தாய்லாந்து (ஸ்டிக்கி )ரைஸ் – 100 கிராம்
கட்டியான தேங்காய் பால் – கால் கப்
சர்க்கரை – 25 கிராம் ( ருசிக்கு தேவையான அளவு)
பிஸ்தா – பொடியாக அரிந்த்து ஒரு தேக்கரண்டி
//இது ஸ்டிக்கி ரைஸ், தாய்லாந்து அரிசியில் செய்த்து. அரிசி பார்க்கவே சில்கியா இருக்கும்.நாம் புட்டரிசி செய்வோம் அது சாப்பிடுபவகளுக்கு இது ரொம்ப பிடிக்கும். இது பிலிப்பைனிகளின் காலை நேர உணவும் ஆகும் ரைஸ் கேக். என்று சொல்வார்கள்,.//பிலிப்பைனிகள் பிரவுன் ரைஸ் + வெயிட் ரைஸ் இரண்டையும் கலந்து பேக் செய்வார்கள்.
செய்முறை
அரிசியை ஒரு நாள் முழுவதும் ஊறவைக்கனும், இரண்டு முறை தண்ணீரை மாற்றவும்.
ஊறிய அரிசியை வடிகட்டி இட்லி பானையில் வைத்து 45 நிமிஷம் அவிய விடவும். 10 நிமிடம் மட்டும் அதிக தணலிலும், பிறகு சிம்மில் வைத்து அவிய விட்டு இரக்கவும்.
வேறு பாத்திரத்தில் வெந்த அரிசியை மாற்றி அதில் தேங்காய் பால் சர்க்கரை சேர்த்து கலக்கி சிறிதுநேரம் வைத்தால் செட்டாகிடும்.சிறிது பிஸ்தா தூவி அலங்கரிக்கவும்.
சுவையான பிசின் அரிசி சாதம் ரெடி.
இதனுடன் பழம் , சுண்டல் சாலட், ஆம்லேட் ,ஏதாவது வறுவலுடன் சாப்பிடலாம்.
(புட்டரிசி என்பது சிவப்பாக இருக்கும், அதுவும் இதே போல் அவித்து தேங்காய் துருவியது, சர்க்கரை கலந்து சாப்பிடனும்).
இதற்கு முன் பதிவில் போட்ட பீக்கோ போல் தான் இதுவும்.
| Tweet | ||||||



