Showing posts with label நூடுல்ஸ். Show all posts
Showing posts with label நூடுல்ஸ். Show all posts

Wednesday, September 5, 2012

சைனீஸ் வெஜ் நூடுல்ஸ் - Chinese Veggie Noodles




சைனீஸ் வெஜ் நூடுல்ஸ்

தேவையானவை
மேகி நூடுல்ஸ்  - 1 பாக்கெட்
பட்ட்ர் + எண்ணை – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 1
பூண்டு – 2 பல்
சர்க்கரை – 1 சிட்டிக்கை
பொடியாக அரிந்த பீட்ரூட்,கேரட் ,பீன்ஸ் – தலா ஒரு தேக்க்ரண்டி
உப்பு ¼ தேக்கரண்டி
மேகி மசாலா
சோயா சாஸ் – ஒரு தேக்கரண்டி
Del monte Tomato Ketchup 





செய்முறை
வாயகன்ற பாத்திரத்தில் முன்று கப் தண்ணீரை விட்டு  கொதிக்கவிட்டு நூடுல்ஸை சேர்த்து அதில் சிறிது உப்பு, எண்ணை கலந்து 2 நிமிடம் வேகவிட்டு வடித்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற வானலியில் எண்ணை + பட்டரை ஊற்றி சர்க்கரை பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்து காய்கறிகள், மேகி மசாலா, சோயா சாஸ், சேர்த்து கிளறி 5 நிமிடம் வேகவிட்டு வடித்து வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து போர்கால் கிளறிவிடவும்.

சுவையான யம்மி யம்மி நூடுல்ஸ் Del Monte டொமேட்டோ கெட்சப்புடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.


நூடுல்ஸ் ரெசிபி தான் இருப்பதிலேயே ரொம்ப ஈசியான ரெசிபி. பேச்சுலர்கள் கூட உடனே தயாரிக்கலாம், இதை பல விதங்களில் தயாரிக்கலாம். லன்ச் பாக்ஸ்க்கு ஏற்ற ஈசியான ரெசிபி. காலை உணவிற்கும், இரவு உணவிற்கும் உகந்த்து.

பாயிஜாவின் பார்டி ஈவண்டுக்கு அனுப்புகிறேன்.