Monday, February 21, 2011

பைனாப்பிள் கேசரி, பிளெயின் கேசரி - pineapple kesari

இது என் தங்கை பசீரா செய்த கேசரி, இதில்நெய் அளவு, அதிகம் என்றால் தேவைக்கு குறைத்து கொள்ளுஙக்ள், தங்கை எப்பவாவது விருந்தினர் வரும் போது விஷேசங்களுக்கு என்பதால் சரியான அளவில் தான் செய்வாள், நெய் , சர்க்கரை அளவை குறைத்து கொள்வேன். நட்ஸ் வகைகள் நம் விருப்பம் தான் தேவைக்கு நிறைய சேர்த்து கொள்ளலாம்.

தேவையானவை

ரவை – 100 கிராம்
நெய் – 50 கிராம்
சர்க்கரை – 150 கிராம்
முந்திரி – 25 கிராம்
உப்பு – ஒரு சிட்டிக்கை
தண்ணீர் – 300 மில்லி
ரெட் (அ) யெல்லோ கலர் - சிட்டிக்கை
பைனாப்பிள் துண்டுகள் (இரண்டு சிலைஸ்) –கால் கப்
சாப்ரான் எசன்ஸ் – ஒரு தேக்கரண்டி


செய்முறை

சிறிது நெய்யில் முந்திரியை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.மேலும் சிறிது நெய்யில் ரவையையும் வறுத்து தனியாக வைக்கவும்.
மீதி நெய்யில் பாதி எடுத்து வைத்து விட்டு அதை ஊற்றி தண்ணீர் அளந்து சேர்த்து கலர் பொடி கலந்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதிக்கும் போதுதீயின் தனலை குறைத்து ரவையை சிறிது சிறிதாக அரிந்து வைத்துள்ள பைனாப்பிளையும் சேர்க்கவும் போட்டு கிளறவும்.


.
கடைசியாக சாப்ரான் எசன்ஸ்,மீதி நெய்,வறுத்த முந்திரி அனைத்தையும் சேர்த்து கிளறி இரக்கவும், சுவையான பைனாப்பிள் கேசரி ரெடி,


பிளையின் கேசரிக்கு பைனாப்பிள் சேர்க்காமல் செய்யவும்.கிஸ்மிஸ் பழம் இருந்தால் அதையும்நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

47 கருத்துகள்:

Kalpana Sareesh said...

my fav ..looks lovely..

Kurinji said...

Akka neethuthan seithen, enakku migavum pidithathu. But ungalodathu konjam differentaga erukku. Ithumaathiri seithu paarkkanum.

kurinjikathambam

Chitra said...

Superb post. never tried this kesari. good job by ur sis :)

Shama Nagarajan said...

yummy

ஜெய்லானி said...

கேசரி சாப்பிடாமல் நோ கமெண்ட் :-))

பார்த்த வரைக்கும் ஓ K சரி...!! :-))

சி.பி.செந்தில்குமார் said...

இப்படி எல்லாம் உசுப்பேத்தி விட்டா சுகர் வந்துடும்.. ஹா ஹா ஹா

Priya Sreeram said...

love the colour ! yum !!

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு அக்கா , சில சமையம் நான் கூட கேசரியில் பைனாப்பிள் சேர்ப்பதுண்டு.

ஸாதிகா said...

பைனாப்பிள்சேர்த்து கேசரி கிளறினால் மணம் ஊரைக்கூட்டுமே!

Anonymous said...

all time fav
i love this color..

Jay said...

very delicious..nice presentation..
Tasty appetite

எல் கே said...

நன்றி சகோ செஞ்சு பார்க்கறேன்

கே. ஆர்.விஜயன் said...

கொஞ்சம் ஈஸியா செய்யுற ஐட்டம் இதுவாதான் இருக்கும் என நினைக்கிறேன்.

Kanchana Radhakrishnan said...

நல்லா இருக்கு.

S.Menaga said...

எனக்கு ரொம்ப பிடித்த கேசரி!!

Umm Mymoonah said...

Looks very delicious, next time when I make kesari, I'll try your version.

Krishnaveni said...

wow, superb

angelin said...

ஹையா ஹையா தமிழ்font வேலை செய்யுது
பகிர்வுக்கு நன்றி ஜலீலா .

vanathy said...

super. Will try soon?

Chitra said...

கேசரி - எனக்கு ரொம்ப பிடிக்கும்.... இங்கே வரை மணம் கமகமக்குது....

asiya omar said...

சூப்பர் கேசரி.படமும் பரிமாறிய விதம் அருமை.தங்கைக்கு வாழ்த்துக்கள்.

அமைதிச்சாரல் said...

ஆஹா.. ஜூப்பரா இருக்குமே.

Aruna Manikandan said...

looks delicious akka :)

சே.குமார் said...

நல்லா இருக்கு.

கோவை2தில்லி said...

கேசரி எனக்கும் பிடித்தது. தங்கைக்கும் வாழ்த்துக்கள்.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

சூப்பரா இருக்கு கேசரி ஜலீலா..:))

Malar Gandhi said...

This one of the aromatic Kesari I ever had. Perfect for festive month. Like the pineapple essence idea, much more flavorful.

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கு ஆசியா அக்கா..,சிஸ்டம் எனக்கு ஒர்க் ஆகவில்லை அதனால் ஒருவாரம் என் கைகள் ஓய்வெடுத்துவிட்டது.இன்றுதான் என் கைக்கு வேலை வந்துள்ளது.... ஒவ்வொன்றாக நான் பார்வையிட்டு வருகிறேன் அக்கா...
உங்கள் பக்கம் வந்தால் அழகான மஞ்சள் கலரில் பைனாப்பிள் கேசரி.... ரொம்ப அழகாக இருக்கு....
வாழ்த்துக்கள் அக்கா...

அன்புடன்,
அப்சரா.

சீமான்கனி said...

ஹாய் ஜலிக்கா நலமா??? கேசரி பார்க்கவே சூப்பரா இருக்கு சாப்ட்டா!!! இன்னும் சூப்பரா இருக்கும் ..ம்ம்ம்ம்ம்ம்ம்..

அந்நியன் 2 said...

ஏனுங்க...உங்கள் சிஸ்ட்டர் சரியான கருமியாக இருப்பார்களோ ? கொஞ்சம் கூடத்தான் செய்கிறது.

மிச்சம் மீதி இருந்தால் எங்களுக்கும் பார்சல் போடலாம்லே.

இதுலாம் கனவுலே வந்தாத்தான் சாப்பிட முடியும்,வீட்டுக் காரவுக கிட்ட இதை செஞ்சு தா...என்று கேட்டால் தட்டுப் பறக்கும்,அப்புறம் இதைக் காரணமா வைத்துக் கொண்டு அவுக அம்மா வீட்டிற்குப் போயிடப் போகிறார்கள் என் வீட்டுக் காரவுக.

செய்து காண்பித்ததற்கு நன்றிக்கா.

Vijisveg Kitchen said...

ஜலீ ரொம்ப நாளாச்சு நான் ப்ளாக் பக்கம் வந்து.நல்ல இனிப்பான ஒரு ரெசிப்பி அதுவும் என் வீட்டில் எல்லாருக்கும் பிடித்த பைனாப்பிள் கேசரி. நல்லா டேஸ்டியா இருக்கும்.

Viki's Kitchen said...

உங்கள் தங்கை செய்த கேசரி superb . ரொம்ப நல்ல இருக்கு எனக்கும் இது ரொம்ப பிடிக்கும். யாரவது friends வந்தால் இதை செய்ய தான் நான் ஆசைபடுவேன்:).

மகி said...

சூப்பரா இருக்கு ஜலீலாக்கா! அதுவும் என் பேவரிட் கலர்! :)

Jaleela Kamal said...

@ கல்பனா,

@ குறிஞ்சி,

@ சித்ரா,

@ ஷாமா, மிக்க நன்றி

@ ஜெய்லாணி அதான் ஈசியா தானே சொல்லி இருக்கேன்.
உடனே செய்துடலாமே

@ சி.பி செந்தில் குமார் உடனே தங்கமணி ய செய்ய சொல்லவேண்டியது தானே

@ நன்றி பிரியா ஸ்ரீராம்

@ நன்றி சாரு,

Jaleela Kamal said...

@ நன்றி ஸாதிகா அக்கா நான் பைனாப்பிள் போட்டு செய்வதில்லை என் தங்கை செய்வாள்.ஒரு முறை வெளியில் சாப்பிடும் போது ஓவரா எசன்ஸ் ஊற்றிட்டாங்க அதில் இருந்து பிடிக்காமல் போச்சு அதோடு இப்ப தான் சாப்பிட்டேன்,

@ நன்றி மகா விஜெய்

@ நன்றி ஜெய்

@ நன்றி சகோ.எல்.கே

@கே.ஆர்.விஜயன் ஆமாம் ஸ்வீட் ஐட்ட்த்திலேயே ரொம்ப ஈசி கேசரி தான் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

@ நன்றி காஞ்சனா

Jaleela Kamal said...

@ நன்றி மேனகா

@ நன்றி உம்மு, அடுத்த முறை கேசரி செய்யும் போது இது போல் செய்து பாருங்கள்.

@ நன்றி கிருஷ்னவேனி
@ வாங்க ஏஞ்சலின் இப்ப தான் தமிழில் கமெண்ட் போட்டு இருக்கீங்க , மிக்க நன்றி

@ நன்றி வானதி

@ சித்ரா அங்கு வரை மணம் வந்துடுச்சா? ரொம்ப சந்தோஷம்.

@ உங்கள் அன்பான கமெண்ட் க்கு மிக்க நன்றி ஆசியா.

@ நன்றி அமைதிசாரல்

@ நன்றி அருனா

@ நன்றி சே. குமார்

@ நன்றி கோவை 2 தில்லி

@ நன்றிதேனக்கா@ yes malar its very perfect for festive month,thanks for your lovely comment.

Jaleela Kamal said...

வா அலைக்கும் அப்சாரா, அதானே உடனே வந்து கருத்து தெரிவிப்பிங்களே ஆளை கானும் என்றூ நினைத்தேன், ஆமாம் இங்கு அப்படி தான் கம்பியுட்டர் அடிக்கடி மக்கர் பண்ணுது, கமெண்ட்டுக்கு பதில் கூட உடனே போட முடியல,
மறவாமல் வருகைக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

வாங்க தம்பி சீமான் கனி ரொம்ப நாள் கழித்து இந்த அக்காவின் பதிவிற்கு வந்து இருக்கீங்க ரொம்ப சந்தோஷம்

Jaleela Kamal said...

நாட்டம இது உங்களுக்கு கம்மியா?
கொஞ்சம் மா சாப்பிடமா அண்டா அண்டாவ சாப்பிட்ட, ஓ இப்பதான் புரியுது ஏன் உங்க வீட்ட்டம்மா அம்மா வீட்டுக்கு போனாங்கன்னு, ஏ தட்டு பறக்குதுன்னு... ஹிஹி
வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

வாங்க தோழி விஜி எல்லோருக்கும் இந்த கலரும் ,மனமும் ரொம்ப பிடிக்கும் இல்லையா?
விக்கி வாங்க நீங்களும் அடிக்கடி செய்வதா, இது ஒன்று தான் நிமிஷத்தில் செய்யும் ஈசியான ஸ்வீட்
ஆம் மகி இந்த கலரை பார்த்தாலே சாப்பிட தூண்டும். வருகைக்கு மிக்க நன்றி

அன்னு said...

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.. அது போல, ஜலீலாக்கா வீட்டுல அக்கா என்ன, தங்கை என்ன, வாண்டுகள் என்ன, எல்லாருமே சமையல்ல நிபுணர்கள்தான் போங்க!! :))

கோமதி அரசு said...

ஜலீலா, உங்கள் தங்கை செய்த கேசரி அருமை.

படங்கள் அழகு.

பாராட்டுக்கள் உங்கள் தங்கைக்கு.
பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.

சுந்தரா said...

ஈசியான கேசரி...
பாராட்டுகள் உங்கள் தங்கைக்கும்.

R.Gopi said...

ஆஹா....

அருமை...

பலே....

எம்புட்டு வாசனை... இங்க வரைக்கும் வருதே...

Jaleela Kamal said...

அன்னு எனக்கென்னவோ நான் தான் ஏனோ தானான்னு செய்வது போல் இருக்கு ,என் வீட்டில் மற்ற த்ங்கைகள் எல்லாம் சரியான அளவில் செய்வார்கள்

Jaleela Kamal said...

கோமதி அக்கா

தோழி சுந்தரா

உங்கள் பாராட்டுகளை என் தங்கையிடம் தெரிவித்து விட்டேன்

Jaleela Kamal said...

கோபி அவர்களே பாராட்டுவதில் உஙக்ளை யாரும் மிஞ்ச முடியாது

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா