பாரம்பரிய சமையலுடன் சிறப்பு விருந்தினராக அறிமுக படுத்தபடுவர் இன்று திருமதி ஷாமா நாகராஜன்.
ஷாமாவை வலை உலகிற்கு வந்த பிறகு தான் தெரியும் , என் ஆங்கில வலைப்பூவில் என் குறிப்புகளுக்கு கருத்து தெரிவிப்பார்கள்.
அவர்கள் வலைப்பூவில் குழந்தைகளோடு குழந்தையாக அவர்களும் சேர்ந்து தயாரித்து மிக சுலபமான வரைபடங்கள், வாழ்த்து அட்டைகள், பண்டிகை கால வாழ்த்து அட்டைகள், கைவேலைபாடுகள் எல்லாவற்றையும் செய்து இந்த பிளாக்கில் பகிர்ந்துள்ளார்கள். பள்ளொ விடுமுறையில் உங்க வீட்டு வாண்டுகளை சமாளிக்க
கீழே உள்ள லின்கில் சென்று அவர்களுக்கு சொல்லி கொடுங்கள்.
கீழே உள்ள லின்கில் சென்று அவர்களுக்கு சொல்லி கொடுங்கள்.
சமையலில் அதிக ஆர்வம் புது புதுவகையான சமையலை அவர்கள் குழந்தைககளுக்காக முயற்சிப்பதை இங்கு பகிர்ந்துவருகிறார்கள். 500 க்கும் மேற்பட்ட சைவம் , மற்றும் அசைவ சமையல் குறிப்புகள் இங்கு குவிந்துள்ளன.
http://www.easy2cookrecipes.blogspot.ae/2014/03/dry-fruits-curry.htmlசமையலில் தூள்வகைகளை அப்படியே சேர்த்து செய்வதைவிட அரைத்து செய்யும் வகைகளுக்கு ருசி அதிகம். பாரம்பரிய சிறப்பு விருந்தினர் பதிவில் ஷாமா நாகராஜன் அவர்கள் பாட்டியின் மீன் வறுவலை நம்முடன் இங்கு பகிர்ந்து இருக்கிறார்கள்.
இதே போல் பாரம்பரிய குறிப்பான கருப்பட்டி ஆப்பம் நானும் செய்து பார்த்துள்ளேன் மிக அருமை.,
***************************************
I am Shama
Nagarajan from Madurai ...After marriage settled in Hyderabad , a happy small
family with two lovely kids . I started experimenting on new recipes to gain mu
kids interest for their food . I have a passion for cooking and crafting ....I
own two blogs for cooking Easy2Cook Recipes and for crafts Colourful
Imaginations: www.myhandicraftscollection.blogspot.com .
Earlier worked as a HR in a private concern and gave up the job for my
kids . At present a happy home maker .
************************************
.I am here to share an authentic ,my grandmother's signature fish fry.
Red Spapper Fry.
சங்கரா மீன் வறுவல்
தேவையான பொருட்கள்:
சங்கரா மீன் / சிவப்பு ஸ்நாப்பர் - 500 கிராம்
உப்பு - தேவைக்கு
தயிர் - 1tspn
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
அரைக்க:
காய்ந்த மிளகாய் - 10 -15
மிளகு - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
பூண்டு - 2
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
செய்முறை:
- மீனை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
- அரைக்க கொடுத்துள்ள மசாலாக்களை மையாக அரைக்க்கவும்.
- அரைத்த மசாலாஉடன் தயிர் / மோா் ஒரு தேக்கரண்டி சேர்த்து மீனை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- பின் கடாயில் அளவான எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக பொறிக்க வேண்டும். சுவையான மீன் வறுவல் ரெடி.
Sankara Meen varuval
INGREDIENTS:
Sankara / Red Snapper - 500 gms
Salt to taste
oil - Required qty
curd - 1 tsp
To grind :
Red Chillies - 10 -15
Pepper - 1 tsp
Coriander seeds - 1 tsp
Fennel seeds - 1 tsp
Jeera - 1 tsp
Turmeric powder - 1 tsp
Garlic cloves - 2
Ginger - a small piece
METHOD OF PREPARATION :
1 . Marinate the fish with the grinded masala and keep it aside for 1 hour. with a tsp of curd/butter milk.
2. Shallow fry the fish in a pan till golden brown ..
ஷாமாவின் சமையலறை டிப்ஸ்:
1. தோசை நல்ல மொரு மொருப்பாக வர
இட்லி அரிசி – 6 கப்
உளுந்து - ஒரு கப்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
மேற்கண்டவைகளை ஊற வைத்து அரைக்கும் போது இரண்டு கைப்பிடி அவல் சேர்ர்த்து அரைக்கவம், இப்படி அரைத்து தோசை சுட்டால் மொருகலாக வரும்.
மாவு அரைக்கும் போது முதலில் உளுந்தை அரைத்து விட்டு பிறகு அரிசியை அரைக்க வேண்டும். நன்கு கையால் கலக்கி பிறகு உப்பு சேர்த்து புளிக்க வைக்கவும். மாவு புளித்த்தும் இரண்டு பாகமாக பிரித்து முதலில் ஒரு பாகத்தை சமைக்கவும்.
பிறகு தேவைக்கு பயன் படுத்தவும். கரண்டி போட்டு கலக்கி பயன் படுத்திய மாவு சீக்கிரமாக ரொம்ப புளிப்பு தன்மையாக
இருக்கும்.பாதிமாவை எடுத்து வைப்ப்தால் பிறகு தேவைக்கு பயன் படுத்தி கொள்ளலாம்.
2. குழம்பில் புளிப்பு சுவை அதிகமாகிவிட்டால் கொஞ்சம்
, மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
3.குழம்பு மிகவும் காரமாகி விட்டால் தக்காளியை பிழிந்து
சேர்த்து கொதிக்க விடவும்.
கடாய் மற்றும்
சமைக்கும் பாத்திரத்தில் உள்ள பிசு பிசுப்பை நீக்க பாத்திரத்தை வெண்ணீர் வைத்து கழுவ்வும்.
4.புதினா , கொத்துமல்லி
, கருவேப்பிலை, பச்ச மிளகாய் ஃப்ரஷாக இருக்க அதன் காம்புகளை பிரித்து தனித்தனியாக கவரில்
போட்டு பிரிட்ஜில் வைக்க்வும்.
5.பருப்புசிலி செய்ய
ரொம்ப நேரம் கடாயில் கிளறும் போது கை வலி ஏற்படலாம் அதை தவிர்க்க இட்லி பானையில் வைத்து
அவித்து செய்தால் சுலபமாக கிளறிவிடலாம்.
Special Guest Post with Traditional Food
அறுசுவை தோழிகள், தமிழ் குடும்ப தோழிகள்,முக நூல் தோழியர்கள் வலை உலக தோழ தோழியர்கள் மற்றும் இதை பதிவை பார்ப்பவர்கள் யாருக்கும் விரும்பம் உள்ளவர்கள் உங்கள் ஊரின் பாரம்பரிய சமையல் குறிப்புகளை என்னுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்ன குறிப்பாக இருந்தாலும், அதாவது டிபன் வகை, மதிய உணவிற்கு செய்யும் கறி வகைகள், மாலை நேர சிற்றுண்டி மற்றும் இரவு சாப்பாடு வகைகள்.குழந்தைகளுக்கு செய்யும் உணவு, கர்பிணி பெண்களுக்கான உணவு, பூப்பெய்திய பெண்களுக்கான உணவு, பிள்ளை பெற்றவர்களின் பத்திய உணவு, திருமணத்தில் செய்யும் முக்கிய வகை உணவு, விஷேச நாட்களில் செய்யும் பலகாரம்மற்றும் பல.....வகைகளை அனுப்பலாம்..
விருப்பம் உள்ளவர்கள் இங்கு கீழே என் பதிவின் கீழ் கருத்து தெரிவிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள என் முகவரிக்கு மெயில் அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.
feedbackjaleela@gmail.com or cookbookjaleela@gmail.com
சென்னை ப்ளாசா முகநூல் பேஜ்
Tweet | ||||||
6 கருத்துகள்:
நல்வாழ்த்துக்கள் ஷாமா & ஜலீலா.மிக அருமை. சூப்பர். இப்பவே இந்த மசாலா சேர்த்து ஃபிஷ் ஃப்ரை செய்ய ஆசை வருது.
இருவருக்கும் வாழ்த்துக்கள் அக்கா.
சங்கரா மீன் வறுவலில் இந்த மசாலா சேர்த்து செய்து பார்க்க வேண்டும்...
வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... நன்றி சகோதரி...
Very delicious Fish Fry...Mouthwatering.Happy to see your recipe in this amazing space shama... Good tips too.. Good luck both of you :)
Thank you akka...happy to be here
Nice Blog. IF you want your blog will look like my http://bestsamayalsecret.blogspot.com.
contact me . I am a blog designer an also doing google adsense.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா