக
தட்டவும்.
5.      நான்ஸ்டி பானை காயவைத்து சிறிதுபட்டர் அல்லது நெய்
 தடவிதட்டிய ரொட்டியை இட்டு இரண்டுபுறமும்நன்கு சிவற வேகவைத்து லேசாகா நெய்தடவி இரக்கவும்.
6.      நெய் வேண்டாமெனில் ஆலிவ் ஆயில்தடவி சுட்டு எடுக்கவும்.
7.      சுவையான கம்பு பாலக் கீரை ரொட்டி ரெடி

.
  டயட் செய்பவர்களுக்கு இது ரொம்பருசியான சத்தான உணவு. 
கம்பு உடலில் உள்ள எலும்புகளை பலப்படுத்தும். 
வயிற்றில் ஏற்படும் புண்ணைஆற்றும்.
இதில் சரியான பதம் வரவில்லை என்றால்அதில் சிறிது ரவை,
சிறிது அரிசி மாவு கலந்துகொள்ளலாம்.
இதற்கு தொட்டு கொள்ள் பக்க உணவு ஏதும்தேவைபடாது, 
வேண்டுமானால். தக்காளி சட்னி,ஊறுகாய் தொட்டு சாப்பிடலாம்.இல்லை வெங்காய முட்டை சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



பரிமாறும் அளவு : 3 நபர்களுக்கு







Bajra Palak Roti
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/