ஹனீபுக்கு ரொம்ப பிடிச்சது நியுட்டெல்லா ரொம்ப ஈசியாக ரொட்டி, சப்பாத்தி, குபூஸ், இட்லி தோசை, பூரி எதில் வேண்டுமானலும் தடவி காலை உணவிற்கோ அல்லது பள்ளிக்கோ கொடுத்து அனுப்பி விட்டால் போதும் அன்று முழுவதும் ரொம்ப சந்தோஷம்.
பிள்ளைகளுக்கு எல்லாம் பிடித்தது ஆனால் பெரியவர்களும் சில
நேரம் ஈசியா இப்படி செய்து சாப்பிடலாம்.
தேவையானவை
தோசை மாவு - 2 குழிகரண்டி
நியுடெல்லா - 2 மேசைகரண்டி
பொடியாக நறுக்கிய முந்திரி 2 மேசைகரண்டி
நெய்+ எண்ணை - 2 தேக்கரண்டி
தோசை தவ்வாவை சூடாக்கி தோசையை வார்த்து சுற்றிலும் நெய் விட்டு மொறுகியதும் மேலே நியுடெல்லாவை தடவி முந்திரியை தூவி சுருட்டவும்.
இது இட்லிக்கு வைத்து மதிய லஞ்ச்க்கு கொடுத்தனுப்பியது
டிஸ்கி: இது பேச்சுலர்களுக்கும் சுலபமாக செய்து சாப்பிடலாம். தோசை மாவு இல்லை என்றால் , கோதுமை தோசை , மைதா தோசையில் இப்படி செய்து சாப்பிடலாம்.நட்ஸ், பிஸ்தா, பாதம் , வால்நட் எதுவேண்டுமானலும் பொடியாக அரிந்து தூவு சுருட்டலாம்
ரெடி மேட் தோசைமாவும் கிடைக்கிறது , பேச்சிலர்கள் அவசரத்துக்கு இப்படி சாப்பிட்டு கொள்ளலாம்.
பரிமாறும் அளவு : 1 நபருக்கு
ஆயத்த நேரம் : 3 நிமிடம்
சமைக்கும் நேரம் - 4 நிமிடம்
இதை என் பேச்சுலர் ஈவண்டுக்க்கு இணைக்கிறேன்
Linking to nithu;s healthy food for healthy kids hosted by Asiya.
Tweet | ||||||
5 கருத்துகள்:
def kids will love it.. even i can gulp few.. nutella has become a integral part in kids cooking..
Wow,super tempting roll.
சூப்பர். இணைப்பிற்கு மிக்க நன்றி ஜலீலா.
சின்னவங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். சுவையான குறிப்பு ஜலீ.
அக்கா.... எங்க வீட்டிலும் நியூடெல்லான்னா கடகடன்னு காலியாகிடும். நான் சப்பாத்தியில் போட்டு ரோல் செய்து தருவேன்... நொடியில் காலியாகிடும். பிரெட், வேஃபில், குக்கீஸ் என எல்லாத்துக்கும் நல்ல காம்பினேஷன் :))
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா