Tweet | ||||||
Tuesday, October 25, 2011
சாஃப்ரான் நட்ஸ் ரவா கேசரி - Safron Nuts Rava Kesari
சாஃப்ரான் நட்ஸ் ரவா கேசரி
தேவையானவை
ரவை – 1 டம்ளர்
நட்ஸ் வகைகள் (பாதம்,பிஸ்தா,முந்திரி,வால்நட்,கிஸ்மிஸ்) – 1 டம்ளர்
சர்க்கரை – 2 டம்ளர்
தண்ணீர் – 2 ½ டம்ளர்
சாஃப்ரான் – 1 தேக்க்ரண்டி
நெய் – 100கிராம்
ஏலப்பொடி – கால் தேக்கரண்டி
செய்முறை
முதல் வகை
1. ஒரு வாயகன்ற வானலியில் சிறிது நெய் விட்டு நட்ஸ்வகைகள் நான்காக கட் செய்து வறுத்து கடைசியாக கிஸ்மிஸ் பழம் சேர்த்து கருகாமல் வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
2. அதே வானலியில் ரவையை வறுத்து எடுக்கவும்.
3. தண்ணீரை கொதிக்கவைத்து அதில் சாப்ரான் மற்றும் ஏலப்பொடி சேர்த்து ரவையை கொட்டி கிளறவும்.
4. அடுத்து சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறவும்.
5. கடைசியாக நட்ஸ்வகைகளை சேர்த்து இரக்கவும்.
6. சுவையான சாஃப்ரான் மனத்துடன் நட்ஸ் ரவா கேசரி ரெடி.
இரண்டாம் வகை
1. நட்ஸ் வகைகளை நெயில் வறுத்து தனியாக வைக்கவும்.
2. ஒரு அடுப்பில் தண்ணீருடன் சாஃப்ரான் மற்றும் ஏலப்பொடி கலந்து கொதிக்கவைக்க்வும்
3. மற்றொடு அடுப்பில் ரவையை நெய்யில் வறுக்கவும்.
4. வறுத்த ரவையில் கொதித்த தண்ணீரை ஊற்றி சிறிது நேரம் கட்டியில்லாமல் கிளறி சர்க்கரை சேர்த்து கடைசியாக நட்ஸ்வகைகளை சேர்த்த்து இரக்கவும்.
துல்லி
கேசரி
கமலா பழ கேசரி
சோஜி (குழந்தைகளுக்கு)
அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
தீபாவளி ஸ்பெஷல் ஆக இந்த கேசரி வகைகள்
Subscribe to:
Post Comments (Atom)
18 கருத்துகள்:
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Super rich looking kesari..yumm!
நல்லா இருக்குஅக்கா குறிப்பு
ரெண்டு நாள் முன்னாடியே பார்த்திருந்தால் தீபாவளிக்கே ட்ரை செய்திருக்கலாமோ...! அப்புறம் இன்னொரு நாள் முயற்சிக்க வேண்டியதுதான். நன்றி.
நிறத்தைப் பார்த்ததுமே வாயுறுதுங்க...
செய்ததில மிச்சமிருந்தால் தருவிங்களா சகோதரி...
அருமை சகோ... நன்றி
க்லர் சேர்க்காமல் சாஃப்ரான்,நட்ஸ் சேர்த்து சூப்பர் கேசரி..
Saffron Kesari seems great.Luv it.Thanks for sharing.
yummy treat!
கூல் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
பிரியா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
கருத்துக்கு மிக்க நன்றி ஆமினா
ஸ்ரீராம் இது முன்பு எடுத்து வைத்திருந்த படம் தேடி போட நாளாகிவிட்டது, என்ன அடுத்த தீபாவளிக்க்குள் செய்துடுவீங்க இல்ல தொடர் வருகைக்கு மிக்க நன்றி
மதி சுதா வாங்க பேச்சுலர்கள் பார்த்து வாயூருவது நினைச்சா கழ்டமா இருகு
கூட அம்மாவோ, மனைவியோ இருந்தால் செய்து கொடுப்பாங்க.
கொண்டு வந்து கொடுக்கும் தூரத்தில் இருந்தால் கண்டிப்பா கொண்டுவந்து கொடுகக்லாம்
வாங்க ராஜேஷ் வருகைக்கு நன்றி
ஆமாம் ஆசியா இதே போல் டில்லியிலும் கலர் சேர்க்காமல் தான் செய்கிறார்கள்.
வாங்க மை கிச்சன் கருத்து தெரிவிhத்தமைக்கு மிக்க நன்றி
வாங்க த்ாயம்மாநலமா?
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா