Hyderabadi Biriyani
Traditional Hyderabadi Biryani - Nawab Mehboob Alam Khan Cooking Hyderabadi Biryani
பிரியாணி அந்த காலத்தில் எங்க வீடுகளிலும் பெரிய வெண்கல பானையில் ( இதை நாங்க தேக்ஷா என்போம்) தான் செய்வோம்.அதுதான் உடலுக்கு ஆரோக்கியமும் கூட.
எங்க வீட்டு பெண்களுக்கு திருமணம் செய்து அனுப்பும் போது சீர் வருசையுடன் கண்டிப்பாக இந்த தேக்ஷா 1 படி , 3 படி , 5 படி என்ற கணக்கில் குடும்பத்தில் உள்ள நபர்களை பொறுத்து வாங்கி கொடுப்போம்.
எங்க டாடியும் எனக்கு 5 படி தேக்ஷா வாங்கி கொடுத்தார்கள்.இப்ப காலம் மாறி போச்சு தேக்ஷா யாரும் வாங்குவதில்லை.
ஒரு பெரிய விஷேஷம் என்றால் தெருவில் முன்று கால் இரும்பு அடுப்பு நிறுத்தி கரி கங்காக்கி அதில் தான் செய்வோம். சின்ன சின்ன பங்ஷன் களுக்கும் வீட்டின் வெளியில் வைத்து தான்அதற்கென பிரத்யேகமாக மிகவும் அனுபவம் வாய்ந்த சமயனாக்களை வைத்து செய்வோம். பெரிய கல்யாணங்களுக்கும் இப்படி தான் இன்னும் செய்து வருகிறோம். இதன் சிறப்பு அம்சம், தம் போடுவது தான் மெயின் கிழே கங்கு எரிந்து கொண்டு இருக்கும், சாதம் கறி எல்லாம் சேர்த்து அடுப்பில் ஏற்றி தாளித்ததும் மூடி போட்டு மேலே மூடி மேலே நல்ல வெயிட்டான கல் மற்றும் கிழே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை எடுத்து போட்டு தம் போடுவோம். கிழே அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டில் சாதம் வேகும்.
இதன் வாசனை கேட்கவே வேண்டாம் எட்டு தெருவுக்கு அந்த வாசனை எட்டும்.
பிரியாணிக்கு மட்டன் எலும்புடன் போட்டால் தான் அதன் ருசி அபாரமாக இருக்கும்.இதை நான் வீடியோவாக எடுத்து விட்டேன். சில தவறுகள் இருக்கு . அட்ஜஸ்ட் செய்து பார்த்துகொள்ளுங்கள்.
இதில் செஃப் சொன்ன மெதட் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு ,
சாப்ரானை ( குங்குமபூவை) பாலில் காய்ச்சி சேர்ப்பது, வெங்காயம் பொரித்த எண்ணையில் மேரினேட் செய்வது மற்றும் வடித்த கஞ்சியுடன் பொரித்த வெங்காய எண்ணையை சேர்த்து தம் போடும் போது மேலே ஊற்றுவது. சிலருக்கு அப்படியே தம் போட்டால் வேகுமா வேகாதா என்ற சந்தேகம் வேண்டாம். மேரினேட் செய்து போடும் தம்மிலேயே நல்ல வெந்துவிடும், பப்பாளி காய் அரைத்த பேஸ்ட் சேர்த்து மட்டனில் மேரினேட் செய்வதுதான் இதில் மிக முக்கியம்.
பிரியாணி செய்யும் விதம்
பிரியாணி தம் போடும் விதம்
Traditional Hyderabadi Biriyani
How to make Hyderabadi Mutton Biriyani -
பாரம்பரிய சமையல்
ஹைதராபாத் மட்டன் பிரியாணி
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா