ஹார்ட் ஷேப் ஸ்ட்ராபெர்ரி சீஸ் கேக்
தேவையான பொருட்கள்
பேஸ் தயாரிக்க
சாக்லேட் சிப் பிஸ்கேட் – 5 எண்ணிக்கை
பட்டர் - 4 தேக்கரண்டி
ஓட்ஸ் - இரண்டு தேக்கரண்டி
சீஸ் பில்லிங்
தயிர் - 200 கிராம்
பனீர் - 100 கிராம்
வெண்ணிலா எசன்ஸ் - இரண்டு துளி
சர்க்கரை - 6 தேக்கரண்டி அல்லது கண்டென்ஸ்ட் மில்க் முன்று மேசைகரண்டி ( கூடுதல் இனிப்பு சாப்பிடுபவர்கள் கொஞ்சம் அதிகம் சேர்த்து கொள்ளலாம்)
அகர் அகர் பவுடர் - ஓன்னறை தேக்கரண்டி
தண்ணீர் - முக்கால் டம்ளர்
ஸ்ட்ராபெர்ரி - 7 எண்ணிக்கை
மேலே கிலேஸ் தயாரிக்க
தண்ணீர் – அரை டம்ளர்
ஸ்ட்ராபெர்ரி – பழம் – 3
சர்க்கரை – இரண்டு தேக்கரண்டி
ரூ ஆப்ஷா எசன்ஸ் – அரை தேக்கரண்டி
Agar Agar Picture
செய்முறை
முதலில் சாக்லேட் சிப் பிஸ்கேட்டை பொடித்து கொள்ளவும் அத்துடன் ஓட்ஸ் கலந்து பட்டரை உருக்கி சேர்த்து கலந்து எந்த கேக் பாத்திரத்தில் செய்ய கிழே அரை இன்ச் சைஸ் க்கு கலவையை போட்டு நன்கு அழுத்தி குளீரூட்டியில் 10 லிருந்து 15 நிமிடம் செட்டாக்கவும்.
அடுத்து தயிரை முன்னமே ஒரு மஸ்லின் துணியில் வடித்து எடுத்து வைக்கவும்.
ஸ்ட்ராபெர்ரியை பொடியாக அரிந்து வைக்கவும். அகர் அகர் பவுடரை தண்ணீர் சேர்த்து காய்ச்சவும் காய்ச்சி அதில் அரிந்த ஸ்ட்ராபெர்ரி மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கி கொதிக்க விட்டு அத்துடன் தயிர் , பனீர், சேர்த்து ப்ளென்ன்டரில் அடிக்கவும், ப்ளெண்டர் இல்லாதவர்கள் மிக்ஸியிலும் அரைக்கவும் அதில் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்கி அதை ஏற்கனவே குளீரூட்டியில் வைத்த பிஸ்கேட் கலவை மீதி ஊற்றவும். முக்கால் பதம் வரை ஊற்றி மறுபடியும் குளிரூட்டியில் 2 மணி நேரம் அல்லது அது செட்டாகும் வரை குளிர வைக்கவும்.
மேலே கிலேஸ் க்கு
அகர்அகரை தண்ணீரில் காய்ச்சி , ஸ்ட்ராபெர்ரி பழங்களை பொடியாக அரிந்தோ அல்லது அரைத்தோ சேர்த்து சர்க்கரை மற்றும் ரூ ஆப் ஷா எசன்ஸ் சேர்த்து காய்ச்சி செட்டாகிய சீஸ் கேக் மேலே ஊற்றவும். மறுபடியும் குளீரூட்டியில் சிறிது நேரம் வைத்து குளிரவைத்து பரிமாறவும்.
இதை பிஸ்கேட் பாட்டம் இல்லாமலும் கப்களில் செய்யலாம்.
இந்த சீஸ் கேக்கில் மேலே உள்ளது தேங்காய் பால் ரூ ஆப்ஷா அகர் அகர்
இதுல நான் வெஜ் சாப்பிடுபவர்கள் ஜெலட்டின் பயன் படுத்தலாம் ஜெலட்டின் பயன் படுத்தினால் இன்னும் நல்ல கிரிப்பாக வரும்.
இது சைவ பிரியர்களுக்காக கொடுத்தது.
// இது பேலியோ டயட்டுக்கு உகந்த சமையலும் கூட, பேலியோவில் அவகோடா பழம் மட்டும் தான் பயன் படுத்தனும் ஆகையால் ஸ்ராபெர்ரிக்கு பதில் அவகோடா பழம் பயன் படுத்தி கொள்ளலாம். , இங்கு சேர்க்கும் சர்க்கரை , கன்டென்ஸ்ட் மில்க்கு பதில் டார்க் சாக்லேட் கோக்கோ பவுடர் சேர்த்துக்கொள்ளலாம்.
இது ஜெலட்டினில் செய்த என் மற்ற குறிப்புகளை கிழே உள்ள குறிப்பில் காணலாம்.
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா