Tuesday, March 8, 2011

100 வது மகளிர் தினம்

இன்று 100 வது சர்வ தேச மகளிர் தினம்

அம்மா அம்மா அம்மா, பெண்களை பற்றி எழுதனுமுன்னா என் அம்மாவை பற்றி தான் எழுதனும். அவர்கள் தைரியமான பெண் எவ்வளவு முடியவில்லை என்றாலும் உடம்புக்கு முடியவில்லை என்றாலும்  தொழுகை , குர் ஆன் ஓதுவதை விட்டதில்லை.
என்ன பதிவு போடுவது இப்போதைக்கு பதிவு போடும் மூடும் இல்லை
என் அம்மாவுக்கு தூஆ செய்யுங்கள். என் தாயின் தியாகங்களை சொல்ல ஒரு பதிவு போதாது.கழ்ட படுகிறவர்கள் என்னாளும் கழ்டபட்டு கொண்டே தான் இருக்கனும் என்பது போல் இருக்கு அவர்கள் வாழ்க்கை.

********************************************
பெண்களே சந்தோஷம் உங்கள் கையில்
*********************************************************************************
இது முன் போட்ட டிப்ஸ், இதை பகிர்ந்து கொள்கிறேன்.
இன்றைய மருமகள் நாளைய மாமியார்
அம்மாவையும் ,மாமியாரையும் கவனியுங்கள்.
அம்மா நமக்காகவே வாழ்கிறாள்,
மாமியார் நம் கணவன் மார்களைக்குகாகவே அவர்கள் நலனுக்காக பிராத்தித்து கொண்டு சதா பிள்ளைகளின்  நினைவாகவே இருக்கிறாள்.

இவர்கள் இருவருமே தனக்கென எதுவும் வாங்கிக் கொள்வதில்லை நம்மிடம் கேட்பதும் கிடையாது. இது வேண்டும் அது வேண்டும் என்று.அவர்களுக்கு என்ன தேவை படுகிறது என்று நாம் தெரிந்து கொண்டு ஆவன செய்யனும்

கிழவி தானே வயதாகி விட்டது என்று நினைக்க வேண்டாம்.

அவர்களுக்கு தேவையான வெளியில் செல்லும் போது கைக்கு அடக்கமான, தோலை அறுக்காத கை பை,செருப்பு, கண்ணாடி உடைந்து இருந்தால் கண்ணாடி, மழை என்றால் சிறிய குடை.இது போல சின்ன சின்ன அயிட்டங்கள் இருக்கா இல்லையா என்று பார்த்து வாங்கி கொடுங்கள்.

உள்ளாடைகள் அவர்கள் யாரிடமும் வாங்கி கேட்பதில்லை, கோடை என்றால் நல்ல தகுந்த காட்டன் உடைகள், குளிர் காலம் என்றா அதற்கு தேவையான உடைகள் எல்லாம் பார்த்து பார்த்து வாங்கி கொடுங்கள்.என்ன தான் வீட்டு செலவுக்கு என்று அவர்கள் கையில் பணம் கொடுத்தாலும் அவர்களுக்கென்று தேவைக்கு எதுவும் வாங்கிகொள்ளமாட்டார்கள்..

சேலை வாங்கி கொடுக்கும் போது ரொட்டி மாதிரி அடர்த்தியான சேலை வாங்கி கொடுக்காமல் லேசானா அதே நேரம் மெல்லியதாக இல்லாமல் பார்த்து வாங்கி கொடுக்கவும்.

என்ன தான் அப்பாவிற்கு கை நிறைய வீட்டு செலவிற்கு பணம் அனுப்பினாலும் , அம்மாவிற்கு என்று தனியாக பணம் கொடுங்கள். அவர்கள் அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள்.
நாம் நல்ல இருந்தால் சந்தோஷ படுவதும், நாம் கழ்ட பட்டால் நமக்க்கவே வருந்துவதும், அம்மாக்கள் தான், நம் முன்னேற்றத்தை கண்டு மற்றவர்கள் பொறாமை பட்டாலும் , அம்மா மட்டும் தான் நமமை பார்த்து பொறாமைபடாதாவர்கள். என்றும் துஆ செய்பவர்கள்.
*********************************************************************************
உலகில் உள்ள அனைத்து பாட்டி மார்கள், ஆண்டி மார்கள்,அக்கா மார்கள் தங்கை மார்கள்,தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்த்துக்கள்.

 பெண்களே மனதை ரிலாக்ஸ் ஆக வைத்து கொள்ளுஙக்ள் இல்லையென்றால் குடும்பத்தை சரி வர கவனிக்க முடியாது.
கணவரின் வருவாய்க்கு ஏற்றபடி சிக்கனமாய் செலவு செய்யுங்கள்.
எதையும் வீண் விரையம் செய்யாதீர்கள். ஆரோக்கிய மான உணவை செய்யுங்கள். எதையும் அளவுக்கு அதிகமாக வாங்காதீர்கள்.
பிள்ளைகளை நல் வழி படுத்துங்கள்,
இது என் பழைய பதிவு பெண்களே சந்தோஷம் உங்கள் கையில் இதையும் பார்க்கவும்.
எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தொழுகை , இறைவனக்கங்களை அந்த அந்த வேளையில் முடியுங்கள். 
இப்போது உள்ள வலை உலகம், இண்டர்நெட், முகநூல், பிலாக் எல்லாம் நேரத்தை வீனாக முழுங்கி கொண்டு இருக்கு.. 


டிஸ்கி: யாருக்கும் பதில் போட முடியல கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன், நிறைய பேர் புதுசா பாலோவரா சேர்ந்து இருக்கீங்க ஆனால் யாரும் கமெண்டும் போடுவதில்லை தமிழ் மனத்தில் ஓட்டும் போடுவதில்லை. பதிவு பயனுள்ளதா இருந்தால், எவ்வளவோ பேருக்கு என் டிப்ஸும் , சமையலும் உதவுது, ஒரு நிமிடம் ஒதுக்கி கருத்து தெரிவிக்கலாமே, ஓட்டும் போடலாமே.

30 கருத்துகள்:

ராமலக்ஷ்மி said...

//அவர்களுக்கு தேவையான வெளியில் செல்லும் போது கைக்கு அடக்கமான, தோலை அறுக்காத கை பை,செருப்பு, கண்ணாடி உடைந்து இருந்தால் கண்ணாடி, மழை என்றால் சிறிய குடை.இது போல சின்ன சின்ன அயிட்டங்கள் இருக்கா இல்லையா என்று பார்த்து வாங்கி கொடுங்கள்.//

நல்ல பதிவு ஜலீலா.

மகளிர் தின வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

ஜலி,உங்கள் அன்னையைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லி இருந்தால் நங்களும் அறிந்திருப்போம்.அருமையான ஆலோசனைகளை வழங்கி இருக்கின்றீர்கள்,

Shama Nagarajan said...

arumaiya post....happy women's day

Kurinji said...

Very very nice post Jaleela....

Kurinjikathambam
Event : HRH-Puffed Rice

இராஜராஜேஸ்வரி said...

நல்ல பதிவு ஜலீலா.

மகளிர் தின வாழ்த்துக்கள்.

Chitra said...

அக்கா, நல்ல அறிவுரையுடன் ஒரு அருமையான வாழ்த்து பதிவு. பாராட்டுக்கள்!

Lifewithspices said...

Jaleela didhi,

Wat a wonderful post..I agree all the points n i always follow some of these for my mom, mother in law n for my grand ma .. wow what thoughts u hv shared.. Keep writing..

With hugs for ur wonderful post.. n happy womens day!!

Kalpana !!!!

Asiya Omar said...

நல்ல இடுகை.ம்களிர் தின வாழ்த்துக்கள் ஜலீலா.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பதிவு.

உங்களுக்கும் அனைத்து மகளிர்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்!

அன்புடன் மலிக்கா said...

அவர்களுக்காக எங்களின் துஆக்கள் எப்போதுமிருக்கும்
கவலைவேண்டாம் க்கா.. இறைவன் நல்ல ஆரோக்கியத்தை தருவான்..


அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலா அக்கா..,நலமா...?
சரியான நேரத்தில் சரியான பதிவை போடுகிறீர்கள்.நல்ல பதிவு..
அம்மா உறவை அழகான முறையில் சொல்லி அவர்களுக்கு செய்ய வேண்டியவற்றையும் அழகான முறையில் சொல்லியிருப்பது உங்களுக்கே உரிய சிறப்பு.
எனது பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

அன்புடன்,
அப்சரா.

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

நீங்க சொல்லியிருப்பது அனைத்தும் உண்மை ..பிராக்டிகலான உண்மை.வாக்களித்துவிடேன்.நல்ல பகிர்வு.

Menaga Sathia said...

நல்ல பதிவு அக்கா..மகளிர் தின வாழ்த்துக்கள்!!

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அலைக்கும்

நல்ல பகிர்வு. அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

சீமான்கனி said...

மகளிர் தின வாழ்த்துக்கள் ஜலீக்கா... அருமையான பதிவ... அம்மாக்கு துவாக்களும்...

Akila said...

happy women's day... nalla pathivu... anaivarum padikka vendiya onru...

athira said...

அருமையான பதிவு ஜலீலாக்கா. அனைத்தையும் மிக அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.

//உள்ளாடைகள் அவர்கள் யாரிடமும் வாங்கி கேட்பதில்லை, கோடை என்றால் நல்ல தகுந்த காட்டன் உடைகள், குளிர் காலம் என்றா அதற்கு தேவையான உடைகள் எல்லாம் பார்த்து பார்த்து வாங்கி கொடுங்கள்...


என்ன தான் அப்பாவிற்கு கை நிறைய வீட்டு செலவிற்கு பணம் அனுப்பினாலும் , அம்மாவிற்கு என்று தனியாக பணம் கொடுங்கள்///

மிக அழகாகச் சொல்லியிருக்கிறீங்க... நாங்கதான் எல்லாம் பார்த்துப் பார்த்து வாங்கிக்கொடுக்கவேண்டும்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Very lovely touching post akka... மகளிர் தின வாழ்த்துக்கள் to you too..:)

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் ஜலீலாக்கா,,
வழக்கம் போல உங்களுடைய அருமையான பதிவு..மகளிர் என்றாலே எல்லாரும் 20தில் இருந்து 40 வரை மட்டுமே சிந்திக்கும் போது...அதை தாண்டியவர்கள் குறித்த தங்களின் சிந்தனை போற்றுதலுக்குறியது...

மகளிர் தின வாழ்த்துக்கள்...

முதியவர்களிடம் கொள்ளவேண்டிய சிரத்தை குறித்து,யாரும் சிந்திக்காத கோணத்தில் சிந்தித்து..அதை எழுத்தாக்கி பலரும் உணரச்செய்த தங்களுக்கு...எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..

அல்லாஹ் உங்களின் அறிவை மேலும் விசாலமாக்க போதுமானவன்..

அன்புடன்
ரஜின்

Vikis Kitchen said...

ஜலீ அக்கா, அம்மா எப்படி இருக்காங்க? உங்க பதிவு ரொம்ப உருக்கமா இருக்கு. உண்மை தான். அம்மாக்கள் தமக்கென எதுவுமே செய்து கொள்வதில்லை. மாமியாருக்கு ஏதாவது அனுப்புவேன். இதை படித்த பின் தான் , அவர்கள் தேவைகள் இன்னும் நல்ல புரியுது. நன்றி. உங்கள் அம்மாவுக்காக நானும் தூஆ செய்கிறேன். மகளிர் தின வாழ்த்துக்கள்.

Kanchana Radhakrishnan said...

நல்ல பதிவு ஜலீலா.

GEETHA ACHAL said...

அருமையான கருத்துகள்...உங்களுடைய பதிவுகள் அனைத்துமே அருமை.

பகிர்வுக்கு நன்றி...அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்...

'பரிவை' சே.குமார் said...

நல்ல பதிவு ஜலீலாக்கா.
மகளிர் தின வாழ்த்துக்கள்.

Angel said...

அருமையான ,முத்துக்கள் .நீங்கள் கூறிய ஆலோசனைகள் எல்லாமே அருமை

நன்றி ஜலீலா.பெரியவர்களின் சின்ன சின்ன தேவைகளை அழகாக எழுதியுள்ளீர்கள்.

மாதேவி said...

மகளிர் தின வாழ்த்துக்கள் ஜலீலா.

அம்மா நலன்பெற ஆண்டவனை வேண்டுவோம்.

அந்நியன் 2 said...

மகளிர் தின வாழ்த்துக்கள்.

அருமையான பதிவு ஜலீலாக்கா.
அருமையான ஆலோசனைகளை வழங்கி இருக்கின்றீர்கள்.

பாராட்டுக்கள்!


அம்மா நலன்பெற Allhavai வேண்டுவோம்.

R.Gopi said...

//வெளியில் செல்லும் போது கைக்கு அடக்கமான, தோலை அறுக்காத கை பை,செருப்பு, கண்ணாடி உடைந்து இருந்தால் கண்ணாடி, மழை என்றால் சிறிய குடை.//

ஆஹா... சூப்பர்...

எவ்ளோ அழகா சொல்லி இருக்கீங்க ஜலீலா மேடம்...

பெண்மையை போற்றுவோம்..

வலைத்தோழிகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...

ஜெய்லானி said...

//என் அம்மாவுக்கு தூஆ செய்யுங்கள். என் தாயின் தியாகங்களை சொல்ல ஒரு பதிவு போதாது.//

இன்ஷா அல்லாஹ் என் துவாவில் இதுக்கு ஒர் இடம் எப்போதும் இருக்கும்

ஜெய்லானி said...

//இன்றைய மருமகள் நாளைய மாமியார்
அம்மாவையும் ,மாமியாரையும் கவனியுங்கள்.
அம்மா நமக்காகவே வாழ்கிறாள்,
மாமியார் நம் கணவன் மார்களைக்குகாகவே அவர்கள் நலனுக்காக பிராத்தித்து கொண்டு சதா பிள்ளைகளின் நினைவாகவே இருக்கிறாள்.

இவர்கள் இருவருமே தனக்கென எதுவும் வாங்கிக் கொள்வதில்லை நம்மிடம் கேட்பதும் கிடையாது. இது வேண்டும் அது வேண்டும் என்று.அவர்களுக்கு என்ன தேவை படுகிறது என்று நாம் தெரிந்து கொண்டு ஆவன செய்யனும்//


இதுக்கு என்ன சொல்றதுன்னே புரியலை .இது வரையில் இதை பற்றி யாருமே எழுதியதில்லை என்றே சொல்லனும் . வலையுலகில் முதன் முதலாய் படிக்கிரேன் :-( ஜஸாக்கல்லாஹ் க்கைர்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா