இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும்.
சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில்.
https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw
பீட்ரூட் ஹல்வா பழைய பிலாக் போஸ்ட், வீடியோ ரெசிபி
samaiyal attakaasam by jaleelakamal
ஈத் ஸ்பெஷல் ஹல்வா, இதில் கொடுத்துள்ள அளவு ஒரு கிலோ. வீடியோவில் அரை கிலோ அளவுக்கு செய்து காண்பித்துள்ளேன்.
How to Make Perfect Beetroot Halwa?தென்றல் மாத இதழ் துபாய்/
துபாய் தென்றல் மாத இதழில் பல வருடம் முன் வெளியான குறிப்பு.
Beetroot halwa
பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி ஹல்வா போல செய்து பிள்ளைகளுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி , பிரட்டில் சாண்ட்விச் ஆக செய்து கொடுக்கலாம்.
பீட்ரூட் - ஒரு கிலோ சர்க்கரை - 400 கிராம் மில்க் மெயிட் - 200 கிராம் பால் - 200 மில்லி ஏலம் – முன்று கிஸ்மிஸ் பழம் – கருப்பு (அ) மஞ்சள் பாதம் - 50 கிராம் (பொடிக்க) முந்திரி - 50 கிராம் (பாதம் - 25 கிராம் பிஸ்தா - 25 கிராம் அக்ரூட் - 25 கிராம்) உப்பு - ஒரு சிட்டிக்கை
பீட் - 1. தேவையான பொருட்களை தயாராக வைத்து கொள்ள வேண்டும். பீட் - 2.பீட்ரூட்டை தோலெடுத்து கழுவி துருவி கொள்ள வேண்டும்.பொடிக்க கொடுத்துள்ள பாதத்தை பொடித்து கொள்ள வேண்டும், பாதம் , பிஸ்தா முந்திரி, அக்ரூட்டை பொடியாக அரிந்து, அதோடு கிஸ்மிஸ் பழத்தையும் சேர்த்து நெய்யில் வருத்து வைக்கவேண்டும். பிட்- 3.ஒரு வாயகன்ற நான் ஸ்டிக் தவ்வாவில் பட்டரை உருக்கி துருவிய பீட்ரூட்டை சேர்த்து பச்ச வாடை போகும் வரை நன்கு வதக்க வேண்டும். பீட்- 4.காய்ச்சிய பாலை சேர்த்து ஏலக்காயையும் போட்டு வேக விட வேண்டும். பீட்- 5.முக்கால் பாகம் வெந்து கொண்டிருக்கும் போது பொடித்த பாதத்தை போட்டு கிளறவேண்டும். பிட்- 6.சிறிது நேரம் மூடி போட்டு நன்ற்கு வேக விட வேண்டும். பீட்- 7.இப்போது சர்க்கரையை சேர்த்து கிளறவேண்டும்.பீட்- 8.சர்க்கரை சேர்த்ததும் தண்ணீ மாதிரி இளகிவரும் நன்கு கிளறி விட்டு வத்த விட வேணுட்ம். பீட்- 9.பிறகு இரன்டு மேசை கரண்டி நெய்யை ஊற்றி நன்கு கிளற வேண்டும். பீட் - 10. கடைசியாக மில்க் மெயிடை ஊற்றி நன்கு கிளரவும், மில்க் மெயிட் சேர்த்ததும் அபப்டியே விட கூடாது இல்லை என்றால் அடிபிடிக்கும். பீட்- 11 .நன்கு வற்றி கிரிபானதும் வருத்து வைத்துள்ள நட்ஸ் வகைகளை தூவி கிளறி இரக்கவும். பீட்- 12. சுவையான பீட்ரூட்ஹல்வா ரெடி
குறிப்பு
நட்ஸ் வகைகள் இருப்பது போடால் போதும்,வெரும் பாதம், முந்திரி குட போதுமானது.குழந்தைகளுக்கு எல்லாத்தையும் அரைத்தே செய்து விடுங்கள்.அபப்டியே பிரெட், தோசை, சப்பாத்தியில் வைத்து கொடுக்கலாம்.சர்கக்ரை இல்லாத பால் கோவ சேர்ப்பதாக இருந்தால் மில்க் மெயிட் தேவையில்லை.இது நல்ல ரிச்சான கலர்புல் ஸ்வீட்டும் கூட சுவைத்து மகிழுங்கள்.
அரேபியா பாரம்பரிய இந்த குனாஃபா அரேபியர்களின் திருமணம் மந்தி கப்ஸா என்னும் பிரியாணியுடன் ஸ்வீட்க்கு செய்வார்கள் மற்றும் ரோட்ரோர கடைகளில் நோன்பு காலங்களில் அதிக அளவில் செய்து விற்கப்படும்,
அந்த குனாஃக்கு என்று குனாஃபா சேமியா உண்டு அது இங்குள்ள எல்லா சூப்பர் மார்கெட்களிலும் ப்ரோஜன் ஏரியாவில் கிடைக்கும், ஒரு பாக்கெட் விலை 10 திர்ஹம், இந்த குனாஃபாவை பாக்கிஸ்தாணி சேமியாவான ஷீர்குருமா செய்யும் சேமியாவிலும் நம்ம ஊரில் உருது முஸ்லீம்கள் பாரம்பரியமாக ஈத் பெருநாளுக்கு செய்யும் சுருள் சுருளாக உள்ள ஷீர் குருமா (பாயாசம்), செய்யும் சேமியாவிலும் செய்யலாம் அதுவும் இல்லாமல் பபிரட்டிலும் சுலபமாக செய்ய்யலாம் .சுவைத்து மகிழுங்கள், செய்து பார்த்தவர்கள் கிழே உள்ள மெயிலுக்கு நீங்கள் செய்து பார்த்த போட்டோவை அனுப்பிவைக்கவும்.
குனாஃபா என்பது அரபிக் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று . இதற்கென குனாஃபா சேமியா சூப்பர் மார்கெட்டுகளில் ப்ரோஜன் ஏரியாக்களில் கிடைக்கும்.அது கிடைக்காதவர்கள் நம்ம ஊரு சேமியாவிலும் செய்யலாம். அப்படியே ப்ரட்டிலும் செய்யலாம்.
ப்ரட் குனாஃபா
தேவையான பொருட்கள்
வொயிட் ப்ரட் – 4 ஸ்லைஸ்
லுர் பார்க் பட்டர் – 3 மேசைகரண்டி
பொடியாக நறுக்கிய பிஸ்தா பருப்பு – 50 கிராம்
ப்ரெஷ் கிரீம் – ½ டின்
நெஸ்ல் கிரீம் – ½ டின்
சதுர வடிவ அல் மராய் சீஸ் கியுப் – 3 துண்டுகள்
சுகர் சிரப் – தேவையான அளவு
சாப்ரான் – 4 அல்லது 5 இதழ்
எலுமிச்சை சாறு – ½ தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் அல்லது கேவ்ரா எசன்ஸ் - ஒருதுளி
செய்முறை
புட் ப்ராசசர் அல்லது மிக்சியில் ப்ரட்டை பொடித்து கொள்ளவும்.
பிசறி வைத்த பிரட்டை இரண்டாக பிரித்து கேக் செய்ய்ம் மோல்டில் பாதி பகுதியை சமபடுத்தி அழுத்தி வைக்கவும்
ஒரு பவுளில் நெஸில் கிரீம், சீஸ் கியுப்,ப்ரஷ் கிரீம் முன்று சீஸையும் மிக்ஸ் செய்து பொடித்து வைத்துள்ள பிஸ்தாவை பாதி அளவு சேர்க்கவும். சிறிது வால்நட்டையும் பொடித்து சேர்க்கவும்.
சமபடுத்தி வைத்த ப்ரட்டின் மேலே பரவலாக ஊற்றி வைகக்வும்.
அதற்கு மேல் மீதி எடுத்து வைத்த ப்ரட் கலவையை மேலே பரவலாக வைக்கவும். வைத்து 180 டிகிரி யில் 20 நிமிடம் பிரீ ஹீட் செய்து 20 நிமிடம் பேக் செய்யவும், பிறகு 10 நிமிடம் வைத்து எடுக்கவும். குனாபா ரெடி ஆனதும் சர்விங் ப்ளேட்டில் மாற்றி மேலே பிஸ்தா கொண்டு அலங்கரிக்கவும்.
சுகர் சிரப் – அரை டம்ளர் சர்க்கரை அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கலக்கி கொதிக்கவைத்து அதில் சாப்ரான்,லெமன் சாறு,ரோஸ் வாட்டர் அல்லது கேவ்ரா வாட்டர் சிறிது சிறிது சேர்த்து வைக்கவும்.
குனாஃபா ரெடி ஆனதும், அதை சர்விங் பிலேட்டில்வைத்து ஒரு போர்க் வைத்து குத்தி விட்டு அதில் இந்த சுகர் சிரப் ஊற்றி சாப்பிடனும்
கிழே வீடியோ லின்கை கிளிக் செய்து பார்க்கவும், மறக்காமல் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
சேமியா குனாஃபா
ஷீர் குருமாவுக்கு செய்யும் சேமியா அல்லது பந்து போல உள்ள நம்ம ஊரு சேமியா – 50 கிராம்
பட்டர் – 3 மேசைகரண்டி
பொடியாக நறுக்கிய பிஸ்தா பருப்பு – 50 கிராம்
ப்ரெஷ் கிரீம் – 1/4 டின்
நெஸ்ல் கிரீம் – 1/4 டின்
சதுர வடிவ அல் மராய் சீஸ் கியுப் – 2 துண்டுகள்
சுகர் சிரப் – தேவையான அளவு
சாப்ரான் – 2
எலுமிச்சை சாறு – 1/4 தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் அல்லது கேவ்ரா எசன்ஸ் – ஒருதுளி
ஷீர் குருமா சேமியாவில் பட்டரை உருக்கி கலக்கி வைக்கவும். இரண்டு பாதியாக பிரிக்கவும்.
ஒரு கேக் மோல்டில் பாதி சேமியாவை சமப்படுத்தி வைக்கவும்.
ஒரு பவுளில் நெஸில் கிரீம், சீஸ் கியுப்,ப்ரஷ் கிரீம் முன்று சீஸையும் மிக்ஸ் செய்து பொடித்து வைத்துள்ள பிஸ்தாவை பாதி அளவு சேர்க்கவும். சிறிது வால்நட்டையும் பொடித்து சேர்க்கவும்.
சமபடுத்தி வைத்த சேமியாவின் மேலே பரவலாக ஊற்றி வைகக்வும்.
அதற்கு மேல் மீதி எடுத்து வைத்த சேமியா கலவையை மேலே பரவலாக வைக்கவும். வைத்து 180 டிகிரி யில் 20 நிமிடம் பிரீ ஹீட் செய்து 20 நிமிடம் பேக் செய்யவும், பிறகு 10 நிமிடம் வைத்து எடுக்கவும். குனாபா ரெடி ஆனதும் சர்விங் ப்ளேட்டில் மாற்றி மேலே பிஸ்தா கொண்டு அலங்கரிக்கவும்.
நான் இதில் சுகர் சிரப் தயாரிக்க வில்லை என்னிடம் குலோப் ஜாமூன் ஜீரா ( சுகர் சிரப்) மீதியானது இருந்தது அதில் சாப்ரான் எலுமிச்சை சாறு சேர்த்து செய்தேன்
சுகர் சிரப் – அரை டம்ளர் சர்க்கரை அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கலக்கி கொதிக்கவைத்து அதில் சாப்ரான்,லெமன் சாறு,ரோஸ் வாட்டர் அல்லது கேவ்ரா வாட்டர் சிறிது சிறிது சேர்த்து வைக்கவும்.
அரபிக் ஸ்வீட் குனாஃபா
Arabic Bread Kunefah/Kunafa - 1
Bread - 4 Slices
Butter - 3 tbspn
Chopped Pisthachio - 50 gram
Fresh Cream - 1/2 tin
Nestle Cream - 1/2 tin
Almarai Cheese cubes - 3 nos
Sugar syrub - required qty
Saffron - 4 to 5 Strands
Lemon juice 1/2 tpn
Arabic Vermicille Kunafa in Indian Twist - 2
Indian Sheer kurma Vermicille - one bunch (50 gram)
Please Visit and subscribe our channel and share with your friends and family.
திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி
How to Make Dindugal thalappakatti Biriyani?
பல திண்டுக்கல் பிரியாணி இருந்தாலும் ஊருக்கே பெயர் போன திண்டுக்கல் தலப்பாகட்டி மட்டன் பிரியாணி அதே ருசியில் .
முயற்சி செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
திண்டுகல் தலப்பாகட்டி பிரியாணி
சீரக சம்பா அரிசி – 1 kg
ஆட்டு கறி – ஒன்ன்றை கிலோ மட்டன்
நெய் – 200 கிராம்
கடலை எண்ணை (or) தேங்காய் எண்ணை – 100 கிராம்
ரீபைண்ட் ஆயில் – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 300 கிராம்
பெரிய வெங்காயம் 3
தக்காளி - 2
மிளகாய் தூள் – ஒரு மேசைகரண்டி
தயிர் – அரை கப் 200 gram
கொத்துமல்லி புதினா – இரண்டு கை பிடி
எலுமிச்சை பழம் – 1
இஞ்சி பூண்டு அரைத்தது – 200 கிராம்
பச்சமிளகாய் – 5
தாளிக்க - பட்டை 1 inch size, ஏலம் 4, கிராம்பு 4
தனியாக மேலே தூவ பட்டை ஏலம் கிராம்பு தூள் – 1 tspn
தனியாதூள் - 25 gram (or) 10 gram
மிளகாய் தூள் - 25 gram
===
ஒன்ன்றை கிலோ மட்டன்
மிளகாய் தூள்: ஒரு மேசைகரண்டி
உப்பு ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு மேசைகரண்டி
மட்டனில் மிள்காய் தூள் உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
செய்முறை
ஆட்டுக்கறியை சுத்தம் செய்து மீடியாமான துண்டுகளாக போட்டு கழுவி தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும்.
சீரக சம்பா அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
சின்ன வெங்காயத்தை ஒன்றும் பாதியுமாய் அரைத்து வைக்கவும்.
பிரியாணி செய்ய தேவையான சட்டியை அடுப்பில் ஏற்றி காயவைத்து அதில் நெய், கடலை எண்ணை or தேங்காய் எண்ணை,ரீபண்ட் ஆயில் சேர்த்து சூடானதும் பட்டை ஏலம் கிராம்பு போட்டு தாளித்து நீளமாக வெட்டிய ஒரு பெரியவெங்காயம் மற்றும் அரைத்த சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
கொத்துமல்லி புதினா தழை முக்கால் பாகம் சேர்த்து வதக்கி தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து அதில் பச்சமிளகாயை ஒடித்து சேர்க்கவும்.
சிறிது வதங்கியதும் அதில் மிளகாய் தூள் மற்றும் உப்பு தூள் சேர்த்து வதக்கி வேக வைத்துள்ள ஆட்டுகறியை சேர்த்து நன்கு வதக்கி குறைந்த தீயில் வேகவிடவும்.
பிறகு தயிர் சேர்த்து கலக்கி நன்கு தனலை குறைத்து வைத்து தண்ணீர் வற்றியதும் அக்னி கறி போல வந்ததும்
தண்ணீரை ஒரு பங்கு அரிசிக்கு ஒன்னறை பங்கு ஊற்றி கொதிக்க விட்டு உப்பு சரி பார்த்து எலுமிச்சைசாற்றை பிழிந்து, அதன் மேல் கொத்துமல்லி, புதினா தழை , கரம் மசாலா தூள்(பட்டை, ஏலம் , கிராம்பு தூள் )சேர்த்து ,சிறிது நெய் சேர்த்து அரிசியை அதிக தீயில் 10 நிமிடம் வேக விட்டு, குறைந்த தனலில் 20 நிமிடம் தம் போடவும்.
பிரியாணி, சாதம் வகை, பாரம்பரியசமையல்,
இதுல ஒரு கிலோ rice அளவுக்கு செய்து இருக்கிறேன்.
.
1. திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணிக்கு சீரக சம்பா அரிசிதான் பயன் படுத்தனும்.
2. இதில் சேர்க்கவேண்டிய எண்ணை முக்கூட்டு எண்ணை ( கடலெண்ணை, நெய், ரீபைன்ட் ஆயில்)
3. சின்ன வெங்காயம் கண்டிப்பாக சேர்க்கனும். அதை கர கரப்பாக மிக்சியில் அரைத்து சேர்த்து தாளிக்கனும்..
4. வெந்த கறிகூட்டிலேயே தண்ணீர் அளந்த்து அரிசி தட்டி கொதிக்க விட்டு தம் போடனும்.
5. ரொம்ப் முக்கியமான விஷியம் கடையில் கரம் மசாலா தூவி நெய் ஊற்றி 5 நிமிடம் தம் போட்டு இரக்கனும்
கவனிக்க :கறி தாளிக்கும் போது அக்னி யோடு தான் போட்டு வேக வைக்கனும், எனக்கு நேரமில்லாததால் குக்கரில் வேகவைத்து சேர்த்துள்ளேன்.தக்காளி இதற்கு குறைவாக சேர்த்தால் போதும்.
சிலருக்கு தனியாத்தூள் சேர்ததால் பிடிக்காது வேண்டுமானால் குறைத்து கொள்ளுங்கள்
6 பேர் சாப்பிடலாம், மட்டன் தாளிப்பில் போட்டு வேகவிடனும் நான் நேரமின்மையால் குக்கரில் வேகவைத்துள்ளேன். பாரம்பரியமாக செய்யும் ராவுத்தர் வீட்டு பிரியாணி திண்டுக்கலில் உள்ள எங்க நாத்தனாரின் மருமகளின் நானிமா சொன்ன அளவுகள், இதற்கு முன் நான் என் இஷ்டத்துக்கு செய்து இருக்கிறேன், இது சரியான முறையில் கேட்டு செய்தது
Facebook: https://www.facebook.com/jaleela.kamal
Face Book Page:https://www.facebook.com/Samaiyalattakaasam/
Dubai Burka Group wholesale and Retail:https://www.facebook.com/groups/Dubaiburka/
Tamil Blog:http://samaiyalattakaasam.blogspot.com
English Blog:http://cookbookjaleela.blogspot.com/
for Inquiry: cookbookjaleela@gmail.com
என்னுடைய வலைப்பூவில் முதல் போட்டியாக பேச்சுலர் சமையல் போட்டியினை ஆரம்பம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. உங்கள் அனைவரையு...
About Me
Jaleela Kamal
சமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு.
தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.