என் மகனுக்கு பிடித்த கலர் ஃபுல் ட்ரை கலர் அகர் அகர்
நோன்பு நேரம் என் மகனுக்கு சாப்பாடெல்லாம் முக்கியமில்லை, இந்த கடல் பாசி இருந்தால் போதும்.
1. கடல் பாசி( அகர் அகரை) தண்ணீரில் காய்ச்சி அதில் தேவைக்கு சர்கக்ரை சேர்த்து காய்ச்சியதை முன்று பாகமாக பிரித்து அதில் விரும்பிய கலரை சேர்த்து பிஸ்தா பிளேக்ஸ் தூவி பிரிட்ஜில் வைத்து செட்டாக்கி விரும்பிய வடிவில் வெட்டி உங்கள் அன்பானவர்களுக்கு கொடுக்கலாம்.

2. அகர் அகரை ஊறவைத்து பாலில் நன்கு காய்ச்சி அதில் ரோஸ் கலர் அல்லது ரூ ஆஃப் ஷா , தேவைக்கு சர்கக்ரை கலந்து பாதம் பொடித்து சேர்த்து குளிரூட்டியில் குளிர வைத்து வேண்டிய வடிவில் வெட்டி பரிமாறவும்.
.என் மகனுக்கு முன்பு பள்ளிக்கு செய்து அனுப்பும் போது குட்டி குட்டியாக வட்டம், சதுரம்,முக்கோணம் , இதயவடிவ த்தில் ஆன பூரி, கடல் பாசி இப்படி செய்து வைப்பது.
செய்யும் சமையலையே இப்படி வடிவமைத்து சமைத்து கொடுத்தால் சாப்பிட பிடிக்காமல் உணவை வெறறுக்கும் பிள்ளைகளும் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள் இல்லையா?
பிறந்த நாள், காதலர் தினத்துக்கு எல்லாம் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
ஆனால் என் மகன் பிறந்தது காதலர் தினத்தில் , அது வரை எனக்கு காதலர் தினம் என்று ஒன்று இருப்பதே தெரியாது..
குழந்தை பிறந்ததும் நர்ஸ் வந்து lovable child என்றார்கள்.
ஆமாம் நிஜமாகவே அவன் அன்பான மகன் தான் எனக்கு ஒன்று என்றால் , எனக்கு முடியலன்னா ரொம்ப பதறிடுவான்.
ஒரு முறை அவன் 2 ஆம் வகுப்பு படிக்கும் போது அவன் பள்ளி க்கு சென்று கொண்டு இருக்கீறார் எனக்கு தீடீர் என்று தலை சுற்று நின்று கொண்டு இருக்கும் இடத்தில் நான் வட்டவடிவமாக ரவுன்ட் அடிச்சி சுழற்றி அடிச்சது.
இருந்தவரை பள்ளி செல்லும் போது பஸ் தோழர்களுக்கு, பள்ளி தோழர்களுக்கு என்று சாக்லேட் நிறைய வாங்கி வச்சிப்பார், அடம் பிடிச்சி கலர் டிரஸ் போட்டு செல்வது ,ஆனால் இப்ப பெரியவர்களாகிவிட்டதால்
வயிற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கனும் இல்லையா?
.
பாம்பே டோஸ்ட்
பால்கோவா
கச்சோரி
ஹார்ட் ஷேப் ரெசிபிகள் - Heart Shape Recipes
Heart Shape Recipes/Heart Shape Kachori/Heart Shape Bombay Toast,Heart Shape Palkowa
Heart Shape Milk Agar Agar, Roo apza Agar agar
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா