எள்ளோதரை
வறுத்து திரிக்க
வெள்ளை எள் – ஒரு மேசை கரண்டி
மிளகாய் – முன்று
கடலை பருப்பு – ஒரு இரண்டு தேக்கரண்டி
உளுந்து பருப்பு – ஒரு தேக்கரண்டி
தனியா – அரை தேக்கரண்டி
உதிரியாக வடித்த சாதம் – இரண்டு ஆழாக்கு
புளி – ஒரு எலுமிச்சை சைஸ்
உப்பு தேவைக்கு
ம்ஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
தாளிக்க
நல்லெண்ணை – முன்று மேசை கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை – 5 ஆர்க்
கடலை பருப்பு- ஒரு மேசை கரண்டி
வேர்கடலை – இரண்டு மேசை கரண்டி
பெருங்காய தூள் - கால் தேக்கரண்டி
வெல்லம் – ஒரு தேக்கரண்டி (அ) ஒரு பிட்டு
செய்முறை
வறுத்து திரிக்க வேண்டியவைகளை ஒரு தேக்கரண்டி எண்ணை விட்டு வறுத்து ஆரவைக்கவும்.
புளியை ஒன்ன்றை டம்ளர் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
ஆறிய கலவையை பொடித்துகொள்ளவும்.
தாளிக்க தேவையான பொருட்கள்,. பொடித்த பொடி, புளி கரைத்த கலவை ரெடியாக வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
புளியுடன் பொடித்த பொடி சேர்த்து கரைத்து கொள்ளவும்.ஒரு ஸ்பூன் அளவு பொடியை தனியாக வைக்கவும்.
தாளித்த தாளிப்பில் புளிகலவை, மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காய பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து வற்றவிடவும்.
கூட்டு பதம் வந்த்தும் அடுப்பை விட்டு இரக்கி ஆரவிடவும்.
இப்போது ஆறிய சாதமும், எள் கூட்டும் ரெடி.
இரண்டையும் ஒன்றாக கலந்து எடுத்து வைத்த பொடியையும் தூவி கிளறி இரக்கவும்.
சுவையான எள் புளிசாதம் (எள்ளோதரை ரெடி).
குறிப்பு:
இதற்கு தொட்டுகொள்ள முட்டை, அப்பளம், மசால் வடை, மட்டன் சுக்கா வ்றுவலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
கட்டு சாத்த்துக்கும் சூப்பராக இருக்கும். இதை செய்து இரண்டு மணி நேரமாவது ஊறினால் தான் நல்ல இருக்கும்.காலையில் செய்து மதியம் சாப்பிடலாம்.
எப்போதும் கூட்டு தயாரித்த்தும் சிறிது எடுத்து வைத்து விட்டு தான் சாத்த்தில் கிளறனும்.கலக்கியது தேவைப்பட்டால் மீதியை சேர்க்கலாம்.
கர்பிணி பெண்கள் , குழ்ந்தையை எதிர் பார்த்து இருக்கும் பெண்கள் எள் சாதம் சாப்பிட வேண்டாம்.சாப்பிடலாம் எள் பெருங்காயப்பொடி சேர்க்காமல் செய்து சாப்பிடவும். புளிசாத்த்தை ஐந்து வகையாக் தயாரிக்கலாம் அதில் இது ஒரு வகை.
Tweet | ||||||
26 கருத்துகள்:
நல்லா இருக்கே... ரெசிபிக்கு நன்றி அக்கா...
super recipe ..ellodharai for a change nalla irukku than a normal puliodharai..
நேற்று தான் கோயில் புளியோதரை செய்தேன் !.அருமையாக வந்தது.நாளை உங்கள் பக்குவத்தை செய்து விட்டு சொல்றேன் தோழி !
nice recipe !
ஆ... ஜலீலாக்கா எள் சேர்த்து புளிச்சாதமோ? சொல்லவே தேவையில்லை, இனி நான் அடிக்கடி செய்வேன்... எனக்கு அனைத்து சாதமுமே ரொம்ப பிடிக்கும்... அதிலும் புளி சேர்த்தால்... ம்ம்ம்ம்ம் ஆஆஆஆஆஆஆஆ சூப்பர்.
//குறிப்பு:
இதற்கு தொட்டுகொள்ள முட்டை/// ஆஆஅ பின்னிப் பெடல் எடுக்கிறீங்களே... இனி எனக்கு எப்பூடி நித்திரை வரும்?:)))
எள் சேர்த்து புளிசாதமா? புதுமையா இருக்கு! எங்க அம்மா புளிசாதமும் எள்ளு துவையலும் செய்து தருவாங்க.
இந்த செய்முறையில் நான் அவங்களுக்கு செய்து தர போகிறேன்.
நன்றி.
எள்ளு போட்டு புளிசாதம்! இப்போதான் முதல்முறை கேள்விப்படறேன்!
வழக்கம் போல் அருமை ஜலீலா.
எள்ளு நானும் சில சமயம் சேர்ப்பதுண்டு.எல்லாம் நம்ம நெல்லை டச் தானே!இட்லி மிளகாய்ப்பொடிக்கும் இதே போல் எள்ளு சேர்ப்பதுண்டு.
ஐ .எனக்கு பிடிச்ச புளி சாதம் .இதோடு உருளை வறுவல் கூட நல்லா இருக்கும்
.அந்த கட்டு சாதம் பார்சல் எனக்கு ப்ளீஸ்.
ஸ்கூல் படிக்கும் போது கொண்டு போன டப்பாக்களில் அதிகம் இருந்தது இதுதான் +அ கோ மு ((மதியம் வரை இதானே கெட்டுப்போகாது ))
பிடிச்சோ பிடிகாமலே வாழ்க்கையில் ஒன்றி விட்டது இது :-))
@@@athira said...
//குறிப்பு:
இதற்கு தொட்டுகொள்ள முட்டை/// ஆஆஅ பின்னிப் பெடல் எடுக்கிறீங்களே... இனி எனக்கு எப்பூடி நித்திரை வரும்?:)))
எனக்கும் பழைய நினைவுகள்... அவ்வ்வ்வ்
எனக்கு மிகவும் பிடித்து இருக்கு...அருமையான சாதம்...
lovely
//குறிப்பு:
இதற்கு தொட்டுகொள்ள முட்டை/// ஆஆஅ பின்னிப் பெடல் எடுக்கிறீங்களே... இனி எனக்கு எப்பூடி நித்திரை வரும்?:))) //
திருப்தியா சாப்டாட்டி தான் நித்திரை வாராது. ஒரு கட்டு கட்டிட்டா ........!!!!!
இதுக்கு தொட்டுக்க 'கோலா' மீன் பொரிச்சு எங்க வீட்டில் வைப்பாங்க!!
எள், கடலை, உழுந்து என ஆரோக்கியமான உணவாக இருக்கிறது.
நான் சமையலைப் பற்றி என்ன சொல்ல முடியும்?
அஸ்ஸலாமு அழைக்கும்
ரெசிபி அருமை.
பார்க்கவே அருமையாக இருக்கு.இந்த முறையில் சமைக்கவேண்டும்.அருமையான ரெசிப்பி ஜலி.
எள் புளிசாதம் வீட்டுல செய்ய சொல்லிருவோம்.
எனது வலைபூவில் இன்று:
இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ
mami its so nice.
sorry sister puliyothari parthavudan maami thannu ninaithen.
அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலா அக்கா...,நலமா...?
எள்ளோதரை நல்லா இருக்கு.நான் முன்பு எள்ளை தவிர்த்து இதர பொருட்களை வறுத்து பொடித்து புளியோதரை செய்திருக்கின்றேன்.என் கணவருக்கு அதௌ பிடிக்காததால் அதை விட்டு விட்டேன்.எள் சேர்த்து செய்வது எனக்கு புதிது.
இதை ஒரு முறை செய்து பார்க்கணும்.
நான் கூட தேங்காய் பால் புளிசாதம் குறிப்பை நேற்று போட தயாராக இருந்தேன்.உங்கள் குறிப்பை பார்த்ததும் நாலு நாள் கழித்து போட்டு கொள்ளலாம்னு விட்டுட்டேன்.
வாழ்த்துக்கள் அக்கா...
அன்புடன்,
அப்சரா.
நான் அப்பளத்துடன் இதை செய்து சாப்பிடுகிறேன்.
நன்றி ஜலீலா.
my fav rice too, looks great
எக்கோவ் ...கொஞ்சம் கம்ப்யூட்டர் டெக்னாலிஜியை யூஸ் பண்ணி விளக்குங்கள்.(காணொளிப்படம்)
நல்லா இருக்கின்றது வாழ்த்துக்கள் சகோ.
கருத்து தெரிவிதத அனைத்து அனுபுள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
மன்னிக்கவும்.யாருக்கும் பதில் போட முடியல்
எள் புளிசாதம்....
யப்பா... எப்படியெல்லாம் பேர் வைக்கறாங்கன்னு நினைச்சா மலைப்பா இருக்கு..
எள் சேர்த்து புளி சாதம்...நிஜமாவே இப்போ தான் கேள்விப்படுகிறேன்...
தனியாக எள் சாதம் சாப்பிட்டு இருக்கிறேன்.. ஆனால், இந்த ரெசிப்பி எனக்கு ரொம்பவே நியூ...
//புளிசாத்த்தை ஐந்து வகையாக் தயாரிக்கலாம் அதில் இது ஒரு வகை.//
அடி தூள்ள்ள்ள்ள்ள்ள்ள்...
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா