மால்வேர் வைரஸ் ஐய்ய்யோ மால்வேர் வைரஸ் ஜலீலாக்கா பிலாக்குல எல்லாம் ஓடிடுங்கோ. சில பேர் மெயில் செய்தால் கூட வைரஸ் அவங்க கூடவே ஓடி வந்துடும் என மெயில் கூட் பண்ணல.
போன வருடம் இதே போல என் பிளாக்கில் மால்வேர் வைரஸ் அட்டாக் ஆகியது, அப்ப எனக்கு ஒரு நாள் காலை பிலாக் ஓப்பன் செய்த்தும் unreadable font டாக எல்லாம் ஆகிவிட்ட்து, பே பே பே பயந்தே போயிட்டேன், ஆஹா இத்தன குறிப்பு போட்டு இருக்கோமே எல்லாம் ஒரே நாளில் புஸ் ஆகிவிட்ட்தே. ரொம்ப பதறி போயிட்டேன். தூக்கம் வரல வேலை ஓடல. நானும் என்னவோ மால்வேர் அப்படின்னா சிஸ்ட்த்துல டயனோசர் பூந்துடுச்ச்சோன்னு பயந்துட்டேன்.
அப்ப வேலன் சார் உங்கள் பிலாக்கில் Malware Virus உடனே சரி பண்ணுங்க என்றார். அதே கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ராவும் அக்கா சீக்கிரம் உங்க பிளாக் ஏதோ ஆகிவிட்ட்து என்று சொன்னாங்க.அதே போல் மலிக்கா,கீதா ஆச்சல் எல்லொரும் சொன்னாங்க
உடனே டெம்லேட் மட்டும் மாற்றினேன். அதுவும் மாற்ற பயம் சைடில் உள்ள கோட் இனைத்த்து , எத்தன பேர் வந்தாங்க எல்லாம் போயிடுமேன்னு.அபபறம் ஒரு வழியா சரியாகிடுச்சு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அதே போல் இப்ப இந்த வருடமும் ஒரு மாதமாக இதே பிராப்ளம். ரொம்ப நாளா யாருக்கும் சரியா கமெண்ட் போடலையே என்று எல்லோருக்கும் கமெண்ட் போடலாம் என்று போட சென்றால் எல்லாமே சில பேருடைய பிளாக்குகள் சரியாக ஓப்பனே ஆகல அப்படியே ஓப்பன் செய்து கமெண்ட் போட்டால் மறுபடி பிலாக்கர் லாகின் செய்ய சொல்லி வருது. இது எதனால் என எனக்கு தெரியல.
10 நாட்களாக பிராப்ளம் இருக்கும் போதே Back up எடுத்து வைத்துட்டேன். இனி பிலாக் போனா போகட்டும். வேற போட்டு கொள்ளலாம் என விட்டு விட்டேன்.
அதிரா, தமிழரசி, ஆயிஷா, ஏஞ்சலின், சகோ.ஆஷிக், சகோ.பாஸித், ராமலஷ்மி,ஸாதிகா அக்கா எல்லோரும் மெயில் பண்ண போய் தான் எனக்கு தெரிய வந்த்து.
ஏற்கன்வே இது போல் ஆனதால் உடனே டெம்லேட் மாற்றினேன், இருந்தாலும் சரியாகல. ச்சியும் உடனே டெம்லேட் மாற்றுங்கள் என்றார்.
இதிலிருந்து பதிவுலகத்துக்கு சொல்லுவது என்ன வென்றால் நிறைய பதிவுகள் என்றால் முதலில் பேக் அப் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
இது முன்பே அடிக்கடி டவுசர் பாண்டி அன்னாத்தையும் முன்பு அதிகமா பிளாக்கர் டிப்ஸ் எல்லாம் கொடுத்தார் இப்ப கானாம போயிட்டார், சகோ ஜெய்லானியும் சொல்வது இந்த நிலை வரும் முன்னே இத முதல செய்யுங்கள்..
(ஆனால் இன்னுமே புரியல இந்த மால்வேர் வைரஸ் வந்து இருக்கு என எப்படி கண்டு பிடிப்பது, தெரிந்த கம்பியுட்டர் டாக்டர்கள் இத விளக்கினால் நல்ல இருக்கும்.இன்னும் எனக்கு மற்ற பிளாக்குகள் சரியா ஓப்பன் செய்ய முடியல)
டிப்ஸ்:
1. நம்ம கம்பியிட்டரில் ஆண்டி வைரஸ் செக் பண்ணிக்கனும்.உடனே ஆவன செய்யுங்கள்.
2.பிலாக் கை பேக் அப் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
3.நிறைய வெட்ஜெட் கள் சேர்க்காதீர்கள்.
4.இப்படி வைரஸ் மெசேஜ் வந்தால் உடனே டெம்லேட்டை மாற்றிடுங்கள்.
ஓரளவுக்கு என் அனுபவத்த எழுதி இருக்கேன்.
மற்றபடி ஏதும் வேறு யாரும் இங்கு அவர் அவர் அனுபவம் டிப்ஸ் சொல்வதாக இருந்தால் சொல்லலாம்.
இந்த பதிவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனக்கு கமெண்ட் மாட்ரேட் கொடுத்தா மெயிலில் கமெண்ட் வரவில்லை, எல்லா கமெண்டும் spam mail லில் தான் போகுது. இன்னும் சில பேருடைய பிளாக்கில் கமெண்ட் போட்டா எர்ர் மெசேஜ் வருது.
இதே பிராப்ளம் இன்னும் இரண்டு பேருக்கு இருப்பதாக மனோ அக்காவும் சொன்னார்கள்.
வேறுயாருக்கும் இதை சரி செய்ய வழி தெரிந்தால் கீழே சொல்லவும், இனி எனக்கும், இந்த பதிவ படிப்பவர்களுக்கு யாருக்காவது இது போல் இருந்தால் உதவியாக இருக்கும்.
மேலும் நிறைய இந்த பிளாக் அனுபவங்கள் இருக்கு பிறகு பார்க்கலாம்.
27 கருத்துகள்:
என்ன ஜலி அன்னிக்கு பத்றிய பதறலுக்கும் மால்வேர் வைரஸுக்கு பிரியாணி வைத்து பர்த்டே கொண்டாடத குறையாக இன்னிக்கு ஜாலியா பாட்டு பாடுவதைப்பார்த்தால் எனக்குஇந்தப் பாடல்தான் நினைவுக்கு வருகின்றது.
பரமசிவம் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சவுக்கியமா
இது உங்களுக்கு ரெண்ஆவது முறை இல்லியா? அதுசரி, காச்ச மரந்தானே கல்லடி படும்!! மீண்டு வந்ததுக்கு வாழ்த்துகள்.
தேவையில்லாத விட்ஜெட்ஸ் இல்லாம இருந்தாலே பாதி வைரஸ்கள் நெருங்காது, இல்லையா?
புது டெம்ப்ளேட் சூப்பரோ சூப்பர்!! அதுவும், திறந்தவுடனே மஞ்சமஞ்சேன்னு அழகா ஆம்லெட்.. வாய் ஊறுது!!
பகிர்வுக்கு நன்றி ஜலீலா .நானும் கம்ப்யுட்டர் விஷயத்தில் வீக் .நீங்க சொன்ன விஷயங்களை நினைவில் வச்சிக்கறேன் .
Template is nice, as Hussainamma said, don't use more widgets ...
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
இறைவன் நாடினால் அடுத்து இதைப்பற்றி பதிவிடுகிறேன்.
புது டெம்ப்லேட் மிக அழகு.வாழ்த்துக்கள்.
பயனுள்ள பதிவு.
நன்றி.
எனக்கும் இதே பிரச்சினைதான் அக்கா...
சிலருக்கு பின்னூட்டம் இடமுடியவிலை. நிறைய நண்பர்களுக்கு பின்னூட்டமிட்டு நீண்ட நாட்களாகிவிட்டது.எனவே AIM account மூலமாகவும் Name/Url மூலமாகவும் பின்னூட்டமிட்டேன். இப்போ AIM மூலமாக பின்னூட்டம் இட்டால் Error வருகிறது.
இன்ட்லி ஓட்டுப்பட்டை வருவதில்லை. என்ன செய்வது என்று தெரியாமல்தான் இருக்கிறேன்.
ஆமாம் ஹுஸைனாம்மா இது இரண்டாவது முறையா வந்துள்ளது.
இப்போதைக்கு இதை மாற்றி உள்ளேன் இனி பிறகு இன்னும் சிம்பிலாக வைக்கனும்.
ஆம்லேட் பார்த்ததும் உங்களுக்கு கல்யாணத்துக்கு அப்பரம் தினம் புல் ஜெய் சாப்பிட்டது ஞாபகம் வந்து இருக்குமே..
ஆமாம் ஏஞ்சலின் கம்பியுட்டர் விஷியத்தில் நானும் ரொம்பவே வீக்
மற்ற டெக்னிகல் விஷியம் எல்லாம் அவ்வளவா புலப்படல
ஒவ்வொரு தடவை ஓவ்வொரு மாதிரி அனுபவத்தில் தான் சிலது புரியுது.
அடடா ஜலீலாகா... மால்வேர் உங்களை இப்பூடிப் புலம்ப வச்சிட்டுதே ஹா...ஹா..ஹா.. முதலாவது படம் சூப்பர்...:))) மிஸ்டர்(ஒரு மரியாதைக்காக சொல்லிவைப்பம்:)) மால்வேர் அப்பூடித்தான் இருப்பார்போல:))).
என்னால உங்கட பக்கம் கொமெண்ட் போட முடியுது, ஆனா உங்க/ளை ஏன் என்பக்கம் விடுகுதிலை எனத் தெரியவில்லையே:((.
கூகிள் குரோம் டவுன்லோட் பண்ணி அதனூடாக வாங்கோ.
சகோ.ஜமால்
திடீருன்னு என்ன செய்வது என்று புரியாமல் இருந்த ப்போது உடனே உதவியமைக்கு மிக்க நன்றி
வா அலைக்கும் சலாம்
சகோ பாஸித்
உங்கள் பதிவை விரைவில் எதிர் பார்க்கிறேன்.
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஆசியா.
ரத்ன வேல் ஐய்யா உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
ஆமாம் சே குமார், நீங்கள் சொல்லும் பிரச்சனை தான் எனக்கும் இருக்கு.
எனக்கும் இண்ட்லிபட்டை வேலை செய்யல, அதான் ஓவ்வு பட்டை இனைக்கல.
தொடர் வருகைக்கும் தொடர் கமெண்ட் களுக்கும் மிக்க நன்றி
நேரம் இல்லாததால் யார் பிலாக்கும் அவ்வளவா பார்வை யிட முடியல நேரம் கிடைக்கும் போது வைரஸ் பிரச்சனை இல்லன்னா கண்டிப்பா எல்லாருடைய பக்கமும் வருகிறேன்
அதிரா ஒரு வழியா இங்கு உங்களால் வர முடிந்ததா,
மால்வேர் உங்க்ளை ஒன்றும் செய்யலையே.
ஹிஹிஹி
அதிரா இண்டர்நெட் எக்ஸ்புலோர், குரோம், பையர் பாக்ஸ் எல்லாவற்றின் மூலமாகவும் வந்து பார்த்தாச்சு. வந்தால் பூஸார் உள்ளே வரப்படாதுன்னு சொல்லிட்டார்.
பிளைட் புக் செய்துட்டேன் நேர வந்துபுடலாம்னுன்னு என்ன சரியா?
Check this for more details ...
ஜாலீலாக்கா... நேரே எண்டால், பிளைட்டை முருங்கை மரத்தில லாண்ட் பண்ணக்கூடிய பைலட்டாப் பிடிச்சு ஓட்ட வையுங்க:)).
இப்ப சரியா இருக்குங்க ஜலிலா.. எனக்கு உதவியது கேவி ஆர்..மற்றும் உங்களுக்கு தெரிவிக்கும்படியும் சொன்னார்... இதான் நட்பின் அடையாளங்களோன்னும் தோனுது ஜலிலா. சரிங்க வரேன்..
எல்லோருக்கும் உபயோகமான பதிவு இது ஜலீலா!
நான் உங்களுடன் பேசிய பிறகு, என் மகன் CASPERSKY என்ற ANTI VIRUSஐ பதிவிறக்கம் செய்தார். அனைத்துப்பிரச்சினைகளும் சரியாகி விட்டது.
சகோ ஜமால் அந்த லின்க பார்த்துட்டேன்
அதிரா நேரா உங்க வீட்டு முருங்க மரத்தில் என்றால் உங்கள் வீடு தெரிந்த ஒரெ பைலட் சகோ ஹைஷ் தான் அவரதான் கொண்டு போய் விட சொல்லனோம்.
தமிழரசி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
இதை தெரிய படுத்திய கேவி ஆருக்கும் மிக்க நன்றி.
மனோ அக்கா உங்களுக்கும் சரியாகி விட்டதா? ரொம்ப சந்தோஷம்.
நானும் புதுசா என் மகனிடம்சொல்லி ஆண்டி வைரஸ் இன்ஸ்டால் பண்ண சொன்னேன்.
போட்டு இருக்கான்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா