Showing posts with label ஸ்டாட்டர்ஸ். Show all posts
Showing posts with label ஸ்டாட்டர்ஸ். Show all posts

Wednesday, November 22, 2017

நெத்திலி மீன் வடை - Boneless Anchovies Kabab

நெத்திலி மீன் வடை

இது என் 1000 மாவது பதிவு, இதுவரை ஆதரவும் கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி
இது என் யுடியு சேனல் சமையல் அட்டகாசங்கள் இன்னும் பெயர் மாற்றவில்லை ( jaleelakamal ) என்ற பெயரில் தான் போஸ்ட் பண்ணி கொண்டு இருக்கிறேன்/ சப்ஸ்க்ரைப் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்



இது என் 1000மாவது பதிவு
இது வரை ஆதரவு கொடுத்து வந்த தோழ தோழியர்களுக்கு மிக்க நன்றி.

நெத்திலி மீன் வடை டிராப்ட் ல வச்சிருந்த போஸ்ட் தான். முள்ளில்லாத நெத்திலி வடை ஒரு வயது குட்டீஸ் முதல் பாட்டீஸ் வரை பக்க உணவுக்கோ அல்லது மாலை நேர சிற்றுண்டிக்கோ , இரவு பரோட்டா குபூஸ் உடனோ அல்லது காலை டிபனுக்கு பிரட் பண்ணிலோ வைத்து சாப்பிடலாம் . சாப்ட் அன்ட் டேஸ்டி ரெசிபி.

My you tube channel please subscribe and share to your friends,
என்னுடைய You tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் முடிந்த போது பல சூப்பரான குறிப்புகள் போட இருக்கிறேன்.

உங்களுக்கு ஏதாவது குறிப்பு என் பிளாகில் உள்ளது செய்து காண்பிக்கனும் என்றாலும் செய்து போஸ்ட் செய்வேன்.

கவனிக்க: பெண்களுக்கு கிடைக்கும் நேரத்தை வேஸ்ட் செய்யாதீர்கள், பிளவுஸ் சுடிதார் தைக்க இப்ப ரொம்ப விலை டிமான்டும் ஜாஸ்தி.

நிறைய பெண்கள் இப்போது ஒன்லி சுடி அன்ட் பிலவுஸ் தைக்க கற்று கொண்டு ஒரு பெரிய கடை ஆரம்பித்து தெரிந்ததை சொல்லி கொடுத்தும் மற்றவர்களுக்கு தைத்து கொடுத்தும் சம்பாதிக்கிரார்கள். 

ஒரு சுடிதார் தைதால் ஒரு நாளில் 370 அல்லது 400 சம்பாதிக்கலாம்
இது என்னுடைய கனவாகவும் இருந்தது.ஆனால் கொஞ்சல் செய்ல படுத்தினாலும் தொடர முடியாமல் போய் விட்டது. அப்ப ஒரு ப்ளவுஸ் சுடி ஓரம் தைக்க ரொம்ப கம்மியா தான் சார்ஜ் பண்ணேன்.
உங்களால் ப்ளவுஸ் சுடி தைக்க தெரியவில்லை என்றாலும் சேலை துப்பட்டா, லுங்கியாவது ஓரம் தைத்து சம்பாதிக்கலாம்.
உங்களுக்குனன்னு வாங்க நினைக்கும் பொருட்களுக்காவது ஆகும்/

இது வரை ஆதரவு கொடுத்து வந்த தோழ தோழியர்களுக்கு மிக்க நன்றி.
இனியும் தொடர்ந்து ஆதரவளிக்கும் படி கேட்டுகொள்கிறேன்

எங்க கடை வெப்ஸைட்
our shop website
Chennai Plaza
My fb Page 
-- 

Regards
Jaleelakamal



My you tube channel சமையல் அட்டகாசஙக்ள் Please subscribe and share to your friends

Preparation Time: 20 minutes + Cleaning time
cooking time : 20 minutes
Iron - Fish
Serves - 4 
தேவையான பொருட்கள்
நெத்திலி மீன்  - 200 கிராம்
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை தேக்க்கரண்டி
பச்ச மிளகாய் – 2
கரம் மசாலா – கால் தேக்கரண்டி (பட்டை,கிராம்பு,ஏலம்)
சோம்பு தூள் – அரை தேக்கரண்டி
சீரகதூள் – அரை தேக்கரண்டி
தேங்காய் துருவியது அல்லது ட்ரை – 1 மேசை கரண்டி
வெங்காயம் – 1
பொட்டுகடலை பொடி – கால் கப் அல்லது 50 கிராம்
ஹாட் அண்ட் சில்லி கிரம்ஸ் - ஒரு மேசை கரண்டி
எண்ணை – சுட தேவையான அளவு
செய்முறை:
நெத்திலி மீன் கழுவும் விதம்:
நெத்திலி மீனை தலையை கிள்ளி அப்படியே வயிற்றில் உள்ள முள்ளை எடுக்கவும். சைடில் செதில் பகுதியில் உள்ள முள்ளையும் எடுத்து நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும்.


முதலில் மிளகாய் தூள் உப்பு மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து இரண்டு நிமிடம் லேசாக வதக்க்கவும்.

பிறகு பொடியாக அரிந்த பச்ச மிளகாய், வெங்காயம் சோம்பு தூள், சீரகதூள், தேங்காய் சேர்த்து முன்று நிமிடம் வதக்கி ஆறவைக்கவும்

.
ஆறியதும் மிக்சியில் அரைத்து அதில் பொட்டுகடலை பொடி மற்றும் ஹாட் அண்ட் சில்லி கிரம்ஸ் பவுடரை நன்கு கலக்கவும்.





கலக்கிய கலவையை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து உருட்டி டூத்பிக்கில் சொருகி லேசாக அழுத்தி விடவும்.



 பிறகு தோசை தவ்வாவில் கொஞ்சமாக எண்ணை விட்டு பொரித்து எடுக்கவும் அல்லது கிரில்லும் செய்யலாம்..




முள்ளில்லாத மீன் எந்த மீனில் இந்த வடையை செய்யலாம். குழந்தைகளுக்கும் வயதான பெரியவர்களுக்கும் சாப்பிட இலகுவாக இருப்பது இந்த வடை அதை ( கறி (அ) சிக்கன் (அ) இறால் (அ) மீன் என்று ருசிக்கு ஏற்றவாறு செய்து கொள்ளலாம், ஈசியாக செரிமானம் ஆகும்.


Linking to   #livogenironchef the Iron Chef contest on IndiBlogger.  


நானே கவனிக்க வில்லை இது என் 1000 மாவது பதிவு
1000th post

இது வரை ஆதரவு கொடுத்து கொண்டு இருக்கும் அனைவருக்கும் நன்றி

இதில் பார்த்து செய்து பயணடைந்த குறிப்புகளை
என் மெயிலுக்கு அனுப்பி வைத்தால் நல்ல இருக்கும்.
cookbookjaleela@gmail.com

My you tube channel சமையல் அட்டகாசஙக்ள் Please subscribe and share to your friends

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, January 11, 2015

போன்லெஸ் சிக்கன் டிக்கா - Boneless Chicken Tikka



பார்டியில் குழந்தைகளுக்காக சாப்பிட சுலபமாக இது போல் எலும்பில்லாத சிக்கனில் டிக்கா செய்து வைக்கலாம்.

Boneless Chicken Tikka


போன்லெஸ் சிக்கன் டிக்கா
தேவையானவை

எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 200 கிராம்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
ரெட் கலர் பொடி - 2 சிட்டிக்கை
உப்பு அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - முக்கால் தேக்கரண்டி
கடலை மாவு - ஒரு தேக்கரண்டி
சோம்பு  தூள் கால் தேக்கரண்டி
கரம்மசாலா தூள் - கால் தேக்கரண்டி
தயிர் - இரண்டு தேக்கரண்டி 
லெமன் சாறு - ஒரு தேக்கரண்டி
கசூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி

அலங்கரிக்க

வட்டவடிவமாக அரிந்த கேரட்
கொத்துமல்லி தழை







செய்முறை

சிக்கனை கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.

மேலே குறிப்பிட்ட அனைத்து மசலாக்களையும் ஒரு சேர ஒரு பவுளில் கலக்கி சிக்கனுடன் நன்கு பிசறி 10 நிமிடம் ஊறவைக்கவும்


ஒரு வாயகன்ற வானலியில் எண்ணையை காயவைத்து தீயின் தணலை மிதமாக வைத்து ஊறவைத்துள்ள சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்.



.
பொரித்து முடித்ததும் எண்ணையை வடித்து தட்டில் வைத்து அலங்கரித்து பரிமாறவும்

இதே பனீரில் செய்யலாம்

இதே மசாலாவை அமுல் பனீர் கியுப்ஸ் வாங்கி அதை தண்ணீரில் போட்டு கழுவி மேற்கண்ட சிக்கனில் சொல்லி உள்ளபடி மசாலாக்களை பனீரில் சேர்த்து பொரித்து எடுத்து அதே போல் செய்யலாம்.


மற்றொரு முறை 

டூத் பிக்கில் பனீரை சொருகி இரண்டு புறமும் கேப்ஸிகம் சொருகி எண்ணையில் உடையாமல் பக்குவமாக திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும்.

மேலே உள்ள குறிப்பு தான் பனீர் ரெசிபியாக ஃபஜீலாவுக்கு நான் சொல்லி கொடுத்தது. இதோ இந்த சுட்டியை சொடுகி பார்க்கவும்.



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Friday, February 7, 2014

கார்ன் பீஸ் மணி பேக் - Corn Peas Money Bag



 என் சிறப்பு விருந்தினர் பதிவாக தோழி ஆசியா வின் சமைத்து அசத்தலாமில்  => இங்கு சென்று படிக்கவும்.



கார்ன் பீஸ் மணி பேக்
Corn Peas Money Bag/Wontons/Potli


வித்தியாசமான அருமையான ஸ்டாடர் உணவு, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் ஏன் நாமும் தான். இது ஒரு இத்தாலி உணவு வகை.

இதை நம் சுவைக்கு ஏற்ப வித விதமான பில்லிங் வைத்து தயாரிக்கலாம்.

பள்ளிக்கு செல்லும் குழந்தகள் கொண்டு போகும் மதிய உணவு அப்படியே திரும்பி கொண்டு வருவது கண்டு கவலை படும் பெற்றோர்கள் இது போல் ஒரு அழகிய மூட்டை போல் செய்து அவர்கள் விருப்பப்படி , சிக்கன் மட்டன், முட்டை , காய் கறி வகைகளை வைத்து செய்து கொடுத்தால் சத்தமில்லாமல் காலி ஆகும் உங்கள் பிள்ளைகளின் டிபன் பாக்ஸ்.



தேவையானவை

மாவு குழைக்க

மைதா மாவு  -ஒரு டம்ளர் (200கிராம்)
உப்பு - கால் தேக்கரண்டி 
சர்க்கரை - அரை தேக்கரண்டி
வெது வெதுப்பான வெண்ணீர் -கால் டம்ளர்
என்ணை - ஒரு தேக்கரண்டி


செய்முறை வெண்ணீரில் உப்பு சர்க்கரை எண்ணை சேர்த்து மாவில் ஊற்றி நன்கு குழைக்கவும். குழைத்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.



பில்லிங் ரெடி செய்ய

ப்ரோஸன் ,ஸ்வீட் கார்ன்  (சோளம்)  - அரை கப்
ப்ரோஸன் பட்டாணி -  கால் கப்
முட்டை கோஸ் - துருவியது கால் கப்
கேரட் - பொடியாக அரிந்தது - ஒரு தேக்கரண்டி
கேப்சிகம் - பொடியாய அரிந்தது  - இரண்டு மேசை கரண்டி
பச்சமிளகாய் - பொடியாக அரிந்தது - ஒன்று
சர்க்கரை - 2 சிட்டிக்கை
வெங்காயம் - பொடியாக அரிந்தது - ஒரு மேசை கரண்டி
உப்பு - தேவைக்கு
ஒன்றும் பாதியுமாக தட்டிய - கருப்பு மிளகு தூள் - அரை தேக்கரண்டி
லெமன் சாறு  - அரை தேக்கரண்டி
பொடியாக அரிந்த பூண்டு - இரண்டு பல் 
எண்ணை - இரண்டு தேக்கரண்டி




செய்முறை

ஒரு வாயகன்ற நான்ஸ்டிக் பேனில் எண்ணை ஊற்றி காயவைத்து வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
அடுத்து பட்டாணி மற்றும் கார்ன் சேர்த்து வதக்கி 1நிமிடம் வேக விடவும்.
பிறகு முட்டை கோஸ், கேரட், கேப்ஸிகம் சேர்த்து வதக்கி  உப்பு சேர்த்து இரண்டு ஸ்பூன் தண்ணீர் தெளித்து 2 நிமிடம் வேகவிடவும்.

கடைசியாக மிளகு தூள், சர்க்கரை, லெமன் சாறு சேர்த்து பிரட்டி அடுப்பில் இருந்து இரக்கி ஆறவிடவும்.

குழைத்த மாவை சிறிய பூரி அளவு உருண்டைகளாக்கி ஓவ்வொரு உருண்டையையும் வட்ட வடிவமாக பூரிக்கு திரட்டுவது போல் திரட்டி நடுவில் ஒரு ஸ்பூன் அளவு வைத்து எல்லாபக்கமும் ஒன்று சேர்த்துமூட்டை போல் பிடித்து அழுத்தி விட்டு மேலே சிறிது பூ போல பிரித்து விடவும்.


அதே போல் எல்லா உருண்டைகளையும் செய்து முடிக்கவும்.

இரும்பு வானலியில் எண்ணையை காயவைத்து எல்லா மணி பேக் களையும் கருகாமல் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.



How to make Money bag/Won tons/Potli - Step by Step












இது பார்க்க பாட்டிகள் அந்த காலத்தில் பயன் படுத்து சுருக்கு பை போல் இருக்கும்.

சுருக்கு பை கயிறு தயாரிப்பதாக இருந்தால் ஸ்பிர்ங் ஆனியனின் நீட்டான பச்சை நிற இலையை பொடியாக நூல் போல அரிந்து பில்லிங் வைத்து முடித்து மூட்டை போல் கட்டி முடிச்சி போட்டு வைக்கலாம்.
இது பார்க்க வித்தியாசமான ஷேப்பில் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதே போல் உள்ளே வைக்கும் பில்லிங் சிக்கன் , மட்டன் , மற்றும் உங்கள் விருப்பம் போல் என்ன வைத்து கொள்ளலாம்.

Chinese Cabbage Money Bag/Wontons/Potli  @ Cook book Jaleela

*********************
இன்று எங்கள் திருமண நாள் , எங்களுக்கும் எங்கள்குடும்பத்தினர்களுக்கும் துஆ செய்யுங்கள்.







Chennai plaza <= Honey Comb Burka/Abaya

Chennai Plaza => Wholesale & Retail 
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, March 18, 2013

கிரிஸ்பி பட்டர் பிளை ப்ரான்ஸ்- Crispy Butterfly Prawns



பட்டர் பிளை கிரிஸ்பி ப்ரான்ஸ்




இது சீனா நாட்டில் பிரத்தி பெற்ற உணவு.

தேவையானவை
ஊறவைக்க
ப்ரான் - இறால் பெரியது - 8
வெயிட் பெப்பர் - 1 தேக்கரண்டி
சோயாசாஸ் - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
பப்பரிக்கா பவுடர் - அரை தேக்கரண்டி
பூண்டு பொடி - 1/2 தேக்கரண்டி
கோட்டிங் செய்ய
  

கார்ன் மாவு  - தேவைக்கு
முட்டை  - ஒன்று
பிரட் கிரம்ஸ் -  தேவைக்கு


செய்முறை

பெரிய இறாலை சுத்தம் செய்து அதில் வயிற்றிலும் முதுகிலும் உள்ள அழுக்குகளை எடுத்து விட்டு வால் பக்கம் கொஞ்சம் பிரிக்க வேண்டாம்
இறாலை  வட்ட வடிவமாகநடுவில்  பட்டர் பிளை ஷேப்பில் கட் செய்யவும்.
மேலே கொடுக்க பட்டுள்ள அனைத்து பொருட்களையும் இறாலில் போட்டு பிரட்டி 15 நிமிடம் ஊறவைக்கவும்
முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து வைக்கவும்
ஊறிய இறாலை கார்ன்பிளார் மாவுல் தொய்த்து, முட்டையில் பிரட்டி, அடுத்து ப்ரட் கிரம்ஸில் கோட்டிங் செய்யவும்.



ஒரு தவ்வாவில் எண்ணையை சூடு படித்தி தீயின் தனலை மீடியமாக வைத்து கருகாமல் இரண்டு பக்கமும் நன்கு வேகவிட்டு சிவற பொரித்து எடுக்கவும்.

 வெயிட் பெப்பர் கிடைக்காதவர்கள் கருப்பு மிளகு தூளை பயன் படுத்தலாம். 

அடிக்கடி செய்வது தான் ,இறால் , சிக்கன் ரெசிபி எல்லாம் செய்தால் போட்டோ எடுபபதற்குள் காலி யாகிடும், இது போல் நிறைய குறிப்புகள் போட்டோ எடுக்க முடியாமல் போய்விட்டது.
இதை என் மசாலாவிலும் அடிக்கடி செய்வது போட்டோ தான் எதில் வைத்துள்ளேன் என தெரியவில்லை. தாய் தெம்புரா பவுடர் சேர்ர்த்து செய்தால் இன்னும் கிரிஸ்பியாகவரும்.கிழே உள்ளது தாய் தெம்புரா பவுடர் சேர்த்து செயதது.




Prawn Fry with Thai Tempura




Prawn Fry with Dry methi


Linking to Faiza's Passion on Plate


Sunday, May 15, 2011

மொரு மொரு காலி பிளவர் - crispy cauliflower




ஏன் ஹோட்டலுக்கு சொன்று தான் மொரு மொருன்னு சாப்பிடனுமா என்ன வீட்டிலும் நிமிஷத்தில் தயாரிக்கலாமே/

காலிபிளவர் - கால் கிலோ ( ஒரு சிறிய பூ)


மாவு கலக்கி கொள்ள

மைதா - அரை கப்
கார்ன் மாவு - கால் கப்
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேகக்ரண்டி
உப்பு - தேவைக்கு
இஞ்சி பூண்டுபேஸ்ட்  அரை தேக்கரண்டி
ரெட் கலர் பொடி - சிறிது (தேவை பட்டால்)

செய்முறை:

காலிபிளவரை பூ பூவாக பிரித்தெடுத்து கழுவு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இரக்கவும்.
தண்ணீரை வடிக்கவும்.


மாவு கலக்க கொடுத்துள்ளவைகளை நன்கு கட்டி தட்டாமல் கலக்கவும்.

எண்ணையை காய வைத்து ஓவ்வொரு பூவாக கலக்கிய மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும்.

சுவையான நல்ல கிரிஸ்பியான காலிபிளவர் ஃப்ரிட்டர்ஸ் ரெடி.

பொரித்தத்தும் சாப்பிடனும், மூடி போட்டு வைத்தாலோ, அல்லது நெடு நேரம் வைத்திருந்து சாப்பிட்டாலோ மொரு மொருப்பு போய்விடும்.

I sending these recipes to mina joshi's kids delight colorful event



Tuesday, April 12, 2011

சிக்கன் பஜ்ஜி - chicken bajji



தேவையானவை

போன்லெஸ் சிக்கன் - கால் கிலோ
மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
உப்பு -தேவைக்கு
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
லெமன் சாறு - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
சோயா சாஸ் - அரை தேக்கரண்டி
பஜ்ஜி மாவு கலக்க

Sunday, December 12, 2010

சின்ன வெங்காய சாம்பார் வடை - Pearl Onion sambar vadai





தேவையான பொருட்கள்.





வடை தயாரிக்க
உளுந்து பருப்பு – 150 கிராம்
இஞ்சி – ஒரு மேசை கரண்டி
பச்ச மிளகாய் – 2
வெங்காயம் – 2 மிடியம் சைஸ்
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – இரண்டு ஆர்க்
இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை
எண்ணை – வடை பொரிக்க தேவையான அளவு


சாம்பாருக்கு

பருப்பு வேகவைக்
பருப்பு 75 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
தக்காளி - ஒன்று பெரியது
பூண்டு – இரண்டு பல்
தாளிக்
எண்ணை - ஒரு மேசைகரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சின்னவெங்காயம் – 25 கிராம்
கருவேப்பிலை – இரண்டு ஆர்க்
நெய் – ஒரு தேக்கரண்டி
சாம்பார் பொடி – ஒரு மேசை கரண்டி
வெள்ளை புளி - ஒரு கொட்டைப்பாக்களவு.
அலங்கரிக்
கொத்துமல்லி தழை
பொடியாக அரிந்த வெங்காயம் - இரண்டு மேசை கரண்டி

செய்முறை
1.முதலில் வடைக்கு அரைக்க உளுந்தை ஒரு மணிநேரம் ஐஸ் வாட்டரில் ஊறவைத்து வடிக்கட்டியில் தண்ணீரை வடிகட்டி உப்பு, இட்லி சோடா சேர்த்து மையாக அரைக்கவும்.
2. அதில் வெங்காயம், கருவேப்பிலை,இஞ்சி, பச்சமிளகா முன்றையும் பொடியாக அரிந்து கலக்கி வைக்கவும்.

சாம்பார் தயாரிக்
1. பருப்பை களைந்து குக்கரில் சின்ன வெங்காயம் முழுதாக தோலை எடுத்து போடவும். தக்காளியை இரண்டாக அரிந்து சேர்க்கவும்.மேலும் மஞ்சள் தூள் சீரகத்தையும் சேர்த்து ஒன்றிற்கு இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊறவைத்து அடுப்பில் ஏற்றவும், வெயிட் போட்டு தீயின் தனலை குறைத்து வைக்கவும்.

2. இரண்டு முன்று விசில் வந்த்தும் இரக்கவும். குக்கர் ஆவி அடங்கியதும். மத்தால் (அ) கரண்டியால்,(அ) பிளண்டாரால் வெந்த பருப்பை நன்கு மசிக்க்வும்.

3. அரை டம்ளர் தண்ணீர் சாம்பார் பொடியை கரைத்து, கால் டம்ளர் சுடு வெண்ணீரில் புளியை ஊறவைத்து கரைத்து இரண்டையும் பருப்பில் சேர்த்து கொதிக்க விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கடைசியாக் நெய்யை விடவும்.

4. இப்போது அரைத்து வைத்துள்ள வடைமாவை வடைகளாக சுட்டெடுத்து எண்ணையை வடித்து ஒரு பெரிய வாயகண்ற பவுளில் வைக்கவும்.

5. தாளித்து வைத்து இருக்கும் சின்ன வெங்காய சாம்பாரை வடையின் மேல் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம் மற்றும் கொத்துமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.

6. பத்து நிமிடம் கழித்து நன்கு வடையில் சாம்பார் ஊறி இருக்கும்.
தனியாக தேவைக்கு எடுத்து பரிமாறவும்.
சுவையான கம கம சாம்பார் வடை ரெடி
குறிப்பு:
உளுந்து வடையில் இட்லிசோடா விருப்பம் இல்லை என்றால் போட வேண்டாம்./இது வடைக்கு என்பதால் இதில் எந்த வகையான காயும் சேர்க்கவில்லை. உளுந்தை ஐஸ்
வாட்டரில் ஊற வைப்பதால் நிறைய மாவு காணும்.





those recipe goes to priya's complete my thali GMT DAAL/KHADI/SAMBAR/RASAM EVENT