1. காஞ்சிபுரம் இட்லி
2.சாம்பார்
3. தக்காளி சட்னி
4.தேங்காய் சட்னி
5. கொள்ளு இட்லி
2.சாம்பார்
3. தக்காளி சட்னி
4.தேங்காய் சட்னி
5. கொள்ளு இட்லி
தேவையானவை
இட்லி அரிசி - ½ கப் (100 கிராம்)
பச்சரிசி – ½ கப்
உளுந்து – ½ கப்
வெந்தயம் – ½ தேக்கரண்டி
இட்லி சோடா – 1
சிட்டிக்கை
உப்பு தேவைக்கு
தாளிக்க
நெய் – 1 மேசைகரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
சீரகம் – 1
தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
ஊறவைத்த கடலை பருப்பு
– 2 மேசைகரண்டி
கொர கொரப்பாக பொடித்த
மிளகு – ½ தேக்கரண்டி
பொடியாக அரிந்த
முந்திரி – 2 மேசைகரண்டி
பொடியாக அரிந்த பச்ச
மிளகாய் – 1
பொடியாக அரிந்த
தேங்காய் – 1மேசைகரண்டி
துருவிய இஞ்சி – 1
தேக்கரண்டி
செய்முறை
உளுந்து + வெந்தயம் தனியாகவும்,
அரிசியை தனியாகவும் 4 லிருந்து 5 மணி
நேரம் ஊறவைக்கவும்.
மிக்சியில் அல்லது
கிரைண்டரில் முதலில்வெந்தயம் + உளுந்தை நல்ல் மையாக அரைத்து எடுத்து விட்டு
அரிசியை கொஞ்சம் கொர கொரப்பாக (முக்கால் பதம்) அரைத்து 8 மணி நேரம் புளிக்க
விடவும்.
மாவு பொங்கியதும்
உப்பு + இட்லி சோடா கொஞ்சமாக
தண்ணீரில் கலக்கி மாவுடன் சேர்த்து கலக்கி நன்கு கிளறவும்.
தாளிக்க கொடுத்துள்ள
பொருட்களை தாளித்து இட்லிமாவுடன் கலக்கவும்.
இட்லி தட்டில் நெய்
அல்லது எண்ணை தடவி 10 நிமிடம் அவித்து எடுக்கவும்.
இதற்கு தொட்டுகொள்ள
இட்லி பொடி, தக்காளி சட்னி , தேங்காய் சட்னி, சாம்பாருடன் சாப்பிட அருமையாக
இருக்கும்.
Linking to faiza's Passion on Plate
gayathiri's walk through memory lane
Tweet | ||||||
17 கருத்துகள்:
சூப்பரா இருக்கிறது... நன்றி சகோதரி...
காஞ்சீபுரம் இட்லியின் படங்களும் செய்முறையும் அருமை. நான் முன்பெல்லாம் காஞ்சீபுரம் அடிக்கடி செல்வது உண்டு. நானும் இதனை விரும்பி சாப்பிட்டுள்ளேன்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
காஞ்சிபுர இடலி அருமையாக இருக்கிறது ஜலீலா.
காஞ்சிபுரம் இட்லி செய்ததில்லை . செய்கிறேன். கட்டாயம் இட்லிசோடா சேர்க்கவேண்டுமா?. படத்தில் பார்க்க நன்றாக இருக்கு.
அங்கேயே வந்து எனக்கு வாழ்த்துச்சொல்லி இட்லியும் தந்ததுக்கு ரொம்ம்ப நன்றி ஜலீலாக்கா...:)
அருமையான இட்லி. எனக்குப் பிடிக்கும்னு எப்படி உங்களுக்குத்தெரியும்...;)
செய்து பார்த்திருக்கிறேன். ஆனா உங்க அளவு சற்று வித்தியாசமாக இருக்கு. அதோடு இட்லிசோடா அதென்றால் ஈனோசால்ட் அதுதானோ... சேர்க்கச்சொல்லியிருக்கீங்க. அதுவும் நான் சேர்த்தில்லை.
மிக்க நன்றி ஜலீலாக்கா இட்லிக்கு!!!
தனபாலன் சார் தொடர் வருகைக்கும் , பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கோபு சார்
வருகைக்கு மிக்க நன்றி கோமதி அக்கா
பிரிய சகி வாங்க.
இட்லி சோடா நானும் அவ்வளவாக பயன் படுத்த மாட்டேன்.
ஆனால் இட்லிக்கு மட்டும் கொஞ்சம் சேர்ப்பேன்.
உங்களுக்கு இட்லி சோடா சேர்பப்து பிடிக்க வில்லை என்றால்
உளுந்தை நல்ல ஐஸ் வாட்டர் ஊற்றி
நல்ல மையாக பொங்க பொங்க அரைத்து
தனியாக எடுத்து வைத்து விட்டு அரிசிகளை அரைத்து இரண்டையும் நன்றாக கலக்கு நல்ல பொங்க விடுங்கள்,
பிறகு தாளித்து சேர்த்து இட்லி வார்த்து பாருங்கள்
இளமதி.
ஈனோ சால்ட், ஃப்ரூட் சால்ட் போட்டால் ரொம்ப நல்ல இருக்கும் என்று எங்க அண்ணி சொன்னார்கள்.
அதுவும் சேர்க்கலாம்.
நான் இங்கு சொல்வது ஆப்பம், இட்லிக்கு எல்லாம் போடும் சோடியம் பை கார்பனேட்
நேரம் கிடைக்கும் போது அதை போட்டோ எடுத்து போடுகிறேன் இளமதி
மிக அருமை.
வாவ்..காஞ்சிபுரம் இட்லி கேள்விப்பட்டுள்ளேன்.சமீபத்தில்தான் ஒரு வெஜ் உணவகத்துக்கு சென்று ஆர்டர் செய்த பொழுது வாயில் வைக்க முடியவில்லை.உங்கள் இட்லியைப்பார்த்தால் மெத்து மெத்து என்று உள்ளதே.இனி நீங்கள் சென்னைக்கு வந்தால் காஞ்சீபுரம் இட்லி சாப்பிட உங்கள் வீட்டுக்கு வந்து விடவேண்டும்.
அன்புள்ள ஜலீலா,
உங்கள் காஞ்சிபுரம் இட்லி பதிவு படித்துக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் கொடுத்திருக்கும் செய்முறை நன்றாக இருக்கிறது. இட்லி புகைப் படம் நாவில் நீர் ஊற வைக்கிறது.
எங்கள் வீட்டில் நான் செய்யும் காஞ்சிபுரம் இட்லி செய்முறை:
இந்த இட்லிக்கு அரிசி, உளுந்து இரண்டும் சம அளவில் போடுவோம். முதல் நாள் காலை இரண்டையும் சேர்த்தே ஊறப்போட்டு சாயங்காலம் கொரகொரப்பாக அரைத்து வைக்க வேண்டும்.
அடுத்த நாள் சீரகம், மிளகு, (ஒன்றிரண்டாகப் பொடித்தது) சுக்கு ஒரு பெரிய துண்டு (நன்றாக தட்டி) கறிவேப்பிலை எல்லாம் பச்சையாக மாவில் போட்டு பெரிய குழிக் கரண்டி நிறைய நல்லெண்ணெய் ஊற்றி வைத்துவிடுவோம்.
ஒரு அரைமணி ஊறிய பின் இட்லி தட்டில் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
தொட்டுக் கொள்ள இட்லி மிளகாய்பொடி, நல்லெண்ணெயில் குழைத்தது அல்லது சிவப்பு மிளகாய் உப்பு இரண்டையும் மிக்ஸியில் பொடி செய்து நல்லெண்ணெய் உடன் சேர்த்துக் கொள்ளலாம்.
இது இன்னொரு வகை காஞ்சிபுரம் இட்லி என்று வைத்துக் கொள்ளலாம்.
ரஞ்சனி ஆண்டி வருகைக்கு மிக்க நன்றி
உங்கள் முறையிலும் செய்து பார்க்கிறேன்
உங்கள் குறிப்பு நாவில் சுரக்க வைக்கிறது. நான் இதுவரை காஞ்சிபுரம் இட்லி சாப்பிட்டதில்லை...
உங்க செய்முறை வித்யாசமா இருக்கு ஜலீலாக்கா..சீக்கிரமா இப்படி செய்து பார்க்கிறேன். பலவகை சட்னி சாம்பார் பொடின்னு பரிமாறி அசத்திப் புட்டீங்க.
கூடவே ரஞ்சனி மேடம் ரெசிப்பியும் இருக்கு, ரெண்டையும் செய்து பார்த்துடறேன். :)
பகிர்வுக்கு நன்றி!
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா