மாதுளை பழம் கர்பிணி பெண்களுக்கு மிகவும் உகந்தது, கேன்சர் நோயை கட்டு படுத்தும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நிவர்த்தி செய்யும்.
மலட்டு தன்மை நீங்க ஆண் பெண் இருவரும் ஆறு மாதங்கள் தொடர்ந்து மாதுளை முத்துகளை சாப்பிட்டு வர குழந்தை பேறு உண்டாகும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
இரத்த சோகையை சீராக்கும். வாய் புண் மற்றும் வயிற்று புண்ணை ஆற்றும்.
Pome cooler with Roo afsha & Saffron
தேவையான பொருட்கள்
தண்ணீர் - 200 மில்லி
உப்பு - ஒரு சிட்டிக்கை
சர்க்கரை - தேவையான அளவு
மாதுளை - 4 பழங்கள்
ரூ ஆப் ஷா எசன்ஸ் - ஒரு பெரிய குழி கரண்டி
சாஃப்ரான் ( குங்குமப்பூ) - அரை தேக்கரண்டி
ஐஸ் கட்டிகள் - தேவைக்கு
செய்முறை
மாதுளை முத்துக்களை பிரித்து எடுத்து மிக்சியில் போட்டு அதனுடன் ஐஸ் கட்டிகள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடிக்கவும்.
ஜூஸை ஒரு மஸ்லின் துணி அல்லது வடிகட்டியில் வடிக்கவும்.
சாஃப்ரானை ஒரு மேசைகரண்டி சூடான வெண்ணீரில் ஊறவைக்கவும்.
வடித்த ஜூஸுடன் சாப்ரான் மற்றும் ரூஆப்ஷா எசன்ஸை சேர்த்து தேவைக்கு ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறவும்.
மாதுளை ஜூஸ், சாஃப்ரான் ப்லேவர் மாதுளை ஜுஸ், ரூ ஆப் ஷா மாதுளை ஜுஸ், ஹெல்தி டிரிங்,
Tweet | ||||||
2 கருத்துகள்:
Super...!
அருமையான ஜூஸ்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா