Monday, October 31, 2011

மார்பிள் கேக் - Marble Cake

கலர் ஃபுல் மார்பிள் கேக்


தேவையானவை

மைதா - 150 கிராம்
சர்க்கரை - 150 கிராம்
பட்டர் - 150 கிராம்
முட்டை - 3
பேக்கிங் பவுடர் - அரை ஸ்பூன்ஆரஞ்சு கலர்  – 1 ட்ராப்
கோக்கோ - 25 கிராம்
சாக்லேட் எசனஸ் - 1 ட்ராப்
பச்சை(பிஸ்தா) எசன்ஸ் - 1 டிராப்
உப்பு – ஒரு சிட்டிக்கை

Tuesday, October 25, 2011

அத்தி , பேரிட்சை,வாழை ஜூஸ் - Fig ,dates & banana juice

செய்முறை

அத்திபழம் – தேனில் ஊறியது – இரண்டு மேசைகரண்டி

பழுத்த பேரிட்சை பழம் – 10 (கொட்டி நீக்கியது)

கிஸ்மிஸ் பழம் – 10

சாஃப்ரான் நட்ஸ் ரவா கேசரி - Safron Nuts Rava Kesari


 சாஃப்ரான் நட்ஸ் ரவா கேசரி 

கேசரி பல விதம் , ஓவ்வொரு ஊரிலும் ஓவ்வொரு விதம் , அதில் இது ஒரு விதம், கலர் எதுவும் கலககமல் நெய் மற்றும் சாப்ரான் மணத்துடன் ஓவ்வொரு கடியிலும் நட்ஸ், இது என் தோழி கீதா செய்தது.

Thursday, October 20, 2011

சகோதரிகளின் கவனத்துக்கு

இப்ப ஈமெயில் சாட்டிங்கை விட இப்ப பிள்ளைகளுக்கு பேஸ் புக் தான் எல்லான்னு ஆயிடுச்சி, இந்த மெசேஜில் +12 படிக்கும் மாணவிய பற்றி சொல்லி இருக்கு ஆனால்  6 ஆம் வகுப்பில் இருந்தே எல்லா பிள்ளைகளும் இப்ப பேஸ் புக் மெசேஜ் என வேகமாக இருக்கிறார்கள், இதை பற்றி விழிப்புணர்வு பதிவு போடனும் என்று அதற்குள் நான் நினைத்ததில் பாதி மெசேஜ் இதில் இருக்கு,

இவை அனைத்தும் எனக்கு  மெயில் வந்தது.

Monday, October 17, 2011

யாருக்கு வேணும் உங்கள் ஓட்டு ?


எல்லோருக்கும் இன்றைய ஹாட் நியுஸ் தமிழ்மனம் என்ற போலிகளின் பொய்யான முகங்கள். அனைவருக்கும் தெரியவந்ததே//உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக

1. இது டெரர் கும்மி http://www.terrorkummi.com/2011/10/blog-post_10.html
பதிவில் நேற்று பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்.

இது இஸ்லாமியர்களை மட்டும் அவர் இழிவு படுத்தல ஒட்டு மொத்த எல்லா பதிவர்களையும் மதிக்காத ஒரு திமிர் பிடித்த பின்னூட்டமிட்டு இருக்கிறார்.பெயரிலி


2.- மேலும், முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது சொல்லிக்கொள்ளும்

  "சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக"
என்னும் முகமனை கேலி செய்யும் விதமாக

 "...சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்..."


 1. இப்படி இஸ்லாம் மார்க்கத்தை கொச்சை படுத்தி பேச  உனகென்ன அறுகதை இருக்கு? மதங்களை மதிக்கத்தெரியாத நீ எல்லாம்.  ஒரு சாக்கடையே

2. இப்படி கேலி செய்தது "நீயே  உன் முகத்தில் சாணிய அள்ளி அப்பியதுக்கு சமம்.

3. இதற்கு தமிழ்மனம் பதில் சொல்லியே ஆகவேண்டும், தமிழ்மனம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்.

தமிழ் மனம் இது ஒரு புரியாத புதிராவே இருந்தது, எப்படி ஓட்டு இனைப்பது  ஒன்னுக்கும் உதவாத பதிவுக்கெல்லாம்  ஓட்டு குமியுதே என்ன நல்ல பதிவு எழுதினாலும்  ஓட்டு 3 ஐ தாண்டாது.

அப்படியே வந்து ஓட்டு போட்டாலும் இங்க  ஓட்ட போட்டுட்டு பின்னாடி கும்மி அடிப்பது.சில வேலயத்த வெடியர்கள் இரண்டு நாளாக கும்மி அடிப்பார்கள்.

இது என் பதிவு மருதானி மோகம் ஏன் இப்படி ? என்ற பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்
கும்மி அடிக்கிற மக்காஸ் எலேய்  போங்கலே  பொண்டாட்டி பிள்ளைய கவனிக்கலே.புள்ள குட்டிய படிக்கவையுங்களே.


.இதனாலே தமிழ் மனம் பக்கம் ஓட்டு கிடைப்பதில் விருப்பமில்லை ,எட்டியே பார்ப்பதில்லை.அப்படியே போனாலும் தரமான பதிவுகளுக்கும் மட்டுமே ஓட்டு போட்டு வந்தேன். இனி அந்த வீனா போன தமிழ்மனமே வேண்டாம்.


 ரொம்ப நாளா எப்படி இனைபப்துன்னு தெரியாம கடைசியில்  சகோதரி மல்லிக்கா, ஜமால், ஜெய்லானி உதவியால் இனைக்க கற்று கொண்டேன்.
இனைத்தும் பிரயோஜனம் இல்லை என தெரியும்.

 இது அரசியல், மொக்கை, கவுஜ , கவர்சி இது போன்ற பதிவுகளை தான் ஓட்டு போட்டு முன்னனியில் வைக்கிறார்கள். பதிவு இனைத்து ஓன்னறை வருடம் ஆகியும் போட்டிகளுக்கான எந்த மெயிலும் எனக்கு வந்ததில்லை.
திடீருன்னு இந்த வார கிரீடம் இதுவும் ஒரு புதிர் தான்


--பதிவுலக தோழமைகளையும், இஸ்லாமிய  முகமனையும் கேவலப்படுத்திய பெயரிலி மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் இது பற்றி தமிழ்மணம் விளக்கம் அளிக்க வேண்டும்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!


தமிழ்மன ஓட்டு பட்டைய நீக்குவது எப்படி?

தமிழ்மனஙகளை புண்படுத்திய தமிழ் மனம்

மன்னிப்பு கேள் தமிழ்மனமே


தமிழ்மனத்துக்கு பொதுவில் ஒரு அறிவிப்பு

பதிவுலக தோழைமைகளே

2012 வலைச்சரத்துக்காக ஓட்டு பட்டை சேர்க்கப்பட்டது
சிலருக்கும் பயன் படும்,

Thursday, October 13, 2011

சுவிங்கம் கறைய எப்படி போக்குவது?

 


சுவிங்கம் என்றாலே எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அத ஸ்டைலா ஞ்ம்மு ஞ்ம்முன்னு மெல்லுவது மென்று கொண்டே பேசுவது. இது குட்டிஸுகளுக்கும் அனைவருக்கும் பிடித்த ஒன்று.

Monday, October 10, 2011

பைனாப்பிள் ,கேபேஜ் சாலட் - pineapple Cabbage Saladசெய்முறை

லெட்டியுஸ் இலை, கேபேஜ், கேரட்,பைனாப்பிள் அனைத்தையும் பொடியாக பைனாக சாப் செய்து அத்துடன் , வெள்ளை மிளகு தூள், உப்பு, கலந்து மையானஸ் சேர்த்து நன்கு கலக்கி லெமன் ஜூஸ் பிழிந்து ப்ரிட்ஜில் வைத்து பிறகு சாப்பிடவும்.குறிப்பு :பிரியாணி குபூஸ் அயிட்டஙக்ளுக்கு தொட்டு சாப்பிடலாம், பரோட்டாவிற்கு சூப்பராக இருக்கும்
பேச்சுலர்கள் பன், பிரெட், ரொட்டி சப்பாத்தில் வைத்து காலையில் ஹெல்தியாக ஈசியான காலை உணவாக சாப்பிடலாம். இரவு வேலைக்கும் உகந்தது.
பார்டியிலும் செய்து வைக்கலாம்.Wednesday, October 5, 2011

ஹாப்பி பர்த்டே டூ மால்வேர் வைரஸ்


மால்வேர் வைரஸ் ஐய்ய்யோ மால்வேர் வைரஸ் ஜலீலாக்கா பிலாக்குல எல்லாம் ஓடிடுங்கோ. சில பேர் மெயில் செய்தால் கூட வைரஸ் அவங்க கூடவே ஓடி வந்துடும் என மெயில் கூட் பண்ணல.

போன வருடம் இதே போல என் பிளாக்கில் மால்வேர் வைரஸ் அட்டாக் ஆகியது, அப்ப எனக்கு ஒரு நாள் காலை பிலாக் ஓப்பன் செய்த்தும்  unreadable font டாக எல்லாம் ஆகிவிட்ட்து, பே பே பே பயந்தே போயிட்டேன், ஆஹா இத்தன குறிப்பு போட்டு இருக்கோமே எல்லாம் ஒரே நாளில் புஸ் ஆகிவிட்ட்தே. ரொம்ப பதறி போயிட்டேன். தூக்கம் வரல வேலை ஓடல. நானும் என்னவோ மால்வேர் அப்படின்னா சிஸ்ட்த்துல டயனோசர் பூந்துடுச்ச்சோன்னு பயந்துட்டேன்.


அப்ப வேலன் சார் உங்கள் பிலாக்கில் Malware Virus உடனே சரி பண்ணுங்க என்றார். அதே கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ராவும் அக்கா சீக்கிரம் உங்க பிளாக் ஏதோ ஆகிவிட்ட்து என்று சொன்னாங்க.அதே போல் மலிக்கா,கீதா ஆச்சல் எல்லொரும் சொன்னாங்க
உடனே டெம்லேட் மட்டும் மாற்றினேன். அதுவும் மாற்ற பயம் சைடில் உள்ள கோட் இனைத்த்து , எத்தன பேர் வந்தாங்க எல்லாம் போயிடுமேன்னு.அபபறம் ஒரு வழியா சரியாகிடுச்சு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அதே போல் இப்ப இந்த வருடமும் ஒரு மாதமாக இதே பிராப்ளம். ரொம்ப நாளா யாருக்கும் சரியா கமெண்ட் போடலையே என்று எல்லோருக்கும் கமெண்ட் போடலாம் என்று போட சென்றால் எல்லாமே சில பேருடைய பிளாக்குகள் சரியாக ஓப்பனே ஆகல அப்படியே ஓப்பன் செய்து கமெண்ட் போட்டால் மறுபடி பிலாக்கர் லாகின் செய்ய சொல்லி வருது. இது எதனால் என எனக்கு தெரியல.
10 நாட்களாக பிராப்ளம் இருக்கும் போதே Back up எடுத்து வைத்துட்டேன். இனி பிலாக் போனா போகட்டும். வேற போட்டு கொள்ளலாம் என விட்டு விட்டேன்.

அதிரா, தமிழரசி, ஆயிஷா, ஏஞ்சலின், சகோ.ஆஷிக், சகோ.பாஸித், ராமலஷ்மி,ஸாதிகா அக்கா எல்லோரும் மெயில் பண்ண போய் தான் எனக்கு தெரிய வந்த்து.
ஏற்கன்வே இது போல் ஆனதால் உடனே டெம்லேட் மாற்றினேன், இருந்தாலும் சரியாகல. ச்சியும் உடனே டெம்லேட் மாற்றுங்கள் என்றார்.
எனக்கு உதவிய கற்போம் வாருங்கள் நட்புடன் ஜமால், ஜெய்லானி, பிளாக்கர் நண்பன் அப்துல் பாஸித் அனைவருக்கும் மிக்க நன்றி.


இதிலிருந்து பதிவுலகத்துக்கு சொல்லுவது என்ன வென்றால் நிறைய பதிவுகள் என்றால் முதலில் பேக் அப் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
இது முன்பே அடிக்கடி டவுசர் பாண்டி அன்னாத்தையும் முன்பு அதிகமா பிளாக்கர் டிப்ஸ் எல்லாம் கொடுத்தார் இப்ப கானாம போயிட்டார், சகோ ஜெய்லானியும் சொல்வது இந்த நிலை வரும் முன்னே இத முதல செய்யுங்கள்..

(ஆனால் இன்னுமே புரியல இந்த மால்வேர் வைரஸ் வந்து இருக்கு என எப்படி கண்டு பிடிப்பது, தெரிந்த கம்பியுட்டர் டாக்டர்கள் இத விளக்கினால் நல்ல இருக்கும்.இன்னும் எனக்கு மற்ற பிளாக்குகள் சரியா ஓப்பன் செய்ய முடியல)


 டிப்ஸ்:

1. நம்ம கம்பியிட்டரில் ஆண்டி வைரஸ் செக் பண்ணிக்கனும்.உடனே ஆவன செய்யுங்கள்.
2.பிலாக் கை பேக் அப் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
3.நிறைய வெட்ஜெட் கள் சேர்க்காதீர்கள்.
4.இப்படி வைரஸ் மெசேஜ் வந்தால் உடனே டெம்லேட்டை மாற்றிடுங்கள்.
ஓரளவுக்கு என் அனுபவத்த எழுதி இருக்கேன்.

மற்றபடி ஏதும் வேறு யாரும் இங்கு அவர் அவர் அனுபவம் டிப்ஸ் சொல்வதாக இருந்தால் சொல்லலாம்.


இந்த பதிவும் பயனுள்ளதாக இருக்கும்.

எனக்கு கமெண்ட் மாட்ரேட் கொடுத்தா மெயிலில் கமெண்ட் வரவில்லை, எல்லா கமெண்டும் spam mail லில் தான் போகுது. இன்னும் சில பேருடைய பிளாக்கில் கமெண்ட் போட்டா எர்ர் மெசேஜ் வருது.


இதே பிராப்ளம் இன்னும் இரண்டு பேருக்கு இருப்பதாக மனோ அக்காவும் சொன்னார்கள்.

வேறுயாருக்கும் இதை சரி செய்ய வழி தெரிந்தால் கீழே சொல்லவும், இனி எனக்கும், இந்த பதிவ படிப்பவர்களுக்கு யாருக்காவது இது போல் இருந்தால் உதவியாக இருக்கும்.
மேலும் நிறைய இந்த பிளாக் அனுபவங்கள் இருக்கு பிறகு பார்க்கலாம்.