Tuesday, February 1, 2011

மேத்தி சப்பாத்தி (டயட்) - methi chappaathi



(டயட் பொடி - சுக்கு, மிளகு,வெந்தயம்,கருவேப்பிலை) எல்லாம் சேர்ந்தது ஒரு தேக்கரண்டி


///இந்த ரொட்டி பிரெஷர்,சுகர், கொலஸ்ராயில் ஹார்ட் பிராப்லம் மற்றும் டயட் செய்பவர்களுக்கு ஒரு நல்ல டிஷ் ஆகும்.
இப்போது வெளி நாடுகளில் டிரை மேத்தியே கிடைக்கிறது அதை வாங்கி கூட பயன் படுத்தி கொள்ளலாம். ///


தேவையான பொருட்கள்

ஆட்டா மாவு - ஒரு கப்
வெந்தய கீரை - ஒரு சிறிய கட்டு
வெங்காயம் - ஒன்று சிறிது
டயட் பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்க்ரண்டி
உப்பு - சிட்டிகை
ஆலிவ் ஆயில் - இரண்டு தேக்கரண்டி
பூண்டு - முன்று பல்
ஆலிவ் ஆயில் - சப்பாத்திக்கு







செய்முறை

வெந்த கீரையை மண்ணில்லாமல் கழுவி வைக்கவும்.

ஒரு பேனில் ஆலிவ் ஆயில் ஊற்றி அதை வெங்காயம், பூண்டு பொடியாக நருக்கி போட்டு வதக்கவும்.
வெங்காயம் பூண்டு வதங்கியதும் கீரை,மஞ்சள் பொடி,உப்பு, டயட் பொடி சேர்த்து ஆட்டா மாவில் சேர்த்து தேவை கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசையவும்.





பிசைந்த மாவை பத்து நிமிடம் ஊறவைக்கவும்.

ஆறு உருண்டைகளாக போட்டு கொள்ளவும்.

இதை வட்ட வடிவமாகவோ (அ) அல்லது சதுர வடிவமாகவோ சுட்டெடுக்கலாம்.

(இல்லை வ‌ட்ட‌ வ‌டிவ‌மாக‌வும் சுட்டெடுக்க‌லாம்)

மடித்த ரொட்டியை சதுரவடிவமா தேய்த்து லேசாக ஆலிவ் ஆயில் விட்டு சுட்டெடுக்கவும்.
தொட்டு கொள்ள எல்லா வகையான கூட்டுகள், வெஜ்டேபுள் குருமா,மீன் குழம்பு எல்லாம் பொருந்தும்.



குறிப்பு:

இதில் நான் டிரை மேத்தி கீரை சேர்த்துள்ளேன்.
பூண்டை தனியாக மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வேகவைத்து எடுத்தும் சேர்க்கலாம்.


(டயட் பொடி - சுக்கு, மிளகு,வெந்தயம்,கருவேப்பிலை) எல்லாம் சேர்ந்தது ஒரு தேக்கரண்டி

டிஸ்கி: இந்த குறிப்பு: படத்துடன் காப்பி அடித்து இருக்கிறார்கள் ஆகையால் படத்தில் பெயர் போட்டுள்ளேன்
 இது 25.10.2009 நில் போட்ட்டேன், அதை அப்படியே தமிழ் சமையல் காப்பி அடித்துள்ளதால் மறுபடி படத்தில் பெயருடன் போட்டுள்ளேன்..

35 கருத்துகள்:

Priya Suresh said...

Methi roti, naan adikadi samaikura roti..for the condensed milk cake i used 400gms tin of condensed milk Jaleela..hope this helps.

Jaleela Kamal said...

நன்றி பிரியா

R.Gopi said...

ஜலீலா மேடம்...

படங்கள் பார்க்கும் போதே, சாப்பிட வேண்டும் போல் உள்ளது...

உங்கள் கைபக்குவம் பலே...

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

அக்கா என்னை மன்னிக்கவும்,,,,,

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...
This comment has been removed by the author.
GEETHA ACHAL said...

நன்றாக இருக்கின்றது...நானும் இது போலவே மெத்தி ரொட்டி செய்வேன்...உடலிற்கு மிகவும் நல்லது...சூப்பர்ப்..

படங்கள் அருமை..

Jaleela Kamal said...

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கோபி

Jaleela Kamal said...

Boniface உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றீ கீதாஆச்சல், வயிற்று புண்ணைகூட ஆற்றும் இந்த மேத்தி.

கோமதி அரசு said...

மேத்தி சப்பாத்தி நல்லா இருக்கு.
பகிர்வுக்கு நன்றி.

காப்பி அடிப்பதா! இது வேறு நடக்கிறதா!

டயட் பொடி புதிதாக இருக்கு செய்துப் பார்த்து விடுகிறேன்.

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி கோமதி அக்கா

ஆமாம் இது சுகர் பேஷண்ட், ஹார்ட் பிராப்லம் உள்ளவர்களுக்கு அறுசுவையில் டயட் சமையல் ஜெயந்தி என்ற தோழி கேட்டதால், நானே தயாரித்த டயட் பொடி.
. மற்றொரு வகை பிறகு போஸ்ட் செய்கிறேன்,

இது ஜீஜீ மேத்தியில் இன்னும் என்ன என்ன செய்யலாம் என்று கேட்டு கொண்டாதால் ரீபோஸ்ட் செய்தேன்.

Menaga Sathia said...

நானும் அடிக்கடி செய்வதுண்டு...

Anonymous said...

டயட்டையும் ருசிகரமாக ஆக்குகிறது உங்க சமையல்..

Chitra said...

healthy ரெசிபி. நன்றிங்க.

Kanchana Radhakrishnan said...

படங்கள் அருமை..

Kanchana Radhakrishnan said...

பெற்றோர்/மற்றோர்...கவனத்திற்கு என்ற என்னுடைய இடுகையை பார்க்கவும்.
http://annaimira.blogspot.com/2011/01/blog-post_30.html

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஜலீலாக்கா என்ன இண்டைக்கு எனக்கு எங்கயுமே வட கிடைக்கவில்லை, சரி சப்பாத்தியாவது கிடைக்காதோ என ஓடிவந்தேன் “டயட்” எனச் சொல்லிட்டீங்க... எனக்கு டயட் என்றாலே அந்த உணவைத் தொடமாட்டேன்..:) வேறொன்றுமில்லை அலாஆஆஆஆர்ஜி:).

சூப்பராக இருக்கு உங்க சப்பாத்தி, எனக்கு இப்படி மெல்லிசாக வராது:(((


///இதை வட்ட வடிவமாகவோ (அ) அல்லது சதுர வடிவமாகவோ சுட்டெடுக்கலாம்.
(இல்லை வ‌ட்ட‌ வ‌டிவ‌மாக‌வும் சுட்டெடுக்க‌லாம்)
/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

சாந்தி மாரியப்பன் said...

டயட் சப்பாத்தி நல்லாத்தான் இருக்குது.

Mahi said...

நல்லா இருக்கு ஜலீலாக்கா! சுக்கு நான் இதுவரை வாங்கியதும் இல்ல,யூஸ் பண்ணியதும் இல்ல!

திருப்பூர் சரவனக்குமார் said...

மேத்தி சப்பாத்தி நல்லா இருக்கு.
பகிர்வுக்கு நன்றி.

மங்குனி அமைச்சர் said...

மேத்தி சப்பாத்தி (டயட்)

என் மேடம் சப்பாத்திக்கு சுகர் கம்ப்ளைன்டா ???? டயட்டில் இருக்கு

அட இங்கு ஒரு சப்பாத்தியே டயட்டில் இருக்கிறதே !!!!
அடடே ஆச்சரியக்குறி

மங்குனி அமைச்சர் said...

///டயட் செய்பவர்களுக்கு .////

எச்சூச்மி ..... இந்த டயட் எப்படி செய்றதுன்னு சொல்லவே இல்லையே ???

Kurinji said...

paarkkave supera erukku...

Kurinji Kudil

apsara-illam said...

நானும் மேத்தியை யூஸ் பண்ணி சப்பாத்தி செய்து பார்க்கணும்னு நினைக்கிறது... ஏனோ முடிவதில்லை.
மிகவும் சத்தான குறிப்பு ஜலீலா அக்கா... எப்படியாவது ஒரு முறையேனும் செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.
வாழ்த்துக்கள்....


அன்புடன்,
அப்சரா.

Jaleela Kamal said...

மகா விஜெய், சித்ரா, மேனகா கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி காஞ்சனா,
உஙக்ள் பதிவையும் பார்த்தேன்.

நன்றி மகி சுக்கு பொடி எப்போதும் வைத்து இருப்பேன்.

நன்றி அமைதி சாரல்

// மங்குனி அமைச்சர் said...
///டயட் செய்பவர்களுக்கு .////

எச்சூச்மி ..... இந்த டயட் எப்படி செய்றதுன்னு சொல்லவே இல்லையே ???


இந்த மங்குனி அமைச்சர நல்ல நொங்கபோரேன்.

Jaleela Kamal said...

அதிரா முழுநேர டயட் எல்ல்லாம் இல்ல,. சும்மா அப்ப அப்ப இது ப்போல் லைட்டாக சத்தாக சாப்பிடு கொள்வது,
எனக்கும் முன்பு சரியாதிரட்ட வராது, போக வாரம் முன்று நாலு முறை சப்பாத்தி ரொட்டி, என்பதால் பழகி விட்டது .

Jaleela Kamal said...

//
திருப்பூர் சரவனக்குமார் said...
மேத்தி சப்பாத்தி நல்லா இருக்கு.
பகிர்வுக்கு நன்றி.

February 2, 2011 9:35 AM//
வாங்க திருப்பூர் சரவணன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

மலிக்கா வாங்க வாங்க வலைசரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கீங்கலா ரொம்ப ஜந்தோஷம் ப்பாஅ

Jaleela Kamal said...

வருகைக்கு நன்றி குறிஞ்சி,


அப்சராமேத்தி வாங்கினால் செய்து பாருங்கள்

ADHI VENKAT said...

நல்ல ரெசிபி. நானும் செய்வதுண்டு. டயட் பொடி நல்லாருக்கு.

Priya Srinivasan - I Camp in My Kitchen said...

Diet podi nalla iruke!!!! Methi Roti super!!!!

apsara-illam said...

சலாம் ஜலீலா அக்கா..,இன்று ஒரு வழியாக ஃப்ரஷ்ஷாக மேத்தி கீரை கிடைக்கவே வாங்கி சப்பாத்தியை செய்து ருசிச்சு சாப்பிட்டாச்சு.என்ன டயட் பொடி என்று செய்யாமல் (சுக்கு இல்லையே...)இஞ்சி,பூண்டு இவைகளின் பேஸ்ட் போட்டு கீரையை வதக்கி சேர்த்து மாவு பிசைந்து சுட்டு பார்த்தாச்சு.இனி அடிக்கடி செய்துவிடவேண்டியத்துதான்.
மிகவும் நன்றி அக்கா...

அன்புடன்,
அப்சரா.

Jaleela Kamal said...

கோவை2டில்லி, இது எல்லோரும் செய்வது தான் ,நான் அதில் டயட் பொடி சேர்த்து இருப்பது புதுமை

வருகைகு மிக்க நன்றி

பிரியா வாசு வாங்க கருத்துக்கு மிக்க நன்றி


சலாம் அப்சாரா செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க் நன்றி.

Vardhini said...

Methi would have added a nice flavor to the chapatis. Thx for linking to the event Jaleela. Could you also add a link to the event announcement?

Vardhini
Event: Sinful Delights
Event: Stuffed Paratha

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா