Tweet | ||||||
Thursday, October 13, 2011
சுவிங்கம் கறைய எப்படி போக்குவது?
சுவிங்கம் என்றாலே எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அத ஸ்டைலா ஞ்ம்மு ஞ்ம்முன்னு மெல்லுவது மென்று கொண்டே பேசுவது. இது குட்டிஸுகளுக்கும் அனைவருக்கும் பிடித்த ஒன்று.
அதில் முட்டை விடுவது பிள்ளைகளுக்கு இன்னும் ரொம்ப பிடிக்கும்.
சுவிங்கத்தால் கெட்ட்தும் இருக்கு நல்லதும் இருக்கு. சுவிங்கங்கள் வாய் துற்நாற்றத்தை போக்கவும் நிறைய பேர் பயன் படுத்துவார்கள்.
பல்லும் கிளீனாகும். பல்லுக்கும், மண்டையில் உள்ள நரம்புகளுக்கெல்லாம் நல்ல உடற்பயிற்சியும் கூட.முகத்துக்கும் நல்ல உடற்பயிற்சி.
வாய் துற்நாற்றத்தை போக்க .மிண்ட் சுவிங்கம் மெல்லலாம். அதிக பசி எடுத்தால் ஏதாவது சாப்பிடனும் போல் இருந்தால் கூட இப்படி சுவிங்கம் மெல்ல்லாம்.
ஆனால் சுவிங்கம் மென்று விட்டு அதை கவனமாக ஒரு பேப்பரில் சுருட்டி குப்பையில் யாரும் போடுவதில்லை.
அப்படியே கண்ட இட்த்திலும் துப்பி விட்டு போவது அதை அடுத்து அங்கு நடந்து வருகிறவர்கள். காலில் உடைகளில் எல்லாம் ஒட்டி அந்த கறையை போக்கும் முன் போதும் போதும் என்றாகிடும்.
//இப்படி தான் போனவாரம் என் பையன் பள்ளியில் இருந்து திரும்பும் போது பஸ்ஸில் பிள்ளைகள் அடித்த கலாட்டாவில் யாரோ ஒரு பையன் சுவிங்கம் சாப்பிட்டு விட்டு இவன் சர்டிலும், பேண்டிலும் துப்பி விட்டார்கள்.
துணி துவைக்க்லாம் என்று எடுத்தால் ப்புள் காம் நிறைய ஒட்டி இருக்கு எப்படி நீக்குவதுன்னு சட்டுன்னு நினைக்கு வரல.
வெள்ளிகிழமை அதுவும் லிவு நாளில் நிறைய வேலைகள் இருக்கும் பிஸியான வேலையில் இருக்கும் போது மற்றவர்களுக்கும் போன் செய்யமாட்டேன். வேற வழியில்லாமல் மனோ அக்காவுக்கு போன் செய்தேன்.
அவர்களும் விருந்தினர் வருகையால் அப்பரமா சொல்றேன் ஜலீலா என்றார்கள்.
ஒரு நாள் முழுவது சோப்பில் ஊறவைத்தாச்சு. எதுவும் போகல,
சரி புது யுனிபார்ம் தான் வாங்கனும்.என்று சொல்லி கொண்டு இருந்தேன்.
பையன் திட்டி கொண்டே இருந்தேன், அவன் துப்புர வரை நீ என்ன பண்ணி கொண்டு இருந்தேன். நான் கவனிக்கல என்றான்.
கடைசியில் அரை மணி நேரம் கழித்து ம்ம்மி எல்லா கறையும் போய் விட்ட்து என்றான்.
//துணியில் உள்ள சுவிங்கம் கறைய நீக்க இது ஹனீப் கண்டு பிடிச்சது.
கால் பித்தவெடிப்புக்கு உபயோகப்படுத்தும் பியுமிக் ஸ்டோனை வைத்து தேய்த்த்தில் சுத்தமாக ப்புள் காம் ஒட்டி இருந்த்து போய் விட்ட்து.///
அன்று இரவு மனோ அக்கா போன் செய்தார்கள். இந்த மாதிரி என் பையனே அதை எடுத்துட்டான் என்றேன். பரவாயில்ல புது கண்டு பிடிப்பு தான் என்றார்கள்.
சரி நீங்க சொல்லவந்த டிப்ஸையும் சொல்லுங்க என்றேன்.
துணியை அப்படியே பிரீஜரில் வைத்தால் அப்படியே கழன்று வந்துடுமாம்.
துணியில் உள்ள ப்புள் காம் கறைய நீக்க கணமான துணி என்றால் பியுமிக் ஸ்டோன் கொண்டு தேய்த்து சுத்தம் செய்யலாம். மெல்லிய துணி என்றால் கிழிந்து விடும். பீரிஜரில் வைப்பதும் ஈசி தானே..
ஆனால் குழந்தைகளோ அல்லது பெரியவர்களோ அதை விழிங்கினால் குடலில் போய் ஒட்டி கொள்ளும் அது பெரும் ஆபத்தில் கொண்டு போய் முடிந்து விடும்.
அப்படியே சாப்பிடுபவர்கள் இனி அதை மென்று முடித்த்தும் கவனமா மறக்காம ஒரு பேப்பரில் மடித்து குப்பையில் போடுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
20 கருத்துகள்:
நல்ல டிப்ஸ்தான் .ஆனா கல்லால தேய்க்கும் போது துணீ பாலீஷ் போய்டாதா..??? . :-)
அருமையான,அனைவருக்கும் உபயோகமான டிப்ஸ்கள் ஜலி.பகிர்வுக்கு நன்றி ஜலி.
arumaiyaana pathivu kulanthikal ulla veetil adikkadi thevaipadum thahaval nanri
arumaiyaana pathivu kulanthikal ulla veetil adikkadi thevaipadum thahaval nanri
நானும் இந்த சுவிங்கத்தோடு பெரிய அவஸ்தை பட்டிருக்கிறேன்,நல்ல டிப்ஸ்.
அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல டிப்ஸ்.பகிர்வுக்கு நன்றி.
ரெண்டு வாரம் முன்னாடி என் சின்னவனும் பேண்டில் இதை அப்பிகிட்டு வந்துட்டான். க்ர்ர்ர்ர்ர்...
எங்கோ வாசிச்ச ஞாபகத்துல, ஃபிரீஸரில்தான் ஒரு நாள் முழுக்க வைத்தேன், ஆனா கழண்டு வரவேயில்லை!! :-(((( கடைசியில் நெயில் கட்டரால் சுரண்டித்தான் எடுக்க வேண்டியதாப் போச்சு!! :-((((((
கறை நல்லது
டிப்ஸ் நல்லாத்தான் இருக்கு.... ஆனா இப்டி ஒரு சோதனை இனி யாருக்கும் (எனக்குன்னு தான் எழுத வந்தேன்...சரி போனா போகுது...அய்யோ பாவம்) வரக்கூடாது..... :-(
வாங்க ஜெய்லானி
பியுமிக் ஸ்டோன் நான் சொன்னது கனமாக துணிகளுக்கு மட்டும்.
பாலிஷ் எல்லாம் போகாது,பேண்ட் மற்றும் டீஷர்ட்கலில் இது போல் கல்லை கொண்டு தேய்க்கலாம்
வாங்க ஸாதிகா அக்கா உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
வாங்க அல்கான் உங்கள் பதிலுக்கு ரொம்ப சந்தோஷம்,
ஆசியா பிள்ளைகள் உள்ள எல்லாவீட்டிலும் இந்த அவஸ்தை உண்டு
வா அலைக்கும் ஸாலாம் ஆயிஷா வருகைக்கு மிக்க் நன்றி
ஹுஸைனாம்மா ஃப்ரீஜரில் வைத்தாலும் போகலையா>
வருகைக்கு மிக்க நன்றி ராஜேஷ்
வாங்க என்றென்றும் 16 எப்படி இருக்கீங்க
என்ன சொல்ல்வருங்கீங்க் நீங்க இந்த சுவிங்கத்தோடு ரொம்ப அவஸ்தை பட்டு இருப்பீங்க போல இருக்கே.
வருகைக்கு ரொம்ப நன்றி
பகிர்வுக்கு நன்றி சகோ
பயனுள்ள தகவல்
தமிழ் மணத்தில் ஓட்டும் போட்டாச்சு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ஜலீலா,
நல்ல உபயோகமான டிப்ஸ். இனிமேல் இதுமாதிரி செய்து பார்க்கவேண்டியதுதான். பகிர்வுக்கு நன்றி.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா