Showing posts with label டிபன் அயிட்டம். Show all posts
Showing posts with label டிபன் அயிட்டம். Show all posts

Thursday, February 20, 2020

10 ராஜ்மா ரெசிப்பிகள் - அவள் கிச்சன் - பிப்ரவரி 2020 - Aval Kitchen



என்னுடைய 10 வகையான ராஜ்மா ரெசிபிகள் அவள் கிச்சனில் பிப்ரவரி மார்ச் இதழில் வெளியாகி உள்ளது.

எல்லா ரெசிபிகளையும் இங்கு பிளாக்கிலும் யுடியுபிலும் கூடிய விரைவில் பகிர்கிறேன்.

Aval Kitchen
பத்திரிக்கை, ராஜ்மா, சைவம், டிபன் அயிட்டம், டிபன் வகைகள், சூப், சாலட் வகைகள், பக்க உணவு




10 ராஜ்மா ரெசிப்பிகள் - அவள் கிச்சன் - பிப்ரவரி 2020 

My 10 Veg recipes, Rajma Special l has been published in Aval Kitchen Magazine (Tamil) on 1st February 2020).
#Rajma, Cancer cure
#Rajma uppuma common south Indian Tiffin
#Rajma pizza for kids and lunch box-ராஜ்மா பிட்சா சாண்ட்விச்
#Rajma mini Burger for kids lunch box/ராஜ்மா மினி ஸ்லைடர்
#Rajma Soup for all age groups and weight loss
#Rajma masala (saurashtira style)ராஜ்மா மசாலா (சௌராஷ்டிர முறை)
#Ramja puli kuzambu/ராஜ்மா புளிக்குழம்பு
#Rajma salad Weight loss/கலர்ஃபுல் ராஜ்மா சாலட்
#Rajma Paratha /ராஜ்மா பராத்தா
#Rajma cutlets for parties/ராஜபோக ராஜ்மா கட்லெட்
#Rajma Pulav common Festival Veggie Food for functions-ராஜ்மா புலாவ்
Thank you very much Aval Vikatan team for giving me the opportunity.







https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, November 3, 2018

பாலக் மட்டன் பாஸ்தா - Palak Mutton Pasta





காலை உணவோ அல்லது ,லன்ச் பாக்ஸ் கோ, அல்லது இரவு உணவோ ஈசியா செய்துடலாம் பாஸ்தா, குழந்தைகளுக்கும் இந்த வடிவம் அவர்களை சாப்பிட தூண்டும். இதை மட்டன் மற்றும் சிக்கன் அல்லது இறால் போன்றவையுடன் செய்து கொடுக்கலாம். இல்லை விருப்பமான காய்கறிகள் சேர்த்தும் பனீர் சேர்த்தும் செய்யலாம்.


Ingredients 

வெந்த மட்டன் துண்டுகள் - 6
போ வடிவ பாஸ்தா - 2 கப்
பாலக் கீரை - 1 கப்
வால் நட் - 3
பச்சமிளகாய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 2 பல்
வெங்காயம் - 1 
பட்டர் + எண்ணை - 2 தேக்கரண்டி
உப்பு தேவைக்கு

#Pasta#Lunchboxrecipes , #பாஸ்தா #மக்ரூனி, டிபன், #இரவுஉணவு.


செய்முறை

பாஸ்தாவை தனியாக வேகவைத்து தண்ணீரை வடித்து சிறிது எண்ணை சேர்த்து பிசறி வைக்கவும்.

பாலக்கீரையை வேகவைத்து தண்ணீரைவடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி தண்ணீரை வடிகட்டவும்.

பாலக் கீரையுடன் வால்நட், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சமிளகாய், சேர்த்து அரைக்கவும்.

குக்கரில் எண்ணை+ பட்டர் சேர்த்து அரைத்த விழுது மற்றும்உப்பு சேர்த்து நன்கு  கிளறி ,மட்டன் துண்டுகளை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் வேகவைக்கவும்.

கீரை + மட்டன் ஒன்று சேர்ந்து சிறிது நேரம் வெந்ததும். வெந்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளறி மேலும் 5 நிமிடம் வேகவிட்டு இரக்கவும்.காலை டிபனுக்கு ஏற்ற சுவையான சத்தான மட்டன் பாலக் பாஸ்தா ரெடி.

கவனிக்க:மட்டனில் மிளகாய் தூள்கால் தேக்கரண்டி, மஞ்சள் தூள் சிட்டிக்கை, உப்புகால் தேக்கரண்டி, இஞ்சி பூண்டுகால் தேக்கரண்டி சேர்த்து வேகவைத்து கொள்ளவும்..இதை மீதியான பொரிச்ச கறியிலும் செய்யலாம்.
குழந்தைகளுக்கு பள்ளிக்கு எடுத்துசெல்ல சத்தான பாலக் மட்டன் பாஸ்தா.



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, March 4, 2017

பாலக் பனீர் மீட் பால் சம்மூன் / Palak Paneer Meat Ball Samoon (Veg Recipe)


பாலக் பனீர் மீட் பால் சம்மூன்

தேவையான பொருட்கள்

பாலக் கீரை – இரண்டு கப் பொடியாக நறுக்கியது
பனீர் – 100 கிராம்
இஞ்சி  - ஒரு மேசைகரண்டி துருவியது
பச்சமிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
கொத்துமல்லி தழை – ஒரு கைப்பிடி பொடியாக நறுக்கியது
கடலை மாவு – கால் கப்
ப்ரட் கிரம்ஸ் – இரண்டு மேசைகரண்டி
வெங்காயம் – ஒன்று பொடியாக நறுக்கியது
கரம் மசாலா பொடி – அரை தேக்கரண்டி


செய்முறை

பனீரை உதிர்த்து கொள்ளவும், பாலக்கீரை, இஞ்சி, பச்சமிளகாய், கொத்துமல்லி தழை வெங்காயம் அனைத்தையும் ஒன்றாக கலந்து கடலைமாவு, கரம் மசாலா மற்றும் ப்ரட் கிரம்ஸ் சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகளாக பிடிக்கவும்.
வாயகன்ற கிடாயில் எண்ணையை காயவைத்து உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

சம்மூன் என்னும் லாங் பண் ல் டொமேட்டோ கெட்சப் தடவி கேரட் லெட்டியுஸ் இலை வைத்து பொரித்த பாலக் பனீர் பாலை வைத்து பரிமாறவும்.
சுவையான சமூன் பாலக் பனீர் மீட்பால் சாண்ட்விச் ரெடி.

போன வருடம் நோன்பு கால ரெசிபி குங்குமம் தோழியில் வெளிவந்த ரெசிபி



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, February 2, 2014

பிரியாணி மசாலா கிங்பிஷ் ஃப்ரை - King Fish Fry with Biriyani Masala



 உடல் எடை குறை க்க நினைப்பவர்களுக்கு இது ஒரு அருமையான சுவையான டயட் மெனு. உணவு வகைகளில் மீன் உணவு தான் வெயிட் போடாதாது, எந்த நாடுகளுக்கு போனாலும் கடல் உணவான மீன் உணவை (ஹாலால்) பயமில்லாமல் சாப்பிடலாம். எனக்கு உணவு வகைகளில் மிகவும் பிடித்தமானது மீன் உணவு தான். எனக்கு வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மீன் சாப்பிட்டே ஆகனும்.இது வரை பல விதத்தில் செய்தாச்சு. போஸ்டிங் போட தான் நேரம் கிடைக்க வில்லை.



Diet Menu -1

Diabetic Chappathi
Beetroot Channa Dhal kuuttu
King Fish Fry with Biriyani masala
salad




தேவையான பொருட்கள்

சீலா மீன் - 7 துண்டுகள்


மிளகாய் தூள் - 1 மேசைகரண்டி
லெமன் சாறு - 2 மேசை கரண்டி
உப்பு - முக்கால் தேக்கரண்டி (அவரவர் ருசிக்கேற்றவாறு)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னறை  தேக்கரண்டி

கார்ன் ப்ளார் பவுடர் - இரண்டு மேசைகரண்டி


ஆலிவ் எண்ணை மீன் பொரிக்க தேவையான அளவு ( 5தேக்கரண்டி)







மேற்கண்ட அனைத்து மசாலாக்களையும்  (எண்ணை + மீன் ) தவிர சிறிது தண்ணீர் விட்டு நன்கு பேஸ்டாக்கி மீனில் இருபுறமும் தடவி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.



வாயகன்ற நான் ஸ்டிக் பேனில் எண்ணையை சூடாக்கி தீயின் தனலை மிதமாக வைத்து கருகாமல் இருபுறமும் பொரித்து எடுக்கவும்.

பொடி செய்து செய்யும் மசாலாவின் சுவையே தனி தான். வழக்கமாக சாப்பிடும் பொரிச்ச மீனின் சுவையை விட இது சிறிது வித்தியாசமாக இருக்கும்.


 https://w
ww.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, December 16, 2012

கேரட் முர்தபா - Carrot Muthapa



 முர்தபா முட்டை அல்லது கறி கீமா, சிக்கன் கீமா , மீன் கீமாவில் செய்வது ஸ்டப்டு பரோட்டா. இதை ஆபிஸ் , குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸ்க்கு இப்படி வெஜ் முர்தபா செய்து கொண்டு செல்லலாம்.

கேரட் முர்தபா  : பரிமாறும் அளவு - 3 நபர்களுக்கு அல்லது  இரண்டு நபர்களுக்கு 
மிகவும் சத்தானது + பவர் பேக் காலை உணவு.




இப்போது கடையில் ரெடிமேட் சப்பாத்தி, ரொட்டிகள், பரோட்டாக்கள் அதிகம் கிடைக்கின்றன. பொரியல் நிறைய செய்து கொண்டு அதை வாங்கி நடுவில் வைத்து இப்படி மடித்தும் செய்யலாம் இன்னும் வேலை சுலபமாக முடிந்து விடும்.




பரோட்டா தயாரிக்க: 
மைதா அல்லது கோதுமை -  1 டம்ளர்
உப்பு - தேவைக்கு
தண்ணீர்
நெய் (அ) பட்டர் - 1 மேசைகரண்டி
சர்க்கரை - ஒரு தேகக்ரண்டி



கேரட் பொரியல் : 3 குழிகரண்டி

அலங்கரிக்க :  வட்டமாக அரிந்த கேரட்





செய்முறை

ஒரு வாயகன்ற பவுளில் மைதா, சர்க்கரை, உப்பு , பட்டர் சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து பரோட்டாவிற்கு மாவு குழைக்கவும்.
குழைத்ததை 10 நிமிடம் ஊறவைக்கவும்


மாவை உருண்டைகளாக போடவும்/

ஒரு உருண்டையை வட்டவடிவமாக திரட்டி நடுவில் ஒரு குழிகரண்டி அளவு கேரட் பொரியலை வைத்து நாலாபக்கமும் மடித்து தவ்வாவில் பட்டர் அல்லது நெய் விட்டு சுட்டு எடுக்க்கவும்.
காலை டிபனுக்கு இது ஒன்று சாப்பிட்டாலே போதுமானது, நல்ல பில்லிங்காக இருக்கும்.


டிஸ்கி: சின்ன வயதில் எங்க லஞ்ச் பாக்ஸ் அம்மா ரொட்டி , பீட்ரூட் கடலை பருப்பு பொரியல் போல செய்து கொடுப்பாங்க வாரம் ஒரு நாள் அது தான்.

என் பிள்ளைகளுக்கு கேரட் தான் ரொம்ப பிடிக்கும் ஆகையால் நான் அவர்களுக்கு இது போல் செய்வது.
மிகவும் சத்தானது + பவர் பேக் காலை உணவுன்னு சொல்லலாம்.


.

Linking to  my own Event - Bachelor's Feast.



Sunday, December 9, 2012

தக்காளி சட்னி, தோசை ரோல் - Tomato Chutney Dosa Roll




 




தக்காளி சட்னி
வதக்கி அரைக்க
பழுத்த தக்காளி – 2
காஷ்மீரி சில்லி பவுடர் – ¼ தேக்கரண்டி
பூண்டு – 1 பல்
வெல்லம் – சிறிய துண்டு
உப்பு -1/4 தேகக்ரண்டி
எண்ணை – ½ தேக்கரண்டி
தாளிக்க
எண்ணை ¼ தேக்கரண்டி
கடுகு – ¼ தேக்கரண்டி
கருவேப்பிலை – 5 இதழ்
தோசை மாவு : 3 குழிகரண்டி





தக்காளியை பொடியாக அரிந்துவைக்கவும்.
ஒரு வாயகன்ற பேனில் எண்ணையை ஊற்றி வதக்கி அரைக்க்க கொடுத்துள்ளவைகளை வதக்கி ஆறவைத்து அரைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து அரைத்த தக்காளி கலவையில் சேர்க்கவும்.

தவ்வாவை சூடு படுத்தி தோசையை சுட்டு சுற்றிலும் சிறிது நெய் ஊற்றி தக்காளி சட்னியை தடவி சுருட்டவும்.

 அப்படியே லஞ்ச் பாக்ஸ் க்க்கு எடுத்து செல்லலாம். தோசையில் தக்காளி சட்னி ஊறி சாப்பிட பஞ்சுபோல் இருக்கும்.

 





Linking to Nithu's Healthy kids for Healthy diet - wraps and roll Hosted by asiya  and my own Event - Bachelor's Feast.

Tuesday, December 4, 2012

நியுடெல்லா நட்ஸ் தோசை ரோல் -Nutella Nuts Pancake Roll





ஹனீபுக்கு  ரொம்ப பிடிச்சது நியுட்டெல்லா ரொம்ப ஈசியாக ரொட்டி, சப்பாத்தி, குபூஸ், இட்லி தோசை, பூரி எதில் வேண்டுமானலும் தடவி காலை உணவிற்கோ அல்லது பள்ளிக்கோ கொடுத்து அனுப்பி விட்டால் போதும் அன்று முழுவதும் ரொம்ப சந்தோஷம்.
 

பிள்ளைகளுக்கு எல்லாம் பிடித்தது ஆனால் பெரியவர்களும் சில
நேரம்  ஈசியா இப்படி செய்து சாப்பிடலாம்.


தேவையானவை

தோசை மாவு - 2 குழிகரண்டி

நியுடெல்லா - 2 மேசைகரண்டி

பொடியாக நறுக்கிய முந்திரி 2 மேசைகரண்டி

நெய்+ எண்ணை - 2 தேக்கரண்டி


தோசை தவ்வாவை சூடாக்கி தோசையை வார்த்து சுற்றிலும் நெய் விட்டு மொறுகியதும் மேலே நியுடெல்லாவை தடவி முந்திரியை தூவி சுருட்டவும்.










இது இட்லிக்கு வைத்து மதிய லஞ்ச்க்கு கொடுத்தனுப்பியது


டிஸ்கி: இது பேச்சுலர்களுக்கும் சுலபமாக செய்து சாப்பிடலாம். தோசை மாவு இல்லை என்றால் , கோதுமை தோசை , மைதா தோசையில் இப்படி செய்து சாப்பிடலாம்.நட்ஸ், பிஸ்தா, பாதம் , வால்நட் எதுவேண்டுமானலும் பொடியாக அரிந்து தூவு சுருட்டலாம்

 
ரெடி மேட் தோசைமாவும் கிடைக்கிறது , பேச்சிலர்கள் அவசரத்துக்கு இப்படி சாப்பிட்டு கொள்ளலாம்.


பரிமாறும் அளவு : 1 நபருக்கு

ஆயத்த நேரம் : 3 நிமிடம்

சமைக்கும் நேரம் - 4 நிமிடம்

இதை என் பேச்சுலர் ஈவண்டுக்க்கு இணைக்கிறேன்
 
 
 
Linking to nithu;s healthy food for healthy kids hosted by Asiya.
 
 

Thursday, November 22, 2012

லெமன் இடியாப்பம் - Lemon Idiyappam

லெமன் இடியாப்பம்



தேவையானவை
இடியாப்பம் – 3
லெமன் – அரை பழம்

தாளிக்க
எண்ணை + நெய் – 2 தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
முந்திரி (அ) வேர்கடலை – 5
கடலை பருப்பு+உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
பச்ச மிளகாய் – 2
உப்பு – அரை தேக்கரண்டி
பால் – சிறிது
கருவேப்பிலை – 5 இதழ்


செய்முறை
லெமனை பிழிந்து ஒரு மேசைகரண்டி தண்ணீர் சேர்த்து அதில் மஞ்சள் தூள் கலக்கி வைக்கவும்.
இடியாப்பத்தில் சிறிது பாலை தெளித்து உதிர்த்து வைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து லெமன் கலவை மற்றும் இடியாப்பத்தை சேர்த்து நன்கு வதக்கி இரக்கவும்.


ஆயத்த நேரம் – 10 நிமிடம்
சமைக்கும் நேரம் – 7 நிமிடம்
பரிமாறும் அளவு – 1 நபருக்கு

*****************************




இந்த குறிப்பை, இங்கு நான் நடத்தும் பேச்சுலர் ஈவண்டுக்கு இணைக்கிறேன்.


Sunday, November 4, 2012

ப்ரவுன் ரைஸ் வாழைபழ அடை - Brown Rice Banana Pancake

ப்ரவுன் ரைஸ் வாழைபழ அடை

தேவையானவை.


ப்ரவுன் அரிசி - 100 கிராம்
மைதா - 100 கிராம்
வெல்லம் - இரண்டு அச்சு
ஏலக்காய் - 3
வாழைப்பழம் - 1
உப்பு - ஒரு சிட்டிக்கை



செய்முறை
ப்ரவுன் அரிசியை மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும்.
அரைத்தமாவுடன்மிக்சியில் மைதாவாழைபழம்ஏலக்காய் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.

வெல்லத்தை தட்டி கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு வ்டிகட்டவும்.
அரைத்த மாவுடன் வெல்ல கரைசலை சேர்த்து  அடை வார்க்கும் பக்குவத்தில் கரைக்கவும்.

கரைத்த மாவை அடைகளாக வார்த்து நன்கு வேக விட்டுசிறிது எண்ணை + நெய் கலவை சுற்றிலும் ஊற்றி திருப்பி போடவும்.
அடையை திருப்பி போட்டு வெந்ததும் எடுக்க்கவும்
குழந்தைகளுக்கு பிடித்த சத்தான வாழைபழ அடை ரெடி.





ஆயத்த நேரம் : 1 மணி 30 நிமிடம்
சமைக்கும் நேரம். 20 நிமிடம்
பரிமாறும் அளவு : 3 நபர்களுக்கு