சிக்கன் ஹரீஸ் ( அரபிக் நோன்பு கஞ்சி /சூப்)
HOW TO MAKE ARABIC HAREES/HOW TO MAKE CHICKEN HAREES
அரேபியர்களின் பாரம்பரிய நோன்பு கஞ்சி. இங்குள்ள பெரிய பெரிய பள்ளிவாசல்களில் இந்த ஹரீஸும் வைப்பார்கள். இதை ஒரு கப் குடித்தாலும் உடலுக்கு அதிக தாக்கத்து, மசாலா இல்லாத லைட்டான கஞ்சி /சூப்.
இது துபாய் வந்த புதிதில் எங்க வீட்டு கிழே இருக்கும் அரபி வீட்டிலிருந்து நோன்பு நேரத்தில் அடிக்கடி கொடுத்து அனுப்புவார்கள். என் பெரிய பையனுக்கு ரொம்ப பிடிக்கும். அவனுக்ககவே அடிக்கடி செய்வது.
Harees with Saffron
ஓவ்வொரு வருடமும் நோன்பு மாதங்களில் பல ஊர்களில் அவரவர் பாரம்பரிய உணவு வகைகளை மாலை நேரம் நோன்பு திறக்க தயார் செய்வோம்.
அதில் நோன்பு என்றாலே முதல் முதல் சமைக்கும் உணவு நோன்பு கஞ்சி தான்.
நம் ஊர்களில் அரிசியை உடைத்து அதில் சிறிதுகடலை பருப்பு,பாசிபருப்பு சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து , சில மசாலா வகைகளும் சேர்த்துநோன்பு கஞ்சி தயார் செய்வோம் .
ஆனால் அரபு நாடுகளில் காரமிலாமல், மசாலா அதிகம் இல்லாமல் செய்யப்படும் பாரம்பரிய உணவு வகைகளில் கஞ்சி/ சூப் என்ற இந்த ஹரீஸும் ஒன்றாகும்.
இது உடைத்த வெள்ளை கோதுமையுடன் சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து செய்வார்கள்.இது குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். டயட் செய்பவர்களுக்கும் எண்ணை அதிகம் சேர்க்காத நோன்பு கஞ்சியாக குடிக்கலாம்.
தேவையானவை
சிக்கன் எலும்பில்லாதது - 200 கிராம்
உடைத்த வெள்ளை கோதுமை - 100 கிராம்
பட்டை தூள் - அரை தேக்கரண்டி
சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் -தேவைக்கு
பட்டர் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
பூண்டு - 3 பல்
தண்ணீர் - 800 மில்லி ( தேவைக்கு)
HOW TO MAKE ARABIC HAREES/HOW TO MAKE CHICKEN HAREES
செய்முறை
1.கோதுமையை 8 லிருந்து 10 மணி நேரம் ஊறவைக்கவும்.
2.குக்கரில் சிறிது பட்டர், வெங்காயம், பூண்டு சேர்த்து தாளித்து சிக்கன் துண்டுகளையும், ஊறவைத்த கோதுமையையும் சேர்த்து தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு பிரட்டவும்.
3.நான்கு டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு குக்கரை மூடி மிதமான தீயின் நான்கு ஐந்து விசில் விட்டு , தீயின் தனலை குறைத்து வைத்து 15 நிமிடம் வேகவிடவும்.
4.குக்கர் ஆவி வெளியானதும் குக்கர் வெயிட்டை நிக்கிவிட்டு, நன்கு மசிக்கவும். ( பிளண்டரில் அல்லது மிக்சியில் முக்கால் பாகம் அரையும் வரை மசிக்கவும்)
5.பிறகு சிறிது பட்டரில் சீரகதூளும், பட்டை தூளும் சேர்த்து தாளித்து மசித்த ஹரீஸ் கஞ்சியில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பரிமாறும் பவுலில் ஊற்றி சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி வைக்கவும்.
Harees with Dates
6.சுவையான அரபிக் கஞ்சி ஹரீஸ் தாயார்.
Harees with chicken Nuggets
ஆயத்த நேரம் : 20 நிமிடம்
ஊறவைக்கும் நேரம் : 8 லிருந்து 10 மணி நேரம்
சமைக்கும் நேரம்: 40 நிமிடம்
டயட் செய்பவர்கள் இதில் பட்டரை தவிர்த்து ஆலிவ் ஆயில் மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம்.இதை பர்கல் மற்றும் ஓட்ஸிலும் செய்யலாம்.
படங்கள் சரியாக வரவில்லை. பிறகு செய்யும் போது சேர்க்கிறேன், இதே மட்டன் கீமாவில் செய்த படம் நன்றாக வந்துள்ளது அடுத்த குறிப்பில் போடுகிறேன்/
7 கருத்துகள்:
நன்றி ஜலீலாக்கா...
தொடர்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன் சார், உங்களுக்கும் நான் ஜலீலாக்காவா ஒகே ஒகே
படங்களுடன் விளக்கம் அருமை அக்கா....
வாழ்த்துக்கள்...
எனக்கு பிடித்த ஹரீஸ்.. பார்க்கும்போதே ரொம்ப நல்லாயிருக்கு. ஊருக்கு போய் செய்து பார்க்கணும். நன்றி ஜலீலாக்கா.
சேகுமார், செய்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்கள்
ஸ்டார்ஜன் வருகைக்கு மிக்க ந்ன்றி
ஊருக்கு ப்போனதும் கண்டிப்பாக செய்து பாருங்கள்.
நோன்புக் கஞ்சியை மீண்டும் ஞாபகப்படுத்திவிட்டீர்கள். நன்றி.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா