ஹனி சிக்கன் ஃப்ரை /தேன் சிக்கன் வறுவல்
Chicken Fry with Honey
தேன் சிக்கன் வறுவல்
தேவையான பொருட்கள்
சிக்கன் – 500 கிராம்
மிளகாய் தூள் – 11/2 தேக்கரண்டி
கார்லிக் சில்லி டொமோட்டோ கெட்சப் – ஒரு மேசை கரண்டி
தேன் – ஒரு மேசை கரண்டி
உப்பு – ஒன்னறை தேக்கரண்டி
மைதா – ஒரு மேசை கரண்டி
கார்ன்ப்ளார் மாவு - ஒரு மேசைகரண்டி
முட்டை வெள்ளை கரு - ஒன்று
ரெட் கலர் பொடி – சிறிது
சோயா சாஸ் – ஒரு தேக்கரண்டி
எண்ணை – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
சிக்கனை வினிகர் சேர்த்து நன்றாக சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.
மிள்காய் தூள், உப்பு, கார்லிக் சில்லி டொமேட்டோ கெட்சப்,தேன், மைதா, கார்ன் மாவு, சோயா சாஸ், முட்டை வெள்ளை கரு,ரெட் கலர் பொடி அனைத்து மசாலாக்களையும் ஒன்றாக சிக்கனில் சேர்த்து பிறட்டி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஒருவாயகன்ற வானலியில் எண்ணை ஊற்றி காயவைத்து ஊறிய சிக்கன் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இது கிரிஸ்பியாக இருக்காது நல்ல மெத்துன்னு ஷாப்டாக இருக்கும். ஹோட்டலில் சாப்பிடுவது போல் இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சில்லி கார்லிக் கெட்சப் கிடைக்கவில்லை என்றால் சாதாராண கெட்சப்புடன் முன்று பல் பூண்டு மற்றும் முழு சிவப்பு மிளகாய் இரண்டு சேர்த்து நன்கு அரைத்து சேர்க்கவும்.
இதை எலும்புடன் கூடிய துண்டுகள் அல்லது எலும்பில்லாத துண்டுகளிலும் செய்யலாம்.
ஆக்கம்
ஜலீலாகமால்
துபாய்.
Tweet | ||||||
9 கருத்துகள்:
தேனை சேர்த்துக் கொள்வது புதிய முறை தான்...
செய்து பார்ப்போம்... நன்றி சகோதரி...
செய்து பார்த்துட்டேன்,சூப்பர் அக்கா.
செய்து பார்த்துட்டேன்,சூப்பர் அக்கா.
நான் செய்யல.அம்மா செய்து கொடுத்தாங்க.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி தனபாலன் சார்
இது நான் புதிதாக முயற்சித்தது..
வாங்க பாலாஜி வருகைக்கு மிக்க நன்றி
செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு ரொம்ப சந்தோஷம்
புதியவகை சிக்கன் குறிப்பு.
தேன் சிக்கன் வருவல் யாராவது செய்து கொடுத்தால் சாப்பிட்டுப் பார்க்கலாம் அக்கா.
புதுசாக இருக்கு.அருமை.
புது விதமாக இருக்கிறது.ஒருநாள் அவசியம் தேன் சிக்கன் செய்து பார்த்து விடவேண்டும்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா