Friday, July 12, 2013

காக்டெயில் ஜூஸ் கடல் பாசி - Cocktail Juice Agar Agar

காக்டெயில் ஜூஸ் கடல் பாசி

இது ஒரு வெஜ்டேரிய‌ன் உண‌வு தான் . நோன்பினால் வரும் வாய் புண் மற்றும் வயிற்று புண்ணை ஆற்றும் . உடல் சூடுக்குக்கும் நல்லது.

ஏற்கனவே நிறைய கடல் பாசிவகைகள் இங்கு போஸ்ட் செய்துள்ளேன்.

இது என் தங்கையின் சின்ன மாமியார் செய்தது.



தேவையான பொருட்கள்



க‌ட‌ற்பாசி - ஒரு கை பிடி அளவு
ச‌ர்க்க‌ரை = ஒரு மேசைக‌ர‌ண்டி அள‌வு
ரெடி மேட் காக்டெயில் ஜூஸ் – ஒரு டம்ளர்


தண்ணீர் – ஒன்னறை டம்ளர்

செய்முறை
1.
க‌ட‌ற்பாசியை ஒன்ன‌றை ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் க‌ரைத்து ஊற‌வைத்து ச‌ர்க‌க்ரை சேர்த்து ந‌ன்கு காய்ச்ச‌வும்.
2.
ந‌ன்கு க‌ரைந்து வ‌ரும் போது ரெடி மேட் காக்டெயில் ஜூஸை கலக்கவும் . காய்ச்சிய கடல் பாசியை ஒரு  டிரேயில் ஊற்றி தேவையான
3.
ஆறிய‌தும் பிரிட்ஜில் வைத்து குளிற‌ வைத்து  வேண்டிய வடிவில் கட் செய்து சாப்பிட‌வும்.

கடற்பாசி என்னும் சைனா கிராஸ் இது நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களின் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உனவு களில் இதுவும் ஒரு வகையாகும்.

கடற்பாசியை ரோஸ் எஸன்ஸ் ஊற்றி பால் சேர்த்தும் செய்யலாம்.
இன்னும் பல ப்லேவர்களில் செய்யலாம்.







5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான ஜூஸ்...!

நன்றி சகோதரி...

ராஜி said...

வித்தியாசமான ஒரு ஜூஸ், செய்து பார்த்துட்டு வரேன்

சாந்தி மாரியப்பன் said...

வாசிக்கும்போதே ருசிக்குது..

'பரிவை' சே.குமார் said...

வித்தியாசமான ஒரு ஜூஸ்.

Jaleela Kamal said...

தனபாலன் சார்
ராஜி
சே.குமார்

இது ஜூஸ் இல்லை
காக்டெயில் ஜூஸில் செய்த கடல்பாசி

வருகைக்கு நன்றி சாந்தி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா