பாரம்பரிய சமையலுடன் சிறப்பு விருந்தினர் பதிவு.
காயல் ஸ்பெஷல் சிக்கன் கஞ்சி.
சாமு பாத்திமா - இந்த காயல் கறி கஞ்சி யை நம்முடன் பகிர்ந்துகொண்டவர்
கதீஜா நாசிக் என்ற சாமு பாத்திமா. அவர்கள் சொந்த ஊர் காயல் பட்டிணம். ஒரு மகள் ஒரு மகன். நோன்பிலேயே இந்த குறிப்பு போஸ்ட் பண்ண வேண்டியது முடியாமல் போய் விட்டது.
சாமு பாத்திமா முகநூல் , வாட்ஸ் அப் மூலம் அறிமுகமாகி சென்னை ப்ளசா புர்கா ஷால் , ஹிஜாப் வகைகளை காயல் பட்டிணத்தில் ஒரு மிக சிறிய
( சென்னை ப்ளாசா ) கிளையாக நடத்தி வருகிறார்,
காயல் பட்டிணத்து சகோதரிகள் , புர்கா, ஷால் , ஹிஜாப் தேவைப்பட்டா
ல் fb id - &; Katheeja Nasik katheejaa nasik ( samu fathimaa) அனுகவும்.
எழும்பில்லாத சிக்கன் அல்லது மட்டன் - 1/4 கிலோ (சிறு துண்டுகளாக இருக்கனும்) பாஸ்மதி அரிசி - 2 கப் சிறு பருப்பு - 1/2 கப் தேங்காய் பால் - 1/2 டின் எண்ணெய் மற்றும் நெய் - தேவைக்கு பட்டை ,ஏலம் - சிறிது தயிர் - 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன் வெங்காயம் - பெரியது தக்காளி - பெரியது பச்சைமிளகாய் - 1 கொத்தமல்லி இலை - 1/2 கட்டு புதினா - சிறிது ரம்பை இலை - சிறிது மசாலாதூள் - காரத்திற்கு ஏற்ப மஞ்சள்தூள் - சிறிது உப்பு - தேவைக்கு
செய்முறை விளக்கம்
1. அரிசி
பருப்பை சுத்தப்படுத்தி அதில் சிறிது வெங்காயம்,தக்காளி மஞ்சள் தூள் சேர்த்து எட்டு கப்
தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக வைக்கவும்.
2. பாத்திரத்தில் எண்ணெய் நெய் சேர்த்து
வெங்காயம்போட்டு வதங்கியதும் பட்டை ஏலம்
3. பிறகு இஞ்சி பூண்டு விழுது தயிர், பச்சைமிளகாய், ரம்பை இலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
4. இப்போது
மீதம் இருக்கும் தக்காளியை போட்டு உப்பு சிறிது சேர்த்து வதக்கி மசாலா தூள்களை
சேர்க்க வேண்டும். சுத்தப்படுத்திய கறியை இப்போது சேர்க்கவும். புதினா மல்லியை
சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக
விடவும்
.
5. அரிசி
பருப்பு கலவையை ஆற வைத்து blender
வைத்து நம்
விருப்பத்திற்கு ஏற்ற தன்மையில் மசித்து கொள்ளவும்.இப்போது தேங்காய் பால்
சேர்க்கவும்.
6. இப்போது கறி
கலவையை ஸ்பூனால் அல்லது கையால் ஒன்றிண்டாக மசித்து அரிசி பருப்பு கலவையில்
சேர்க்கவும். ரொம்ப கெட்டியாக வேண்டாம் என்றால் தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு
கலக்கி அடுப்பில் சிம்மில் லேசாக கொதிக்க விட்டு மல்லி இலை தூவி ஆறியதும்
பரிமாறவும்.
Note:
இதில் காய்கறி வேண்டும் என்றால் மிக்ஸ்டு வெஜ் அல்லது காரட், பீன்ஸ், உருளை சிறிதாக வெட்டி வேகவைத்து சேர்க்கலாம்.
விருபத்திற்கு ஏற்ப திக்காகவோ தின்னாகவோ வைக்கலாம். சாதா அரிசியிலும் செய்யலாம்.
பாஸ்மதி அரிசியாக இருந்தால் கூடுதல் மணமும், சுவையும் இருக்கும்.
இதையே இன்னொரு இலகுவான முறையில் செய்ய: கறியில் மசாலாத்தூள், தயிர்,உப்பு,இஞ்சி பூண்டு விழுதில் கொஞ்சம் போட்டு சிறிது
நேரம் ஊறவைத்து விட்டு சிறிது நீர் சேர்த்து நன்றாக நீர் சுண்ட வேகவைத்து ஆறவைத்து
கையால் மசித்து வைத்துக்கொள்ளவும்.
1, ல் உள்ளது போல செய்யவும். தக்காளியை
முழுவதுமாகவும் வெங்காயம் பாதியகவும் சேர்த்து விடவும்
.அப்பறம் ஸ்டெப் 5 ல் உள்ளதை பின்பற்றவும் . ஸ்டெப்
2 ல் உள்ளது போல கடைசியாக மல்லி புதினாவுடன்
தாளித்து கஞ்சி கலவையில் சேர்க்கவும்.
கவனிக்க: உங்கள் ஊர் புதுமையான சமையலும் சமையல் அட்டகாசத்தில் இடம் பெறவேண்டும் என்றால் feedbackjaleela@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் சமையல் குறிப்பு தெளிவான புகைபடத்துடன் , விளக்கம் எழுதி அனுப்பவும்..
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
1 கருத்துகள்:
kayalpattinam recipes are very nice. Kanji looks delicious.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா