Tuesday, March 24, 2020

Beetroot Halwa //பீட்ரூட் ஹல்வா/துபாய் தென்றல் மாத இதழ்

பீட்ரூட் ஹல்வா பழைய பிலாக் போஸ்ட், வீடியோ ரெசிபி
samaiyal attakaasam by jaleelakamal
ஈத் ஸ்பெஷல் ஹல்வா, இதில் கொடுத்துள்ள அளவு  ஒரு கிலோ. வீடியோவில் அரை கிலோ அளவுக்கு செய்து காண்பித்துள்ளேன்.

How to Make Perfect Beetroot Halwa?தென்றல் மாத இதழ் துபாய்/

துபாய் தென்றல் மாத இதழில் பல வருடம் முன் வெளியான குறிப்பு.
Beetroot halwa

பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி ஹல்வா போல செய்து பிள்ளைகளுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி , பிரட்டில் சாண்ட்விச் ஆக செய்து கொடுக்கலாம்.

பீட்ரூட் - ஒரு கிலோ
சர்க்கரை - 400 கிராம்
மில்க் மெயிட் - 200 கிராம்
பால் - 200 மில்லி
ஏலம் – முன்று
கிஸ்மிஸ் பழம் – கருப்பு (அ) மஞ்சள்
பாதம் - 50 கிராம் (பொடிக்க)
முந்திரி - 50 கிராம்
(பாதம் - 25 கிராம்
பிஸ்தா - 25 கிராம்
அக்ரூட் - 25 கிராம்)
உப்பு - ஒரு சிட்டிக்கை










பீட் - 1. தேவையான பொருட்களை தயாராக வைத்து கொள்ள வேண்டும்.
பீட் - 2.பீட்ரூட்டை தோலெடுத்து கழுவி துருவி கொள்ள வேண்டும்.பொடிக்க கொடுத்துள்ள பாதத்தை பொடித்து கொள்ள வேண்டும், பாதம் , பிஸ்தா முந்திரி, அக்ரூட்டை பொடியாக அரிந்து, அதோடு கிஸ்மிஸ் பழத்தையும் சேர்த்து நெய்யில் வருத்து வைக்கவேண்டும்.
பிட்- 3.ஒரு வாயகன்ற நான் ஸ்டிக் தவ்வாவில் பட்டரை உருக்கி துருவிய பீட்ரூட்டை சேர்த்து பச்ச வாடை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பீட்- 4.காய்ச்சிய பாலை சேர்த்து ஏலக்காயையும் போட்டு வேக விட வேண்டும்.
பீட்- 5.முக்கால் பாகம் வெந்து கொண்டிருக்கும் போது  பொடித்த பாதத்தை போட்டு கிளறவேண்டும்.
பிட்- 6.சிறிது நேரம் மூடி போட்டு நன்ற்கு வேக விட வேண்டும்.
பீட்- 7.இப்போது சர்க்கரையை சேர்த்து கிளறவேண்டும்.
பீட்- 8.சர்க்கரை சேர்த்ததும் தண்ணீ மாதிரி இளகிவரும் நன்கு கிளறி விட்டு வத்த விட வேணுட்ம்.
பீட்- 9.பிறகு இரன்டு மேசை கரண்டி  நெய்யை ஊற்றி நன்கு கிளற வேண்டும்.
பீட் - 10. கடைசியாக மில்க் மெயிடை ஊற்றி நன்கு கிளரவும், மில்க் மெயிட் சேர்த்ததும் அபப்டியே விட கூடாது இல்லை என்றால் அடிபிடிக்கும்.
பீட்- 11 .நன்கு வற்றி கிரிபானதும் வருத்து வைத்துள்ள நட்ஸ் வகைகளை தூவி கிளறி இரக்கவும்.
பீட்- 12. சுவையான பீட்ரூட் ஹல்வா ரெடி

குறிப்பு
நட்ஸ் வகைகள் இருப்பது போடால் போதும்,வெரும் பாதம், முந்திரி குட போதுமானது.குழந்தைகளுக்கு எல்லாத்தையும் அரைத்தே செய்து விடுங்கள்.அபப்டியே பிரெட், தோசை, சப்பாத்தியில் வைத்து கொடுக்கலாம்.சர்கக்ரை இல்லாத பால் கோவ சேர்ப்பதாக இருந்தால் மில்க் மெயிட் தேவையில்லை.இது நல்ல ரிச்சான கலர்புல் ஸ்வீட்டும் கூட சுவைத்து மகிழுங்கள்.
ஜலீலா





https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

ஹெல்தி கீரை ஓமப்பொடி - Mix millet moringa palak Omapodi - Jaleelakamal




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/