Wednesday, June 10, 2009

முன்று வகையான இனிப்பு முட்டை தோசைகள்





வித விதமான தோசைகள்.

1. ஆட்டா மாவு இனிப்பு தோசை


கோதுமைமாவு (ஆட்டா) = இரண்டு டம்ளர்
முட்டை = முன்று
உப்பு ‍ ‍ ஒரு சிட்டிக்கை
சர்க்கரை = முக்கால் டம்ளர்
ஏலக்காய் = முன்று
தேங்காய் = பல்லாக கீரியது சிறிது
எண்ணை ‍= சுட‌ தேவையான‌ அள‌வு
நெய் = சிறிது

மிக்சியில் கோதுமை மாவுடன் மேலே குறீப்பிட்ட அனைத்து பொருட்களையும் தேங்காய் பல் தவிர தேவைக்கு தண்ணீர் ஊற்றி ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
அத்துடன் பொடியாக நருக்கி வைத்துள்ள தேங்காய் பல்லை சேர்த்து தோசைகளாக வார்க்கவும்.






2.முட்டை தோசை

தோசை மாவு = ஒரு க‌ப்
முட்டை = இர‌ண்டு
ச‌ர்க்க‌ரை = நான்கு மேசை க‌ர‌ண்டி
நெய் + எண்ணை சுட‌ தேவையான‌ அள‌வு.

முட்டையில் ச‌ர்க்க‌ரையை போட்டு ந‌ன்கு க‌ரையும் வ‌ரை அடித்து வைக்க‌வும்.தோசை வார்க்கும் தவ்வாவில் ஒரு குழி கரண்டி அளவு தோசை மாவை ஊற்றி சுழற்றி உடனே முட்டை கலவையையும் முன்ற்ல் ஒரு பங்கு ஊற்ற்றி தோசை போலவே தேய்க்கவும்.
ஊற்றி சிறிது சுழ‌ற்றி விட்டு எண்ணை + நெய் க‌ல‌வையை விட்டு தனலை குறைத்து வைக்கவும். பிற‌கு அழ‌காக‌ புஸுன்னு பொங்கி ந‌ல்ல‌ வெந்து நிற்கும்.பார்க்க கலர் புல்லாகவும் இருக்கும்.
சுவையான‌ முட்டை தோசை ரெடி.












3. இனிப்பு மைதா தோசை

மைதா மாவு = ஒரு கப்
முட்டை = இரண்டு
சர்க்கரை = அரை கப்
தேங்காய் பால் = அரை கப்
தண்ணீர் தேவைக்கு
உப்பு = ஒரு பின்ச்
பொடி ர‌வை = ஒரு மேசை க‌ர‌ண்டி


மைதா உடன் முட்டை,தேங்காய் பால்,ரவை, சர்க்கரை, உப்பு சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கலக்கி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
இல்லை என்றால் மிக்சியிலும் அடித்து கொள்ளலாம்.
பிறகு தோசைகளாக வார்க்கவும். இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த தோசை. அப்படியே வழுக்கி கொண்டு உள்ளே போகும், இன்னும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

பெரியவர்கள் முட்டை சர்க்கரைக்கு பதில் வெங்காயம், பச்சமிளகாய் சேர்த்து கலக்கி சுட்டு சாப்பிடலாம்.

5 கருத்துகள்:

Mrs.Menagasathia said...

பார்க்கவே சூப்பராவும்,சாப்பிடவும் தோனுது ஜலிலாக்கா!!

Jaleela said...

//பார்க்கவே சூப்பராவும்,சாப்பிடவும் தோனுது ஜலிலாக்கா!!//

ஆமாம் மேனகா இது ரொம்ப நலல் இருக்கும், பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்கு செய்து வைக்க ரொம்ப நல்ல இருக்கும், அரிசி மாவு தோசை மட்டும் அப்ப சுட்டு அப்ப சாப்பிடனும், மற்ற இரண்டும் ஆறினாலும் நல்ல இருக்கும். என் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கும் ரொம்ப பிடித்தது.

இரவில் அவசரத்துக்கு கூட உடனே செய்து விடலாம்.

ஹர்ஷினி அம்மா said...

இட்லி மாவு இல்லை என்றாள் உடனே செய்யும் 3 வகை தோசை... சுப்பர் ஜலீலா அக்கா

எனக்கு ஒரு முறை அவசரமாக கோதுமை தோசை செய்ய மாவு கலக்கினால் எல்லாம் ஒரே கட்டி கட்டியாக இருந்த்து... மிக்ஸியில் போடுவது நல்ல ஜடியா தான் அக்கா!!!

மாதேவி said...

உங்கள் முட்டை இனிப்புத் தோசை அழகாகவும் சுவையாகவும் பிள்ளைகளைக் கவர்வதாகவும் இருக்கிறது. தயாரிப்பதற்கும் இலகுவானதே.

Jaleela said...

ஹர்ஷினி அம்மா வந்து கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி.

ஆமாம் ரொம்ப சுலபம், இதில் கோதுமைமாவில் வெல்லம் சேர்த்து தோசை வார்த்தால் ருசி இன்னும் அபாரமாக இருக்கும்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா