Tweet | ||||||
Friday, March 25, 2011
மாங்காய் மீன் குழம்பு - mango fish curry
மாங்காய் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்மீன் குழம்பு
தேவையானவை
இதில் நான் கிளங்க மீன் போட்டு இருக்கேன் லேடி பிஷ்
லேடி பிஷ் - கால் கிலோ
மாங்காய் - அரை
தக்காளி - 3 பெரியது
வெங்காயம் - 1 பெரியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை
கடுகு -ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - இரண்டுதேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் பவுடர் - இரண்டு தேகக்ரண்டி
செய்முறை:
மீனை சுத்தம் செய்து கழுவி ரெடியாக வைக்கவும்,
தக்காளியை அரைத்து வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக அரிந்து வைக்கவும்.
வாயகன்ற பாத்திரத்தில் எண்ணை ஊற்றி கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து
இஞ்சி பூண்டுபேஸ்ட் , வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதக்கியதும் மசாலா வகைகளை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி அரைத்த தக்காளியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு தேங்காய், மீன் , மாங்காயை நீளவாக்கில் சிலைஸாக அரிந்து சேர்த்து மீண்டும் 5 நிமிடம் வேக விட்டு இரக்கவும்.
சும்மா சுல்லுன்னு இருக்கும் மாங்காய் மீன் குழம்பு கர்பிணி பெண்களுக்கும் வாய்க்கு ருசிபடும். சுவைத்து மகிழுங்கள்.
போன மாதம் முன் சிம்ரன் ஆப்பக்கடை, அங்கு ஆப்பம் சூப்பராக இருக்கும், சிம்ரன் ஆப்ப கடை ஹோட்டல், கடை ஓப்பன் ஆன புதிதில் போனது, ரொம்ப வருடம் ஆச்சு இப்ப தான் போனோம், பயங்க கெடுபடி கியுவும் அதிகம் டோக்கன் கொடுத்து தான் உள்ளே விடுகிறார்கள் இது வெள்ளி மட்டுமா இல்லை எல்லாநாளுமான்னு தெரியல, அங்கு மாங்காய் மீன் குழம்பு இன்னும் சுவை நாக்கிலேயே நிற்குது, ஆச்சரியம் உடனே மாங்காய வாங்கி இரண்டு முன்று முறை செய்து பார்த்தேன் 90 % வந்து விட்டது, சூப்பர், செய்ததும் உடனே காலி.
ஏற்கனவே மாங்காய் மீன் குழம்பு புளியும் சிறிது சேர்த்து நிறைய தாளிக்கும் பொருள் சேர்த்து செய்வது தான் , இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தந்து
Subscribe to:
Post Comments (Atom)
19 கருத்துகள்:
நல்லா இருக்கும் பொல... வீட்டுல செய்யச் சொல்லிரலாம்.
எனது வலைபூவில் இன்று: மதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்
அட..இது புதுசா இருக்கே
அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா! மாங்காய் போடும்போது புளி இல்லாமல் மீன் சால்னா வைத்தால் நன்றாகதான் இருக்கும். தக்காளியை அரைத்து சேர்ப்பது அருமையாக இருக்கு. இன்ஷா அல்லாஹ் செய்து பார்க்கணும். ஆனா வெந்தயம், ப.மிளகாய் தேவையில்லையா?
உங்களுக்கு மெயில் பண்ணியுள்ளேன் ஜலீலாக்கா, பார்த்தீர்களா?
YUmm,mouthwatering here..mango potta meen curry na yennaku uyir...
மாங்காய் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்மீன் குழம்பு
//// ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆ சொல்லவே தேவையில்லை.. சுவை சூப்பர்.
எனக்கு மாங்காயோடு உப்புச் சேர்த்துத் தின்ன ஆசை. ஆனால் இங்கு மாங்காய் கிடைப்பது கஸ்டம் அதனால புளி ஆப்பிள் வாங்கி வந்து உப்புடன் சுவைப்பேன்... அதுவும் ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆ தான்.
கெதியா வாங்க ஜலீலாக்கா.
எங்க பாட்டி வீட்டில் எப்பொழுதுமே இது மாதிரி தான் நெத்திலி மீனில் செய்வாங்க...ரொம்ப நல்லா இருக்கும்...
ஞாபகம் செய்துவிட்டிங்க...
Its long ages i had this,u r tempting me...Want to go back to amma's home.Delicious kuzhambu.
மாங்காய் சேர்த்து மீன் குழம்பு வைத்தால் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...தான்.அதென்ன ஜலி தக்காளி சேர்த்தைப்போல் இல்லாமல் வெளிறிய நிறத்தில் குழம்பு இருக்கின்றது?மஞ்சள்தூள் அதிகமாகி விட்டதா?
இந்த குழம்பின் ருசியே தனிதான்... அதுவும் உவரி பகுதியில், பிரெஷ் ஆக மீன் பிடித்து விட்டு வந்து மண்பானையில் வைத்து சமைத்து தந்தார்கள்......
YUMMMMMMY!!!!!
எனக்கு இந்த மீனை ஃபிரை செய்தால் போதும் 10 இல்ல 12 இருந்தாலும் ஈஸியா உள்ளே போயிடும் :-))
குழம்பு பார்ததும் அப்படியே ஊர் நினைவு வந்து விட்டது :-(
அருமையான மீன் கறி வைத்துள்ளிர்கள் அக்காள்.
வாழ்த்துக்கள்!
ஜலீலா தக்காளி அரைத்து சேர்ப்பது புதுசாக இருக்கு.மாங்காய் சேர்த்தால் மணமாக இருக்கும்.
ஆஹா நாவூறுது,மாங்காய் சேர்த்து செய்தாலே தனி சுவை தான்...
ஆஹா நாவூறுது.
arumai Jalee..
:)
எளிமையான செய்முறை.
வாங்க தழிழ் வாசி வீட்டில் சொல்லி கண்டிபபக செய்ய சொல்லுங்கள் அருமையாக இருக்கும்
வாங்க சதீஷ் குமார் வருகைக்கு மிக்க நன்றி
வா அலைக்கும் அஸ்மா ஆமாம் இது வித்தியாசமான சுவையில் அருமையாக இருக்கும் செய்து பாருஙக்ள்
ஆமாம் ப்ரியா மாங்க அதிலிருட்ந்து சாப்பிட ரொமப் அருமையக இருக்கும்
வருகைக்கு மிக்க நன்றி
அதிரா புளிஆப்பிள் ருசியும் அருமையாக இருக்கும்.
சில நேரம் சாலடில் சாப்பிடும் போது எனக்கு புளி ஆப்பிள் ரொம்ப பிடிக்கும்.
கீதா ஆச்சல் எல்லோருக்கும் மாங்கன்னா ரொம்ப பிடிக்கும் அதுவும் மீன் குழம்பில் என்றால் அசத்தல் தானே கருத்திற்கு மிக்க ந்ன்றி
வாங்க பிரேமா உங்கள் அமம சமையல் ஞாபகம் வந்துவிட்டதா?
சமைத்துபாருஙக்ள்.
வருகைக்கு மிக்க நன்றி
ஸாதிகா அக்கா நான் தேஙகாய், மஞ்சல் சிறிது கூடிவிட்டது அதுவும் இல்லாம இங்கு தக்காளி சில நேரம் நல்ல பழுத்ததா இருப்பதில்லை அதான் ,
வாங்க சித்ரா மீன் என்றாலே எனக்கு அலாதி ப்ரியம்,
எல்லோருக்கும் தான் இது தான் வெயிட் போடாதது எந்த நாளிலும் சாப்பிடலாம்.
ஜெய்லாணீஊருக்கு போய் 10, 12 என்ன ஒரு மண் முழுவதும் சாப்பிடுங்கோ தஙக்மனீயின் கையால்
நன்றி அந்நியன்
நன்றி ஆசியா
நன்றி சே குமார்
நன்றி மேனகா
நன்றி கீதா 6
நன்றி அப்ப்ப்பாவி தஙக்மணி
நன்றி மஹா விஜெய்
அனைவருக்கும் நன்றி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா