Showing posts with label பார்டி ஸ்பெஷல். Show all posts
Showing posts with label பார்டி ஸ்பெஷல். Show all posts

Friday, April 24, 2020

ஆரஞ்சு பழமா இல்ல அகர் அகரா /How to Make Orange fruit Agar Agar/ Samaiyal...

Hi Friends

Ramdan Mubarak 2020

Due to sever problem cannot upload picture  friends pls watch my recipes on my channel and support



#Agar Agar #Ramadan Recipes













https://youtu.be/EwhRnPFt1fw





Due to sever problem cannot upload picture  friends pls watch my recipes on my channel and support





Orange agar agar 

https://youtu.be/EwhRnPFt1fw



Simple and Easy Recipes and Traditional Recipes
ஆரஞ்சு பழமா இல்ல அகர் அகராHow to Make Orange fruit Agar Agar/ Samaiyal_attakaasam
#ramadan


China grass /kadal paasi /Agar Agar - 10gram
water - 400ml
sugar - 10 tspn
fresh fruit juice - 100 ml

**********
கடல் பாசி நோன்பு காலத்தில் செய்யும் பலவகை பதார்த்தங்களில் இதுவும் ஒன்று. இது ஒரு சைவ உணவு. இதை ஜெல்லியை போல் ஹோட்டல்களில் பாலுடா மற்றும் விதவிதமான ஸ்வீட் வகைகளில் பயன்படுத்துவார்கள். இது நோன்பு பிடிக்கும் போது ஏற்படும் உடல் சூட்டை தணிக்கும். கடல் பாசியை பல வகையாக செய்யலாம், ப்ளைனாக செய்து அதில் வேண்டிய புட்கலர் சேர்த்து நட்ஸ் தூவி கொள்ளலாம். இல்லை பழ வகைகளை நறுக்கி போட்டு செய்யலாம். பால், ஜவ்வரிசி, கடல்பாசி சேர்த்து காய்ச்சி செய்து சாப்பிடலாம். ரூ ஆப்ஷா மற்றும் டேங்க் பவுடர், தேங்காய் உடைத்த தண்ணீரிலும் செய்யலாம்
இதை நோன்புகாலதில் தான் என்றில்ல்லை மற்ற சீசன் களிலும் சாப்பிடலாம். வயிற்றுபுண் வாய் புண்ணிற்கும் ஏற்ற நல்ல ரெசிபி,​

ஆரஞ்சு சைனா கிராஸ்
****************************
சைனா கிராஸ் - 10 கிராம்
ஆரஞ்சு பழ சாறு - 100 மில்லி
சர்க்க்ரை -10 தேக்கரண்டி
தண்ணீர் - 400 கிராம்
ஆரஞ்சு பழத்தை வட்ட வடிவமாக அரிந்து விட்டு சாறு எடுத்து விட்டு பழத்தோலை வைக்கவும்,

சைனா கிராசை கட் செய்து 400 மில்லி தண்ணீரில் கொதிக்க விடவும் கெட்டியாகி வரும் போது அதில் சர்க்கரை மற்றும் ஆரஞ்சு பழ சாறை கலந்து கலக்கி கொதிக்க விட்டு சிறிது ஆறியதும் பிழிந்த ஆரஞ்சு பழ தோலை வட்ட வடிவமாக
அப்படியே அதன் வடிவிலேயே வைத்து அதை ஒரு கோப்பையில் வைத்து தயார் செய்த ஆரஞ்சு பழ சைனா கிராசை அதில் ஊற்றவும். மீதி உள்ளதை மற்ற கிண்ணங்களில் ஊற்றி கொள்ளலாம்.நன்கு குளிர விடவும்.
சில ஆரஞ்சு பழம் சில ரொம்ப புளிப்பாக இருக்க்கும் அதற்கு நாம் இப்படி செய்தால் புளிப்பு சுவை தித்திப்பாக மாறிடும்.
ஆரஞ்சு பழ சுவையில் சூப்பரான் அகர் அகர் - சைனா கிராஸ் ரெடி.

ஜலீலாவின் சமையல் அட்டகாசங்கள்#
Facebook:
https://www.facebook.com/jaleela.kamal
Face Book Page:
https://www.facebook.com/Samaiyalatta...
Dubai Burka Group wholesale and Retail:
https://www.facebook.com/groups/Dubai...
Tamil Blog:
http://samaiyalattakaasam.blogspot.com
English Blog:
http://cookbookjaleela.blogspot.com/
for Inquiry: cookbookjaleela@gmail.com



Veg nonbu kanji
http://samaiyalattakaasam.blogspot.com/2017/06/7-veggie-ramadan-soup.html


 https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Monday, August 19, 2019

மட்டன் சாப்ஸ்/Green Mutton Chops/kadai Fry/Air Fryer/Electric Charcoal G...





Restaurant Style Mutton Chops with Green Masala

மட்டன் சாப்ஸ்/Green Mutton Chops/kadai Fry/Air Fryer/Electric Charcoal Grill/ Samaiyal_attakaasam

For detail recipe please visit my you tube channel
subscribe,like,comment and share




Simple and Easy Recipes and Traditional Recipes How to Make Restaurant Style Mutton Chops with Green Masala? #மட்டன்சாப்ஸ்/#GreenMuttonChops/#kadaiFry/#AirFryer/#Electric#Charcoal #Grill/ Samaiyal_attakaasam by Jaleelakamal #howtocookmuttonchops Muttonchopsintamil/Friedmuttonchops/Whatismuttonchops/ Howtomakemuttonchops/#HowtomakeLambChops# மட்டன் சாப்பஸ் துண்டுகள் = 600 கிராம் மிளகு = ஒரு தேக்கரண்டி உப்பு = தேவையான அளவு பச்ச மிளகாய் = 2 பெரியது ஃப்ரஷ் ஆக திரித்த தனியா = ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு மேசைகரண்டி எண்ணை + டால்டா(அ) ப‌ட்ட‌ர் = இரண்டு தேக்கரண்டி கொத்துமல்லி தழை - சிறிது அரைக்க லெமன் ஜூஸ் - 1 க‌ர‌ம் ம‌சாலா தூள் = அரை தேக்க‌ர‌ண்டி


#charcoalchopsmutton

#Airfryerchops





Mutton Chops



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Thursday, August 15, 2019

Indian Flag Recipe/ Independence Day Recipe/Indian Flag Agar Agar/ Samai...




Indian Flag Recipe/ Independence Day Recipe/Indian Flag Agar Agar/ Samai...







2. தேசிய கொடி அகர் அகர்

தேவையான பொருட்கள்
அகர் அகர் – 5 கிராம்
பால் – 200 மில்லி
தண்ணீர் – 100 மில்லி
சர்க்கரை - 50 கிராம்

அகர் அகரை தண்ணீரில் ஊரவைத்து அத்துடன் பால் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்.
காய்ச்சிய அகர் அகரை முன்று பிரிவாக முன்று டம்ளரில் ஊற்றி இரண்டு டம்ளரில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலக்கவும்.

இப்போது மூன்று டம்ளரில் உள்ள அகர் அகரையும் ஐஸ் கீரிம் மோல்டில் தனித்தனியாக ஊற்றி  ஓரு மணி நேரம் குளிரவைக்கவும்.
மேலே இனைக்கப்பட்டுள்ள முழுவீடியோவையும் பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர்செய்யவும்.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Monday, June 11, 2018

ஸ்ராபெர்ரி கேசரி -Strawberry Kesari


ஸ்ராபெர்ரி கேசரி



நாம் அடிக்கடி செய்யும் கேசரி தான் ஆனால் அதே சிறிது பழம் சேர்த்து அல்லது காய் சேர்த்து செய்தால் சத்தாக சாப்பிடலாமே

கேசரியில் பல விதம் பைனாப்பிள் கேசரி, பீட்ரூட் கேசரி,கேரட் கேசரி,என்று பட்டியிலிட்டு கொண்டே போகலாம். ஆனால் குழந்தைகளுக்கு பிடித்த ஸ்ட்ராபெர்ரி கேசரியை செய்து பாருங்கள் சுவையே அலாதி தான்..பார்ட்டியில் வைக்கும் போது வித்தியாசமான சுவையில் கலரும் சிவப்பு வண்ணதில் பார்க்கவே அசத்தலாக இருக்கும்.


Strawberry Kesariஇ
தேவையான பொருடகள்

ஸ்ராபெர்ரி பழம் – 5
ரவை – 100 கிராம்
சர்க்கரை – 75 கிராம்
தண்ணீர் – 200 மில்லி
பிஸ்தா ப்ளேக்ஸ் – இரண்டு ஸ்பூன்
முந்திரி – 6 நெய்யில் வறுத்தது
நெய் – 2 தேக்கரண்டி
பட்டர் – ஒரு மேசைகரண்டி






செய்முறை

பட்டரில் ரவையை கருகாமல் வறுக்கவும்.
ஸ்ட்ராபெர்ரி பழத்தை மிக்ஸியில் அரைக்கவும்
200 மில்லி தண்ணீரை சூடுபடுத்தி அதில் சர்க்கரையை கொட்டி கரைந்ததும் அதில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை சேர்த்து கொதிக்க விட்டவும்
தீயின் தனலை குறைவாக வைத்து விட்டு வறுத்து வைத்துள்ள ரவையை தூவி கிளறவும்.
கிளறும் போது இடையில் நெய்விட்டு வறுத்த முந்திரி சேர்த்து நன்கு சுருள கிளறி இரக்கவும்.
பிஸ்தா பிலேக்ஸ் தூவி தட்டில் கொட்டி ஆறவைத்து இதய வடிவில் அல்லதுவேண்டிய வடிவில் துண்டுகள் போட்டு பரிமாறவும்.


மூவர்ண கேசரி .

பைனாப்பிள் கேசரி

சாப்ரான் நட்ஸ் பிலைன் கேசரி

சிம்பிள் ஸ்வீட் , ஈத் ஸ்பெஷல்ல்

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, December 1, 2016

சப்ஜி பிரியாணி ( காய்கறி பிரியாணி)

சப்ஜி பிரியாணி ( காய்கறி பிரியாணி) -Vegetable Biriayni



              
தரமான பாசுமதி அரிசி – 600 கிராம்
வெங்காயம் – 300 கிராம்
தக்காளி – 300 கிராம்
எண்ணை – 150 மில்லி
பட்டை  ஒரு இன்ச் சைஸ்
இஞ்சி பூண்டு பேஸ்ட்  மூன்று மேசைகரண்டி
கொத்துமல்லி புதினா  அரைகப்
பச்சமிளகாய்  4
தயிர்  - இரண்டு மேசை கரண்டி
எலுமிச்சை பழம் சிறியது  அரை + அரை
உப்பு தேவைக்கு
மிளகாய் தூள்  ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள்  அரை தேக்கரண்டி


காய் கறி வகைகள்
உருளை கிழங்கு  - 100 கிராம்
கேரட் – 50 கிராம்
பீட்ரூட் – 50 கிராம்
பட்டாணி – 50 கிராம்
கார்ன்  - 50 கிராம்
காலிப்ளவர்  - 25 கிராம்
பீன்ஸ் – 25 கிராம்


செய்முறை

காய்கறிகள் அனைத்தையும் கழுவி ரிந்து வைக்கவும்.
வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் அரிந்து வைக்கவும்.
கொத்துமல்லி புதினாவை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி வைக்கவும்.
அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
வாயகன்ற நான்ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி காயவைத்து எண்ணையை ஊற்றி
 சூடாக்கி பட்டை , லவங்கம், ஏலம் சேர்த்து தாளிக்கவும்.
பிறகு வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்து இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கி தீயின் தனலை குறைவாக வைத்து
 பச்சை வாடை போனதும் உருளை, கேரட் சேர்த்து வதக்கவும்.பீட்ரூட் சேர்த்து வதக்கவும். கொத்துமல்லி புதினா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தககாளி மற்றும் பச்சமிளகாய் 
சேர்த்து சிறிது உப்பும் போட்டு சிம்மில் வைத்து 5 நிமிடம் வேக விடவும்.
தக்காளியை குழைவாகும் வரை கிண்டி மீதி உள்ள காலிப்ளவர், பீன்ஸ், பட்டாணி, கார்ன், தயிர் சேர்த்து நிமிடம் வேகவிட்டு வதக்கவும்.
அடுத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தூள், ஆகியவை சேர்த்து நன்கு வதக்கி சிம்மில் 10 நிமிடம் விடவும்,
வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு அதில் ஊறவைத்த அரிசியை சேர்த்து உப்பு போட்டு முக்கால் வேக்காடாக வேகவிடவும், அரிசி ஒன்றோடு ஒன்றாக ஒட்டாமல் இருக்க ஒரு ஸ்பூன் எண்ணை மற்றும் லெமன் சாறு சேர்த்து வடிக்கவும்.
 வடித்த அரிசியை வைத்துள்ள காய்கறி அக்னியில் அரிசியை தட்டி மேலே கேசரி கலர் பொடி கரைத்து தெளித்து, புதினா கொத்துமல்லி தூவி சிறிது நெய் ஊற்றி 20 நிமிடம் தம் போட்டு இரக்கவும்.


கவனிக்க : பீட்ரூட் சேர்த்தால் கலர் மாறும், பீட்ரூட்டை ஒரு நாள் முன்பே அரிந்து பிரிட்ஜில் வைத்தால் அப்படி அதிகமாக கலர்மாறாமல் இருக்கும்.

Tag:Vegetable Biriyani,காய்கறி பிரியாணி, பார்டி உணவு,Party Special,

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, February 22, 2016

ஸ்ராபெர்ரி சீஸ் கேக் வித் அகர் அகர் - Strawberry Cheese Cake with Agar Agar






ஹார்ட் ஷேப் ஸ்ட்ராபெர்ரி சீஸ் கேக்

தேவையான பொருட்கள்
பேஸ் தயாரிக்க
சாக்லேட் சிப் பிஸ்கேட் – 5 எண்ணிக்கை
பட்டர்                  - 4 தேக்கரண்டி
ஓட்ஸ்                 - இரண்டு தேக்கரண்டி

சீஸ் பில்லிங்

தயிர்                   - 200 கிராம்
பனீர்                   - 100 கிராம்
வெண்ணிலா எசன்ஸ்   - இரண்டு துளி
சர்க்கரை               - 6 தேக்கரண்டி அல்லது கண்டென்ஸ்ட் மில்க் முன்று மேசைகரண்டி ( கூடுதல் இனிப்பு சாப்பிடுபவர்கள் கொஞ்சம் அதிகம் சேர்த்து கொள்ளலாம்)
அகர் அகர் பவுடர்      - ஓன்னறை தேக்கரண்டி
தண்ணீர்               - முக்கால் டம்ளர்

ஸ்ட்ராபெர்ரி           - 7 எண்ணிக்கை

மேலே கிலேஸ் தயாரிக்க
தண்ணீர் – அரை டம்ளர்
ஸ்ட்ராபெர்ரி – பழம் – 3
சர்க்கரை – இரண்டு தேக்கரண்டி
ரூ ஆப்ஷா எசன்ஸ் – அரை தேக்கரண்டி




Agar Agar Picture







செய்முறை

முதலில் சாக்லேட் சிப் பிஸ்கேட்டை பொடித்து கொள்ளவும் அத்துடன் ஓட்ஸ் கலந்து பட்டரை உருக்கி சேர்த்து கலந்து எந்த கேக் பாத்திரத்தில் செய்ய கிழே  அரை இன்ச் சைஸ் க்கு கலவையை போட்டு நன்கு அழுத்தி குளீரூட்டியில் 10 லிருந்து 15 நிமிடம் செட்டாக்கவும்.


அடுத்து தயிரை முன்னமே ஒரு மஸ்லின் துணியில் வடித்து எடுத்து வைக்கவும்.
ஸ்ட்ராபெர்ரியை பொடியாக அரிந்து வைக்கவும். அகர் அகர் பவுடரை தண்ணீர் சேர்த்து காய்ச்சவும் காய்ச்சி அதில் அரிந்த ஸ்ட்ராபெர்ரி மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கி கொதிக்க விட்டு அத்துடன் தயிர் , பனீர், சேர்த்து ப்ளென்ன்டரில் அடிக்கவும், ப்ளெண்டர் இல்லாதவர்கள் மிக்ஸியிலும் அரைக்கவும் அதில் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்கி அதை ஏற்கனவே குளீரூட்டியில் வைத்த பிஸ்கேட் கலவை மீதி ஊற்றவும். முக்கால் பதம் வரை ஊற்றி மறுபடியும் குளிரூட்டியில் 2 மணி நேரம் அல்லது அது செட்டாகும் வரை குளிர வைக்கவும்.

மேலே கிலேஸ் க்கு

அகர்அகரை தண்ணீரில் காய்ச்சி , ஸ்ட்ராபெர்ரி பழங்களை பொடியாக அரிந்தோ அல்லது அரைத்தோ சேர்த்து சர்க்கரை மற்றும் ரூ ஆப் ஷா எசன்ஸ் சேர்த்து காய்ச்சி செட்டாகிய சீஸ் கேக் மேலே ஊற்றவும். மறுபடியும் குளீரூட்டியில் சிறிது நேரம் வைத்து குளிரவைத்து பரிமாறவும்.

இதை பிஸ்கேட் பாட்டம் இல்லாமலும் கப்களில் செய்யலாம்.

இந்த சீஸ் கேக்கில் மேலே உள்ளது தேங்காய் பால் ரூ ஆப்ஷா அகர் அகர்


இதுல நான் வெஜ் சாப்பிடுபவர்கள் ஜெலட்டின் பயன் படுத்தலாம் ஜெலட்டின் பயன் படுத்தினால் இன்னும் நல்ல கிரிப்பாக வரும்.

இது சைவ பிரியர்களுக்காக கொடுத்தது.

// இது பேலியோ டயட்டுக்கு உகந்த சமையலும் கூட, பேலியோவில் அவகோடா பழம் மட்டும் தான் பயன் படுத்தனும் ஆகையால் ஸ்ராபெர்ரிக்கு பதில் அவகோடா பழம் பயன் படுத்தி கொள்ளலாம். , இங்கு சேர்க்கும் சர்க்கரை , கன்டென்ஸ்ட் மில்க்கு பதில் டார்க் சாக்லேட் கோக்கோ பவுடர் சேர்த்துக்கொள்ளலாம்.

இது ஜெலட்டினில் செய்த என் மற்ற குறிப்புகளை கிழே உள்ள குறிப்பில் காணலாம்.





*****************************


ரூ ஆப்ஷா தேங்காய் ஜெல்லி
 Ingredients 
ஒரு டம்ளர் தண்ணீர்
5 கிராம் அகர் அகர் பொடித்து கொள்ளவும்
சர்க்கரை தேவைக்கு
ரூ ஆப்ஷா – 2 மேசைகரண்டி
தேங்காய் பவுடர் – இரண்டு மேசைகரன்டி
Method
அகர் அகரை பொடித்து தண்ணீரில் ஊறவைத்து காய்ச்சவும் காய்ச்சி கெட்டியாகவரும் போது சர்க்கரை ரூ ஆப்ஷா தேங்காய் பவுடரை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி காய்ச்சி ஒரு வாயகன்ற தாம்பாளதட்டில் வைத்து ஆரவைத்து குளிரூட்டியில் குளிரவைத்து செட்டானதும் வேண்டிய வடிவில் துண்டுகள் போட்டு பரிமாறவும்.


இதில் சீஸ் கேக்குக்கு ஸ்ட்ரா பெர்ரி பழம் தான் என்றில்லை மாம்பழ சீசனில் மாம்பழம் மற்றும் பல பழவகைகளில் இதை செய்யலாம்.
சீஸ் கேக்கு அதில் கிரீம் சீஸ் மற்றும் விப்பிங் கிரீம் சேர்க்கவேண்டும். அல்லது தயிரை வடிகட்டி அந்த கெட்டி தயிர் மற்றும் பனீர் பயன் படுத்தி செய்யலாம். இனிப்பு சுவைக்கு சர்க்கரை அல்லது கண்டெஸ்ட் மில்க் பயன் படுத்தலாம்.
கிழே பேஸ் க்கு டைஜிஸ்டிவ் பிஸ்கேட் அல்லது ஓரியோ, அல்லது சாக்லேட் சிப் பிஸ்கேட் பயன் படுத்தலாம்.

Strawberry Cheese Cake with Agar Agar

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/