அத்திபழம் – தேனில் ஊறியது – இரண்டு மேசைகரண்டி
பழுத்த பேரிட்சை பழம் – 10 (கொட்டி நீக்கியது)
கிஸ்மிஸ் பழம் – 10
பால் – இரண்டு டம்ளர்
ஐஸ் கட்டிகள் – 15
பெரிய வாழை பழம் – 1
அலங்கரிக்க : பிஸ்தா பிலேக்ஸ் சிறிது
செய்முறை
அத்திபழம் + கிஸ்மிஸ் பழத்தை கால் கப் தண்ணீர்ல் ஊறவைக்கவும்.வாழைபழத்தை பொடியாக அரியவும்.
மிக்சியில் ஊறிய அத்திபழம், கிஸ்மிஸ் பேரிட்சை , வாழைபழம்,பால், ஐஸ் கட்டிகள் சேர்த்து பழங்கள் நன்கு மசியும் வரை விப்பரில் ஓடவிடவும்.பெரிய ஜுஸ் டம்ளரில் ஊற்றி பிஸ்தா பிலேக்ஸ் கொண்டு அலங்கரித்து குடிக்கவும்.
குறிப்பு
எல்லாமே இரும்பு சத்து அதிக உள்ளது, உடம்பிற்கு மிகவும் ஊட்டச்சத்து மிக்கது, குழந்தைகள் சாப்பாடு சாப்பிடலையேன்னு கவலை பட தேவையில்லை. ஒரு டம்ளர் குடித்தாலும் நல்ல் ஹெல்தி. கர்பிணி பெண்களுக்கு ஏற்படும் சேர்வை நீக்கும்.
அத்திபழம்,வாழை, கிஸ்மிஸ், பேரிட்சை எல்லவற்றிலும் இனிப்பு சுவை இருப்பதால் சர்க்கரை தேவையில்லை. அதிக இனிப்பு விரும்புவோர் சிறிது சேர்த்து கொள்ளலாம்.
( அத்திபழம் நல்ல பழுத்ததும் இருக்கும், காய்ந்த , தேனில் ஊறியதும் இருக்கும் , இதில் உள்ள பழங்கள் தேனில் ஊறிய காய்ந்த பழங்கள். இவை மிவும் கட்டியாக இருக்கும் ஊறவைத்தால் கொஞ்சம் மிருது தன்மை கொடுக்கும். இல்லை என்றால் அரைக்கும் போது மிக்சியில் அடியில் தங்கிவிடும்)
பேரிட்சை பழுத்த்தாக இருப்பதால் ஊறவைக்க தேவையில்லை.
வாழை பழம் சேருவதால் அதிக நேரம் பிரிட்ஜில் வைத்தால் கருத்து போய் விடும் உடனே குடிப்பது நல்லது.இதில் பயன் படுத்தி உள்ளது தேனில் ஊறிய காய்ந்த அத்திபழம்
நோன்புகாலங்கள் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது , விரதம் இருப்பவர்களும் இதை ஒரு டம்ளர் குடிக்கலாம். அத்திபழம் தேனில் ஊறியது கிடைக்கிறது, அப்படி கிடைக்காதவர்கள் தனியாகவும் வாங்கி சேர்த்து கொள்ளலாம்.
உயர் இரத்த அழுத்தத்தை கட்டு படுத்தும்.
(இது வெரும் அத்திபழம், பால் ஐஸ் கட்டி மட்டும் சேர்த்தும் ஜூஸ் தயாரிக்கலாம்)
Tweet | ||||||
24 கருத்துகள்:
Nalla kalakkal Juice than.Healthy too with dates and figs.Luv it.yummm.
வித்தியாசமான ஹெல்தி ஜூஸ்!
Superb juice to gain all the energy. Looks delicious akka.
அருமையான செய்முறை விளக்கங்கள் சகோ!
சூப்பர் ஜூஸ் ஜலீலாக்கா..... உடனேயே குடிக்கச்சொல்லுது.
எனக்குத் தலைப்பு மேலே வராமையால், எதுவுமே தெரியுதில்லை, அதுதான் காரணம், இல்லையெனில் வடை எனக்குத்தான் கிடைக்க்கும்...
ஏனையோருக்கெல்லாம் மேலே வருகிறதா என விசாரிக்கவேணும்.
வித்தியாசமான ஜூஸ்!
கிஸ்மிஸ் பழம் என்னான்னு தெரியலை, வீட்ல கேட்டா தெரியும்
இரத்த அழுத்தத்துக்கு நல்லதுனா, அவசியம் சாப்பிட வேண்டியது தான்
அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையான ஜூஸ்
//நட்புடன் ஜமால் said...
கிஸ்மிஸ் பழம் என்னான்னு தெரியலை,//
சகோ கிஸ்மிஸ் பழம் என்றால் காய்ந்த திராச்சை ஊரில் கிஸ்மிஸ் பழம் என்றுதான் சொல்வோம்.சென்னையில் திராச்சை .
// வீட்ல கேட்டா தெரியும்//
உங்க வீடு பேசுமா சகோ ஹி ஹி
உங்க மனைவியிடம் கேளுங்கள்.
வாங்க மை கிச்சன், ரொம்ப ஹெல்தி ,இந்த ஜூஸ்
ஆமாம் ஸாதிகா அக்கா நோன்பில் செய்தது திடீர் ஐடியா.
ஆமாம் விக்கி எல்லா சத்தும் இதி் கிடைத்துடும்.
அதிரா எனக்கும் போட்டோ எடுக்க பொ்றுமை கூட இல்ல
யம்மியா இருந்தது.
தலைப்பு மேலே வரலையா லின்க் கொடுத்திங்லான்னு பாருங்க
வாங்க சே குமார் மிக்க நன்றி
ஸலாம் சகோ.ஜலீலா,
மிகவும் சத்தான ஜூஸ் ஃபார்முலா.
அனைத்தையும் சேகரித்து மிக்சியில் கலக்கி அடித்து குடித்து விட்டு சொல்கிறேன் சகோ.
சகோ ஜமால் கிஸ்மிஸ் என்பத ரெயிஸின்ஸ், ஆயிஷா அபுலும் சொல்லி இருகக்ங்க ப்ாருங்கள்
இது இரத்த அழுத்த் கு்றைப்பத்ோடு ஹிமோ குளோபின் அளவையும் அதிகரிக்கும்.
வா அலைக்கு சலாம் ஆயிஷா நன்றி
வாங்க ராஜஷ் கருதது தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
அத்தி பழம் ஃபிரஸா சாப்பிட்டே பழக்கம் . தேனில் ஊற வைத்தால் அதே டேஸ்ட் கிடைக்குமா தெரியல :-)
நிறைய பழங்கள் சேர்த்திருப்பதால் எப்படியும் ரெண்டு டம்ளராவது குடிச்சிதான் பார்க்கனும் :-)
//athira said...
/
/
ஏனையோருக்கெல்லாம் மேலே வருகிறதா என விசாரிக்கவேணும் //
பிளாக் வச்சி இருக்கிறவங்க கிட்டேயா..?? பிளாகே இல்லாதவங்ககிட்டேயா..?? :-)))
ஆஹா!ஹெல்தி & நியூ ஜூஸ் ரெசிப்பி.
சகோ ஆசிக் செய்து பார்த்து சொல்லுங்கள்
வருகைக்கு மிக்க நன்றி
ஜெய்லானி ப்ரெஷ் பழத்தில் இன்னும்அருமைய்ாக இருக்கும்.
இத் தேனில் ஊறியதுவாங்கியதால் அதி செய்தெேன்
ஆசியா திடீருன்னு தோனுவது செய்து விடுவது அதுவே புது ரெசிபியாகவும் ஆகிவிடுகிறது. வ்ருகைக்கு மிக்க நன்றி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா