எல்லோருக்கும் தோசை என்றாலே மொரு மொருன்னு ஹோட்டல் மாதிரி சாப்பிடதான் பிடிக்கும்.
சிலருக்கு தேசை மொருகலாக வராது அப்படியே போய் கல்லில் ஒட்டி கொள்ளும். அதோடு கிடந்து சண்டை போடனும்.
தவ்வா ரொம்ப காய்ந்து இருந்தாலும், அந்த தவ்வாவில் ரொட்டி சுட்டு இருந்தாலும் தோசை சரியா வராது.
தவ்வாவை லேசாக சூடு படுத்தி சிறிது எண்ணை விட்டு அரை வெங்காயத்தை கட் செய்து அப்படியே வட்ட வடிவமாக தேய்க்க வேண்டும்.
பிறகு தோசை வார்த்தால் சூப்பரான மொருகலான தோசை சொய்யின்னு ஊற்றியதும் எடுக்கும் பக்குவத்தில் எழும்பி நிற்கும்.
மொருகலான தோசைக்கு ஒரு கரண்டி நடுவில் ஊற்றி அப்படியே சுழற்றி விடனும்.
பிறகு எண்ணையை சுற்றிலும் தெளித்தார் போல ஊற்றனும்.
பஞ்சு தோசைக்கு தடிமனாக ஒரு கரண்டி விட்டு உள்ளங்கை அளவு சுற்றினால் போதும். இதற்கு லேசாக எண்ணை ஊற்றினால் போதும்.
அப்பாடா இட்லி தோசைக்கு மாவு அரைத்து வைத்து விட்டால் என்னேரமும் டிபன் ரெடி.
இந்த குளிர் காலத்தில் மாவு புளிக்காது அதற்கு அரைத்ததும் கைகளால் நல்ல பிசைந்து விட்டு புளிக்க விடவும்.
Tweet | ||||||
21 கருத்துகள்:
நல்ல டிப்ஸ்!
Very informative..
வீட்டுக்கு வந்தா முருகலா தோசையும், தேங்காய் சட்னியும்......அப்புறம்........சூட ஒரு பில்டர் காப்பியும் வேணும்.:))
வழக்கம் போல டேஸ்டியான பதிவு.
நல்ல டிப்ஸ் அக்கா..
அக்கா, ஊர் பயணம் எப்படி இருந்துச்சு?
good, useful tips. I face the same problem sometimes. will try this option :)
தோசை மொருகலாக வருவது இருக்கட்டும் உங்கள் தந்தை எப்படி இருக்கார் அக்காள்?
ஆமா சென்னை ப்ளாசா உங்கள் கடை என்று கேள்விப் பட்டேன்,நான் இதுவரைக்கும் கடைக்குப் போனது இல்லை.
இன்ஷா அல்லாஹ் வருகிர மே மாதம் ஊருக்கு போகும் போது உங்கள் கடைக்குப் போகிறேன் அட்ரஸ் தரவும்.
பர்ச்சஸ் செய்யும் போது கண்டிப்பாக டிஸ்க்கவுண்ட் இருக்கனும்.
டிப்ஸ் சூப்பர்.
உங்க பகுதியில் இன்னும் குளிர் முடியவில்லையா?
சலாம் ஜலீலா அக்கா..,நலமா..?
தங்களுக்கு ஒர் அன்பு சான்றிதழை(அவார்டை) வழங்கியுள்ளேன்.பெற்றுக் கொள்ளவும்.
நன்றி.
அன்புடன்,
அப்சரா.
சூப்பர்ர் டிப்ஸ்!!
அம்மாவும் இப்படித் தான் செய்வார்கள். அதுவும் தோசையில் சாதுவாக வெங்காய மணத்துடன். ஐ மிஸ் இட். =((
How is your dad acca?
மொருகலான தோசைக்கு நல்ல டிப்ஸ்!
இங்க வெயில் ஆரம்பித்து விட்டது...
சூடா ஒரு முறுகல் தோசை பார்சல்ல்ல்ல் :-)))
தோசை டிப்ஸ் உபயோகமானது. சீவல் தோசை செய்திருக்கிறீர்களோ...மிக மிகச் சுவையானது! குளிர்காலமா...இங்கு அனல் அடிக்கிறதே...
அக்கா ஊருக்கு போயிட்டு வந்தாச்சா? நீங்கள் இங்கு இருப்பதை மல்லி பிளாக் மூலம் தெரிந்து கொண்டு உங்களுக்கு போன் செய்தேன் யாருமே எடுக்கலை ,இரண்டு நம்பருமே. அப்பா எப்படி இருக்காங்க.
ஆஹா....
சூப்பர் டிப்பு..........
கரகர மொறுமொறு சூடா ஒரு முறுகல் தோசேய் பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்...
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி காயத்ரி
ஆமாம் கக்கு மாணிக்கம் வாங்க கண்டிப்பாக முருகலாக தோசையும்,பில்டர் காபியும் உண்டு
வாங்க சினேகதி கருத்த்துக்கு மிக்க நன்றி
சித்ரா ஊர்பயணம் மனக்கவலையுடன் கழிந்தது.
\
வாங்க சித்ரா வருகைக்கு மிக்க நன்றி
வாங்க அந்நியன்.இது ஊருக்கு போயிருந்ததால் போட்டு வைத்த பதிவுகள்,
வாப்பா கொஞ்சம் பரவாயில்லை
கடைக்கு கண்டிப்பா போங்க டிஸ்கவுண்ட் உண்டு
திருமதி பீ எஸ் ஸ்ரீதர் வாங்க உஙக்ள வருகைக்கு மிக்க நன்றி
அப்சாரா சலாம் உங்கள் அன்பான அவார்டை பெற்று கொண்டேன் ரொம்ப சந்தோஷம், தினம் தினம் அடிக்கடி பேசினீங்க, இனி எப்ப சந்திக்கபோறோமோ?
ஆமான் அனாமிகா வெங்காய மனத்துடன் எனக்கும் ரொம்ப பிடிக்கும்
அப்பா பரவாயில்லை.
மஹா விஜய் ஆம் இப்ப வெயில் நேரம் தேவையில்லை தானா மாவு புளித்துடும்.
நன்றி மேனகா
அமைதி சாரல் பர்சல் ரெடி/
வாங்க ஸ்ரீராம் உஙக்ள் வருகைக்கு மிக்க சந்தோஷம்
சாரு அதே நம்பர் தான் பா அந்த நெரம் அவர்கள் ஏதும் பிஸியா இருந்திருப்பாங்க
கண்டிப்பா கோபி க்கு இல்லாத தோசையா. எத்தனை செட் வேண்டும்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா