தினை குதிரைவாலி பூண்டு வல்லாரைகஞ்சி
Foxtail Millet & Barnyard Millet ,Garlic Centella asiatica soup
தினை குதிரைவாலி பூண்டு வல்லாரைகஞ்சி
Foxtail Millet & Barnyard Millet ,Garlic Centella asiatica soup
தினைஅரைகப்
அரிசி – கால்கப்
குதிரைவாலிஅரைகப்
பூண்டுஒருபெரியபூண்டுமுழுவதும்
சீரகம் – ஒருதேக்கரண்டி
மிளகு – 3
தனியாதூள் – ¼ தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ஒருசிட்டிக்கை
சின்னவெங்காயம் – 6
தேங்காய் பால் – ஓரு டம்ளர்
தாளிக்க
எண்ணை + நெய் – 2 தேக்கரண்டி
சின்னவெங்காயம் – 3 பொடியாகஅரிந்த்து
கருவேப்பிலை – 4 இதழ்
வல்லாரைகீரை – 10 இதழ்
செய்முறை
தினை , குதிரை வாலி மற்றும் அரிசியை மிக்சியில் கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.
குக்கரில் அரிசிவகைகளை களைந்து சேர்க்கவும். அதில் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் சின்ன வெங்காயம், பூண்டையும் பொடியாக அரிந்து சேர்த்து, தனியாத்தூள், மிளகு, சீரகம் , மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து முடிபோட்டு வேகவிட்டு 3 , 4 விசில் விட்டு இரக்கவும்.
ஆவி அடங்கியதும் நன்கு மசிக்கவும், தேங்காய் பால் சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
கடைசியாக எண்ணை + நெய் ஊற்றி சூடானதும் அதில் சின்ன வெங்காயம், கருவேப்பிலை, வல்லாரை கீரை சேர்த்து தாளித்து கஞ்சியில் சேர்க்கவும்.
சுவையான தினை குதிரை வாலி பூண்டு வல்லாரை கஞ்சி ரெடி.
பொட்டுகடலை துவையலுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
வல்லாரை english name Centella asiatica
தினை english name Foxtail Millet
குதிரை வாலி English Name Barnyard Millet
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா