| Tweet | ||||||
Showing posts with label சமையலறை டிப்ஸ். Show all posts
Showing posts with label சமையலறை டிப்ஸ். Show all posts
Thursday, March 23, 2023
அட இந்த டிப்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கே 7 Useful Kitchen Tips
#Ramadan 2023
ஜலீலாவின் டிப்ஸோ டிப்ஸ்
1. மீன் பொரிக்கும் போது வீடு முழுவதும் புகைச்சல் ஏற்படும் அதற்கு தீயின் தனலை மீடியமாக வைத்து பொரிக்கவும்.
2.மீன் பொரிக்கும் போது அந்த பொரித்த வாடை மீன் வாசனை நாம் போட்டு இருக்கும் துணி அடிக்கும் அதற்கு சிறிய திக் டவலை தண்ணீரில் நனைத்து பிழிந்து அதை கேஸ் அடுப்பு கை பிடியில் அல்லது பக்கத்தில் தொங்க விட்டு கொள்ளுங்கள் . ஈரதுணி எல்லா புகையையும் இழுத்து கொள்ளும். இப்படி செய்வதால் அணிந்திருக்கும் ஆடை மீன் புகை வாடை ஏறாது.
3.மீன் சமைக்கும் போது மெழுகுவர்த்தி கொளுத்தி வைத்தால் கூட அந்த வாடையை இழுத்துகொள்ளும்.
4.மீன் சமைக்கும் போது வீடு முழுவதும் அடிக்கும் மீன் வாடையை தவிர்க்க சாம்ராணி புகை போட்டாலும் மீன் சமைத்த சுவடே தெரியாது.
வீடியோ முழுவதும் பாருங்கள் , இன்னும் பல குக்கிங் டிப்ஸ் இருக்கு அதையும் செக் பண்ணுங்கள்
Thursday, February 15, 2018
Ginger Garlic paste and cubes/Home Made/ cook easy/- Samaiyal_attakaasam...
Useful Kitchen Tips
தினம் செய்யும் சமையலுக்கு மிகவும் தேவையான பல சமையல் பொருட்களில் இஞ்சி பூண்டு பேஸ்ட் க்கு தான் முதலிடம்.
செய்யும் சமையலை ஜீரணமாக்க கண்டிப்பாக இஞ்சி பூண்டு பேஸ்ட் நாம் சேர்க்கனும்.
அதன் அளவுசெய்முறை விளக்கங்கள், கிழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.
சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்து கமன்ட் பண்ணுங்கள். எதுவும் சந்தேகங்கள் இருந்தால்கேளுங்கள்.
உங்கள் தோழ தோழியர்களுக்கு ஷேர் செய்து சப்ஸ்கிரைப் செய்ய சொல்லுங்கள்.
நன்றி.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
| Tweet | ||||||
Labels:
சமையலறை டிப்ஸ்,
டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்,
வீடியோ சமையல்
Sunday, February 11, 2018
6 பயனுள்ள கிச்சன் டிப்ஸ்/6 Useful Kitchen Tips -Samaiyal_attakaasam by Jk
அன்பு தோழ தோழிகளே,
இங்கு என் பிலாக்கை பல வருடமாக பார்த்து வருகிறீர்கள்,
இதில் உள்ள பல பயனுள்ள டிப்ஸ் சமையல் வகைகளைபார்த்து கண்டிப்பாக அனைவரும் பயனடைந்து இருப்பீர்கள்.
இதுவரை ஆதரவு கொடுத்த நீங்கள் என் யுடியுப் சேனைலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
என்னால் முடிந்தவரை பதிவுகளை போட்டு பதிந்து வருகிறேன் என்னால் உடனுக்குடன் லின்குகளை பகிர முடியவில்லை.
இதில் பயனுள்ள 6 கிச்சன் டிப்ஸ் கொடுத்துள்ளேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பயனளிக்கும் உங்கள் அனைத்து நண்பர்களுடனும் என் சேனலை பகிர்ந்து சப்ஸ்கிரைப் பண்ண சொல்லுங்கள்.
நீங்கள் சப்ஸ்கிரைப் செய்து வைத்து கொண்டால் தான் நான் போடும்பதிவுகளை உடனுக்குடன் பார்க்க முடியும்.
Please subscribe My Channel and share with your friends
Useful Kitchen Tips From Jaleelakamal.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
| Tweet | ||||||
Labels:
Tips Tips Tips,
சமையலறை டிப்ஸ்,
டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
Wednesday, September 4, 2013
புளி ஐஸ் கியுப் - Tamarind Ice Cube
புளி - ரசம் , சாம்பார் , வத்த குழம்பு, புளி குழம்பு,மீன் குழம்பு, இதுபோல் பல வகை குழம்புகளுக்கு புளி தண்ணீர் கரைக்க வேண்டி வரும்.
ஊறவைத்தால் சில புளி வகைகள் ரொம்ப கட்டியாக இருக்கும் கரைக்க டைம் எடுக்கும். வெண்ணீரில் ஊற போட்டாலும் கை சூடு பொறுக்க கரைப்பது கடினம்.
அதற்கு இது போல் ஐஸ் கியுப் போட்டு வைத்து கொண்டால் ரொம்ப சுலபம் இல்லையா?
புளி ஐஸ் கியுப்
தேவையான அளவு புளி கால் கிலோ அல்லது அதற்கு மேல் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள்.
ஒரு சிறிய லெமன் சைஸ் புளிக்கு அரை டம்ளர் தண்ணீர் தேவைபடும் கொஞ்சம் தண்ணீ மாதிரி கரைக்க நீங்க இதுக்கு ஒரு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு ம்ணிநேரம் அல்லது இரண்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ளுங்கள்.
பிறகு குக்கரில் கொதிக்க விட்டு ஒரு விசில் விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.
ஆறியது நன்கு கைகளால் கரைத்து வடி கட்டி மேலே படத்தில் காட்டியுள்ள படி ஐஸ் கியுப் ட்ரேவில் ஊற்றி பிரீஜரில் வைத்து 4 , 5 மணி நேரம் கழித்து எடுத்து ஒரு கண்டெயினரில் போட்டு வைத்து கொள்ளுங்கள் தேவைக்கு ஒரு மாதத்திலிருந்து ஆறுமாதம் வரை வைத்து பயன் படுத்தாலாம்.
வெளிநாடுகளில் ரூமில் சமைத்து சாப்பிடும் பேச்சுலர்களுக்கு, வேலை போகும் பெண்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அப்ப்டி ஃப்ரஷாக தினம் கரைத்து ஊற்றதான் பிடிக்கும் என்றால் காலை சமைக்கும் புளி குழம்பு அல்லது ரம், மீன் குழம்புக்கு தேவையான புளியை இரவே சிறிது உப்பு சேர்த்து ஊறவைத்து விடுங்கள். காலையில் உடனே கரைத்து குழம்பு செய்ய சுலபமாக இருக்கும்.
கொட்டை இல்லாத புளி என்றால் கை போட்டுகூட கரைக்க தேவையில்லை சிறிது நேரம் ஊறவைத்து விட்டு மிக்சியில் இரண்டு சுற்று கிர்ரூன்னு சுற்றி வடிகட்டினால் இன்னும் சுலபம்.
இது கால் கிலோ அளவு தான் , மாதம் ஒரு முறை கூட செய்து வைத்துக்கொள்ளலாம், ஆறு மாதம் என்று போட்டது ஃப்ரோஜன் வெஜ் வெளி நாடுகளில் காலவாதி தேதி இருக்கும், அதேல்லாம் கூட ஆறு மாதத்திற்கு வைத்து பயன் படுத்து கிறார்கள்,.அந்த வகையில் தான் ஆறு மாதம் என்றேன். நாம சமையலை சுலபமாக முடிக்க இது ஒரு அருமையான டிப்ஸ்
அரைத்து விட்ட புரோஜன் வெஜ் சாம்பார்
| Tweet | ||||||
Saturday, May 18, 2013
பயனுள்ள இரவல் டிப்ஸ்கள் - Useful Tips Tips
நான் இங்கு ஏகப்பட்ட டிப்ஸ்களை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.
யார்வீட்டுக்கு போனாலும் என்னை விட சின்னவர்களாக இருந்தாலும் அவர்கள் சொல்லும் டிப்ஸை மிகவும் விரும்பி கேட்டு கொள்வது.
அப்படி கேட்டதில் சில டிப்ஸ்கள் உங்களுக்காக ..
ஜுபைதா - துபாய்
1. பிரியாணிக்கு சாதம் வடிக்கும் போது சிலருக்கு பதமாக முக்கால் பதத்தில் வடிக்க வராது. அதற்கு ரைஸ் குக்கரில் ஒன்றுக்கு ஒன்று தண்ணீர் வைத்து சமைத்து பிரியாணி கறி தாளித்து விட்டு இந்த சாதம் சேர்த்து தம்மில் விட்டால் பிரியாணி ஒன்னு ஒன்னாக உதிரியாக நீட்டு நீட்டாவரும்.
இது தண்ணீர் கொதிக்க வைத்து வடித்து தம் போட தெரியாதவர்களுக்கு உதவும்.
அஜ்ஜா - சென்னை
2. தொடர் இருமல் , தொண்டை வலிக்கு வடித்த சுடு கஞ்சியில் சிறிது மிளகு தூள் சேர்த்து குடித்தால் தொண்டை இதம் பெறும்.
சித்திக்கா - அஜ்மான் , யு. ஏ.யி.
3. புறை யேறி புறையேறி இருமல் வருவதற்கு எல்லோரும் கிராம்பை வாயில் அடக்கி கொள்வார்கள், அது கரைந்து இன்னும் தொண்டைக்குள் போய் ரொம்ப பாடுபடுத்தும், அதுவும் நாளெல்லாம் வேலை செய்து கொண்டு இருக்கும் போது ஒன்றும் தெரியாது, பகலில் இருமல் இருந்தால் அந்த அளவுக்கு உங்களுக்கு சிரமமாக இருக்காது. இரவு தூங்க போகும் போது தான் அதிக இருமல் வரும். அதற்கு
முன்று மிளகு கிஸ்மிஸ் பழம் 7 சேர்த்து வாயில் வைத்து மிட்டாய் போல் ரொம்ப நேரம் வைத்திருந்து சுவைத்து வாயில் அடக்கி கொண்டு படுத்தாலும் அதன் சாறை முழுங்கினாலும் நிம்மதியாக தூங்கலாம்.
இது ஏற்கனவே இவங்க டிப்ஸும் என் டிப்ஸும் சேர்த்து தொண்டை கரகரப்புன்னு என்று பதிவாக போட்டுள்ளேன்.
தளிகா - அபுதாபி (அறுசுவை தோழி)
4.மீன் பொரிக்கும் போது சில நேரம் பொரிக்கும் தவ்வாவில் போய் ஓட்டி கொள்ளும். அதற்கு கருவேப்பிலையை நீளமான ஆர்க்கோடு எண்ணையில் வைத்து விட்டு அதன் மேல் மசாலா தடவிய மீனை வைத்து பொரித்தால் ஒட்டவும் செய்யாது, மணமும் அபாரமாக இருக்கும்.
இது என்னுடைய டிப்ஸ்
நான் கருவேப்பிலையை பொடியாக அரிந்தே சேர்த்து மசலாவுடன் பிரட்டி கொள்வது, மணம் அருமையாக இருக்கும்.
மவுலானா - துபாய்
மீனுக்கு மசாலா போடும் போது அதில் எண்ணை சிறிது கலந்து தடவி பொரித்தால் கூட பேனில் ஒட்டாது
(பார்பிகியு செய்யும் போது மீனில் மசாலாவுடன் ஆலிவ் ஆயிலையும் சேர்த்து தான் பிரட்டி வைப்போம்.)
இது என் மாமியார் சொன்னது.
குழந்தைகளுக்கு தொடர் பேதி மற்றும் அதனால் சோர்வடைந்து தெம்பில்லாமல் இருந்தால்
உப்பு சர்க்கரை சேர்த்து தண்ணீர் அதிகமாக கொடுக்கனும். ஆனால் குழந்தைகள் அதை விரும்ப மாட்டார்கள். அதற்கு டேங்க் லெமன் அல்லது ஆரஞ்ச் ஒரு டம்ளர் கரைத்து அதில் குளுக்கோஸ் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கொடுக்கலாம்.8 மாத குழந்தைகள் முதல் கொண்டு இதை கொடுக்கலாம். பாட்டிலில் ஊற்றியும் கொடுக்கலாம்.
எலலா வயதினரும் இப்படி குடிக்கலாம்.
எப்போதும் நான் கொஞ்சம் கார்ன் மாவு சேர்த்து பொரிப்பேன் ஒட்டாது, முட்டை சேர்த்து பொரித்தாலும் ஒட்டாமல் வரும்
மீனை ஒட்டாமல் பொரிக்க உங்கள் யாருக்கும் ஏதும் ஐடியா இருந்தால் சொல்லலாம்
USEFUL KITCHEN TIPS
| Tweet | ||||||
Wednesday, March 30, 2011
தோசை மொருகலாக வரனுமா?
எல்லோருக்கும் தோசை என்றாலே மொரு மொருன்னு ஹோட்டல் மாதிரி சாப்பிடதான் பிடிக்கும்.
சிலருக்கு தேசை மொருகலாக வராது அப்படியே போய் கல்லில் ஒட்டி கொள்ளும். அதோடு கிடந்து சண்டை போடனும்.
தவ்வா ரொம்ப காய்ந்து இருந்தாலும், அந்த தவ்வாவில் ரொட்டி சுட்டு இருந்தாலும் தோசை சரியா வராது.
தவ்வாவை லேசாக சூடு படுத்தி சிறிது எண்ணை விட்டு அரை வெங்காயத்தை கட் செய்து அப்படியே வட்ட வடிவமாக தேய்க்க வேண்டும்.
பிறகு தோசை வார்த்தால் சூப்பரான மொருகலான தோசை சொய்யின்னு ஊற்றியதும் எடுக்கும் பக்குவத்தில் எழும்பி நிற்கும்.
மொருகலான தோசைக்கு ஒரு கரண்டி நடுவில் ஊற்றி அப்படியே சுழற்றி விடனும்.
பிறகு எண்ணையை சுற்றிலும் தெளித்தார் போல ஊற்றனும்.
பஞ்சு தோசைக்கு தடிமனாக ஒரு கரண்டி விட்டு உள்ளங்கை அளவு சுற்றினால் போதும். இதற்கு லேசாக எண்ணை ஊற்றினால் போதும்.
அப்பாடா இட்லி தோசைக்கு மாவு அரைத்து வைத்து விட்டால் என்னேரமும் டிபன் ரெடி.
இந்த குளிர் காலத்தில் மாவு புளிக்காது அதற்கு அரைத்ததும் கைகளால் நல்ல பிசைந்து விட்டு புளிக்க விடவும்.
| Tweet | ||||||
Friday, January 21, 2011
மிக்சி டிப்ஸ் - mixe tips

1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும், உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் ,அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி ஒரு சுற்று சுற்றி எடுத்தால் ஓரளவிற்கு எல்லாம் வந்து விடும். அதற்கும் மேல் பிள்ளைகளின் பால் பாட்டில் கழுவும்பிரஷ்
| Tweet | ||||||
Wednesday, August 12, 2009
மீன் டிப்ஸ்

1. மீனுக்கு மசாலா போடும் போது அதில் புளி தண்ணீர் (அ) லெமென் ஜூஸ் (அ) தக்காளி இரண்ட்டி வெட்டி அதன் சாறு மட்டும் பிழிந்து கொள்ளனும் (அ) தயிர் சேர்த்து அதில் மசாலாவை கலக்கி தடவை பொரித்து பாருங்கள் சுவை அமோகமாக இருக்கும். ஸ்கின் அலர்ஜி உள்ளவர்கள் தயிர் சேர்க்கவேண்டாம்.
2. மீனுக்கு ஒரே மாதிரி மசாலா போடாமல் ஒரு முறை மிளகாய் தூள், அடுத்த முறை சிக்கன் மசாலா,அடுத்தமுரை கீரீன் மசாலா, மிளகு மசாலாஎன்று போட்டு பொரிங்கள் நன்றாக இருக்கும்.
3. வஞ்சிர மீனுக்கு மசலா தடவும் போது சில பேர் அதை போடு கறி பிசைவது போல் பிசைந்து தூளாக்கி விடுவார்கள் அதற்கு ஒரு கிண்ணத்தில் மசலாவை கட்டியாக கலக்கி கொண்டு தடவி அடுக்கி வைக்கனும்.
4. மீன் பொரிக்குக்கும் போதுதவ்வாவில் ஒட்டி கொள்ளும் அது திருப்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். அதற்கு மீன் மசாலாவுடன் சிறிது அரிசிமாவு சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள் அல்லது, தவ்வாவில் அரிசி மாவை போட்டு லேசாக வருத்து விட்டு எண்ணை ஊற்றி பொரிக்க வெண்டும்.
5. மீனுக்கு கட்லெட் போல் முட்டையில் முக்கி கிரெம்ஸ் பவுடர் போட்டு ஊறவைத்து பொரித்தால் கூட நல்ல இருக்கும்.
6. மீனை தூளாக்கி கீமா கட்லெட் போல் செய்தாலும் நல்ல இருக்கும்.
7. மீன் பொரிக்கும் போது போட்டிருக்கும் உடையில் அந்த ஸ்மெல் பரவாமல் இருக்க ஒரு டவலை நனைத்து பிழிந்து அடுப்புக்கு முன் காய போட்டு கொள்ளுங்கள்.
8. இல்லை செண்டெட் கேண்டில்கள் கூட பயன் படுத்தலாம்.
9. மீன் பொரிக்கும் போது எண்ணையுடன் சிறிது பட்டர் கலந்து கொள்ளுங்கள் சுவை சூப்பர்.
10. டயட்டில் இருப்பவர்கள் ஆலிவ் ஆயிலில் பொரித்து சாப்பிடவும்.
10. இப்பொது எல்லோரும் டயட் உணவு சாப்பிடுகிறோம். ஆனால் இந்த மீன்வகைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் வெயிட்டே போடாது.
11. பொடி மீன் அதிகம் சாப்பிட்டால் நல்ல முடியும் வளரும், கண்ணுக்கும் ரொம்ப நல்லது.
12. குழந்தைகளுக்கு சின்ன வயதிலிருந்தே மீனை நிறைய கொடுத்து பழக்க படுத்துங்கள், நோய்க்கு குட் பை சொல்லலாம்
| Tweet | ||||||
Thursday, August 6, 2009
கேரட் டிப்ஸ்

குழந்தைகளுக்கு வயிற்று போக்கின் போது கேரட்டை வேகவைத்து மசித்து ஊட்டி விடலாம்.
கேரட், ஆப்பிலுடன் கலந்து ஜூஸாக அரைத்து வடிகட்டி கொடுக்கலாம்.சூப்பாகவும் கொடுக்கலாம்.
.பெரியவர்கள் வயிற்று போக்கின் போது கேரட் சூப்,கேரட் கஞ்சி, கேரட் சாலட் உப்பு எலுமிச்சை தூவி சாப்பிடலாம்.
கர்பிணி பெண்கள் உணவில் கேரட் அதிகம் சேர்த்து கொண்டால் குழந்தைக்கு கலரும் நல்ல வரும்
சொரி சிறங்கு, ஸ்கின் பிராப்ளம் இருப்பவர்கள், தொடர்ந்து 40 நாட்கள் ஒரு கேரட் சாப்பிடலாம். நாளடைவில் குணம் தெரியும்.

குழந்தைகளுக்கு சூப், ஜுஸ் போன்றவை செய்து கொடுக்கலாம்.
கர்பிணிபெண்கள் சாப்பிட்டால் குழந்தைக்கு நல்ல கலர் கிடைக்கும்.
நோன்பு காலத்தில் நோன்பு கஞ்சியில் கீமாவுடன் கேரட் சேர்ப்பார்கள்.கேரட் சேர்த்து செய்வதால் அல்சர் வராமல் இருக்கும்.
கர்பிணி பெண்களுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சலுக்கு கேரட்டை மென்று சாப்பிடலாம்.
கேரட்டை நன்கு அரைத்து சாறெடுத்து அதில் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
.பளிச்சிடும் கண்பார்வைக்கு கேரட் ஒரு அரு மருந்தாகும்.
கேரட்டை நன்கு அரைத்து சாறெடுத்து அதில் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
.பளிச்சிடும் கண்பார்வைக்கு கேரட் ஒரு அரு மருந்தாகும்.
| Tweet | ||||||
Thursday, July 9, 2009
சமையலறை டிப்ஸ்
சின்ன சமையல் டிப்ஸ்கள் இதன் மூலம் வேலையை சுலபமாக்கி கொள்ளலாம்.
1. எல்லா அசைவ சமையலுக்கும், குருமாக்களுக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் அவசியம் அதை இஞ்சி அரை கிலோ , பூண்டு 300 கிராம் அளவில் உரித்து சுத்தம் செய்து அரைத்து வைத்து கொள்ளலாம். அரைத்ததும் அதனுடன் சிறிது உப்பு தூள்,கலந்து வைக்கவேண்டும்.
சின்ன பேமிலிக்கு ஒரு மாதம் வரை போதும். நல்ல ஒரு பெரிய பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும். வேண்டுமானால் நாலில் ஒரு பங்கை எடுத்து பிரீஜரிலும் வைக்கலாம்.
சமையலை ரொம்ப சுலபமாக முடிக்கலாம், நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்
2. புளிவிட்டு செய்யும் சமயலுக்கு வேலைக்கு சொல்பவர்கள் சுடு நீரில் ஊற போட்டு கரைக்கனும் என்ற அவசியம் இல்லை சிறிது உப்பு சேர்த்து இரவே ஊறபோட்டு விடலாம்.

3. தேங்காய் நிறைய இருந்தால் அதில் உப்பை தடவி வைப்பார்கள், அதற்கு பதில் பத்தைகளாக போட்டோ (அ) பொடியாக அரிந்தோ அதை ஒரு பாக்கெட்டில் போட்டு பிரீஜரில் வைத்து கொள்ளலாம். தேவையான போது சட்னிக்கு,குருமாவிற்கு கொஞ்சம் எடுத்து சிறிது நேரம் தண்ணீரில் போட்டுவைத்தால் உடனே கழண்டு வந்துவிடும்.

4.ஆப்பத்துக்கு, இடியாப்பத்துக்கு தேங்காய்பால் ஊற்றி சாப்பிட பால் எடுக்கும் போது அத்துடன் ஏலாக்காய் சேர்த்து அரைத்தால் நல்ல மணமாக இருக்கும்.
5. தினம் இஞ்சி டீ குடிப்பவர்கள் அதை போட்டு தட்டி கொண்டு இருக்காமல் ஒரு பெரிய துண்டு அளவிற்கு கொர கொரப்பாக ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து கொண்டால் தினம் டீ கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து போட்டு கொள்ளலாம்.அல்லது கேரட் துருவியில் தினம் ஒரு துண்டு துருவிக்கொள்ளலாம்
6.பொரித்த எண்ணை மறுபடி பயன் படுத்தும் போது அதை வடிகட்டி கொள்ளுங்கள். முடிந்த வரை கொஞ்சமா எண்ணை பயன் படுத்தி பொரிக்கவும். மீதியை முன்று நாட்களுக்குள் முடிக்க பாருங்கள்.
7.அடுத்த நாள் என்ன சமைக்க போகிறோம் என்பதை ஒரு நாள் முன்பே யோசித்து தேவையானதை வாஙகி வைத்து கொள்ளுங்கள்.காலையில் சமைக்கும் போது டென்ஷன் இல்லாமல் இருக்கும்.

8. முருங்கக்காய் அதிகமாக இருந்தால் அதை அப்ப்டியே பிரிட்ஜில்வைத்து காயவிடாதீர்கள்.அதை தோலெடுத்து ஒரு விரல் நீளத்துக்கு அரிந்து ஒரு கவரில் போட்டு பிரீஜரில் போட்டு வையுங்கள். முருங்கக்காய் சேர்த்து சமைக்கும் போது அப்ப எடுத்து அப்படியே கழுவி சேர்த்து கொள்ளலாம், இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும்.
9. குருமாக்களில் தேங்காயின் அளவை குறைத்து கொண்டு பாதம் சேர்த்து அரைத்து ஊற்றலாம். இது கொலஸ்ராயிலின் அளவை கட்டுபடுத்தும் குழந்தைகளுக்கும் மூளை வளர்சி அதிகரிக்கும். ரிச் டேஸ்டும் கிடைக்கும்.
10 . கருவேப்பிலை பிரெஷாக வாங்கி அதை கழுவி தண்ணீரை வடித்து ஒரு பேபப்ரில் சுருட்டி பிரிட்ஜில் வைத்தால் கொஞ்சம் நாள் ஆனதும் பொடித்தால் தூளாகிவிடும், அதை பிஸிபேளாபாத் இட்லி பொடி, மற்றும் பொடித்த கருவேப்பிலை சேர்த்து வதக்கி அரைக்கும் சமையலுக்கு பயன் படுத்தலாம்.
(தொடரும் )

Wednesday, July 1, 2009
ஃபிரிட்ஜ் டிப்ஸ் (ஐஸ் பெட்டி ஹி ஹி)
ஃபிரிட்ஜில் பொருட்களை வைக்கவும், பராமரிக்கவும். டிப்ஸ் //அன்றாட தேவையில் துணி அனைத்தையும் பீரோவில் வைப்பது போல், ஃபிரிட்ஜில் அனைத்து பொருட்களையும் இழ்டத்துக்கும் திணிப்பார்கள்.
இதில் ஃப்ரீஜரில் ஸ்டடோர் செய்வது பற்றி நிறைய பேர் என்னிடம் கேட்டு இருக்கிறார்கள் மெயில் மூலம் விளக்கி உள்ளேன். அதில் சில டிப்ஸ்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். //
1. நிறைய மட்டன், மீன் போன்றவை வாங்கி வந்தால் அதை ஃபீரிஜரில் ஒரு மாதம் வரை,ஸ்டோர் பண்ணி வைக்கலாம்.
முன்பெல்லாம் ஒரு வருடம் வரை கூட ஸ்டோர் செய்து இருக்கிறார்கள்.
முன்பெல்லாம் ஒரு வருடம் வரை கூட ஸ்டோர் செய்து இருக்கிறார்கள்.
2. இந்தியாவில் அன்றாட தேவைக்கு வாங்கி செய்வார்கள்.
வெளிநாடுகளில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் வாரம் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை தான் மொத்தமாக வாங்குகிறார்கள்.
3. வாங்கி வரும் பொருளை உடனே பாக்கெட்களில் போடவும். ரொம்ப நேரம் வெளியில் வைத்து விட்டு எடுத்து போட்டால் அதில் இருந்து தண்ணீர் ஊறி வாடைவரும்.
4. முதலில் ப்ரீஜரில் திக்கான கவரை அடியில் விரித்து கொள்ளுங்கள்.இது வைக்கும் பொருள் அடியில் ஒட்டாமல் இருக்க, அப்படியே வைப்பதால் வைக்கும் இறைச்சி கவர் ஒட்டிக்கொண்டு தினம் எடுக்கும் போதெல்லாம் அதோடு கிடந்து சண்டை போட வேண்டிவரும் நீயா நானா என்று.
5. மீன், மட்டன், சிக்கன், இறால் என்று தனித்தனியாக எல்லாத்திலும் ஒவ்வொரு கிலோ என்றால் நான்கு நான்கு பாக்கெட்டாக போட்டு கொள்ளவும்.
6. நான்கு வேவ்வேறு கவரில் தனித்த்தனியாக வைக்கவும். இப்போது நான்கு கவரில் நான்கு நான்கு பாக்கெட்டுகள் இருக்கும்.
7. தினம் ஒரு நாள் சிக்கன் என்றால், மறுநாள் இறால், அடுத்து மட்டன், அடுத்து மீன் என்று ஒவ்வொரு பாக்கெட்டாக எடுத்து செய்ய வசதியாக இருக்கும்.
8. எல்லாத்தையும் தினித்து வைத்து என்ன வைத்தோம் என்று தெரியாது அது ஒரு வாரம் கழித்து குப்பைக்கு போகும், என்ன பொருள் வைத்தாலும் முன்று நாட்களுக்கு ஒரு முறை செக் பண்ணி களையுங்கள்.
9. ரொம்ப செய்து விட்டீர்கள் என்றால் உடனே எடுத்து ஒரு கண்டெயினரில் வைத்து ஃபீஜரில் வைக்கலாம் அடுத்த வாரம் கூட பயன் படுத்தலாம்.
10. ஃபீரிஜரில் போட்டதை அடுத்த வாரம் எடுத்து பயன் படுத்தும் போது மறுபடி உள்ளே வைக்க வேண்டாம். அன்றே முடிக்க வேண்டும்.
11. சிக்கன், மீன் போன்றவைகளையும் பொரிப்பதற்கு மசாலா தடவி மேலே வைக்கலாம்.
12. மல்லிகை பூவை வைக்கும் போது அப்படியே வைக்க வேண்டாம். ஒரு கவரில் முடிச்சி போட்டு (அ) டிபன் பாக்ஸில் வையுங்கள். இல்லை என்றால் வாசம் எல்லா பொருட்களிலும் பரவும்.
13. ஊருக்கு போறீர்களா. சுத்தமா பிரிட்ஜை காலி செய்து நல்ல துடைத்து லேசாக திறந்து வைத்து விட்டு போகவும்.இல்லை என்றால் அதில் பூஞ்சை பிடித்து வந்து திறந்தால் அதை கிளீன் செய்வது ரொம்ப சிரமம்.
14. அதில் பழம் ஏதும் வைத்து விட்டு போய் விடாதீர்கள். அது புழு பிடித்துவிடும்.பழம் என்றிலலை மற்ற எந்த பொருளா இருந்தாலும் புழுவைக்கும்.
15. பிரெஷாக சமைத்து உண்பது தான் நல்லது ஆனால் இப்போது இருக்கிற கால கட்டத்தில் சட்னி துவையல் முதல் கொண்டு அரைத்து பாக்கெட் போட்டு சீல் செய்து பீரிஜரில் ஏற்றி விடுகிறார்கள்.
16. நிறைய பேர் ஊருக்கு சொல்கிறேன் என்று கணவருக்கு நிறைய சமைத்து பிரீஜரில் ஸ்டோர் செய்து வைத்து செல்வார்கள்.
17. நானும் நிறைய பேருக்கு என்ன எனன் சமைத்து வைக்கலாம் என்று சொல்லி இருக்கேன்.
18. அதை விட சிறந்தது ஏதாவது நான்கு வகை உணவை சமைக்க கற்று கொண்டால் நல்லது.
மாதம் ஒரு முறையாவது பிரிட்ஜை ஆஃப் செட்து துடைப்பது நல்லது.
தண்ணீரில் சோட மாவு ஒரு ஸ்பூன் கலந்து துடைத்து எடுக்கவும்.
சோப்பு போட்டும் ஸ்பாஞ்ச வைத்து கழுவலாம். உள்ளே துர்நாற்றம் அடிக்காமல் இருக்க எலுமிச்சைபழத்தை சின்னதாக வெட்டி அங்கேங்கே வைக்கலாம் அல்லது ஸ்வீட் ஆரஞ்ச் என சொல்லப்படும் கமலாபழ தோலையும் வைக்கலாம்

Tuesday, May 26, 2009
கேஸ் அடுப்பை கிளீன் செய்யும் போது

1. கேஸ் அடுப்பை துடைக்கும் போது சோப்பு போடு கழுவிய உடன்,ஸ்பான்ஞ் வைத்து துடைகக் துடைக்க சோப்பு நுரை வந்து கொண்டே இருக்கும்.
2. அதை தவிர்க்க. பழைய துணி அல்லது பனியன் துணியை கொண்டு துடைத்தால் இரண்டு முறை அலசி துடைத்து விடலாம்.
3. கையிலும் கீறல் ஏதும் விழாது.கையில் கிளவுஸ் போட்டு கேஸை துடைக்க சிலருக்கு பிடிக்காது.
4. ஸ்டீல் கொண்டு கேஸ் அடுப்பில் உள்ள விடப்பிடியான கரையை அழுத்தி துடைக்கும் போது கையில் சுர சுரப்பு ஏற்படும், கீறல்கள் விழும் அதை தவிர்க சாக்ஸை கையில் போட்டு கொன்டு துடைக்கலாம்.
5. சாக்ஸ் போட்டு கொண்டு துடைக்கும் போதும், ஸ்பான்ஞ்சுக்கு பதில் துணியை பயன் படுத்தி துடைப்பதாலும் எளிதாக கேஸ் அடுப்பை துடைத்து விடலாம்.

Saturday, May 9, 2009
வேலையை சுலபமாக்க
1. சமையலுக்கு தேவையான முக்கியமான பொருள் இஞ்சி பூண்டு பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்டை ஒரு மாதத்திற்கு தேவையானதை அரைத்து பாதியை பிரிட்ஜிலும் , மீதியை பிரீஜரிலும் வைத்து கொண்டால் வசதியாக இருக்கும்.
2.சேமியா, ரவை போன்றவைகளை வறுத்து வைத்து கொண்டால் காலை டிபன் ஈசியாக முடிக்கலாம்.
3.மோர் குழம்புக்கு தேவையானதை கொஞ்சம் நிறைய அரைத்து இரண்டு முன்றாக பிரித்து வைத்து கொண்டாலும் ரொம்ப சுலபமாக தேவைக்கு அதில் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து மோர் கலந்து கடைசியில் தாளித்து இரக்கலாம்.
4. புளி பேஸ்ட் நிறைய செய்து ஐஸ் கியுப் செய்து பீரிஜரில் போட்டு வைத்து கொண்டால் நிமிழத்தில் ரசம், மீன் குழம்பு, புளி குழம்பு, வத்த குழம்பு வைத்து விடலாம்.
5. தேங்காயுடன் முந்திரி, பாதம், பிஸ்தா சேர்த்து அரைத்து வைத்து நாலைந்து பாகமாவோ அல்லது ஐஸ்கியுப் போலவோ போட்டு வைத்து கொண்டால் குருமா குழம்பு வைக்கும் போது இன்னும் சுலபமாக இருக்கும்.
6.கொண்டைகடலையை நிறைய வேக வைத்து வைத்து கொண்டால் சென்னா, சுண்டல், சாலட், வடை போன்றவையை எளிதில் தயாரிக்கலாம்.
7.தேசைக்குமாவு அரைக்கும் போது ஒரு கிலோ அளவிற்கு அரைத்து வைத்து கொண்டால் அந்த வாரம் முழுவதும் தேவைக்கு இட்லி, தோசை, ஆப்பம், ஊத்தாப்பம், அப்பம் என்று செய்து கொள்ளலாம்.
8.தினம் சப்பாத்தி சாப்பிடுபவர்கள் மாவு நிறைய குழைத்து கொஞ்சம் கொஞ்மாக பாக்கெட் போட்டு பிரீஜரில் வைத்து கொள்ளலாம்.

Saturday, April 25, 2009
ரசம் தாளிக்கும் போது
1. ரசம் தாளிக்கும் போது கொஞ்சமா தான் செய்வோம் ஆனால் சின்ன சட்டியை வைத்து தீயை அதிக படுத்தி தாளிக்க கூடாது.
2. அப்படி தாளித்தால் சட்டியின் மேல் தீ பிடித்து கொள்ளும்.
3. இது ஒருவர் இப்படி செய்த போது நானே நேரில் பார்த்துள்ளேன்.
4. அப்படியே தாளித்து விட்டு தீயை குறைத்து விட்டு அல்லது ஆஃப் பண்ணிவிட்டு கரத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றவும்.
5. இல்ல நன்கு கொதிக்க விட்டு தாளிப்பது ரொம்ப safe.

Monday, April 6, 2009
முட்டை கோஸ் டிப்ஸ்

முட்டை கோஸ் என்றாலே குழந்தைகளுக்கு பிடிக்காது அதை எப்படி உணவில் சேர்ப்பது.
1.பருப்பு உசிலி செய்யும் போது பீன்ஸ்,கொத்தவரைக்கு பதில் முட்டை கோஸை சேர்க்கலாம்.
2.பிரைட் ரைஸில் சேர்க்கலாம்.
3.வெங்காய பகோடா செய்யும் போதும் சேர்க்கலாம்.
4.பிட்சா தோசை செய்யும் போதும் சேர்க்கலாம்.
5.மன்சூரியன் பால்ஸிலும் சேர்த்து பொரித்து கொடுக்கலாம்.
6.கீமா பிரெட் சாண்ட் விச்சிலும் இது ஒரு கைபிடி அளவு சேர்த்து கொள்ளலாம்.
மேலே குறிப்பிட்ட வாறு முட்டைகோஸை சேர்த்து செய்து கொடுக்க்லாம். முட்டை கோஸ் பிடிக்காதவர்கலும் இப்படி சாப்பிடலாம்.இது கேன்சர் நோயை கட்டு படுத்தும், வெயிட் குறையவும் அதிகமாக் சாப்பிடலாம்.

Monday, February 9, 2009
சூடு வாய் பொத்து விட்டதா?
ஆ ஆ காரம் சூடு வாய் பொத்து விட்டதா?
1. டீ (அ) வெண்ணீர் குடிக்கும் போது தெரியாம சூடா வாயில் வைத்து நாக்கு பொத்து போய் விட்டதா? கவலை வேண்டாம் உடனே ஒரு மேசைகரண்டி முழுவதும் தேன் எடுத்து குடிங்க. சரியாகி விடும்.
2. ரொம்ப கார சாரமாக சாப்பிட்டு விட்டீர்களா ? அதற்கும் தேன் தான் குடிக்க வேண்டும்.
3.பிறகு கொஞ்ச நாளைக்கு நாக்குக்கு எந்த டேஸ்டும் தெரியாது.
(வடிவேலு சூட ஏதோ சாப்பிட்டு விட்டு இரண்டு காது வழியா ஆவி பறக்குமே அது நெஜம் தான். ஒரு நாள் வெளியில் போகும் அவசரத்தில் சுடாக டீ குடித்து விட்டேன் அவ்வளவு தான் இரண்டு காதும் பிஞ்சு போற அளவுக்கு ஒரு வலி ஒரு நிமிடம் என்ன் ஆயிற்று என்றே தெரியல, பிறகு உடனே தேன் சாப்பிட்டேன் சூப்பர்.)
ஹி ஹி ஹி ஹா ஹா
ஜலீலா

Subscribe to:
Posts (Atom)