Showing posts with label பொட்டுகடலை. Show all posts
Showing posts with label பொட்டுகடலை. Show all posts

Saturday, November 16, 2013

பொட்டு க‌ட‌லை துவைய‌ல்/கெட்டி சட்னி


பொட்டு க‌ட‌லை துவைய‌ல் - How to make Roasted Gram Chutney/ketti satney/கெட்டி சட்னி செய்வது எப்படி?

வயிறுக்கு இதமான சட்னி இட்லி, தோசை, ஆப்பம், பூரி, வடை, பஜ்ஜி, உளுந்து வடை, வெள்ளை கஞ்சி அனைத்துக்கும் பொருந்தும் அருமையான சட்னி.




தேவையான பொருட்கள்

பொட்டு க‌ட‌லை = கைக்கு ஒரு கை பிடி
தேங்காய் ப‌த்தை = இர‌ண்டு
ப‌ச்ச‌மிள‌காய் = ஒன்று
இஞ்சி சிறிய‌ துண்டு
வெங்காய‌ம் = கால் துண்டு
உப்பு = ருசிக்கு தேவையான‌ அள‌வு

செய்முறை

1.முத‌லில் தேங்காய் ப‌த்தை + ப‌ச்ச‌மிள‌காய் பொட்டு க‌ட‌லையை சேர்த்து அரைக்க‌வும்.
2. பாதி அரைந்த‌தும் இஞ்சி + வெங்காயம் + உப்பு சேர்த்து அரைத்து எடுக்க‌வும்.




குறிப்பு:

நோன்பு கால‌த்தில் வெள்ளை க‌ஞ்சி , ம‌சால் வ‌டை, பஜ்ஜி. உளுந்து வடைபொட்டு க‌ட‌லை துவைய‌ல் தொட்டு சாப்பிட‌ இத‌மாக‌ இருக்கும்.
நான் காரம் குறைவாக தான் பயன் படுத்துவேன், காரசாரமாக சாப்பிடுபவர்கள் பச்சமிளகாயின் அளவை கூட்டி கொள்ளவும்.

இதே சட்னியில் இஞ்சிக்கு பதில் பூண்டு சேர்த்தும் அரைக்கலாம்.
கொத்துமல்லி , சிறிது புளி அல்லது எலுமிச்சை சேர்த்தும் அரைக்கலாம்.

பரிமாறும் அளவு - முன்று நபர்களுக்கு
ஆயத்த நேரம் - 3. நிமிடம்
சமைக்கும் நேரம் - 3.நிமிடம்

கொத்துமல்லி பொட்டுகடலை சட்னி



Linking to Gayatri's Walk Through memory lane hosted by Sahasra

அனைவரும் நலமா? ஊருக்கு போய் நல்லபடியாக திரும்பி வந்துவிட்டேன். இது முன்பே போட்டு வைத்து இருந்த குறிப்பு. ஏதும் போஸ்ட் பண்ண முடியல ஊர் ஞாபகமாகவே இருக்கிறது. முடிந்த போது வந்து குறிப்புகளை பகிர்கிறேன்.

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam