Showing posts with label ஸ்டெப் பை ஸ்டெப். Show all posts
Showing posts with label ஸ்டெப் பை ஸ்டெப். Show all posts

Sunday, January 11, 2015

போன்லெஸ் சிக்கன் டிக்கா - Boneless Chicken Tikka



பார்டியில் குழந்தைகளுக்காக சாப்பிட சுலபமாக இது போல் எலும்பில்லாத சிக்கனில் டிக்கா செய்து வைக்கலாம்.

Boneless Chicken Tikka


போன்லெஸ் சிக்கன் டிக்கா
தேவையானவை

எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 200 கிராம்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
ரெட் கலர் பொடி - 2 சிட்டிக்கை
உப்பு அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - முக்கால் தேக்கரண்டி
கடலை மாவு - ஒரு தேக்கரண்டி
சோம்பு  தூள் கால் தேக்கரண்டி
கரம்மசாலா தூள் - கால் தேக்கரண்டி
தயிர் - இரண்டு தேக்கரண்டி 
லெமன் சாறு - ஒரு தேக்கரண்டி
கசூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி

அலங்கரிக்க

வட்டவடிவமாக அரிந்த கேரட்
கொத்துமல்லி தழை







செய்முறை

சிக்கனை கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.

மேலே குறிப்பிட்ட அனைத்து மசலாக்களையும் ஒரு சேர ஒரு பவுளில் கலக்கி சிக்கனுடன் நன்கு பிசறி 10 நிமிடம் ஊறவைக்கவும்


ஒரு வாயகன்ற வானலியில் எண்ணையை காயவைத்து தீயின் தணலை மிதமாக வைத்து ஊறவைத்துள்ள சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்.



.
பொரித்து முடித்ததும் எண்ணையை வடித்து தட்டில் வைத்து அலங்கரித்து பரிமாறவும்

இதே பனீரில் செய்யலாம்

இதே மசாலாவை அமுல் பனீர் கியுப்ஸ் வாங்கி அதை தண்ணீரில் போட்டு கழுவி மேற்கண்ட சிக்கனில் சொல்லி உள்ளபடி மசாலாக்களை பனீரில் சேர்த்து பொரித்து எடுத்து அதே போல் செய்யலாம்.


மற்றொரு முறை 

டூத் பிக்கில் பனீரை சொருகி இரண்டு புறமும் கேப்ஸிகம் சொருகி எண்ணையில் உடையாமல் பக்குவமாக திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும்.

மேலே உள்ள குறிப்பு தான் பனீர் ரெசிபியாக ஃபஜீலாவுக்கு நான் சொல்லி கொடுத்தது. இதோ இந்த சுட்டியை சொடுகி பார்க்கவும்.



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, August 21, 2013

அரபிக் குபூஸ்/குபூஸ் செய்வது எப்படி?/குபூஸ் அரபிக் சப்பாத்தி/How to make Kuboos




அரபிக் குபூஸ் என்பது நாம செய்யும் சப்பாத்தி போல் தான். இது இங்கு துபாயில் எல்லா கடைகளிலும் கிடைக்கும். இதை விலையும் ரொம்ப கம்மி தான்.சிறிய வகை குபூஸில் இருந்து பெரிய குபூஸ் வரை எல்லா டிப்பாட்மெண்ட் ஷாப், குரோசரி கடைகளில் எல்லாம் கிடைக்கும். சமைக்காத நேரம் இதை வாங்கி கொண்டு வெங்காய முட்டையோ அல்லது புல்ஜெய் ஆஃப் பாயிலோ போட்டு சாப்பிடலாம் சுலபமாக வேலை முடியும்.ஆனால் வெளியில் வாங்குவது பிடிக்காததால் நானே செய்து கொடுப்பது. இது முன்பே பகிற எண்ணி எடுத்து வைத்த போட்டோக்கள் இப்போது தான் நேரம் கிடைத்தது,

அரபிகளுக்கு சாப்பாடு இருக்கோ இல்லையோ இந்த குபூஸ் கண்டிப்பாக இருக்கனும். நான் இங்கு வந்த புதிதில் இருந்து  செய்து வருகிறேன். ரொம்ப அருமையாக இருக்கும், முன்று நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம், ரொம்ப சாஃப்டாக இருக்கும், க்டையில் வாங்குவது பிரிட்ஜில் வைத்தால் கடக் முடக் என ஆகிவிடும்.

துபாய் மற்றும் சவுதியில் அரேபியர்கள் உடைய பேமஸான ரொட்டி இந்த குபூஸ். இந்தகுபூஸ் இல்லாமல் அவர்களுக்கு சாப்பாடு கிடையாது. எல்லா வகையான சாண்ட் விச்சுக்கும் இந்த ரொட்டி தான் உபயோகபடுத்துவார்கள்.


Wheat Kuboos





தேவையான பொருட்கள்
மைதா - முன்று டம்ளர்
கோதுமை மாவு - அரை டம்ளர்
ஈஸ்ட் - ஒரு பின்ச்
சர்க்கரை - இரன்டு தேக்கரண்டி
சூடான பால் - அரை டம்ளர்
உப்பு - அரை தேக்கரண்டி
பட்டர் - ஐம்பது கிராம்
HOW TO MAKE ARABIC KUBOOS (HOMEMADE ARABIC KUBOOS)
செய்முறை
சூடான தண்ணிரில் உப்பு,சர்க்கரை,சூடான பால் ,ஈஸ்ட்பட்டரை உருக்கி போட்டு கலக்கி கோதுமை,மைதா கலவையில் கலக்கவும்.
ஒரு கட்ட கரண்டி வைத்து கலக்குங்கள் அப்ப தான் கையில் மாவு ஒட்டாது கலக்கி நல்ல குழைத்து முன்று மணி நேரம்
அப்படியே வைக்கவும்.
மாவை சற்று தளர்த்தியாக குழைக்க வேண்டும்.



பிறகு பெரிய கமலா பழ சைஸ் உருண்டைகள் எடுத்து திக் சப்பாத்தியாக திரட்டி நான் ஸ்டிக் பேனில் போட்டு இருபுறமும் லேசாக சிவற விட்டு எடுக்கனும்.


நிறைய மாவு தோய்த்து சுடுவதால் பேனில் மாவு ஓட்டி கரிந்து விடும், அடுத்த குபூஸை திரட்டி போடும் போது கரிந்த மாவு அதில் ஒட்டும் ஆகையால் ஒரு ஈர துணி கொண்டு அப்ப அப்ப துடைத்து விட்டு போட்டால் நல்ல ப்ரஷாக போட்டு எடுக்கலாம்.

Maida Kuboos















குறிப்பு:
கிரில்லில் சுடும் சிக்கன் அயிட்டங்களுக்கும்,BBQ அயிட்டங்களுக்கும் தொட்டு சாப்பிடலாம். சில்லி சிக்கன்,பட்டர் சிக்கன் போன்றவைக்கும் தொட்டு கொள்ள நல்ல இருக்கும். குழந்தைகளுக்கு பட்டர் தடவியும் கொடுக்கலாம். 

இதே மாவிலேயே நாண், ரூமாலி ரொட்டி எல்லாம் தயாரிக்கலாம்.

Kuboos with Hamuus.

Kuboos with Grill Fish





இந்த குறிப்பு என் தங்கை பஷீராவுக்காக... 


குபூஸுக்கு மெயிலில் வந்த கமெண்ட்.

ஜலீலாக்கா
உங்க குறிப்பு படிச்சு செஞ்சு கொடுத்த குபூஸ் ரொட்டிக்கு எங்க வீட்ல பயங்கர வரவேற்பு.. தெரியுமோ :-)
--
அறுசுவை தோழி தளி கொடுத்த கமெண்ட்
Salaam Jaleelakka,
  i gave ur kuboos recipe to my mom one day(may be an year ago)..yday she called me and said now she iz preparing kuboos often and frm her my aunt also started preparing it...courtesy to you


Saturday, August 3, 2013

மட்டன்கீமா (கொத்துக்கறி) ஹரீஸ் அரபிக் சூப்/கஞ்சி


HOW TO MAKE ARABIC HAREES/HOW TO MAKE MUTTON KHEEMA HAREES

மட்டன் கீமா (கொத்துக்கறி)  ஹரீஸ்  ( அரபிக் நோன்பு கஞ்சி /சூப்)

ஓவ்வொரு வருடமும் நோன்பு மாதங்களில் பல ஊர்களில் அவரவர் பாரம்பரிய உணவு வகைகளை மாலை நேரம் நோன்பு திறக்க தயார் செய்வோம்.
அதில் நோன்பு என்றாலே முதல் முதல் சமைக்கும் உணவு நோன்பு கஞ்சி தான்.
நம் ஊர்களில் அரிசியை உடைத்து அதில் சிறிதுகடலை பருப்பு,பாசிபருப்பு சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து , சில மசாலா வகைகளும் சேர்த்துநோன்பு கஞ்சி தயார் செய்வோம் . ஆனால் அரபு நாடுகளில் காரமிலாமல், மசாலா அதிகம் இல்லாமல் செய்யப்படும் பாரம்பரிய உணவு வகைகளில் கஞ்சி/ சூப்  ஹரீஸும் ஒன்றாகும். இது உடைத்த வெள்ளை கோதுமையுடன் சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து செய்வார்கள்.இது குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். டயட் செய்பவர்களுக்கும் எண்ணை அதிகம் சேர்க்காத நோன்பு கஞ்சியாக குடிக்கலாம்.


ஏற்கனவே இங்கு சிக்கன் ஹரீஸ் ரெசிபி போட்டுள்ளேன். அதை இங்கு சென்று பார்க்கவும். 

 தேவையானவை

தாளிக்க 1

பட்டர்  - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1 
பூண்டு - 3 பல்
மட்டன் கொத்தியது (கீமா)  - 150 கிராம்
உடைத்த வெள்ளை கோதுமை - 100 கிராம்
பட்டை தூள்  - கால் தேக்கரண்டி
சீரக தூள் - அரை  தேக்கரண்டி
தண்ணீர் - 600 மில்லி ( தேவைக்கு)

தாளிக்க 2

பட்டர்  - 2 தேக்கரண்டி
பட்டை தூள்  - கால் தேக்கரண்டி
சீரக தூள் - கால்  தேக்கரண்டி

ஆலிவ் ஆயில் - கடைசியாக மேலே ஊற்ற



HOW TO MAKE ARABIC HAREES/HOW TO MAKE MUTTON KHEEMA HAREES
செய்முறை

1.கோதுமையை 8 லிருந்து 10 மணி நேரம் ஊறவைக்கவும்.

2.குக்கரில் சிறிது பட்டர், வெங்காயம், பூண்டு சேர்த்து தாளித்து மட்டன் கீமாவையும் சேர்த்து ஊறவைத்த கோதுமையையும் சேர்த்து தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு பிரட்டவும்.

3.மூன்று  டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து சீரகத்தூள், பட்டை பொடி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு குக்கரை மூடி மிதமான தீயின் நான்கு ஐந்து விசில் விட்டு , தீயின் தனலை குறைத்து வைத்து 15 நிமிடம் வேகவிடவும்.


4.குக்கர் ஆவி வெளியானதும் குக்கர் வெயிட்டை நிக்கிவிட்டு, நன்கு மசிக்கவும். ( பிளண்டரில் அல்லது மிக்சியில் முக்கால் பாகம் அரையும் வரை மசிக்கவும்) ரொம்ப கெட்டியாக இருந்தால் தேவைக்கு வெண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

5.பிறகு சிறிது பட்டரில் சீரகதூளும், பட்டை தூளும் சேர்த்து தாளித்து மசித்த ஹரீஸ் கஞ்சியில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பரிமாறும் பவுலில் ஊற்றி சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி வைக்கவும்.

 6.சுவையான அரபிக் கஞ்சி மட்டன் ஹரீஸ் தாயார்.


இந்த ரெசிபியில் முழு கோழி, கறி எலும்புடன் போட்டு வேக விட்டு நன்கு வேகவிட்டு கலக்குவார்கள். நான் எப்போதும் எலும்பில்லாததே சேர்த்து செய்வது இப்படி செய்வதால் ஈசியாக வேலை முடியும். ஓட்சில் செய்தால் ரொம்ப மசிக்கவோ மிக்சியில் அடிக்கவோ தேவையில்லை. நன்கு மசிந்து விடும்.இதில் சிறிது வித்தியாசமாக சிறிது பட்டை பொடி, சீரகத்தூள் சேர்த்து வேகவைத்துள்ளேன். வெந்ததும் மணம் ஊரையே கூட்டும்..

 இதற்கு பக்க உணவாக ஃப்லாபில், சிக்கன் நக்கெட்ஸ், ஃபில்லெட், வடை வகைகள் செய்யலாம்.

Sunday, July 28, 2013

சிக்கன் ஹரீஸ் ( அரபிக் நோன்பு கஞ்சி /சூப்)

சிக்கன் ஹரீஸ்  ( அரபிக் நோன்பு கஞ்சி /சூப்)



HOW TO MAKE ARABIC HAREES/HOW TO MAKE CHICKEN HAREES

அரேபியர்களின் பாரம்பரிய நோன்பு கஞ்சி. இங்குள்ள பெரிய பெரிய பள்ளிவாசல்களில் இந்த ஹரீஸும் வைப்பார்கள். இதை ஒரு கப் குடித்தாலும் உடலுக்கு அதிக  தாக்கத்து, மசாலா இல்லாத லைட்டான கஞ்சி /சூப்.

இது துபாய் வந்த புதிதில் எங்க வீட்டு கிழே இருக்கும் அரபி வீட்டிலிருந்து நோன்பு நேரத்தில் அடிக்கடி கொடுத்து அனுப்புவார்கள். என் பெரிய பையனுக்கு ரொம்ப பிடிக்கும். அவனுக்ககவே அடிக்கடி செய்வது.

Harees with Saffron



ஓவ்வொரு வருடமும் நோன்பு மாதங்களில் பல ஊர்களில் அவரவர் பாரம்பரிய உணவு வகைகளை மாலை நேரம் நோன்பு திறக்க தயார் செய்வோம்.
அதில் நோன்பு என்றாலே முதல் முதல் சமைக்கும் உணவு நோன்பு கஞ்சி தான்.
நம் ஊர்களில் அரிசியை உடைத்து அதில் சிறிதுகடலை பருப்பு,பாசிபருப்பு சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து , சில மசாலா வகைகளும் சேர்த்துநோன்பு கஞ்சி தயார் செய்வோம் . 

ஆனால் அரபு நாடுகளில் காரமிலாமல், மசாலா அதிகம் இல்லாமல் செய்யப்படும் பாரம்பரிய உணவு வகைகளில் கஞ்சி/ சூப் என்ற இந்த ஹரீஸும் ஒன்றாகும்.
 இது உடைத்த வெள்ளை கோதுமையுடன் சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து செய்வார்கள்.இது குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். டயட் செய்பவர்களுக்கும் எண்ணை அதிகம் சேர்க்காத நோன்பு கஞ்சியாக குடிக்கலாம்.




தேவையானவை

சிக்கன் எலும்பில்லாதது  - 200 கிராம்
உடைத்த வெள்ளை கோதுமை - 100 கிராம்
பட்டை தூள்  - அரை தேக்கரண்டி
சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் -தேவைக்கு 
பட்டர்  - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1 
பூண்டு - 3 பல்
தண்ணீர் - 800 மில்லி ( தேவைக்கு)


HOW TO MAKE ARABIC HAREES/HOW TO MAKE CHICKEN HAREES
செய்முறை

1.கோதுமையை 8 லிருந்து 10 மணி நேரம் ஊறவைக்கவும்.

2.குக்கரில் சிறிது பட்டர், வெங்காயம், பூண்டு சேர்த்து தாளித்து சிக்கன் துண்டுகளையும், ஊறவைத்த கோதுமையையும் சேர்த்து தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு பிரட்டவும்.

3.நான்கு  டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு குக்கரை மூடி மிதமான தீயின் நான்கு ஐந்து விசில் விட்டு , தீயின் தனலை குறைத்து வைத்து 15 நிமிடம் வேகவிடவும்.

4.குக்கர் ஆவி வெளியானதும் குக்கர் வெயிட்டை நிக்கிவிட்டு, நன்கு மசிக்கவும். ( பிளண்டரில் அல்லது மிக்சியில் முக்கால் பாகம் அரையும் வரை மசிக்கவும்)

5.பிறகு சிறிது பட்டரில் சீரகதூளும், பட்டை தூளும் சேர்த்து தாளித்து மசித்த ஹரீஸ் கஞ்சியில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பரிமாறும் பவுலில் ஊற்றி சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி வைக்கவும்.


Harees with Dates


6.சுவையான அரபிக் கஞ்சி ஹரீஸ் தாயார்.


Harees with chicken Nuggets


ஆயத்த நேரம் : 20 நிமிடம்
ஊறவைக்கும் நேரம் : 8 லிருந்து 10 மணி நேரம்
சமைக்கும் நேரம்: 40 நிமிடம்


டயட் செய்பவர்கள் இதில் பட்டரை தவிர்த்து ஆலிவ் ஆயில் மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம்.இதை பர்கல் மற்றும் ஓட்ஸிலும் செய்யலாம்.
படங்கள் சரியாக வரவில்லை. பிறகு செய்யும் போது சேர்க்கிறேன், இதே மட்டன் கீமாவில் செய்த படம் நன்றாக வந்துள்ளது அடுத்த குறிப்பில் போடுகிறேன்/