சேமர் இப்ராஹிம்
ஜலீலா பானு , பாஸ்போர்டில் எங்க டாடி பெயரோடுதான் என் பெயர் இருக்கும்
இங்கு ஏர்போட் ஹாஸ்பிட்டல் எங்கு சென்றாலும் என் பெயரை சேமர் இப்ராஹிம் என்று தான் கூப்பிடுவார்கள்.அப்படி கூப்பிடுவது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
இது என் 700 வது பதிவு, என் டாடிய பற்றியே எழுதிவிடுகிறேன்.
.
சேமர் முகம்மது இப்ராஹிம்
சின்ன வயதில் டாடி தலை சீவும் போது நான் தான் எதிரில் கண்ணாடி பிடித்து கொண்டு நிற்பேன், அப்படி இப்படி ஆட கூடாது. அப்பதான் தலை சொறி எடுக்கும். அவங்க திட்டதேவையில்லை முகம் போகிற போக்கே புரிஞ்சிக்கலாம்.
சாப்பாடு விஷயத்தில் ருசித்து அதில் உள்ள குறை நிறைகளை அழகாக சொல்லுவாங்க.
நாங்க துணி துவைத்து காய போட்டு கொண்டு இருந்தால் (அப்பதான் வாஷிங் மிஷின் கிடையாதே) அப்படியே அலசி தொங்க விட வடமாட்டாங்க நல்ல பிழி, நல்ல பிழிஞ்சி போடுங்க. அப்பதான் சீக்கிரம் காயும்/ பிழிவதிலேயே அது பாதி உலர்ந்து விடும் என்பார்கள்
கட்டி பருப்பு ரசம் வைத்தால் ஜலீ அந்த பருப்பு போட்டு அதுக்கு மேலே ரசம் ஊற்றி, பருப்பில் இருக்கும் மிளகாயை பிழிஞ்சி சாப்பிடு சூப்பராக இருக்கும்.
மீன் சால்னா வைத்தால் காரம், உப்பு, புளிப்பு கரெக்டா இருக்கனும். மாமியார் கிட்டயாவது நல்ல இருக்குன்னு பெயர் வாங்கிடலாம் ஆனால் டாடி சால்னாவ உப்பு சரி பார்க்கும் போது அவர் முகம் எப்படி போகுதுன்னு பார்ப்பேன், சாப்பிட்டு பார்த்து வாழ்த்தும் போது ஆஹா அருமையா இருக்கு என்பார்.ஆனால் கொஞ்சம் நல்ல இல்லன்னாலும் எங்க மனசு நோக கூடாதேன்னு.சரி பரவாயில்ல சாப்பிடலாம் ஆனால் முகம் காட்டி கொடுத்துடும்.
/.மதியம் சாப்பிட உட்காரும் போது ,வாங்கம்மா எல்லாரும் சாப்பிட்டலாம் முதலில் வீட்டில் வேலை செய்யும் அஜ்ஜாவை ஏய் முதல அவள சாப்பிட உட்கார சொல்லு என்பார், உடனே என் தங்கை பாரே நான் இவ்வளவு நேரம் நின்று கொண்டு இருக்கேன் என்னை உட்கார சொல்லல, அஜ்ஜாவை கூப்பிடுகிறீங்க என்பாள்.
நீ இந்த வீட்டு பிள்ளை, தேவைக்கு எப்ப வேனும்னா போட்டு சாப்பிடலாம் பாவம் அவ நம்ம கொடுத்தா தானே சாப்பிடுவா,வா என்று கூட உட்காரவைத்து தான் சாப்பிட வைப்பார். வெக்கபடமா சாப்பிடு எம்மா அஜ்ஜாவுக்கு இன்னும் கொஞ்சம் வைமா என்பார்.
ஊருக்கு போயிருந்த போது வித விதமா சிக்கன் செய்து கொடுத்தேன் அதில் அவங்கலுக்கு ரொம்ப பிடிச்சது ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரெவி.நான் இங்க வந்ததும் ஜலீ கிட்ட கேளும்மா எப்படின்னு கேட்டு செய்.சால்னா, கிரேவி என்றால் திக்காக கிரிப்பாக இருக்கனும்.
கால் பாயா ரொட்டி போட்டால் சால்னாவ ரொட்டியில் ஊற்றி சாப்பிட சொல்வாஙக் சூப் போல கை கால் வலியெல்லாம் கேட்கும் என்பாகள்.
வேர்கடலைய .மல்லாட்டை என்று தான் சொல்வார்கள் , உப்பு போட்டு அவித்து சாப்பிடுவோம்.
பகோடா ரொம்ப பிடிக்கும். எங்க கடையில் இருந்து நான்காவது க்டைதான் மிக்சர் பகோடா கடை சுட சுட போட்டால் டாடிக்கு ஒரு பாக்கெட் வந்துடும்.
ஊருக்கு வந்தபோது எனக்கு அப்ப பகோடா போட தெரியாது.
மம்மி வெளியில் போயிருந்த போது பகோடா செய்ய தெரியுமான்னு கேட்டார் நானும் தெரியாதுன்னு சொல்லாம , நானும் என் தங்கையும் சேர்ந்து எங்களுக்கு தெரிந்த பகோடாவை செய்து கொடுத்தோம்.
சின்னவயதில் ஓரளவுக்கு சுமாராக தான் செய்தோம்.
டாடி மவுத்ரார்கன் நல்ல வாசிப்பாங்க.
என் பையன் லீவுக்கு வந்தான்னா காலேஜ்க்கு டிரெயினில் போய் சேர 2 நாட்கள் ஆகும். டாடி முழிச்சிட்டு இருந்து அவன் துங்கிட போறான்னு அவன் இறங்கு ஸ்டேஷன் வருவதற்கு அரை மணி நேரம் முன்பே போன் செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.அவனும் ட்ரெயினில் கிரான்பா எழுப்புவாங்கன்னு நிம்மதியா தூங்குவான்.
பையன் காலேஜ் போனதில் இருந்து முன்று மாதமாக சரியாக சமைக்கவே இல்லை ஏனோ தானோன்னு சமைத்துகொண்டு இருந்தேன்.
டாடி தான் இந்த மாதிரி எல்லாம் செய்ய கூடாது, இப்ப கூட இருக்கிற ஹனீபுக்கும் மாப்பிள்ளைக்கும் ஒழுங்கா சமையல் செய்து கொடு . ரிஸ்க் அளிப்பவன் அல்லா ,யார் யாருக்கு என்ன ரிஸ்க் கிடைக்கனுமோ அதன் படி கிடைக்கும், அவன் சாப்பிடலையே நாம சாப்பிடுறோமே இப்படி நினைக்க கூடாது. உன் பையனுக்காக அல்லாவே அவன் எங்கு இருந்தாலும் நல்ல ரிஸ்க் கிடைக்கனும் என்று துஆ கேட்டுக்கோ என்றார்கள்.
எனக்கு என்ன மனக்க்ஷ்டம்
என்றாலும் கரெக்டா டாடி கிட்ட இருந்து போன் வந்துடும். ஜலீ என்ன செய்ற நல்ல
இருக்கியா என்று கேட்ட்துமே ஒரு தெம்பு புத்துணர்வு எல்லாம் தானே வந்துடும்.
ஒன்றும் கவலை படாதே எல்லாம் அவன் கிட்ட விட்டுடு எல்லாம் அவன் சரியாக்கிடுவான். இத
ஓது அதை ஓது என்று குர் ஆன் வசங்கள் எடுத்து சொல்லுவாங்க.
சின்னதில் இருந்து எங்க டாடிக்கு இந்த கடைதான் 35 வருடஉழைப்பு
பள்ளியில் ஒரு வகுப்பு முடிந்த்தும் அடுத்த வகுப்பு அல்லது இடைவேளையில்
டாடியை பார்க்க்னுமுன்னா உடனே நான் பார்க்கலாம்.
உங்கள் யாருக்காவது இப்படி ஒரு வாய்ப்பு
கிடைத்து இருக்கா?
பள்ளிகூடம் நின்று ரோட்
கிராஸ் பண்ணா நேராக எங்க வாப்பாவின்
துணி கடை ”பானு சில்க் பேலஸ்” அங்கிருந்து பார்த்தால் டாடி உட்கார்ந்து இருப்பது
தெரியும்.
உள்ளே அசம்பிலி ஹாலில்
நின்று திரும்பி பார்த்தாலும் டாடிய பார்க்கலாம்.
பள்ளிகூட்த்தின் முன்புறம்
டாடி கடை, பள்ளி கூட்த்தின் பின்புறம் எங்க வீடு.
ஆனால் 35வருடத்துக்கு
பிறகு சவுதி சென்று விட்டார்கள்.
அங்கு போனதில் இருந்து நல்ல இஞ்சி டீ போடுவது. புளிசாதம், உப்புமா , மைதா முட்டை தோசை, பீட்ரூட் ஹல்வா இதெல்லாம் சூப்பராக செய்ய கற்றுகொண்டார்கள்.
.ஞாயிற்று
கிழமை என்றால் காலை நீங்க எல்லாரும் தூங்குங்கம்மா நான் சுபு தொழுதுட்டு வந்து டீ போடுறேன் என்பார்.ஒரு சமையலுமே தெரியாது சமைக்கும் கழ்டமும் தெரியாது, வெளி ஊரில் இருக்கும் போது இரவில் தீடீர் விருந்தாளிகள் அந்த ராத்திரியிலும் என் அம்மா சமைத்து கொடுப்பாங்க
இரண்டு வருடம் முன் ஊருக்கு போயிருந்த போது கூட என்னை உட்காரவைத்து காலையில் மைதா முட்டை தோசை அதில் ஏலம் தேங்கா கீறி
போட்டு அருமையாக சுட்டு மேலே நெய் தடவி சாப்பிடு என்று கொடுத்தார். இவ்ளோ ஹெவி வேண்டாம்
டாடி சாப்பிடு பரவாயில்ல எப்படி இருக்கு சாப்பிட்டு பாரு என்றார்.
பேரன் பேத்திகளுக்கும்
கிரான்பா ந்னா ரொம்ப பிடிக்கும். பேத்திகள் எல்லாம் பரிட்சைக்கு மாடியில் படித்து கொண்டு இருந்தால் இரவும், காலையில் விடிகாலையிலும் ஒரு பெரிய கிளாஸ் நிறைய பாதம் காம்ப்ளான் கரைத்துகொண்டுபோய் கொடுப்பாங்களாம், இந்த தடவை ஊருக்கு போயிருக்கும் போது தஙகச்சி பிள்ளைகள் எல்லாம் என்னிடம் கிரான்பாவை பற்றி தான் பேசிகொண்டு இருந்தார்கள்.
வெளியில் ஏசி ரிப்பேருகோ, பைப் ரிப்பேருக்கோ , டேங்க் ரிப்பேருக்கோ ஆள்வந்தால் வாங்க போங்கன்னு அவர்களிடம் மரியாதையாக பேசுவதும் அவர்களை கவனிப்பதும் பார்க்க நல்ல இருக்கும்.
டாடிக்கு ரொம்ப பிடிச்ச டிரஸ் சபாரி, இங்கு இருந்து போகும் போது ஏதாவது வேணுமான்னு கேட்டால் எனக்கு ஒன்றும் வேண்டாம் நீ நல்ல படியா வந்து சேரு, காசு வேஸ்ட் பண்ணாதே என்பார்கள்.
சபையில் உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தால் அந்த சபையே கலகலப்பாக இருக்கும். அப்படி பேசி கொண்டு இருக்கும் போது உடனே கிளம்ப வேண்டி இருந்தால் ரொம்ப தன்மையாக அப்ப
உத்தரவு வாங்கிக்கிறேன், என்று சொல்லிட்டு எழுந்திருப்பாங்க.
தெருவில் நட்ந்து போனாங்கன்னா வழியில் எல்லாரையும் நலம் விசாரிக்காம போக மாட்டாங்க.
டாடிக்கு இரண்டு தம்பி ஒரு அண்ணன், 4 பேரும் ஒற்றுமை என்றால் அப்படி ஒரு ஒற்றுமை.
நான்கு பேரும்
சேர்ந்து பேச ஆரம்பித்தார்கள் என்றால் சுற்றி இருக்கும் எங்களை எல்லாம்
மறந்துடுவாங்க.
குர் ஆன் ஹதிஸ் பற்றின விளக்கங்கள்
ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு பேசி கொண்டு இருப்பார்கள்.
எழுத எழுத நிறைய நினைவுகள் வந்து கொண்ட்டே இருக்கு .. இத்துடன் முடித்து கொள்கிறேன்.
கண்மூடி திறப்பதற்குள் எல்லாமே முடிஞ்சே போச்சே.. நினைக்க நினைக்க டாடி பேசியது தான் எண்ணத்தில் ஓடிக்கொண்டு இருக்கு.
ஆண்டவன் அனைவருக்கும் நல்லது கெட்டதை தாங்கிக்ககூடிய மன தைரியத்தை கொடுக்கன்னும்
700 வது பதிவு என்னால் மறக்க முடியாத என் டாடிய பற்றியே எழுதிடலாம் என்று எழுதிட்டேன்.
இது வரை என்பதிவுகளுக்கு ஊக்கம் கொடுத்துவருகின்ற பதிவுலக தோழ தோழியர்களுக்கு மிக்க நன்றி.
டிஸ்கி :
இனி சுலப குறிப்புகள் நிறைய கொடுக்க இருக்கிறேன் ஏன் என்றால் என் தம்பி தங்க கம்பி இப்ப இத பார்த்து தான் சமைத்து கொண்டு இருக்கிறார்.அதற்காக தான் பேச்சுலர் ஈவண்டே ஆரம்பித்தேன்.
புரோக்கோலி பொரியல், சிக்கன் குருமா, ஷீர் குருமா போன்றவை செய்து பார்த்து ரொம்ப நல்ல வந்தது என்று சொன்னார். ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
அது இல்லாமல் என் தங்கைகள் கேட்ட குறிப்புகள், பெரியாப்பா மகள் கேட்ட குறிப்பு, என் பெரிமா பேத்தி கேட்ட குறிப்புகள் எல்லாம் முடிந்த போது எல்லாத்தையும் போட இருக்கிறேன்.
போனவார ஒரு குட்டி வி ஐ பி வந்து என் சமையலை ருசி பார்த்து விட்டு தனியாக கிச்சனில் வந்து என்னை பாராட்டிட்டு போனார், ஜல்லான்னாட்டி ரொம்ப சூப்பரா இருந்தது என்று சொன்னார் குழந்தைகள் பாராட்டை கேட்க எல்லாம் கொடுத்து வைத்து இருக்கனும்.
பெரிமா மகள் ஊருக்கு போயிருந்த சமையம் என்ன ஜலீக்கா நானும் எதிர் பார்த்து கொண்டே இருக்கேன் இன்னும் நான் கேட்ட குறிப்பை போடலையே
என் செல்லமாக கோபித்து கொண்டாள்.. நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக போடுகிறேன் என்றேன்.
ஒரு நாள் ருவைசில் இருக்கும் பெரிவாப்பா பையன் எனக்கு வெஜ் பிரியாணி ரெசிபி லின்க் கொடுங்க என்றார், செய்து விட்டு ரொம்ப சூப்பராக வந்தது என்று சொன்னான்.
என் தங்கை பொண்ணுக்கு சமீபத்தில் தான் கல்யாணம் ஆகியது, என் தங்கை நான் ஒன்றுமே சொல்லிகொடுக்கல எல்லா சமையலும் உன் பிளாக் பார்த்துதான் சமைக்கிறாள்.ரொம்ப நிம்மதியா இருக்கு என்றாள்
.
நான் என்றும் என்றென்றும் உலகத்தில் உள்ள அனைத்து வீட்டு சமையலறையிலும் உப்பா சர்க்கரையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்று நினைக்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
இன்னும் பலபேருக்கு பயனுள்ளதாக தான் இருக்கிறது.அதை இங்கு வந்து சொல்ல தான் யாருக்கும் நேரம் இல்லை போல இருக்கு தினம் 1000 க்கும் மேற்பட்டவர்கள் இங்கு வந்து சுவைத்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் ஒரு வார்த்தை இங்கு வந்து சொல்ல தான் யாருக்கும் மனம் வரவில்லை.
கவனிக்க
பேச்சுலர் ஈவண்டுக்கு நீங்கள் அனுப்பிய குறிப்புகள் எல்லாம் செக் பண்ணி கொண்டு இருக்கிறேன், இன்னும் எத்தனை குறிப்புகள் கிடைக்க பெற்றுள்ளன எப்ப ரிச்ல்ட் என்பதை அடுத்த போஸ்டில் சொல்கிறேன், சில பேர் லின்குகளை மற்றும் அனுப்பிட்டு அவர்க்ள் போஸ்டில் லின்க் கொடுக்கல. அனுப்பியவர்கள் உங்கள் பதிவில் என் லிங்க் கொடுத்து இருக்கீங்களான்னு ஒரு முறை சரி பார்த்து கொள்ளுங்கள். தேதியில் இருந்து அனுப்பிய புது குறிப்பு + சில பழைய குறிப்புகள் 2012 லில் உள்ள் செலக்ட் பண்ணுவேன்.
16 கருத்துகள்:
எழுநூறாவது இடுகையையிட்டு என் வாழ்த்துக்கள்.
உங்கள் தந்தையாரைப் பற்றிய இந்த இடுகை மனதைத் தொடுவதாக அமைந்திருக்கிறது ஜலீ. அவரது ஆன்ம சாந்திக்காக என் பிரார்த்தனைகள்.
உங்களது 700 வது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்
தங்களின் 700 ஆவது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
தங்களின் தந்தையைப்பற்றி எழுதியிருந்தவை மிக அருமையாக உள்ளன.
இனிய ஆங்கிலப்புத்தாண்டு 2013 நல்வாழ்த்துகள்.
அன்புடன் VGK
gopu1949.blogspot.in
அன்பு ஜலீலா, உங்கள் 700 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
அப்பாவின் நினைவுகளை மறக்க முடியாது.
அப்பாவின் அறிவுரைகள் எல்லாமே அருமை.
உங்கள் சமையல் குறிப்புகளை உங்கள் உறவினர் மட்டும் அல்ல என்னைப் போன்றவர்களும் ரசிக்கிறோம்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
700 ஆவதுக்கு வாழ்த்துக்கள் ஜல் அக்கா... எம் குரூப்பினுள் நீங்கதான் முன்னணியில்... விரைவில் 1000 ஐத் தொட வாழ்த்துக்கள்.
அப்பாவின் நினைவுகள் நெஞ்சை நெகிழச் செய்யுது... வாழ்வில் எதைத்தான் மறக்க முடியும்.. நாம் இல்லாமல் போனால்தான் அவ் நினைவுகளும் எம்மோடு போகும்... ஆனா அவை எல்லாம் இனிமையான நினைவுகள்தானே. அவர் இப்போ இல்லை எனும் கவலை ஒருபுறமிருக்க... அவரோடு வாழ்ந்த காலங்களை எண்ணும்போது மனதுக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்குதெல்லோ... அதனால நினைவுகளைப் பகிர்வதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கு.
ஜலீலாக்கா கெதியா முடிவுகளை வெளியிடுங்கோ... அதிராவுக்கு இருக்கா இல்லையா.. என பிரித்தானியாவே எதிர்பார்த்துக்கொண்டிருக்குது:) நான் பரிசைச் சொன்னேன்.
மனதை நெகிழ்த்தியது வாசித்து முடித்ததும் .
எங்க வீட்லயும் எங்க அப்பாதான் ஹெட் குக் .
பருப்பில் மிளாகாய் பிழிந்து சாபிடுவது அப்படியே எங்கப்பாவின் டேஸ்டும் கூட
..ஒரு முறை கல்லூரிக்கு சப்பாத்தி நெய்யில் செய்து உள்ளே தேங்காய் சீனி போட்டு மடிச்சு தந்தார் எங்கப்பா
அதே மாதிரிதான் உங்க அப்பாவும் போல..:))
எப்பவும் பெண்களுக்கு அம்மாவைவிட அப்பா மேல் அதிகம் பிரியம்
எழுநூராவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஜலீலா .
ஈசி குறிப்புகள் ஆங்கிலத்திலும் போட்டா என் குட்டி பெண்ணும் செய்வாளாம் :)))
...
ஜலீலாக்கா கெதியா முடிவுகளை வெளியிடுங்கோ... அதிராவுக்கு இருக்கா இல்லையா.. என பிரித்தானியாவே எதிர்பார்த்துக்கொண்டிருக்குது:) நான் பரிசைச் சொன்னேன்.//
ஜலீலா நீங்க சீக்கிரமா ரிசல்டை வெளியிடுங்க ..நான் fire என்ஜின் இக்கு எல்லாம் சொல்லிட்டேன் .
பிரித்தானியா பற்றி எரிஞ்சாலும் நாங்க அண்ட அண்டாவா தண்ணி ஊத்தி அணைசிடுவோம் :))
ஓ ஜலீலாக்கா! உங்களின் 700வது பதிவா இது வாழ்த்துக்கள்..
அப்பாவைப் பற்றிய பதிவு அதுவும் மனதை நெகிழச்செய்யும் பல நினைவுகளை தாங்கிச் சொல்லியிருக்கிறீங்கள் ....
கவலைதான்...உங்கள் துயரில் பங்கெடுத்து அவரின் ஆன்ம சாந்த்திக்காக பிரார்த்திக்கிறேன்...
நீங்கள் மென்மேலும் பல பதிவுகளைத்தந்து பல சாதனைகளையும் செய்திட உளமார வாழ்த்துகிறேன்..
ஜலீலாக்கா 700-வது பதிவா? நான் இன்றுதான் புதிய வலைப்பூவே தொடங்கி இருக்கேன்.
கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி
700 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.நல்ல பகிர்வு. தொடர்ந்து அசத்துங்க.வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்..
700 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.நல்ல பகிர்வு. தொடர்ந்து அசத்துங்க.வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்..
அஸ் ஸலாமு அலைக்கும் அக்கா...,
ஹ்ம்ம்... அப்பா என்னும் உறவு அவ்வளவு எளிதாக மறந்து விடக்கூடியதல்லவே.... என்ன செய்ய. ஆனால் அல்லாஹ் நாடுவது என்றுமே நலத்தையே தரும். து’ஆ செய்ங்க அக்கா.... அப்பாவுக்காக் அதிகமான து’ஆ சதகா செய்ங்க இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் அவரின் கணக்கு வழக்கை எளிதாக்கி அழகிய ஜன்னத்தில் அழகிய இடம் தருவானாக. ஆமீன்.
//ஏன் என்றால் என் தம்பி தங்க கம்பி இப்ப இத பார்த்து தான் சமைத்து கொண்டு இருக்கிறார்.அதற்காக தான் பேச்சுலர் ஈவண்டே ஆரம்பித்தேன்.//
இது எங்களுக்கு எப்பவோ தெரியும்.... ஆனா ஊரு ஃபுல்லா கூப்பிட்டு கூப்பிட்டு விருந்தும் தர்றாரு... உங்க தம்பியாச்சே.... :))
நான் இன்னும் 100 கூட கடக்கலை.... பத்தாயிரம் வேலைகளுக்கு நடுவிலும் 700வது பதிவு.... கலக்குங்க அக்கா :) :)
அக்கா, எழுநூறுக்கு வாழ்த்துகள்.
வாப்பாவைப் பற்றி எழுதியது மனதைத் தொடுவதாக இருக்கிறது.
/ரிஸ்க் அளிப்பவன் அல்லா ,யார் யாருக்கு என்ன ரிஸ்க் கிடைக்கனுமோ அதன் படி கிடைக்கும், அவன் சாப்பிடலையே நாம சாப்பிடுறோமே இப்படி நினைக்க கூடாது. உன் பையனுக்காக அல்லாவே அவன் எங்கு இருந்தாலும் நல்ல ரிஸ்க் கிடைக்கனும் என்று துஆ கேட்டுக்கோ/
மாஷா அல்லாஹ், எவ்வளவு அழகாச் சொல்லிருக்காங்க! பெரியவங்களின் அனுபவ அறிவு நமக்கெல்லாம் எவ்ளோ தேவையா இருக்கு. நானும் என் பையன் ஹாஸ்டல் போனா (இன்ஷா அல்லாஹ்) சாப்பாடு பிரச்னையில்லாம இருக்கணுமேன்னு இப்பவே கவலைப்படுவேன். எனக்கும் உங்க வாப்பாவின் வார்த்தைகள் ஆறுதலைத் தருது.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா