கடல்பாசியில் சர்க்கரை மற்றும் கண்டெண்ட் மில்க் சேர்த்து செய்வோம், சர்க்கரை வியாதிகாரகள் அதிகமாக சாப்பிட முடியாது அதற்கு என்ன செய்யலாம். ஒரு சேன்ஞ் க்கு கருப்பட்டி சேர்த்து செய்யலாம்.
தேவையான பொருட்கள்
இளநீர் - ஒன்னறை கப்
தண்ணீர் - ஒன்னறை கப்
கடல் பாசி - கைக்கு ஒரு பெரிய கைப்பிடி
கருப்பட்டி வெல்லம் - 100 கிராம் ( தேவைக்கு கூட்டி போட்டுகொள்ளலாம்)
இளநீர் தேங்காய்
உப்பு - அரை சிட்டிக்கை
செய்முறை
கருப்பட்டியை சிறிது தண்ணீரில் தூள் செய்து போட்டு காய்ச்சி வடிக்கட்டி வைக்கவும்.
தண்ணீரில் கடல் பாசியை உதிர்த்துபோட்டு 10 நிமிடம் ஊறவைத்து நன்கு கரைய காய்ச்சவும்.
இளநீரையும் , கருப்பட்டியை சேர்த்து ஊற்றி காய்ச்சி ஒரு பெரிய தாம்பூல தட்டில் ஊற்றி இளநீர் தேங்காயை பரவலாக தூவி விட்டு ஆறவைத்த்து குளிரூட்டியில் வைத்து குளிர வைத்து தேவைக்கு துண்டுகள் போட்டு சாப்பிடவும்.
Tweet | ||||||
4 கருத்துகள்:
செய்து பார்க்கிறோம் சகோதரி...
தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் அளித்து விட்டேன்... நன்றி...
உங்கள் தொடர் வருகைக்கு மிக நன்றி தனபாலன் சார்.
பார்க்கவும் அழகு, ருசிக்கவும் அழகாத்தான் இருக்கணும் :-)
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா