Sunday, April 27, 2014

புட்டு பால்ஸ்/லட்டு (குழந்தைகளுக்கு) - Puttu Laddu



புட்டு உருண்டை, புட்டு லட்டு, புட்டு பால்ஸ்


தினம் குழந்தைகளை சாப்பிட வைக்க என்ன டிபன் செய்வது என்று கவலை படும் தாய்மார்களுக்கும் இதோ ஈசியான புட்டு பால்ஸ் தயாரித்து கொடுங்கள். இதை அரிசி, ராகி ( கேழ்வரகு), ரவை போன்ற வற்றிலும் தயாரிக்கலாம்.

பிள்ளைகள் சாப்பிடும் அளவை பொருத்து சின்ன சின்ன தாக உருண்டை பிடித்து வையுங்கள்.,



தேவையானவை
சிகப்பரிசி அல்லது பச்சரிசி  புட்டு மாவு –  ஒரு கப்

தேங்காய் துருவல்  - அரை கப்
சர்க்கரை – அரை கப்
நெய் – இரண்டு தேக்கரண்டி


செய்முறைஒரு டம்ளர் தண்ணீரில் சிட்டிக்கை உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தெளித்து உதிரியாக மாவை விறவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு இட்லி பானையில் ஈர துணியை விரித்து மாவை கட்டி யில்லாமல் உதிரியாக வைத்து 15 நிமிட அவித்து எடுக்கவும்.

வாயகன்ற பேசினில் வெந்த புட்டு மாவை கொட்டி அதில் சர்க்கரை , தேங்காய் பூ உருக்கிய நெய் , வாழை பழம் சேர்த்து விரவி உருண்டைகளாக பிடித்து தேவைக்கு மேலே தேங்காய் பூ தூவவும்.


குழந்தைகளுக்கு இப்படி ஈசியாக உருண்டை பிடித்து வைத்தால் சாப்பிட இலகுவாக இருக்கும்.

பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு, ஆபிஸ்க்கு டிபனுக்கு இப்படி செய்து எடுத்து சென்றால் நோகமாக ஒரு ஸ்பூனை போட்டு சாப்பிடலாம். 


ஆனால் இந்த புட்டு கை கொண்டு விரவி வைப்பதால் காலை செய்தால் 10 , 11 மணிக்குள் சாப்பிட்டு முடித்து விடவேண்டும்.

ஆபிஸ் செல்லும் தாய் மார்களுக்கும் இப்படி செய்து கொடுப்பது பிள்ளைகளுக்கு நிமிஷத்தில் 4 உருண்டையை ஊட்டி விடலாம்.

**************************


சமையல் அட்டகாசம் முக நூல் பேஜ் 999 லைக்ஸ் ஐ எட்டி உள்ளது,
நான் இது வரை யார் லைக் பண்ணாங்க . 500 ,  600 ன்னு பார்த்தில்லை.

திடீருன்னும் இன்று பார்த்ததும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை/


இங்கு ஒரு நாளைக்கு 1500 நபர்கள் வந்து என் தளத்தை பார்வையிடுகிறீர்கள்.

ஆனால் யாரும்கருத்து தெரிவிக்க வருவதில்லை . இங்கு இல்லை என்றாலும் என் முக நூல் பேஜில் இங்குள்ள குறிப்புகளை பயனடைந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாமே நானும் மிகவும் சந்தோஷப்படுவேன்.

தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் தோழ தோழியர்களுக்கும் என் நன்றிகள்.


அப்படியே எங்க கடை சென்னை ப்ளாசா முக நூல் பேஜுக்கும் லைக் கொடுத்து எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கள்



சென்னை ப்ளாசா முக நூல் பேஜ்   -  லைக்  பண்ணுங்கோ ///

சென்னை ப்ளாசா வெப்சைட்   - 1

சென்னை ப்ளசா வெப்சைட் - 2 

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

12 கருத்துகள்:

Vysyas recipes said...

Healthy and tasty balls.

Vysyas recipes said...

Healthy and tasty balls.

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களுடன் செய்முறை விளக்கங்களுக்கு நன்றி சகோதரி.... இன்றே செய்து பார்க்கிறோம்...

கோமதி அரசு said...

மிக நன்றாக இருக்கிறது புட்டு லட்டு.
உடலுக்கு ஆரோக்கியமான உணவு.
நன்றி ஜலீலா.

enrenrum16 said...

puttu balls naanum seyvathundu.. sarkkarai, milk, banana serthu seyven. urukkiya ney serthu seythu paarkkiren akka insha Allah. pakirvukku nanri.

999 likes kidaiththamaikku vaazhthukkal akka

சாரதா சமையல் said...

புட்டு பால்ஸ்/ லட்டு விளக்கப்படங்களுடன் செய்முறையும் அருமை.

Jaleela Kamal said...

காயத்ரி

தனபாலன் சார்

கோமதி அக்கா

பானு

வருகை தந்தமைக்கு மிக்க நன்றி

Asiya Omar said...

குழந்தைகளுக்கு தகுந்த படி அருமையாக செய்திருக்கீங்க.நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

Very healthy laddu akka

தனிமரம் said...

இனித்தான் செய்து பார்க்க வேண்டும் பகிர்வு நன்றி!

Vikis Kitchen said...

Puttu laddu seems a very nice idea akka. Good for tiffin box, as per your suggestion.

ஸாதிகா said...

புட்டை லட்டாக்கி அட்டகசம் பண்ணிக்கொண்டுள்ளீர்கள்.பேஷ்..பேஷ்..அருமையாக இருக்கும்.சாதாரண புட்டை இப்படி பால்களாக்கி குழந்தைகளி சாப்பிடத்தூண்டும் உங்கள் ஐடியா சூப்பர்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா