samaiyal attakaasam by jaleelakamal
ஈத் ஸ்பெஷல் ஹல்வா, இதில் கொடுத்துள்ள அளவு ஒரு கிலோ. வீடியோவில் அரை கிலோ அளவுக்கு செய்து காண்பித்துள்ளேன்.
How to Make Perfect Beetroot Halwa?தென்றல் மாத இதழ் துபாய்/
துபாய் தென்றல் மாத இதழில் பல வருடம் முன் வெளியான குறிப்பு.
Beetroot halwa
பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி ஹல்வா போல செய்து பிள்ளைகளுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி , பிரட்டில் சாண்ட்விச் ஆக செய்து கொடுக்கலாம்.
சர்க்கரை - 400 கிராம்
மில்க் மெயிட் - 200 கிராம்
பால் - 200 மில்லி
ஏலம் – முன்று
கிஸ்மிஸ் பழம் – கருப்பு (அ) மஞ்சள்
பாதம் - 50 கிராம் (பொடிக்க)
முந்திரி - 50 கிராம்
(பாதம் - 25 கிராம்
பிஸ்தா - 25 கிராம்
அக்ரூட் - 25 கிராம்)
உப்பு - ஒரு சிட்டிக்கை
பீட் - 2.பீட்ரூட்டை தோலெடுத்து கழுவி துருவி கொள்ள வேண்டும்.பொடிக்க கொடுத்துள்ள பாதத்தை பொடித்து கொள்ள வேண்டும், பாதம் , பிஸ்தா முந்திரி, அக்ரூட்டை பொடியாக அரிந்து, அதோடு கிஸ்மிஸ் பழத்தையும் சேர்த்து நெய்யில் வருத்து வைக்கவேண்டும்.
பிட்- 3.ஒரு வாயகன்ற நான் ஸ்டிக் தவ்வாவில் பட்டரை உருக்கி துருவிய பீட்ரூட்டை சேர்த்து பச்ச வாடை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பீட்- 4.காய்ச்சிய பாலை சேர்த்து ஏலக்காயையும் போட்டு வேக விட வேண்டும்.
பீட்- 5.முக்கால் பாகம் வெந்து கொண்டிருக்கும் போது பொடித்த பாதத்தை போட்டு கிளறவேண்டும்.
பிட்- 6.சிறிது நேரம் மூடி போட்டு நன்ற்கு வேக விட வேண்டும்.
பீட்- 7.இப்போது சர்க்கரையை சேர்த்து கிளறவேண்டும்.பீட்- 8.சர்க்கரை சேர்த்ததும் தண்ணீ மாதிரி இளகிவரும் நன்கு கிளறி விட்டு வத்த விட வேணுட்ம்.
பீட்- 9.பிறகு இரன்டு மேசை கரண்டி நெய்யை ஊற்றி நன்கு கிளற வேண்டும்.
பீட் - 10. கடைசியாக மில்க் மெயிடை ஊற்றி நன்கு கிளரவும், மில்க் மெயிட் சேர்த்ததும் அபப்டியே விட கூடாது இல்லை என்றால் அடிபிடிக்கும்.
பீட்- 11 .நன்கு வற்றி கிரிபானதும் வருத்து வைத்துள்ள நட்ஸ் வகைகளை தூவி கிளறி இரக்கவும்.
பீட்- 12. சுவையான பீட்ரூட் ஹல்வா ரெடி
குறிப்பு
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா