Wednesday, July 29, 2015

தந்தூரி டோஃபு பாலக் மக்ரூனி - Tandoori Tofu Palak Macaroni

தந்தூரி தோஃபு பாலக் மக்ரூனி


சமைக்கும் நேரம் – 15 நிமிடம்
ஆயத்த நேரம் 15 நிமிடம்
சமைக்கும் நேரம் – 25 நிமிடம்
பரிமாறும் அளவு – 3 , 4 பிள்ளைகளுக்கு




தேவையான பொருட்கள்

தாளிக்க
பட்டர் + எண்ணை – 2 + 2 தேக்கரண்டி
பச்ச மிளகாய்  - 2 ( பொடியாக அரிந்தது)
கொட மொளகா - - 2 மேசை கரண்டி – பொடியாக அரிந்தது
மிக்சட் வெஜிடேபுள்ஸ் – 100 கிராம்
ஸ்வீட் கார்ன் – 50 கிராம்
நார் பிராண்ட்  வெஜிடேபுள் ஸ்டாக் – அரை கியுப்
சர்க்கரை - - 2 சிட்டிக்கை
சோயா சாஸ் – 1 மேசை கரன்டி
சில்லி சாஸ் – 1 தேக்கரண்டி
டொமேட்டோ கெட்சப் – 1 மேசை கரண்டி
வெள்ளை மிளகு தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி
பாலக் பெஸ்டோ – 2 மேசைகரண்டி

மக்ரூனி – 300 கிராம் ( வேகவைத்தது)

தனியாக வறுத்து கொள்ள

டோஃபு – 150 கிராம்
உப்பு – முக்கால் தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
லெமன் ஜூஸ் – அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை தேக்கரண்டி

செய்முறை

மக்ரூனியை வேகவைத்து தண்ணீரை வடித்து அதில் சிறிது ஆலிவ் ஆயில் கலந்து வைக்கவும்.
தோஃபு வை வெண்ணீரில் அலசி அதை சின்ன சின்ன சதுர வடிவமாக கட் செய்து அதில் மிளகாய் தூள் , உப்பு தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தந்தூரி மசலா, லெமென் ஜூஸ் கலந்து பத்து நிமிடம் ஊறவைத்து தவ்வாவில் சிறிது எண்ணை விட்டு பொரித்து எடுக்கவும்.

ஒரு வாயகன்ற நான்ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி சூடாக்கி , எண்ணை + பட்டர் சேர்த்து சூடானதும் பச்சமிளகாய் , சர்க்கரை சேர்த்து தாளித்து காய்கறிகளை சேர்த்து இரன்டு நிமிடம் வதக்கவும்.
நார் பிராண்ட் வெஜிடேபுள் ஸ்டாக், சோயா சாஸ்,சில்லி சாஸ் கெட்சப் , பாலக் பெஸ்டோ, உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
அடுத்து வறுத்து வைத்துள்ள தோஃபு, வெந்து வைத்துள்ள மக்ருனி எல்லாவற்றையும் சேர்த்து ஒரு சேர  கிளறிவிடவும்.

பாலக் பெஸ்டோ தயாரிக்கும் முறை
தேவையானவை
பாலக் கீரை  - ஒரு கட்டு
வால்நட் – 8
பச்சமிளகாய் – 2
உப்பு  - அரை தேக்கரண்டி
சர்க்கரை – ஒரு சிட்டிக்கை
செய்முறை
பாலக்கீரை கழுவி தண்ணீரை வடிக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவிட்டு , ஒரு சிட்டிக்கை சர்க்கரை, உப்பு சிறிது சேர்த்து பாலக்கீரை அரிந்து சேர்க்கவும். இரண்டு கொதி வந்ததும் வடித்தட்டில் வடித்து குளிர்ந்த தண்ணீரில் அலசவும்,
பிறகு பச்சமிளகாய் , வால்நட் சேர்த்து அரைக்கவும்.
பாலக் பெஸ்டோ கொஞ்சம் அதிகமாக தயாரித்து வைத்து கொண்டால் மக்ரூனி, நூடுல்ஸ், பாஸ்தா, ஸ்பெகதி மற்றும் கீரின் வெஜ் கறிவகைகளுக்கு சேர்த்து கொள்ளலாம்.

சோயா சாஸ் மற்றும் வெஜிடேபுள் ஸ்டாக்கில் அதிக உப்பு இருக்கும் ஆகையால் உப்பின் அளவை பார்த்து போடவும்.

தோஃபுவுக்கு பதில் பனீர் அல்லது சிக்கனும் பயன் படுத்தலாம்.

மக்ரூனி வேகவைக்கும் முறை

குக்கரில் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு அதில் சிறிது உப்பு + எண்ணை சேர்த்து மக்ரூனியை சேர்த்து நன்கு கொதிக்கும் போது குக்கரை மூடி வெயிட்டை போட்டு 5 விசில் விட்டு இரக்கவும. ( விசிலுன்னு சொன்னதும் குக்கர மூடிட்டு எழுந்து நின்று வீசில் அடிக்கக்கூடாது)
ஆவி அடங்கியதும்  ( யார் ஆவின்னு கேட்கப்படாது)மெதுவாக குக்கரை திறந்து மக்ரூனியை பெரிய கண்வடிகட்டியில் வடித்து லேசாக சிங்க் டேப்புக்கு கீழ் தண்ணீரை ஓடவிட்டு லேசாக அலசி, அதில் எண்ணை சேர்த்து பிசறி வைக்கவும்.
இப்படி செய்வதால் மக்ரூனி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும்.

பாஸ்தா , மக்ரூனி எல்லாம் அரபிக், பிலிப்பைனிகள், இத்தாலியர்களில் உணவு.
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும், நாம் அதை நம் பக்குவத்துக்கு ஏற்ப சுவையாக தயாரிக்கலாம்.

விட்டமின் டீ சத்து குறைவாக இருப்பவர்கள், தோஃபு வை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்/

இன்டஸ் லேடிஸில் கிட்ஸ் லன்ச் பாக்ஸ் காக அனுப்பிய ரெசிபி இது.
Tandoori Tofu Palak Macaroni  -Step by Step

சென்னை ப்ளாசா முகநூல் பேஜ் : லைக் செய்து ஷேர் செய்யுங்கள்

சமையல் அட்டகாசங்கள் முகநூல் பேஜ்

ஆங்கில வலைதளம் : cookbookjaleela

www.chennaiplazaki.com
www.chennaiplazaik.com


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, July 25, 2015

சிறப்பு விருந்தினர் பதிவு - காயல் சிக்கன் கஞ்சி - சாமு பாத்திமா




பாரம்பரிய சமையலுடன் சிறப்பு விருந்தினர் பதிவு.

காயல் ஸ்பெஷல் சிக்கன் கஞ்சி.


சாமு பாத்திமா - இந்த காயல் கறி கஞ்சி யை நம்முடன் பகிர்ந்துகொண்டவர் கதீஜா நாசிக் என்ற சாமு பாத்திமா. அவர்கள் சொந்த ஊர் காயல் பட்டிணம். ஒரு மகள் ஒரு மகன். நோன்பிலேயே இந்த குறிப்பு போஸ்ட் பண்ண வேண்டியது முடியாமல் போய் விட்டது.


சாமு பாத்திமா முகநூல் , வாட்ஸ் அப் மூலம் அறிமுகமாகி சென்னை ப்ளசா புர்கா ஷால் , ஹிஜாப் வகைகளை காயல் பட்டிணத்தில் ஒரு மிக சிறிய ( சென்னை ப்ளாசா ) கிளையாக நடத்தி வருகிறார், காயல் பட்டிணத்து சகோதரிகள் , புர்கா, ஷால் , ஹிஜாப் தேவைப்பட்டால் fb id - &; Katheeja Nasik  katheejaa nasik ( samu fathimaa) அனுகவும்.



எழும்பில்லாத சிக்கன் அல்லது மட்டன் - 1/4 கிலோ (சிறு துண்டுகளாக இருக்கனும்) பாஸ்மதி அரிசி - 2 கப் சிறு பருப்பு - 1/2 கப் தேங்காய் பால் - 1/2 டின் எண்ணெய் மற்றும் நெய் - தேவைக்கு பட்டை ,ஏலம் - சிறிது தயிர் - 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன் வெங்காயம் - பெரியது தக்காளி - பெரியது பச்சைமிளகாய் - 1 கொத்தமல்லி இலை - 1/2 கட்டு புதினா - சிறிது ரம்பை இலை - சிறிது மசாலாதூள் - காரத்திற்கு ஏற்ப மஞ்சள்தூள் - சிறிது உப்பு - தேவைக்கு


செய்முறை விளக்கம் 

1. அரிசி பருப்பை சுத்தப்படுத்தி அதில் சிறிது வெங்காயம்,தக்காளி மஞ்சள் தூள் சேர்த்து எட்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக வைக்கவும். 

2. பாத்திரத்தில் எண்ணெய் நெய் சேர்த்து வெங்காயம்போட்டு வதங்கியதும் பட்டை ஏலம் 
3. பிறகு இஞ்சி பூண்டு விழுது தயிர், பச்சைமிளகாய், ரம்பை இலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
4. இப்போது மீதம் இருக்கும் தக்காளியை போட்டு உப்பு சிறிது சேர்த்து வதக்கி மசாலா தூள்களை சேர்க்க வேண்டும். சுத்தப்படுத்திய கறியை இப்போது சேர்க்கவும். புதினா மல்லியை சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்
. 5. அரிசி பருப்பு கலவையை ஆற வைத்து blender வைத்து நம் விருப்பத்திற்கு ஏற்ற தன்மையில் மசித்து கொள்ளவும்.இப்போது தேங்காய் பால் சேர்க்கவும். 
6. இப்போது கறி கலவையை ஸ்பூனால் அல்லது கையால் ஒன்றிண்டாக மசித்து அரிசி பருப்பு கலவையில் சேர்க்கவும். ரொம்ப கெட்டியாக வேண்டாம் என்றால் தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி அடுப்பில் சிம்மில் லேசாக கொதிக்க விட்டு மல்லி இலை தூவி ஆறியதும் பரிமாறவும்.

Note:
இதில் காய்கறி வேண்டும் என்றால் மிக்ஸ்டு வெஜ் அல்லது காரட், பீன்ஸ், உருளை சிறிதாக வெட்டி வேகவைத்து சேர்க்கலாம். விருபத்திற்கு ஏற்ப திக்காகவோ தின்னாகவோ வைக்கலாம். சாதா அரிசியிலும் செய்யலாம். பாஸ்மதி அரிசியாக இருந்தால் கூடுதல் மணமும், சுவையும் இருக்கும்.

இதையே இன்னொரு இலகுவான முறையில் செய்ய: கறியில் மசாலாத்தூள், தயிர்,உப்பு,இஞ்சி பூண்டு விழுதில் கொஞ்சம் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து விட்டு சிறிது நீர் சேர்த்து நன்றாக நீர் சுண்ட வேகவைத்து ஆறவைத்து கையால் மசித்து வைத்துக்கொள்ளவும். 

1, ல் உள்ளது போல செய்யவும். தக்காளியை முழுவதுமாகவும் வெங்காயம் பாதியகவும் சேர்த்து விடவும்
.அப்பறம் ஸ்டெப் 5 ல் உள்ளதை பின்பற்றவும் . ஸ்டெப் 
2 ல் உள்ளது போல கடைசியாக மல்லி புதினாவுடன் தாளித்து கஞ்சி கலவையில் சேர்க்கவும்.

கவனிக்க: உங்கள் ஊர் புதுமையான சமையலும் சமையல் அட்டகாசத்தில் இடம் பெறவேண்டும் என்றால் feedbackjaleela@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் சமையல் குறிப்பு தெளிவான புகைபடத்துடன் , விளக்கம் எழுதி அனுப்பவும்..



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, July 19, 2015

சிறப்பு விருந்தினர் பதிவு - காயல் ஸ்பெஷல் மஞ்சள் வாடா - மர்லி&சாமு பாத்திமா

மஞ்சள் வாடா
சிறப்பு விருந்தினர்கள் பதிவு - பாரம்பரிய சமையல்

காயல் ஸ்பெஷல் மஞ்சள் வாடா -  மர்லி&சாமு பாத்திமா
பாரம்பரிய சமையல் குறிப்பு போட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது. இது காயல் பட்டிணம் ஸ்பெஷல் மஞ்சள் வாடா, என்னடா இது வாடா போடான்னு சொல்றாங்களேன்னு நினைக்காதீங்க ஆனால் இதன் சுவையோ அட டா .

இந்த குறிப்பை மர்லி எனக்கு போன வருடமே அனுப்பி விட்டார்கள், இப்ப தான் இதை போஸ்ட் பண்ண முடிந்தது.


மர்லியும் நானும் கிட்ட தட்ட 9 வருட தோழிகள். அறுசுவை மூலம் அறிமுகமானோம், என் சமையல் குறிப்புகளை அதிகம் விரும்பி செய்வார்கள், அதில் மர்லிக்கு ரொம்ப பிடித்தது என் பகறா கானா வும் , வெஜ் மாங்காய் தால்சாவும், அடுத்து ஸ்பைசி செட்டு நாடு சிக்கன் கிரேவி.
முகநூல், இப்ப வாட்ஸஅப் என எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கு. ஊருக்கு போகும் நேரம் கண்டிப்பாக மீட் பண்ணுவோம், எங்க கடைக்கும் வந்து இருக்கிறார்கள் , வந்து புர்கா பர்சேஸ் பண்ணி சென்றார்கள்.



இதை இறால் ஸ்டப்டு அரிசிமாவு வடைன்னு சொல்லலாம்


தேவையான பொருட்கள்

 பரு அரிசிமாவு - 1 கப் 
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிது 
கீரைபொடி - சிறிது 
எண்ணெய் - பொரிக்க உப்பு - தேவைக்கு 
தண்ணீர் - 1 1/2 கப் உள்ளே

உள்ளே வைக்கும் அடக்கம் செய்ய:

வெங்காயம் - 3 மீடியம் சைஸ் (விருப்பப்பட்டால் வெங்காயத்தோடு சிறிது முட்டைகோசும் சேர்க்கலாம்) கருவேப்பிலை - சிறிது பச்சைமிளகாய் - 1
கீரைப்பொடி (வற்றல் சீரகப்பொடி) - 2 டேபிள் ஸ்பூன்
மாசித்தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
தேங்காய்ப்பூ - 3 டேபிள் ஸ்பூன்
இறால் - 10 to 15 (உப்பு மசாலா சேர்த்து வரட்டியது) 


எண்ணெய் - சிறிது உப்பு தேவைக்கு 


செய்முறை விளக்கம் 

அடக்கம் செய்யும் முறை வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பச்சைமிளகாய், கருவேப்பிலை பின் வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாடை போக நன்கு வதக்க வேண்டும். வெங்காய கலவை வெந்ததும் தீயை சுருக்கி வைக்கவும். பின்பு வரட்டிய இரால், கீரைப்பொடி, மாசித்தூள், தேங்காய்பூ சேர்த்து தீயை அணைக்கவும். (பெரிய இறாலாக இருந்தால் வெட்டியும் சிறியதாக இருந்தால் அப்படியேவும் சேர்க்கவும்.)




மேல்மாவு செய்யும் முறை:

 பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் வைத்து உப்பு , மஞ்சள்தூள், கீரைப்பொடி , தேங்காய்ப்பூ சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும். அடுப்பிலிருந்து தண்ணீரை இறக்கியவுடன் பாத்திரத்தை நல்ல டவல் வைத்து சூடுபடாமல் கவனமாக பிடித்துக்கொண்டு மாவை சேர்த்து மரக்கரன்டியால் நன்றாக கிளறிவிட்டு ஆறவைக்கவும். ஒரு சுத்தமான காட்டன் துணியை தண்ணீரில் பிழிந்து அதை ஒரு மரப்பலகையிலோ அல்லது காய்கறி போர்டிலோ விரித்துக்கொள்ளவும். அல்லது பிளாஸ்டிக் சீட் பயன்படுத்தலாம். இப்போது மாவிலிருந்து சிறு உருண்டைகளாக எடுத்து வட்டவடிவமாக சிறிதாக விரலால் தட்ட வேண்டும். இடையிடையே தண்ணீர் தொட்டு கொண்டு தட்டவும். தட்டிய ஒரு வட்டத்தில் செய்துவைத்திருக்கும் வெங்காய அடக்கத்தை நடுவில் வைத்து மற்றொரு தட்டிய வட்டத்தால் சுற்றிவர ஓரத்தைமூடவேண்டும். இதை வடிவாக தட்டுவதற்கு நேரமாகும்.
அதனால் பொறுமையை கையாளுவது முக்கியம். இரண்டு மூன்று செய்து வைத்த பிறகு மெதுவாக துணியை ஓரத்திலிருந்து தூக்கி வாடவை எடுத்து சட்டியின் பக்கவாக்கிலிருந்து எண்ணையில் போட்டு தீயை மிதமாக வைத்து பொரித்தெடுக்கவும்.

ஓரளவு முருவலாக பொரிந்ததும் எண்ணையை நன்றாக வடியவிட்டு பின்பு பரிமாறவும். மொரு மொரு க்ரிஸ்பி எம்மி வாடா ரெடி ! இதற்க்கு சரியான காம்பினேஷனானகஞ்சியோடு சாப்பிட சூப்பராக இருக்கும்.

**********************
கிழே உள்ள படம் அனுப்பியதும் செய்முறை விளக்கமும் - சாமு பாத்திமா
மற்ற ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் மர்லி என் ஜிகரி பிகரி தோஸ்த்..
அவர்களுக்கு விளக்கம் அனுப்ப நேரமில்லததால் சாமு பாத்திமா முகநூல் , வாட்ஸ் அப் மூலம் அறிமுகமாகி சென்னை ப்ளசா புர்கா ஷால் , ஹிஜாப் வகைகளை காயல் பட்டிணத்தில் ஒரு சிறிய ( சென்னை ப்ளாசா ) கிளையாக நடத்தி வருகிறார், காயல் பட்டிணத்து சகோதரிகள் , புர்கா, ஷால் , ஹிஜாப் தேவைப்பட்டால் fb id - > Katheeja Nasik  katheejaa nasik ( samu fathimaa) அனுகவும்.





காயல் ஸ்பெஷல்கீரை பொடி

தேவையான பொருட்கள்
மாசி - 150 கிராம் வத்தல்- 20 .. அவரவர் காரம் பொறுத்து... கொத்தமல்லி- 25 கிராம பெருஞ்சீரகம் - 20 கிராம் அரிசி. - கொஞ்சம்
செய்முறை 1,இவையனைத்தையும் கறுத்துவிடாமல் வெறும் சட்டியில் வறுத்து கொள்ளவும். 2,மாசியை முதலில் உரலில் போட்டு பொடித்துக் கொள்ளவும். 3,பின்பு மாசி உடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் அல்லது உரலில் போட்டும் இடித்தும் வைக்கலாம் 4,அரைத்த பின்பு ஒரு பேப்பரில் தட்டி ஆற விடவும். 5, பின்பு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைத்து தேவைக்கு ஒரிரு ஸ்பூன் பயன்படுத்தவும்.

இது ஆறுமாதம் வரை கொடாமல் இருக்கும். காற்று புகாத டப்பாவில் அடைத்து உபயோகிக்கவும். கீரை, பொரியல்(கேரட்,பீன்ஸ், பீட்ரூட், முட்டைக் கோஸ்,வெண்டைக்காய்,பீர்க்கங்காய்,முள்ளங்கி) செய்யும் பொழுது இதை கடைசியில் சேர்க்கலாம். நல்ல வாசனையாக இருக்கும். இது சேர்ப்பதால் நல்ல மணமும் ருசியும் கிடைக்கும்.மாசி விரும்பாதோர் அதை சேர்க்காமல் இந்த பொடியை தயார் செய்து கொள்ளலாம். வடை, பக்கோடா, வாடா , பெட்டீஸ் செய்யும் பொழுதும் மணத்திற்கு சேர்த்துக் கொள்ளலாம்.மாசிச் சம்பல்,மாசியாணத்திற்கும் இந்தப் பொடியை பயன்படுத்தலாம்.


உங்கள் பாரம்பரிய சமையல் குறிப்பும் என் சமையல் அட்டகாசத்தில் இடம் பெறும் வேண்டுமென்றால் தெளிவான சமையல் குறிப்பு படத்துடன் விளக்கமும் , உங்களை பற்றி அறிமுகத்துடன் எனக்கு feedbackjaleela@gmail.com இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


சென்னை ப்ளாசா முகநூல் பேஜ் : லைக் செய்து ஷேர் செய்யுங்கள்

சமையல் அட்டகாசங்கள் முகநூல் பேஜ்

ஆங்கில வலைதளம் : cookbookjaleela

www.chennaiplazaki.com
www.chennaiplazaik.com



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, July 18, 2015

பிஸ்தா ப்ளேவர் ஷீர் குருமா - Eid Mubarak - 2015



Assalamu alaikkum
Eid Mubarak to My Family and Friends.
17.07.15

ஈத் ஸ்பெஷல் ஷீர் குருமா .


பிஸ்தா ப்ளேவர் ஷீர் குருமா.
ஷீர் குருமா இல்லாத ஈத் பெருநாளா வூ ஹூம் இது என் எனக்கு ரொம்ப பிடிச்ச பாயாசம், ஷீர் குருமா என்று உருது பேசும் முஸ்லீம்கள் சொல்வார்கள், பாக்கிஸ்தானியர்களின் பாரம்பரிய பாயாசம். இதற்கென நூல் போல உள்ள ரோஸ்ட் சேமியாவில் செய்தால் தான் மிக அருமையாக வரும்.
http://cookbookjaleela.blogspot.com/2010/12/sheer-kuruma.html
இந்த பிஸ்தா எசன்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சது. சென்னையில் கிடைக்கிறது. பிஸ்தா + இலாச்சி எசன்ஸ். இதே தான், கடல் பாசி, ஐஸ்கிரீம் எல்லாத்துக்கும் போடுவது. ரொம்ப நல்ல இருக்கும் .இதை சாப்ரான் மட்டும் சேர்த்தும் செய்யலாம். நல்ல நேச்சுரல் மஞ்சள் கலரில் பார்க்க அழகாக இருக்கும், இன்று எங்க வீட்டுக்கு வந்த 8 மாத சுட்டிபையனுக்கும் இது ரொம்ப பிடித்து விட்டது.
http://cookbookjaleela.blogspot.com/2010/12/sheer-kuruma.html
சமையல் அட்டகாச வாசகர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள் .
நீங்களும் சுவைத்து ருசித்து இதன் சுவையை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 
இன்று இந்த ஷீர் குருமாவை செய்பவர்கள்
சாதியா - துபாய்
பஷீரா - சென்னை
ரஹ்மத் - ஹூஸ்டன்

இன்னும் யார் யார் இதை செய்கிறீர்களோ அதை படம் பிடித்து எனக்கு இந்த feedbackjaleela@gmail.com   மெயில் ஐடிக்கு அனுப்புங்கள். 






தேவையானவை
பால் - அரைலிட்டர்
ஏலக்காய் - 3பிஸ்தா -  50கிராம்
ஏலக்காய் & பிஸ்தா எசன்ஸ் – 2 துளி (அல்லது) பச்சை வண்ண கலர்
பொடி சேமியா – கைக்கு இரண்டு கைப்பிடி (ஷீர் குருமா சேமியா)
சர்க்கரை - 100 கிராம்
மில்க்மெயிட்100 மில்லி
முந்திரி - தலாஐந்து
கிஸ்மிஸ்பழம்- 8
நெய் - முன்றுதேக்கரண்டி
அலங்கரிக்க
பிஸ்தா பிலேக்ஸ் – 1தேக்கரண்டி
Sheer kurma semiya ( thin threaded semiya)


செய்முறை



ஒருதேக்கரண்டி நெய்ஊற்றி பொடிசேமியாவை கருகாமல்வறுத்து கொள்ளவும்.பிஸ்தாவை வெண்ணீரில் ஊறவைத்து அரைத்து வைக்கவும்.
முந்திரியை பொடியாக அரிந்து நெய்யில் வறுத்து கடைசியாக கிஸ்மிஸ் பழத்தையும் போட்டு வறுத்து எடுத்துவைக்கவும்.
பாலைஏலக்காய்சேர்த்துசிறிதுவற்றவிட்டால்போதும்காய்ச்சவும்.
பால் சிறிது வற்றியதும் அரைத்த பிஸ்தாவை சேர்த்துகாய்ச்சவும்காய்ச்சிசேமியாவைசேர்த்துகொதிக்கவிடவும்.சர்க்கரைமில்க்மெயிட்டைஊற்றி கலக்கி அடிபிடிக்காமல் கொதிக்க விட்டு இரக்கவும்


வறுத்து வைத்துள்ள  முந்திரி, கிஸ்மிஸ் பழத்தை கடைசியாக தூவி இரக்கவும் .
பரிமாறும் பாத்திரத்தில் மாற்றி சிறிதுபிஸ்தா பிளேக்ஸ் தூவி பரிமாறவும்.
சுவையான பிஸ்தா ப்ளேவர் ஷீர் குருமா ரெடி.

இது  பாக்கிஸ்தானியர்களின்  பாரம்பரியமாக தாயாரிக்கும் பாயாசமாகும்இது நம்ஊரிலும் ஈத் நாட்களில் இஸ்லாமிய இல்லங்களில்செய்வார்கள். ஷீர் குருமாகென சேமியா மெல்லியதாக நூல் போல இருக்கும்.அதை பார்த்து வாங்க வேண்டும்.





Eid Mubarak - 17th July 2015
Eid Special - Sheer Kurma, vermicelli payasam


இந்த டம்ளரில் இருக்குஷீர் குருமா ஸாதிகா அக்காவுக்கு பார்சல்.

குங்குமம் தோழியில்( ஜூன் 30 ந்தேதி ) 2015  ரமலான் ஸ்பெஷல் 30 நாள் வெஜ் ரெசிபியில்வெளியான குறிப்புகளில் இதுவும் ஒன்று.


இன்று ரமலான் மெனு
காலை
மட்டன் சேமியா
சாப்ரான் ப்ளேவர் ஷீர் குருமா
மதியம்
குலோப் ஜாமூன்
மட்டன் கல்யாண பிரியாணி
எண்ணை கத்திரிக்காய்
தயிர் பச்சடி
வெஜ் சாலட்
கே எப் சி சாலட்
மாம்பழம்


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/