Sunday, July 7, 2013

த‌க்காளி ம‌ற்றும் வெங்காய‌ ப‌ஜ்ஜி



காய்க‌றி சாப்பிட‌தா குழ‌ந்தைக‌ளுக்கு இது போல் செய்து கொடுக்க‌லாம்.வீட்டில் உள்ள‌ காயை வைத்து நினைத்தால் நிமிஷ‌த்தில் த‌யாரித்து விட‌லாம்.



தே.பொருட்க‌ள்

கடலை மாவு = அரை டம்ளர்
அரிசி மாவு = கால் டம்ளர்
இஞ்சி பூண்டு பேஸ்ட் = கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் = தேக்கரண்டி
உப்பு தூள் = தேவைக்கு
காஷ்மீரி சில்லி பொடி = அரை தேக்கரண்டி
ரெடி கலர் பொடி = பின்ச்
எண்ணை = ப‌ஜ்ஜி சுட‌ தேவையான‌ அள‌வு
ரெட் க‌ல‌ர் த‌க்காளி = இர‌ண்டு


செய்முறை

1. த‌க்காளியை வ‌ட்ட‌வ‌டிவ‌மாக‌ க‌ட் செய்து வைக்க‌வும்.


2. ப‌ஜ்ஜி க‌ல‌க்க‌ தேவையான‌ பொருட்க‌ளை ஒன்றாக‌ சேர்த்து த‌யிர் ப‌த‌த்திற்கு க‌ல‌க்கி ஐந்து நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.


3. எண்ணை காய்ந்த‌தும் ப‌ஜ்ஜிக‌ளாக‌ சுட்டெடுக்க‌வும்.புளிப்பு சுவையுட‌ன் கூடிய‌ வித்தியாச‌மான‌ த‌க்காளி ப‌ஜ்ஜி ரெடி.


குறிப்பு
ப‌ஜ்ஜி வெங்காய‌ ப‌ஜ்ஜி சில‌ருக்கு எடுத்து தோய்த்து போடும் போது பிஞ்சி போய் விடும் அதுக்கு, வெங்காய‌த்தை வ‌ட்ட‌வ‌டிவ‌மாக‌ வெட்டி சிறிது நேர‌ம் பிரிட்ஜில் வைத்து எடுத்து பிற‌குதோய்த்தால் கொஞ்ச‌ம் கிரிப்பாக‌ நிற்கும்.
மிள‌காய் ப‌ஜ்ஜி ரொம்ப‌ கார‌மாக‌ இருந்தால் சிறிது உப்பு, வினிக‌ர் சேர்த்து ஊற‌வைத்து பிற‌கு சுட்டால் கார‌மும் தெரியாது, சுவையும் வித்தியாச‌மாக‌ இருக்கும்.







ப‌ஜ்ஜி ரொம்ப‌ ஈசியா த‌யாரித்து விட‌லாம். இதை வாழைக்காய், உருளை,முட்டை,அப்ப‌ளம், வெங்காயாம்,க‌த்திரிக்காய்,வெங்காய‌ம்,பேபிகார்ன் எலாவ‌ற்றிலும் இதை த‌யாரிக்க‌லாம்.க‌ட‌லை மாவு கேஸ் என்ப‌தால் அதில் சோம்பு (அ) இஞ்சி பூண்டு பேஸ்ட் (அ) பூண்டு பொடி (அ) பொருங்காய‌ப் பொடி அவ‌ர‌வ‌ர் விருப்ப‌த்திற்கு ஏற்றவாறு போட்டு கொள்ள‌லாம்.இல்லை எல்லாமே ஒரு பின்ச்சும் போடலாம்.
காய்க‌றி சாப்பிட‌தா குழ‌ந்தைக‌ளுக்கு இது போல் செய்து கொடுக்க‌லாம்.வீட்டில் உள்ள‌ காயை வைத்து நினைத்தால் நிமிஷ‌த்தில் த‌யாரித்து விட‌லாம்.இத‌ற்கு தொட்டு கொள்ள‌ பொட்டு க‌ட‌லை துவைய‌ல், கெட்ச‌ப்,பேரிட்சை ச‌ட்னி , புதினா துவையல் எல்லாமே ந‌ல்ல‌ இருக்கும்.

14 கருத்துகள்:

Mrs.Menagasathia said...

தக்காளி பஜ்ஜி புதுசா இருக்கு,செய்து பார்க்கனும் ஜலிலாக்கா!!

Jaleela said...

ஆமாம் மேனகா புதுசுதான், வெள்ளரி பஜ்ஜி அதுவும் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

இது புளிப்பா கர்பிணி பெண்கள்வாய்க்கு ருசி படும்.வாழ‌க்காய்,உருளை சாப்பிட்டால் கேஸ் பிராப்ள‌ம்வ‌ருப‌வ‌ர்க‌ள். இப்ப‌டி செய்து சாப்பிட‌லாம்.

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான மிள‌காய் ப‌ஜ்ஜியை செய்து பார்ப்போம்... நன்றி சகோ...

ராஜி said...

தக்காளில பஜ்ஜியா?! பசங்களுக்கு செஞ்சு குடுக்குறேன். எனக்கு பஜ்ஜியே பிடிக்காதே!!

பாலாஜி said...

தக்காளி விக்கிற விலைல தக்காளி பஜ்ஜி யா?????

கோமதி அரசு said...

தக்காளி பஜ்ஜி மிக நன்றாக இருக்கிறது. செய்து பார்த்து விடுகிறேன்.
நன்றி ஜலீலா.

Jaleela Kamal said...

தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன் சார்

Jaleela Kamal said...

ராஜி ஆமாம் தக்காளி பஜ்ஜி புளிப்பு சுவையுடன் சுவை அபாரமாக இருக்கும் வருகைக்கு மிக்க நன்றி

என்ன உங்களுக்கு பஜ்ஜியே பிடிக்காதா ஆச்சரியமாக இருக்கு

Jaleela Kamal said...

பாலாஜி கிலோ கணக்கில் நாம் ஒன்றும் பஜ்ஜி செய்ய போவதில்லையே.
ஒன்றிரண்டில் தானே அதும் எப்பவாவது ஒருமுறை தானே செய்கிறோம்

இது கர்பிணி பெண்களுக்கு சாப்பிட்ட வாய்க்கு ருசி படும்

Jaleela Kamal said...

கோமதி அக்காவருகைக்கு மிக்க நன்றி
செய்து பார்த்து சொல்லுங்கள்

இமா க்றிஸ் said...

தக்காளி பஜ்ஜி புதிதாக இருக்கிறது.

உஷா அன்பரசு said...

சரிங்க.. இதை செய்து பார்த்துடறேன்..!

உஷா அன்பரசு said...

சரிங்க.. இதை செய்து பார்த்துடறேன்..!

உஷா அன்பரசு said...

ட்ரை பண்ணிடுவோம்..

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா