பொட்டு கடலை துவையல் - How to make Roasted Gram Chutney/ketti satney/கெட்டி சட்னி செய்வது எப்படி?
வயிறுக்கு இதமான சட்னி இட்லி, தோசை, ஆப்பம், பூரி, வடை, பஜ்ஜி, உளுந்து வடை, வெள்ளை கஞ்சி அனைத்துக்கும் பொருந்தும் அருமையான சட்னி.
தேவையான பொருட்கள்
பொட்டு கடலை = கைக்கு ஒரு கை பிடி
தேங்காய் பத்தை = இரண்டு
பச்சமிளகாய் = ஒன்று
இஞ்சி சிறிய துண்டு
வெங்காயம் = கால் துண்டு
உப்பு = ருசிக்கு தேவையான அளவு
செய்முறை
1.முதலில் தேங்காய் பத்தை + பச்சமிளகாய் பொட்டு கடலையை சேர்த்து அரைக்கவும்.
2. பாதி அரைந்ததும் இஞ்சி + வெங்காயம் + உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
குறிப்பு:
நோன்பு காலத்தில் வெள்ளை கஞ்சி , மசால் வடை, பஜ்ஜி. உளுந்து வடைபொட்டு கடலை துவையல் தொட்டு சாப்பிட இதமாக இருக்கும்.
நான் காரம் குறைவாக தான் பயன் படுத்துவேன், காரசாரமாக சாப்பிடுபவர்கள் பச்சமிளகாயின் அளவை கூட்டி கொள்ளவும்.
இதே சட்னியில் இஞ்சிக்கு பதில் பூண்டு சேர்த்தும் அரைக்கலாம்.
கொத்துமல்லி , சிறிது புளி அல்லது எலுமிச்சை சேர்த்தும் அரைக்கலாம்.
பரிமாறும் அளவு - முன்று நபர்களுக்கு
ஆயத்த நேரம் - 3. நிமிடம்
சமைக்கும் நேரம் - 3.நிமிடம்
கொத்துமல்லி பொட்டுகடலை சட்னி
Linking to Gayatri's Walk Through memory lane hosted by Sahasra
அனைவரும் நலமா? ஊருக்கு போய் நல்லபடியாக திரும்பி வந்துவிட்டேன். இது முன்பே போட்டு வைத்து இருந்த குறிப்பு. ஏதும் போஸ்ட் பண்ண முடியல ஊர் ஞாபகமாகவே இருக்கிறது. முடிந்த போது வந்து குறிப்புகளை பகிர்கிறேன்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam
Tweet | ||||||
6 கருத்துகள்:
அருமையான குறிப்பு. நன்றி.
சூப்பர்.நானும் ஒரு சமயம் இஞ்சி அல்லது பூண்டு மட்டும் சேர்த்து அரைப்பதுண்டு.என் ஃபேவரிட்.
தினம் செய்யும் ஒரு அருமையான ரெஸிப்பி...
அருமையான குறிப்பு.
நல்ல குறிப்பு... :)
Perfect with dosa.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா