Showing posts with label சங்கரா மீன். Show all posts
Showing posts with label சங்கரா மீன். Show all posts

Wednesday, July 26, 2017

ஏர் ப்ரையர் கிரில் பிஷ் - Air Fryer Grill Fish Fry


ஏர் ப்ரையர் கிரில் பிஷ்
Air Fryer Grill Fish Fry

சங்கரா மீன் – அரை கிலோ
உப்பு – முக்கால் தேக்கரண்டி
ஆச்சி மீன் ப்ரை மசாலா – ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள்  - ஒரு தேக்கரண்டி
ஆனியன் பொடி – ஒரு தேக்கரண்டி
பூண்டு பொடி – ஒரு தேக்கரண்டி

தேங்காய் எண்ணை – தேவையான அளவு



செய்முறை

 மீனை கழுவி சுத்தம் செய்து அங்காங்கே குறுக்காக கீறி விடவும் ( மசாலா நன்கு மீனுக்கு செல்ல) 10 நிமிடம் ஊறவைக்கவும்.
ஏர் ப்ரையரை ஆன் செய்து 16 நிமிடத்துக்கு செட் செய்து தேங்காய் எண்ணையை மீனின் மேலே முழுவதும் படுமாறு பரவலாக ஊற்றி விடவும்.
ஒரு பக்கம் 8 நிமிடம் கிரில் ஆனதும் , திருப்பி போட்டு மறுபக்கம் தேங்காய் எண்ணை தடவி 8 நிமிடம் கிரில் செய்யவும்.
இருபுறமும் மொருகலாக கிரில் ஆகி அருமையாக இருக்கும்.
ரொம்ப ஈசியான ஏர் ப்ரையர் கிரில் ஃபிஷ் ரெடி

 பேலியோ டயட் ரெசிபி, மீன் வறுவல், ஏர் ப்ரையர் ரெசிபி
How to make Air Friyer Fish Fry
Paleo Diet Dinner Recipe

 இந்த ஏர்ப்ரையரில் சிக்கன் மற்றும் காய்கறிகளுக்கு நடுவில் சுற்றுவது போல் ( கிரைண்டர் சுற்றுவது போல ) ரோலர் இருக்கும் , மீனுக்கு மட்டும் அதை எடுத்து வைத்து விட்டு தவ்வா போல அப்படியே இரண்டு பக்கமும் வைத்து டைம் செட் பண்ணால் போதும்/

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, May 6, 2014

சங்கரா மீன் சால்னா



மீன் வகைகளில் எனக்கு மிகவும் பிடித்த மீன் சங்கரா மீன் தான்..

Red Snapper Kuzambu


தேவையான பொருட்கள்


சங்கரா மீன் - அரைகிலோ

அரைக்க
வெங்காயம் - 2
பழுத்த தக்காளி - 3

தாளிக்க

எண்ணை - 5 ஸ்பூன்
கடுகு - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
பூண்டு - 4 பல்  (தட்டியது)
வெங்காயம் பொடியாக அரிந்தது - சிறியது ஒன்று


பச்சமிளகாய் - 1
கொத்துமல்லி தழை  - சிறிது

கட்டியாக கரைத்த புளி - ஒரு கப்

தேங்காய் - 3 பத்தை அரைத்தது (அ) தேங்காய் பவுடர் - 3 தேக்கரண்டி


மிளகாய் தூள் - 1  தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒன்னறை ஸ்பூன் ( அ) தேவைக்கு




செய்முறை 

மீனை சுத்தம் செய்து கழுவி வைக்கவும்

வெங்காயம் தக்காளியை அரைத்து வைக்கவும்.

வாயகன்ற சட்டியை காயவைத்து அதில் எண்ணை ஊற்றி கடுகு கருவேப்பிலை, பூண்டு சேர்த்து தாளித்து வெங்காயம்  பச்சமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு அரைத்து வைத்த வெங்காயம் தக்காளியை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

அனைத்து தூள் வகைகளையும்  ( மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், உப்பு தூள் சேர்த்து மசாலா வாடை போகும் வரை வதக்கவும்.

பிறகு கரைத்து வைத்த புளியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
கடைசியாக தேங்காய பவுடரை வெண்ணீரில் கரைத்து ஊற்றி சிறிது நேரம் கொதிக்க வைத்து கழுவி வைத்துள்ள மீனை போட்டு 5 வேகவைத்து இரக்கவும்.

கொத்துமல்லி தழை தூவி , ப்ளைன் சாதம் , மற்றும் சங்காரா மீன் வறுவலுடன் பரிமாறவும்.

கவனிக்க: இதை அதிக நேரம் வேகவிட்டால் மீன் உடைந்து சால்னா முழுவதும் முள்ளாகிவிடும். மீனை போட்டதும் கரண்டி வைத்து அடிக்கடி கிளறக்கூடாது, துணி கொண்டு சட்டியை பிடித்து லேசாகா சுழற்றி விடனும்.

இதில் இருக்கும் ஒரு இனிப்புதன்மை எனக்கு ரொம்ப பிடிக்கும். சங்கரா மீன் வறுத்தத்தும் குழந்தைகளுக்கு முள்ளில்லாமல் எடுத்து வைத்து கொடுத்தால் ஈசியாக சாப்பிடுவார்கள். ரொம்ப ஷாப்டாக இருக்கும், குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகும்.

டிப்ஸ்: முள்ளு மீன் சாப்பிடும் போது நல்ல வெளிச்சத்தில் உட்கார்ந்து சாப்பிடுங்கள் , இந்த மீனுக்குன்னு தனியாக ஒரு சிறிய தட்டில் வைத்து சாப்பிட்டாலும் நல்லது இல்லை என்றால் சாதத்துடன் மீன் முள் கலந்து தொண்டையில் முள் குத்தி விடும். சாப்பிடும் போது பேசி கொண்டே சாப்பிடாதீர்கள்.

சங்கரா மீன் டிக்கா ஃப்ரை 



சால்னா/கிரேவி
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, April 1, 2014

சிறப்பு விருந்தினர் பதிவு - சங்கரா மீன் வறுவல் - ஷாமா நாகராஜன்






பாரம்பரிய சமையலுடன் சிறப்பு விருந்தினராக அறிமுக படுத்தபடுவர் இன்று  திருமதி ஷாமா நாகராஜன்.
ஷாமாவை வலை உலகிற்கு வந்த பிறகு தான் தெரியும் , என் ஆங்கில வலைப்பூவில் என் குறிப்புகளுக்கு கருத்து தெரிவிப்பார்கள். 
அவர்கள் வலைப்பூவில் குழந்தைகளோடு குழந்தையாக அவர்களும் சேர்ந்து தயாரித்து மிக சுலபமான வரைபடங்கள், வாழ்த்து அட்டைகள், பண்டிகை கால வாழ்த்து அட்டைகள்,  கைவேலைபாடுகள் எல்லாவற்றையும் செய்து  இந்த பிளாக்கில் பகிர்ந்துள்ளார்கள். பள்ளொ விடுமுறையில் உங்க வீட்டு வாண்டுகளை சமாளிக்க 
கீழே உள்ள லின்கில் சென்று அவர்களுக்கு சொல்லி கொடுங்கள். 
http://myhandicraftscollection.blogspot.ae/





சமையலில் அதிக ஆர்வம் புது புதுவகையான சமையலை அவர்கள் குழந்தைககளுக்காக முயற்சிப்பதை இங்கு பகிர்ந்துவருகிறார்கள். 500 க்கும் மேற்பட்ட சைவம் , மற்றும் அசைவ சமையல் குறிப்புகள் இங்கு குவிந்துள்ளன.
http://www.easy2cookrecipes.blogspot.ae/2014/03/dry-fruits-curry.html
சமையலில் தூள்வகைகளை அப்படியே சேர்த்து செய்வதைவிட அரைத்து செய்யும் வகைகளுக்கு ருசி அதிகம். பாரம்பரிய சிறப்பு விருந்தினர் பதிவில் ஷாமா நாகராஜன் அவர்கள் பாட்டியின் மீன் வறுவலை நம்முடன் இங்கு பகிர்ந்து இருக்கிறார்கள்.


இதே போல் பாரம்பரிய குறிப்பான கருப்பட்டி ஆப்பம் நானும் செய்து பார்த்துள்ளேன் மிக அருமை.,
***************************************


I am Shama Nagarajan from Madurai ...After marriage settled in Hyderabad , a happy small family with two lovely kids . I started experimenting on new recipes to gain mu kids interest for their food . I have a passion for cooking and crafting ....I own two blogs for cooking Easy2Cook Recipes and for crafts Colourful Imaginations: www.myhandicraftscollection.blogspot.com .

 Earlier worked as a HR in a private concern  and gave up the job for my kids . At present a happy home maker . 

I am delighted to be a guest on Jaleela akka's Samayal Attakasam . She have such a wonderful collection of recipes for all ages. I love her simple way of explaining the recipes and humble approach with the fellow bloggers.She is an energetic blogger
************************************


.I am here to share an authentic ,my grandmother's signature fish fry. 
Red Spapper Fry. 

 சங்கரா மீன் வறுவல்
தேவையான பொருட்கள்: 

சங்கரா மீன் / சிவப்பு ஸ்நாப்பர் - 500 கிராம் 
உப்பு   - தேவைக்கு
தயிர்  -  1tspn
எண்ணை - பொரிக்க தேவையான அளவு

அரைக்க: 

காய்ந்த மிளகாய் - 10 -15 
மிளகு - 1 தேக்கரண்டி 
கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி 
பெருஞ்சீரகம்  - 1 தேக்கரண்டி 
சீரகம் - 1 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி 
பூண்டு - 2 
இஞ்சி - ஒரு சிறிய துண்டு 

செய்முறை: 


  1. மீனை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
  2. அரைக்க கொடுத்துள்ள மசாலாக்களை மையாக அரைக்க்கவும்.
  3. அரைத்த மசாலாஉடன் தயிர் / மோா் ஒரு தேக்கரண்டி சேர்த்து மீனை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.   
  4.  பின் கடாயில் அளவான எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக பொறிக்க வேண்டும். சுவையான மீன் வறுவல் ரெடி.
Sankara Meen varuval 


INGREDIENTS: 
Sankara / Red Snapper - 500 gms

Salt to taste
oil - Required qty
curd - 1 tsp

To grind : 

Red Chillies - 10 -15
Pepper - 1 tsp
Coriander seeds - 1 tsp
Fennel seeds - 1 tsp
Jeera - 1 tsp
Turmeric powder - 1 tsp
Garlic cloves - 2 
Ginger - a small piece


METHOD OF PREPARATION :


1 . Marinate the fish with the grinded masala and keep it aside for 1 hour. with a tsp of curd/butter milk.

2. Shallow fry the fish  in a pan till golden brown ..


ஷாமாவின் சமையலறை டிப்ஸ்:


1. தோசை நல்ல மொரு மொருப்பாக வர


இட்லி அரிசி – 6 கப்
உளுந்து  - ஒரு கப்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்

மேற்கண்டவைகளை ஊற வைத்து அரைக்கும் போது இரண்டு கைப்பிடி அவல் சேர்ர்த்து அரைக்கவம், இப்படி அரைத்து  தோசை சுட்டால் மொருகலாக வரும்.
மாவு அரைக்கும் போது முதலில் உளுந்தை அரைத்து விட்டு பிறகு அரிசியை அரைக்க வேண்டும். நன்கு கையால் கலக்கி பிறகு உப்பு சேர்த்து புளிக்க வைக்கவும். மாவு புளித்த்தும் இரண்டு பாகமாக பிரித்து முதலில் ஒரு பாகத்தை சமைக்கவும். பிறகு தேவைக்கு பயன் படுத்தவும். கரண்டி போட்டு கலக்கி பயன்  படுத்திய மாவு சீக்கிரமாக ரொம்ப புளிப்பு தன்மையாக இருக்கும்.பாதிமாவை எடுத்து வைப்ப்தால் பிறகு தேவைக்கு பயன் படுத்தி கொள்ளலாம்.

2. குழம்பில் புளிப்பு சுவை அதிகமாகிவிட்டால் கொஞ்சம் , மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
3.குழம்பு மிகவும் காரமாகி விட்டால் தக்காளியை பிழிந்து சேர்த்து கொதிக்க விடவும்.
கடாய் மற்றும் சமைக்கும் பாத்திரத்தில் உள்ள பிசு பிசுப்பை நீக்க பாத்திரத்தை வெண்ணீர் வைத்து கழுவ்வும்.
4.புதினா , கொத்துமல்லி , கருவேப்பிலை, பச்ச மிளகாய் ஃப்ரஷாக இருக்க அதன் காம்புகளை பிரித்து தனித்தனியாக கவரில் போட்டு பிரிட்ஜில் வைக்க்வும்.
5.பருப்புசிலி செய்ய ரொம்ப நேரம் கடாயில் கிளறும் போது கை வலி ஏற்படலாம் அதை தவிர்க்க இட்லி பானையில் வைத்து அவித்து செய்தால் சுலபமாக கிளறிவிடலாம்.




Special Guest Post with Traditional Food






அறுசுவை தோழிகள், தமிழ் குடும்ப தோழிகள்,முக நூல் தோழியர்கள் வலை உலக தோழ தோழியர்கள் மற்றும் இதை பதிவை பார்ப்பவர்கள் யாருக்கும் விரும்பம் உள்ளவர்கள் உங்கள் ஊரின் பாரம்பரிய சமையல் குறிப்புகளை என்னுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்ன குறிப்பாக இருந்தாலும், அதாவது டிபன் வகை, மதிய உணவிற்கு செய்யும் கறி வகைகள், மாலை நேர சிற்றுண்டி மற்றும் இரவு சாப்பாடு வகைகள்.குழந்தைகளுக்கு செய்யும் உணவு, கர்பிணி பெண்களுக்கான உணவு, பூப்பெய்திய பெண்களுக்கான உணவு, பிள்ளை பெற்றவர்களின் பத்திய உணவு, திருமணத்தில் செய்யும் முக்கிய வகை உணவு, விஷேச நாட்களில் செய்யும் பலகாரம்மற்றும் பல.....வகைகளை அனுப்பலாம்.. 

விருப்பம் உள்ளவர்கள்  இங்கு கீழே என் பதிவின் கீழ் கருத்து தெரிவிக்கலாம்  அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள என் முகவரிக்கு மெயில்  அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.


feedbackjaleela@gmail.com or cookbookjaleela@gmail.com

சமையல் அட்டகாங்கள் முக நூல் பேஜ்

சென்னை ப்ளாசா முகநூல் பேஜ்

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, January 19, 2014

சங்கரா மீன் தலை சூப்/ரசம் - Red Snapper Soup




சங்கரா மீன் தலை சூப்/ரசம்
Red Snapper Soup - Step by Step
மீன் வாங்கினால் நல்ல உப்பு, புளி, காரமாக சுல்லுன்னு சால்னா மற்றும் ஃப்ரை என்று செய்வேன்.

இப்ப இங்கு குளிர் அதிகமாக இருப்பதால் சங்கரா மீன் தலை சூப் செய்துள்ளேன். இது கடுஞ்சளி பிடித்து இருந்தால் இது போல் சூப் வகைகளை சாப்பிட்டால் கொஞ்சம் குணமாகும்.

முக்கியமாக இது பிள்ளை பெற்றவர்களுக்கு , பிரசவம் ஆனதும் 40 நாட்கள் மதியவேலைகளில் மட்டன் போன் சூப், சிக்கன் போன் சூப் என்று செய்து கொடுப்போம், ஒரே அதையே சாப்பிட்டு சலித்து போய்விடும் அதுக்கு  தான் இடையில் சங்கரா மீன் , காரப்பொடி மீன் சூப் என்று செய்து கொடுப்போம்.
இதை குடித்தால் தாய் மார்களுக்கு நன்கு பால் சுரக்கும்..

இதை அறுசுவை டாட் காமில் 2008  காரப்பொடி மிளகு சூப். குழம்பு என கொடுத்துள்ளேன்,கைவசம் காரப்பொடி மீன் இல்லை ஆகையால் சங்கராமீன் தலையில் செய்துள்ளேன்.


மொத்தம் மூன்று பெரிய சங்கரா மீன் தலையை சூப் வைத்து விட்டு மிதியல் துண்டுகளாக போட்டுமசலா தடவி பொரித்து கொள்ளலாம்.

    பரிமாறும் அளவு : முன்று நபர்களுக்கு

  • தேவையானவை
  • சங்கரா மீன் தலை  - மூன்று


  • வேக வைக்க:
  • வெங்காயம் - ஒன்று
    தக்காளி - அரை
    மிளகு தூள் - அரை தேக்கரண்டி
    தனியா துள் - ஒரு தேகரண்டி
    சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய்ப்பால் - அரை டம்ளர்
    இஞ்சி பூண்டு - கால் தேக்கரண்டி


  • தாளிக்க:


  • நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
  • நெய் - அரை தேக்கரண்டி 
    கடுகு - கால் தேக்கரண்டி
    பூண்டு - நான்கு பல் (தட்டிக்கொள்ளவும்)
    சின்ன வெங்காயம் - 5
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு




  • காரப்பொடி மீனை சுத்தம் செய்து கொள்ளவும். அதில் வேகவைக்க வேண்டியவைகளை போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் பத்து நிமிடம் வேக விடவும். மூடி போட்டால் பொங்கும் லேசாக மூடி வைக்கவும்.



  • பிறகு  தாளிக்க வேண்டியவைகளை ஒன்று சேர்த்து லேசாக ஒன்றும் பாதியுமாக தட்டி  தாளித்து குழம்பில் கொட்டவும்.


  • சுவையான சங்கரா மீன் சூப்/ரசம்  தயார்.
  • குறிப்பு: சின்ன வெங்காயத்துக்குபதில் பெரிய வெங்காயமும் சேர்த்துகொள்ளலாம், சளி தொல்லைக்கு சின்ன வெங்காயத்தை நெயில் வறுத்து சாப்பிடலாம், அதற்காக இப்ப நான் தாளிக்கும் போது சின்ன வெங்காயத்தை தட்டி தாளிப்பது ருசியும் மிக அருமையாக இருக்கும்.

 மற்றொரு முறை குழந்தைகளுக்காக 
Red Snapper Soup. For kids

மீன் கொதிக்கும் போது மீனை நன்கு உடைத்து விட்டு வேகவைக்கவும்.

வெந்து இரக்கும் சமையம் நன்கு கரண்டியால்மசித்து பெரிய துளை உள்ள வடிகட்டியில் வடிக்கவும். பிறகு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.



 மீன் முள்ளுடன் சாப்பிடும் போது நல்ல வெளிச்சமான இடத்தில் பொறுமையாக முள் எடுத்து சாப்பிடனும் இல்லை என்றால் தொண்டையில் சிக்கி விபரீதமாகிவிடும்.
இந்த டிப்ஸையும் பாருங்கள்  - தொண்டையில் முள் குத்தி விட்டால் .அபாயம்

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, December 7, 2013

சங்கரா மீன் டிக்கா ஃப்ரை - Red Snapper Tikka Fry






மீன் வகைகளிலேயே எனக்கு ரொம்ப பிடித்த மீன் இந்த சங்கரா மீன், ஆனால் முள் பார்த்து சாப்பிடனும்.பள்ளி நாட்களில் லன்ச் பாக்ஸ்க்கு காலை டிபனே தான் பெரும்பாலும் கொண்டு செல்வோம். ஆனால் மாலை வரும் போது என் அம்மா வாரம் ஒரு முறை எனக்கு பிடித்த இந்த சங்கரா மீனை வாங்கி சுட சுட பொரித்து கொடுத்து , அந்த சால்னாவாவும் பொரிச்ச மீனும் வைத்து மாலை வந்து சாப்பிட ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா அப்படி இருக்கும். நான் கொஞ்சம் காரம் எல்லாம் குறைவாக தான் செய்வேன். ஆனால் எங்கம்மா சும்மா சுல்லுன்னு காரம் சாரமாக , உப்பு உரப்பா, புளிப்பு சுவை நாவில் ஸ்ஸ்ஸ் அப்படி தட்டும் அப்படி செய்வார்கள். ஏன்ன்னா இப்படி செய்தால் தான் எங்க டாடிக்கு பிடிக்கும்.எங்க டாடி இத சாப்பிட்டு முடித்ததும் வேர்கடலை உருண்டை சாப்பிடுவது வழக்கம். நாங்களும் சாப்பிடுவோம் ,இன்னும் இப்ப கூட எனக்கு மீன் சாப்பிட்டால் கண்டிப்பாக வேர்கடலை பர்பியோ அல்லது உருண்டையோ சாப்பிடும் பழக்கம் எனக்கும் உண்டு.

தேவையானவை

சங்கரா மீன் ‍ அரை கிலோ
சிவப்பு மிளகாய் தூள் ‍ 1 தேக்கரண்டி
ஷான் சிக்கன் டிக்கா மசாலா ‍ ஒரு மேசை கரண்டி
லெமன் சாறு  ‍ ‍ஒரு தேக்கரண்டி
தயிர் ‍ ஒரு தேக்கரண்டி
கார்ன் ப்ளார் பவுடர் ‍ ஒரு தேக்கரண்டி
உப்பு ‍ தேவைக்கு
பொடியாக நறுக்கிய கொத்து மல்லி தழை சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் ‍ ஓன்னறை தேக்கரண்டி

அலங்கரிக்க‌
கொத்துமல்லி தழை

செய்முறை
சங்கரா மீனை கழுவி தலையை ஆய்ந்து எடுக்காமல் வயிற்று பகுதியில் உள்ள அழுக்கை மட்டும் கத்தி கொண்டு கீறி எடுக்கவும்.

சைடில் உள்ள முள், மேலே உள்ள சராம்பல் எல்லாம் கத்திரி கொண்டு வெட்டி எடுக்கவும்.

சைடில் நன்கு ஆழமாக இருபுறமும் கீறி விடவும்.அப்போது தான் மசாலா உள்ளே வரை செல்லும்.



சங்காரா மீன் டிக்கா ஃப்ரை - Red Snapper Tikka Fry

மீனை மஞ்சள் தூள் போட்டு நன்கு பிரட்டி 5 நிமிடம் ஊறவைத்து நன்கு கழுவி எடுக்கவும்.

மீனுக்கு போட வேண்டிய மசாலாக்களை ஒரு சின்ன கிண்ணத்தில் சிறிது தண்ணீர்விட்டு கலக்கி வைக்கவும்.

மீனை நன்கு கழுவி தண்ணீரை வடித்து.  
கலக்கிய மசாலாவை மீனுடன் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கி மீனை போட்டு அதன் மேல் ஒரு முடியை போட்டு மூடி நன்கு குலுக்கவும். மசாலா மீனின் எல்லா பகுதியிலும் ஒரு சேர சேர்ந்து இருக்கும். மசாலாக்கள் போட்டு பிரட்டியதும் ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

நான் ஸ்டிக் பேனில் எண்ணையை ஊற்றி சூடு படுத்தி மீனை போட்டு நன்கு பொன்னிறமாக கருகாமல் பொரியவிடவும்.
சூப்பரான சுவையான சங்கரா மீன் ஃப்ரை ரெடி,

சைட் டிஸ்ஸாகவும் சாப்பிடலாம். ஸ்டாட்டராகவும் சாப்பிடலாம்.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/